காதல்(பிரிதல்) கவிதை!!!


அழகாய்தான்
இருந்தது.
நம் பள்ளி
பேருந்து நிறுத்தம் !

ஒரு வேலை ...
நாம் இருவரும் இருந்ததாலோ ?...

பக்கத்தில் அமர்ந்து
பல நேரம் பேசியிருக்கிறோம் ..!
சில நேரம் சிரிப்பாய் ..
சில நேரம் சினமாய்...

ஏனோ
அப்போதெல்லாம்
நம்மை சுற்றி
நிறையப்பேர் இருந்தாலும்
"வெறிச்சோடி" இருப்பது போல்
ஒரு உணர்வு....

இதோ !
இன்று .....அந்த
இன்பமான நினைவுகளை
இதயத்தில்
சுமந்தவனாய் ....
அதே பள்ளி நிறுத்தத்தில்
வந்து சற்று நேரம்
அமர்ந்துவிட்டு செல்கிறேன் ...

ஏனோ இப்பொழுது
என்னை சுற்றி யாருமே இல்லையெனிலும்
நெரிசலாய்...நெருப்பாய்
ஒரு உணர்வு.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 பின்னூட்டங்கள்:

coolzkarthi said...

யார் சார் அந்த பிகரு?(ஹி ஹி ஹி சும்மா கேட்டேன்....கோவிச்சிகாதிங்க )

Anonymous said...

very nice