இரண்டரை மணிநேர சந்தோஷங்கள்

அரங்கு வாசல் வரிசையில் நின்று
அடித்துப் பிடித்து அருகே சென்றும் கிடைக்காமல்
அதிகப் பணம் கொடுத்து 'ப்ளாக்'கில் வாங்கி
உள்நுழைகையில் வியர்வையுடன் சிரிப்பு வரும்

ஷூ அணிந்த காலைக் காட்டி
கதாநாயகன் அறிமுகமாகையில்
"தலைவா...." போன்ற அடித்தொண்டை கத்தல்கள்
செவி கிழிக்கும்

ஒல்லி நாயகனின்
ஓரடியில் பத்துப்பேர் சுருண்டு விழுகையில்
கைத்தட்டல் காதைப் பிளக்கும்

ஏதோவொரு கட்டத்தில் வில்லன் நாயகனை
எதிர்த்துப் பேசுகையில்
எதிர்வரிசை இருக்கைகள்
எட்டி உதைக்கப்படும்

தன்னை விட
இருபது வயது இளைய நாயகியை நாயகன்
இறுக்கியணைக்கையில் விசில் பறக்கும்

எல்லாம் முடிந்து வெளிவருகையில்-நாளை
வட்டி கட்டப் பணமில்லாப் பையை
தடவிப்பார்க்கும் வலது கையில்
யதார்த்தம் சுடும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

super lines anbu...........keep it up.

Anonymous said...

beat888
rain666
box111
art007
ari002