கொஞ்சம் சிரிப்பு!கொஞ்சம் தத்துவம்!கவிதை! (பார்ட்-2)


நகைச்சுவை:

காதலி:என்கிட்ட உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?
என்னோட அழகான முகமா?
அன்பான மனமா?
பணிவான குணமா?
காதலன்:உன்னோட இந்த காமெடி தான்!!!

முதியவர்:சார் என்னோட அறுபதாம் கல்யாணத்திற்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும்..
போலிஸ் அதிகாரி:யாருக்கு நீங்க பயப்படுறீங்க?
முதியவர்:என்னோட 59 பொண்டாட்டிகளுக்கும் தான்!!

கடற்படை தலைவன்:கரை தெரியுது.கரை தெரியுது.
சர்தார்:சர்ப்-எக்ஸெல் போடுங்க.அந்த கரை இந்த கரை எல்லா கரையும் போயிடும்..

கொசு:அம்மா நான் சினிமாக்கு போறேன்.
அம்மா கொசு:வேண்டாம் யார் கையிலயாவது சிக்கி சின்னாபின்னமாகிடப்போற..
கொசு:பயப்படதீங்க அம்மா.நான் அஜித் படத்துக்கு தான் போறேன்.
அம்மா கொசு:அதுக்கு நீ யார் கையில் ஆவது சிக்கி உயிரையே விட்டு
விடலாம்.

தத்துவம்:


வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....
தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை......
தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம்....
(ஏகன் படம் வெளியான பிறகு அஜித் கூறிய தத்துவங்கள்)
(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

இன்னிக்கு இருக்கிற மீன் நாளைக்கு கருவாடாக மாறலாம்...
இன்னிக்கு இருக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டு குழம்பாக மாறமுடியுமா..?

அவளை காண்பதற்கு நான் பட்ட கஷ்டங்கள் கோடி..
அவளை கண்ட பின் நான் பட்ட நஷ்டங்கள் தாடி...

கவிதை:

பலருக்கு விருப்பம் உண்டு
உன்னை அடைய
எனக்கு மட்டுமே உரிமை உண்டு
உன்னை காக்க
'மலரே'
இப்படிக்கு
'முள்'

உங்களுக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் பின்னூட்டம் இடுங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

14 பின்னூட்டங்கள்:

Muruganandan M.K. said...

சிரிப்பு, கவிதை யாவுமே நன்றாக உள்ளன. பாராட்டுக்கள்

Anonymous said...

அன்புள்ள வலை நண்பர்களே,
இலங்கையிலே நடக்கும் இனப்படுகொலைக்கு நாம் ஏதாவது செய்ய முடியாத என்று நினைகிரீர்கள, அதற்காக முத்துகுமாரை போல் உயிர் தியாகம் எல்லாம் செய்ய வேண்டாம். http://www.megaupload.com/?d=LCVNYAT9 இந்த slideshow- வை download செய்து உங்கள் நண்பர்களுக்கு குறிப்பாக உங்கள் வடஇந்தியா அல்லது வெளிநாட்டில் உள்ள பிற நாட்டு நண்பர்களுக்கு அதிலும் குறிப்பாக lobbying power -இல் உள்ள நண்பர்களுக்கு இமெயில் அனுபவும். நான் எனது UN மற்றும் பல பன்னாட்டு அமைப்புகளில் வேலை செய்யும் பல நண்பர்களுக்கு அனுபினேன் அது அவர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் LTTE என்பது எந்த ஒரு குறிகொள்ளும் இல்லாத தீவிரவாத அமைப்பு என்றே நம்பவைக்கப்பட்டுள்ளது. ஆகவே பன்னாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். Nithy Toronto

Anonymous said...

கொசு:அம்மா நான் பிளாக் படிக்க போறேன்.
அம்மா கொசு:வேண்டாம் யார் கையிலயாவது சிக்கி சின்னாபின்னமாகிடப்போற..
கொசு:பயப்படதீங்க அம்மா.நான் அன்பு-வோட பிளாக் படிக்க தான் போறேன்.
அம்மா கொசு:அதுக்கு நீ யார் கையில் ஆவது சிக்கி உயிரையே விட்டு
விடலாம்.
(நான் தனி ஆளு இல்ல, தலையோட ஆளு!
ஹிஹி..ஹி)

Anbu said...

சிரிப்பு, கவிதை யாவுமே நன்றாக உள்ளன. பாராட்டுக்கள்..தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி அண்ணா!!

முரளிகண்ணன் said...

good one

Sasirekha Ramachandran said...

கடற்படை தலைவன்:கரை தெரியுது.கரை தெரியுது.
சர்தார்:சர்ப்-எக்ஸெல் போடுங்க.அந்த கரை இந்த கரை எல்லா கரையும் போயிடும்.
excellent joke.

Cable சங்கர் said...

//வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....
தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை......
தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம்....
(ஏகன் படம் வெளியான பிறகு அஜித் கூறிய தத்துவங்கள்)
(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)//

சூப்பர் அன்பு.. இன்னும்.. இன்னும் நிறைய எழுதுங்க.. நண்பா..

Anbu said...

முரளிகண்ணன்,சசிரேகா ராமச்சந்திரன்,கேபிள் சங்கர்,உங்கள் வ்ருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

கார்க்கிபவா said...

நல்லாயிருக்கு.. ஆனா எதுக்கு தேவையில்லாம அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை பகைச்சுக்குறீங்க்?

Anbu said...

\\நல்லாயிருக்கு.. ஆனா எதுக்கு தேவையில்லாம அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை பகைச்சுக்குறீங்க்?\\

எல்லாம் ஒரு நகைச்சுவை தான் அண்ணா.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா!

கோவி.கண்ணன் said...

//இன்னிக்கு இருக்கிற மீன் நாளைக்கு கருவாடாக மாறலாம்...
இன்னிக்கு இருக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டு குழம்பாக மாறமுடியுமா..?//

தத்துவங்கள் டாப் !

Anonymous said...

very nice

Anonymous said...

தத்துவ சிந்தனைகள் : சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்

Unknown said...

சூப்பர்