பதிவர்களே போட்டிக்கு ரெடியா..

குழந்தை..

சோகங்கள் மறைத்திடும்..
கோபங்கள் போக்கிடும்..
அன்பின் உருவம் - குழந்தை..

*****************************

இது ஒரு ஹைக்கூ விளையாட்டுத்தொடர்..

இங்கு நான் ஒரு வார்த்தை தருகிறேன்..

"காதல்"

இந்த வார்த்தைக்கு ஒரு ஹைக்கூ கவிதை தயார் பண்ணி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

கவிதையினை தருபவர்கள் நீங்கள் ஒரு வார்த்தை தரலாம்..

அதற்கும் மற்றவர்கள் பதில் சொல்லலாம்...

என்ன போட்டிக்கு ரெடியா..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

42 பின்னூட்டங்கள்:

*இயற்கை ராஜி* said...

anbu....etho nadakuthu..mm..paarthu

Anbu said...
This comment has been removed by the author.
லோகு said...
This comment has been removed by the author.
sivarajan said...

கடவுளாலும்
கட்டுப்படுத்த முடியாத
உணர்ச்சி,
காதல்.

லோகு said...

நல்ல யோசனை மாப்பி...
எப்படி இப்படியெல்லாம் கலக்கறீங்க..


காதல்
அவளை பார்த்த
அந்த தருணத்தில்
எனக்கு பரவிய
டிவைன் ஃப்ளு... (Divine Flu)

லோகு said...

சிவராஜன் சார் அடுத்த வார்த்தை சொல்லாததால, நானே சொல்றேன்..

காதலி

sakthi said...

யோசிச்சு எழுதறேன் அன்பு

பீர் | Peer said...

காதலி...

ஒற்றை வார்த்தையில், சூப்பர் ஹைக்கூல்ல... நாமளாவது சொல்லிக்குவோம்..;(

அடுத்த வார்த்தை,

டைனோசர்.

ஓஜஸ் said...

காதலி
அசின் ....
(இதை விட சிறந்த கவிதை எனக்கு தெரிய வில்லை....................)

பீர் | Peer said...

Padmanaban, போட்டி விதிமுறையை மீறுகிறீர்கள்.

உங்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தை,

டைனோசர்.

லோகு said...

// பீர் | Peer said...

Padmanaban, போட்டி விதிமுறையை மீறுகிறீர்கள்.

உங்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தை,

டைனோசர்.//

டைனோசர்.

மேக்கப்
இல்லாத
அசின்..

Anbu said...

அடுத்த கவிதைக்கான வார்த்தை..

கடவுள்

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

வால்பையன் said...

உம்ம காதலிக்கு நீர் தாம்யா கவிதை எழுதி தரணும்!

sivarajan said...

பணம்

ஒவ்வொரு மனிதனின்
தலையெழுத்தையும்
புரட்டிப்போடும்
காகித பிரம்மன்.

துபாய் ராஜா said...

சைவம்
அசைவம்
சில நேரம்
பட்டினி
பக்தன் இன்றி

நான் தரும் வார்த்தை - பூ

sivarajan said...

கடவுள்

மனிதனுக்கு பயம்
முளைக்கும்போது மட்டும்
சட்டென்று மனதில்
தோன்றுபவன்.

துபாய் ராஜா said...

கடவுள் என்னும் வார்த்தைக்கு எனது வரிகள்

சைவம்
அசைவம்
சில நேரம்
பட்டினி
பக்தன் இன்றி

தொடர நான் தரும் வார்த்தை - பூ

sivarajan said...

பூ

பெண்கள் கூட
பூக்களுக்கு எதிரிதான்
கொய்வதாலும்
கொல்வதாலும்.

லோகு said...

சிவராஜன் சார்.. அடுத்த தலைப்பு சொல்லுங்க..

லோகு said...
This comment has been removed by the author.
Anbu said...

சிவராஜன் சார் நீங்களும் ஒரு வார்த்தை தரலாம்..

உங்கள் கவிதை நன்றாக உள்ளது..

லோகு said...

பூ

எங்கு கிடைக்கும்
என்னவளை விட
அழகிய பூ..

லோகு said...

சரி நானே சொல்கிறேன்..

அடுத்த தலைப்பு

லோகு

cheena (சீனா) said...

பசங்க எல்லாம் கலக்கறானுங்கப்பா

ம்ம்ம்ம் - வார்த்தை - போட்டோ

Unknown said...

”காதல்” - இதுவே சிறந்த ஹைக்கூ தான்

---------------

சரி தொடருக்காக அடுத்த வார்த்தை

“நட்பு”

டக்கால்டி said...

எதிர்பார்ப்பு
ஏமாற்றம்
இழப்பு
இல்லாதது
நட்பு

அடுத்த வார்த்தை இசை

தேவன் மாயம் said...

ஆரம்பிச்சாச்சா!!! கிரிக்கெட் என்ன ஆச்சு?

யோ வொய்ஸ் (யோகா) said...

நட்பு

எனக்காக சுவாசித்து
எனக்காக அழுது
எனக்காக சிரிப்பவன்
காதலியல்ல

சி.கருணாகரசு said...

காதல் என்பது "காற்று"
சுவாசிப்பவன் மட்டுமே
முழுமையாய் வாழ்கிறான்!


தலைப்பு: வலி

Raju said...

வேணாம்.."வலி"க்குது
அழுதுருவேன்.
நல்லாருங்க சாமிகளா..!

எப்புடி நம்ம ஹைக்கூ..!

தலைப்பு: டன்டன்டணக்கா.

Raju said...

\\Anbu said...
This post has been removed by the author. \\

\\லோகு said...
This post has been removed by the author. \\

This post has also been removed by the author.

S.A. நவாஸுதீன் said...

அதுசரி எல்லாருக்கும் வேலை கொடுத்தாச்சா

கார்த்திகைப் பாண்டியன் said...

logu..

அப்பாவி..
பிள்ளைப்பூச்சி..
உண்மை..
ஆனா இல்லை..;-)))

ஆ.ஞானசேகரன் said...

நான் பிஸி

Anbu said...

அடுத்த தலைப்பு:-

நம்பிக்கை

sakthi said...

நம்பிக்கையுடன் உன்னை விட்டு பிரிகிறேன் காதலா
என்னை விட உனக்கு சிறந்த காதலி
கிடைக்கப்போவதில்லை
கிடைத்தால் தாராளமாக போ
அவள் உன்னை விட்டு பிரிந்தால்
கவலைப்படாதே திரும்பி பார்
உனக்காக நான் காத்திருப்பேன் உருட்டுக்கட்டையுடன்!!!

எங்கோ படித்தது

sakthi said...

நான் தர விரும்பும் தலைப்பு

அம்மா

சிங்கக்குட்டி said...

கண்டேன் என் காதலை...
தோழியிடம்....
காதலியிடம்...
மனைவியிடம்...
தாயிடம்.....
அதனை காதலுக்கும் உள்ள இடைவெளி என்னவோ,
ஒரு மெல்லிய நூலிடைதான்!

gayathri said...

sakthi said...
நம்பிக்கையுடன் உன்னை விட்டு பிரிகிறேன் காதலா
என்னை விட உனக்கு சிறந்த காதலி
கிடைக்கப்போவதில்லை
கிடைத்தால் தாராளமாக போ
அவள் உன்னை விட்டு பிரிந்தால்
கவலைப்படாதே திரும்பி பார்
உனக்காக நான் காத்திருப்பேன் உருட்டுக்கட்டையுடன்!!!

எங்கோ படித்தது


chellam ithu un cella messege vanthu irukum da

gayathri said...

sakthi said...
நான் தர விரும்பும் தலைப்பு

அம்மா


மறு ஜென்மம் எடுத்து
என்னை இந்த உலகிற்கு
அறிமுக படுத்தியவள் என் அம்மா

நான் கொடுக்கும் வார்த்தை
பிரிவு

தமிழ்போராளி said...

அழகான தன் முகத்தை மூடும்
கைவிரல் இடைவெளியில் பார்ப்பதே
காதலின் உச்சக்கட்ட அடையாளம்...

வீரா துபாய்

நட்பு