தீபாவளி சிறப்புப் பதிவு 2009...!!!


அருமை அண்ணன் ஸ்ரீ அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் என் கூட சேர்ந்து குறும்படம் இருக்கவிருப்பதால்...

பதிவிற்கான விதிமுறைகள் :


1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.

2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.

3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.

4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.

5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்..

**************************

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

என்னை பற்றி இந்த உலகமே அறிந்து இருந்தாலும் நீங்கள் கேட்டு இருப்பதால் சொல்கிறேன்..சென்னையில் பிறந்து இன்று சிவகாசியில் வாழ்பவன்..வீட்டிற்கு ஒரே பிள்ளை..அதனால் செல்லம் அதிகம்..தீவிர கிரிக்கெட் ரசிகன்..தற்சமயம் கணிணியில் டிசைனராக இருக்கிறேன்..

**************************

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?


மறக்க முடியாத சம்பவம் என்று எதுவும் இல்லை..நானும் என் நண்பர்களும் சேர்ந்து இரவு 2 மணி வரை வெடி போடுவோம்.நன்றாக என்ஜாய் பண்ணுவோம்..சமீபவத்தில் மூன்று நாட்களுக்கு முன்னே டிக்கெட் ரிசர்வ் செய்து ஆதவன் என்ற சூப்பர்ஹிட் படத்தை பார்த்தது...

**************************

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

பொதுவாக விஷேஷ நாட்களில் வெளியூருக்கு செல்வதில்லை..சொந்த ஊரிலே தான் ஊர் சுத்தும் சுகமே தனிதான்..மாலை நேரங்களில் இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என ஒளிபரப்பாகும் குப்பை படங்களை பார்ப்பது..

**************************

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

தீபாவளி என்ற ஒரு நாள் சந்தோஷத்திற்காக பலபேர் இங்கு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வருடம் முழுவதும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்..20 வயது இளைஞர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை. ஒரு வருடம் கூட பட்டாசு ஆலைகள் வெடிக்காமல் இருந்ததில்லை..ஆனால் இம்முறை பல உயிர்கள் என் கண் முன்னே இறந்து இருப்பதை பார்த்ததால் எழுதுகிறேன்..

**************************

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

இந்த முறை நான் ஆடை எடுக்கவில்லை..அப்படியே எடுத்து இருந்தாலும் தைத்துத்தான் இருப்பேன்..

**************************

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

எல்லாமே கடையிலேதான்..இனிப்பும் காரமும் கலந்து வீட்டிற்கு வாங்கிச்சென்றேன்..மற்றபடி நகரத்தில் உள்ள மாதிரி திண்பண்டங்கள் கொடுக்கல்,வாங்கல் நடைமுறைகள் இன்னும் எங்கள் ஊருக்கு வரவில்லை..

**************************

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

முதல் நாளே அனைவருக்கும் இ-மெயில் அனுப்பினேன்..என்னுடைய மொபைலில் பேலண்ஸ் இல்லாததால் யாருக்கும் தொலைபேசியில் வாழ்த்துக்கள் கூறவில்லை..

**************************

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

பகல் நேரங்களில் ஊர் சுத்துவேன்..இரவு நேரங்களில் வீடு வந்துவிடுவேன்..

**************************

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இதுவரை செய்ததில்லை..இனிமேல் செய்ய ஆசை உண்டு..

**************************

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

லோகு..(அச்சம் தவிர்)


.ஞானசேகரன்..(அம்மா அப்பா)


எவனோ ஒருவன்..(அதி பிரதாபன்)


பீர் முகமது..(ஜெய்ஹிந்துபுரம்)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

12 பின்னூட்டங்கள்:

அப்துல்மாலிக் said...

வெளிப்படையான விளக்கம் தல‌

இந்த வருடம் புது ஆடை எடுக்கவில்லை என்பதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம்?

வால்பையன் said...

தீபாவளியை தருவிக்கும் சிவகாசிக்கும் ஒரு திபாவளி உண்டுல்ல!

வால்பையன் said...

பாலோ அப் போட மறந்துட்டேன்

thala bala said...
This comment has been removed by a blog administrator.
அத்திரி said...

//ஆதவன் என்ற சூப்பர்ஹிட் படத்தை பார்த்தது...//

தம்பி ஏன் ஏன் இப்படி...............வேணாம்

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

இயல்பான பதில்கள் - மகிழ்ச்சி

நல்வாழ்த்துகள்

Beski said...

அடுத்த தொடர் பதிவா? இந்த வாரம் ஏற்கனவே ரெண்டு ஆச்சு, இதோட மூனு. எனக்கு இது தொடர் பதிவு வாரம் போல இருக்கு. எழுதிடலாம் அன்பு.

அழைத்தமைக்கு நன்றி அன்பு.

ஆ.ஞானசேகரன் said...

//தீபாவளி என்ற ஒரு நாள் சந்தோஷத்திற்காக பலபேர் இங்கு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வருடம் முழுவதும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்..20 வயது இளைஞர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை. ஒரு வருடம் கூட பட்டாசு ஆலைகள் வெடிக்காமல் இருந்ததில்லை..ஆனால் இம்முறை பல உயிர்கள் என் கண் முன்னே இறந்து இருப்பதை பார்த்ததால் எழுதுகிறேன்..//

மனதை வலிக்கதான் செய்கின்றது.... வெடி வெடிக்கதான் வேண்டுமா??????

ஆ.ஞானசேகரன் said...

அன்பின் அழைப்பிற்கு நன்றி தம்பி...

சிங்கக்குட்டி said...

நல்ல பதில்கள் வாழ்த்துகள்.

Beski said...

போட்டாச்சுப்பா...
http://www.yetho.com/2009/11/2009.html

பீர் | Peer said...

அன்புக்காக போட்டாச்சு..

http://jaihindpuram.blogspot.com/2009/11/2009.html