கடலை! கடலை! கடலை!



கடலை ரசித்தபடி
கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி
கடற்கரையில் தோழியுடன் இருக்கையில்
கடலை கடலை என்றான் சிறுவன்!
கடலை பொட்டலம் வாங்கி
கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்!
கடலைக் காணவந்தவன் ஒருவன்
கடலைப் பார்த்தபடி அருகில் வந்து
கடலையா.................? என்றான்!
கடலை தான் கேட்கிறான் என்று
கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு
கடலைப் பார்த்தது போதுமென்று
கடலை விட்டு நீங்கி செல்கையில்
கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட
கடலை என்னவென்று தோழி எனக்கொரு
கடலை வகுப்பெடுத்தாள்!
கடலை போடுவது பற்றி!
கடலையில் இப்படியும் ஒரு வகையா? என
கடற்கரையை நினைத்து நகைத்தேன்!
கடலலைபோல் அவளும் சிரித்தாள்! நிலம் பார்த்தவாறு!

குறிப்பு:- மீள்பதிவு....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பையா-வும் நானும்....


படத்தின் பாடல்களை கேட்கும் போதே, எப்படா படம் வரும் என்று காத்திருந்தேன்..ஒரு வழியாக நேற்று வெளியானது..வழக்கம்போல் ஓனரின் உபயத்தால் பையா-வை பார்க்க முடிந்தது..

அழகான ஒரு பெண்ணை பேருந்தில் சந்திக்கிறீர்கள்..பின் அவளையே அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது..நீங்கள் வண்டி ஓட்டும் செல்லும் போது அவளே உங்களிடம் லிப்ட் கேட்கிறார்கள் பாம்பே வரைக்கும்..யாராச்சும் வரமுடியாதுன்னு சொல்லுவோமா என்ன..??? இதுதான் பையா படத்தின் கதை..அவளை பாம்பே கூட்டிட்டு போகும் போது இவனை ஒரு கும்பலும் அவளை ஒரு கும்பலும் வலை விரித்து தேடுகிறது..அவர்களிடம் இருந்து மீண்டு வருவதே மிச்ச கதை..



கார்த்தியின் ஒவ்வொரு அசைவிலும் சூர்யாவினை பார்க்க முடிகிறது..சில நேரங்களில் சூர்யாவின் படம்தான் பார்க்கிறோமோ என்ற எண்ணத்தோன்றுகிறது..ஒவ்வொரு காட்சியிலும் கார்த்தி மிகவும் என்ஜாய் பண்ணி நடித்திருக்கிறார்..காதல் காட்சிகளில் தமன்னாவுடன் பேசும் போதும், சண்டைக்காட்சிகளில் வில்லனும் பேசும் போதும், இவர் காட்டும் முக பாவனைகள் என்னவென்று சொல்ல..தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்த இன்னொரு சூர்யாவாய் அவதாரம் எடுத்திருக்கிறார்..இதுவரை கைலியுடன் பார்த்த அவரை கலர் கலர் காஷ்டியூம்களில் பார்க்கும் போது ஒரு சின்ன பயம் தோன்றியது..எங்க சூர்யாவை மிஞ்சிடுவாரோ என்று...



தமன்னா பெரிதாக வேலை இல்லாவிட்டாலும் பாடல் காட்சிகளில் தன்னால் முடிந்தவரை உழைத்திருக்கிறார்...(கூடிய சீக்கிரமே ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் தமன்னா முன்னேற்றக்கழகம், மதுரை கிளை.) விருப்பம் இருப்பவர்கள் இணைந்து கொள்ளலாம்...

படத்தில் காமெடிக்காக வில்லன்கள் பயன்படுத்திருக்கார்கள்...

படத்தின் இசை யுவன் come back என்று சொல்லிக்கொள்ளலாம்...பாடல்களிலும், பிண்ணனி இசையிலும் கலக்கியிருக்கிறார்..என் காதல் சொல்ல நேரமில்லை என்னும் பாடல் திரையில் வரும் வந்த விசில் சவுண்டுக்கு அளவில்லை...

ஒளிப்பதிவாளர் மதியும், எடிட்டர் ஆண்டனியும் தங்கள் பணியை செவ்வென செய்து முடித்துள்ளார்கள்...

என்னடா படத்தில் குறையே இல்லையா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..

என்னதான் பல குறைகள் என் கண் முன்னே வந்து சென்றாலும், எப்போதும் என்ஜாய் பண்ணி நடித்துக்கொண்டிருந்த கார்த்தியும், அழகான தமன்னாவும், அதனை மறைத்துவிட்டார்கள்..

முதன் முதலாக கலர் கலர் காஷ்டியூம்களில் கார்த்தி, அழகான தன் இடையை எப்போதும் தாராளமாக காட்டிக்கொண்டிருக்கும் தமன்னா, தேன் போன்ற ஐந்து பாடல்கள், அழகான பிண்ணனி இசை, தொலைதூர கார் பயணம், அழகான சேஸிங் காட்சிகள், என இரண்டரை மணி நேரம் எந்தவித சலிப்பும் தட்டாமல் செல்கிறது பையா...

படம் முடிந்து வெளியேறும்போது எனது சைக்கிள் கூட கார் வேகத்துக்கு சென்றது என்னவோ மறுக்கமுடியாத உண்மை..

பையா - சூப்பர் டைம் பாஸ் மச்சி...

பின்குறிப்பு:-

இத்தனை நாள் நான் உயிரோடி இருக்கிறேனா, இல்லையா என்பதை அடிக்கடி தொலைபேசியின் மூலம் அறிந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி..கொஞ்சம் வேலை அதிகம் மக்களே..அதான் பதிவிட முடியவில்லை..மன்னிக்கவும்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS