நீ மொதல்ல ஆள விடு சாமி...


வீட்டிற்குள் அப்பா மாட்டி வைத்த படத்தில்
முருகன் வேலுடனும் சேவலுடனும் சிரிக்கிறார்.
அம்மாவோ வெள்ளி செவ்வாய்களில், தவறாமல்
மாரியம்மனுக்கும் காளியம்மனுக்கும் , அவர்களின்
கோயிலிக்கு சென்று, தரிசனம் செய்கின்றார்.
மாமாவோ மாதாமாதம் மடப்புரம் செல்கின்றார்.
சித்திக்கு சிந்தலக்கரை வெட்காளிதான் உச்சிதமாம்.
தாத்தாவோ, குலதெயவம்தான் குலம் காக்குமென்கிறார்.
சாமி இல்லையென்று, என் அக்கா புருஷன்
சொன்னால், பாட்டி பத்ரகாளியாகின்றாள்.
அக்காவோ, கணவனுக்கு நல்ல புத்தி குடுவென‌
சித்தி விநாயகரைத் துதிக்கின்றாள், ஆனால்
அண்ணனுக்கு அய்யனார்தான் இஷ்ட தெய்வமாம்..
கருமாரியை கவனித்தால் கஷ்டமெல்லையென,
அங்கலாய்க்கிறாள் பக்கத்து வீட்டு மாமி.
ஏனோ, என்னால் எவரிடமும் கேட்கமுடியவில்லை
"எங்கே உன் கடவுளை காமி" என, கேட்டால் எல்லாரும்
சொல்லி வைத்தாற் போல் சொல்கின்றனர்.
" நீ மொதல்ல ஆள விடு சாமி" என..!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 பின்னூட்டங்கள்:

கார்க்கிபவா said...

ஹிஹிஹிஹி.. வால் அண்ணன் உங்க ஃப்ரெண்டா பாஸ்?

Raju said...

:-)

cheena (சீனா) said...

அன்பின் அன்பு - நல்லாத்தானே இருந்தே ! என்ன ஆச்சுடா உனக்கு ! ம்ம்ம்ம்ம்ம் - தலைல எலுமிச்சம்பழம் தேச்சிக்க - சரியா

அத்திரி said...

ஒன்னும் சொல்றதுக்கில்லை.....சரி உனக்கு எந்த சாமிய புடிக்கும்

விக்னேஷ்வரி said...

ஊஹூம்.

ராம்ஜி_யாஹூ said...

நல்ல வேளை இந்து மத சாமிகளோடு கவிதையை முடித்து கொண்டீர்கள்.