உன்னைத்தவிர...


உன் தலையில் இருந்து
தவறி விழுந்த ஒற்றை முடி..

அந்த முடியில் குடி கொண்டிருந்த
சொர்க்கத்தை அடைந்த பூக்கள்...

உனக்கே தெரியாமல் உன்னிடம்
இருந்து களவாடிய ஹேர்-கிளிப்...

நீ முகம் துடைக்கையில் விழுந்த
ஸ்டிக்கர் பொட்டு...

கீழே விழுந்து நொறுங்கி போன
வளையல் துண்டுகள்..

நீ ஆசையாய் சாப்பிடும்
டைய்ரிமில்க் சாக்லெட் கவர்...

மை இல்லை என அலட்சியமாய் - நீ
தூக்கி எறிந்த பேனா...

உன் கழுத்தில் இன்பவேதனையை அனுபவித்து
அறுந்து விழுந்த பாசிமணி...

நீ அடிக்கடி வெட்டி கீழே போடும்
நகத்துண்டுகள்...

இவை அனைத்தும்
உன் நினைவுகளாய்
என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன...

உன்னைத்தவிர...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 பின்னூட்டங்கள்:

shammi's blog said...

nice recollections of things...gud

sakthi said...

நீ முகம் துடைக்கையில் விழுந்த
ஸ்டிக்கர் பொட்டு...

கீழே விழுந்து நொறுங்கி போன
வளையல் துண்டுகள்

adapavame antha alavu aayiducha

sakthi said...

நீ அடிக்கடி வெட்டி கீழே போடும்
நகத்துண்டுகள்...


ithai kuda vidalaya

பிரியமுடன் பிரபு said...

nice

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

உன்னைத் தவிர - மற்றவை எல்லாம் இருந்து என்ன பயன் - ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் அட்லீஸ்ட் அடுத்த காதலில் வெற்றி பெற

நட்புடன் சீனா