நான்-விஜய்-காவலன்-தியேட்டர்-தலைவலி.


1.இந்த பதிவு விஜய் ரசிகர்களை தாக்கியோ அல்லது அஜித்,சூர்யா ரசிகர்களை உயர்த்தி பேசவேண்டும் என்று நினைத்தோ எழுதவில்லை.
2.இது கற்பனைக்கதை அல்ல முழுக்க முழுக்க நிஜம்..அதுவும் என் வாழ்வில் நேற்று மாலை நடந்த நிகழ்வு..

சரி அப்படி என்ன பிரச்சனைன்னா..

நான் ஒரு சூர்யா பைத்தியம் என்பது எனது பதிவு படிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.. சூர்யாவை எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு விஜயை பிடிக்காது. இதுக்கு எல்லாம் காரணம் கேட்காதீங்க.. பொங்கலுக்கு ரீலிஸான படங்களில் சிறுத்தையை ரீலிஸான முதல் நாளே பார்த்தாச்சு. காரணம் சூர்யாவின் தம்பி என்பதால்.அடுத்து ஆடுகளம் சன் டிவியின் டிரைலராலும், நண்பர்களின் ஊக்கத்தினாலும் பார்த்தேன்..

எவ்வளவோ என்னை நண்பர்கள் திடப்படுத்தியும், நண்பர்களே இலவசமாக டிக்கெட் எடுத்துக்கொடுத்தாலும் காவலனுக்கு செல்ல மறுத்தேன். நேற்று காலை அதிஷா அண்ணன் விமர்சனம் பார்த்துகூட என்னை நானே நியாயப்படுத்திக்கொண்டேன்.

தீடீரென எந்த எழுச்சி ஏழுமலையாத்தா என் மனதுக்குள் இறங்கினால் என்று தெரியவில்லை. என்னடா அன்பு,வேட்டைக்காரன்,சுறாவே பார்த்துட்டோம்.. இந்த படத்தை பார்த்தா என்ன.. என்று என் உள்மனது குறுகுறுத்தது..சரி மாலை போவோம் என உறுதியானேன். வழக்கமாக நான் படத்துக்கு போவதென்றால் என் முதலாளி தான் ஸ்பான்சர்.. இந்த தடவை அதுவும் மிஸ்ஸிங்.. காரணம் அவர் விஜய் பத்தி பேசுனாலே கோவப்படுவார்.. சரி இந்த படத்துக்காவது நம் சொந்த காசில் போலாம் என எண்ணி தியேட்டருக்கு கிளம்ப ஆயத்தமானேன்..

போகும் போதே முன்னெச்சரிக்கையாக கையில் தலைவலி மாத்திரை இரண்டும், ஜெண்டுபாம் தைல டப்பாவும் வாங்கிச்சென்றேன்..தியேட்டருக்குள் நுழையும் போதே மணி 6.30 ஆகிவிட்டது.. படம் 6.20க்கே போட்டுவிடுவார்கள் என நண்பன் கூறுயது வேறு ஞாபகத்திற்கு வந்து போனது..சீக்கிரமாக சென்று சைக்கிளை நிறுத்தி பார்க்கிங் டோக்கன் கொடுப்பவரிடம் படம் போட்டாச்சா என ஆவலாக கேட்டேன்.. என்னை ஏற இறங்க பார்த்த அவர் இல்லை தம்பி என்று கூறியவாறே டிக்கெட்டை கிழித்து கையில் கொடுத்தார்..

அவரிடம் பார்க்கிங் டிக்கெட் வாங்கியவன் ஓடினேன் கவுண்டரை நோக்கி.. கம்யூட்டரின் முன் உட்கார்ந்திருந்தவன் தலையில் கைவைத்தவாறு சோகமாக அமர்ந்திருந்தான்..

அண்ணே..அவனிடம் பேச்சில்லை

கொஞ்சம் அழுத்தமான குரலில் அண்ணே என்றேன்..

என்ன என்பது போல் பார்த்தார்...

சரி அவருக்கு என்ன பிரச்சினையோ என்று எண்ணி காவலன் டிக்கெட் என்றேன்..

ஒரு பத்து நிமிஷம் ஆகும்பா என்றார்..

15 நிமிடங்கள் பொறுமை காத்தவன் சற்றே பொறுமையில்லாமல் கேட்டேன்.. கம்யூட்டர் ரிப்பேரா என்றேன்..

இல்லைப்பா...

கைகடிகாரத்தை பார்த்தேன் 6.50 என காட்டியது..

மறுபடியும் அவரிடம் கேட்க முற்பட அவரே என்னிடம்

தம்பி..உள்ள 5 பேர் தான் போயிருக்காங்க.. இன்னும் 5 பேர் வரட்டும்.. ஒரு பத்து பேர் வந்தாலாவது படம் போட்டுருலாம்னு பார்க்கிறோம்.. உங்க பிரண்ட்ஸ் யாரும் இருந்தா கூப்பிடுறீங்களா என்றார்...

அப்போதுதான் தெரிந்தது அவர் தலையில் கைவைத்து உட்கார்ந்ததன் காரணம் என்னவென்று..

விஜய் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையை சத்தியமா நான் நினைச்சிக்கூட பார்க்கவே இல்லை..

வாழ்க விஜய்! வளர்க அவர் புகழ்!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அம்மா..

பார்த்து பார்த்து நீ என்னை அலங்கரிப்பாய்,
புது புடவை பொருந்தாத நிறத்தில் ரவிக்கை
உனக்கு மட்டும் தீபாவளி எப்போதும் இப்படித்தான்!
என் கண்கள் பார்த்தே மனதை படிக்கும் வித்தை
உனக்கு கை வந்த கலை............!
கோபமாய் கத்துவேன்.......
செல்லமாய் கொஞ்சுவேன்........
புரிதலோடு ஏற்க உன்னால் மட்டுமே முடியும்..............!
என் துயர தருணங்களில் ஓடி வருவேன் உன்னிடம்
என் ரனங்களுக்கான மருந்து
கிடைத்து விடும் உன் மடியில்...............!
தாமதமாய் வீடு திரும்புவேன்
தவித்து போவாய்.........
தடுமாறி ஆங்கிலம் பேசுவேன்
சிலிர்த்து போவாய்...............!
"விவரமான பையன் அவன்"
என்று என்னை ஊர் சொன்னாலும் நான் குழந்தை
என்ற நினைப்பு எப்போதும் உனக்கு.........!
வாழ்க்கை தந்தாய்........
வாழ வழி ஏற்படுத்தினாய்.........
துவண்டு விடும் போதெல்லாம்
தூக்கி நிறுத்தி சக்தி தந்தாய்.........!
அன்பு துளிர் விட்டுக்கொண்டே இருக்கும்
அசாத்யம் உனக்குள் மட்டும் எப்படி.......?

அதனால்தான்
கடவுளின் மாற்றாய்.........
கடவுளினும் மேலே...........
சரியாய் பொருந்துகிறாய்.......
அம்மா............. !!!!

**************************************


அனைவருக்கும் எனது மனமார்ந்த

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கா.பா. - தோழி - பிரித்தி...


டிஸ்கி: முதலில் இந்த பதிவு எழுத காரணமாக இருந்த அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்-அண்ணி பிரித்தி அவர்களுக்கு மிக்க நன்றி.. அண்ணன் கா.பா.வுக்கு கிடைத்த காதலி போல் எனக்கும் ஒரு காதலி கிடைக்க ஆசைதான்..சரி விடுங்க என் ஆசை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அண்ணன் கா.பா. விரைவில் அண்ணி பிரித்தியை கைப்பிடிக்க எல்லாம் வல்ல எழுச்சி ஏழுமலையாணை பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன்.

***************

இவ்வுலகில் தேவதையே இல்லை என்று சொல்லி வாக்குவாதம் பண்ணும் அம்மாவிடம் எப்படி சொல்லி புரிய வைப்பேன்.. அவளுக்கு மருமகளாக வருபவளே தேவதைதான் என்பதை..

சக்கரை நோய் வரப்போகிறதென எச்சரிக்கிறார் என் குடும்ப மருத்துவர்..முடிவு எடுத்துவிட்டேன் இனிமேல் உன் பெயரை ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உச்சரிக்க வேண்டுமென்று..

நீ, நான், காதல், என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.. முத்தம், காமம் என்று சொன்னால் உடனே உதடுகள் ஒட்டிக்கொள்கிறது என்றேன் தோழியிடம்.. ஒரு மாதிரியாக என்னை பார்த்தவள் உன் உதடும் என் உதடும் ஒட்டிக்கொள்ள என்ன சொல்ல வேண்டும் என்கிறாள்!!!

"ரத்தசரித்திரம்" படத்தில் கூட ஆட்களை கொல்ல அரிவாள், துப்பாக்கியை உபயோகப்படுத்தினார்கள்.. ஆனால் என்னவளோ கையில் ஒரு தாளை வைத்துக்கொண்டு பயமுறுத்துகிறாள்.. அவள் கையில் "காவலன்" படத்திற்கான டிக்கெட்..

நீ போனபின்பும் கூட
வெட்கத்திலிருக்கிறது...
நீ ஆடிய ஊஞ்சல்!!

உன் கழுத்திலே இருப்பதற்கு
என்ன தவம் செய்திருக்கும்...
அந்த வெள்ளை பாசிகள்!!

***************

இந்த மொக்கைக்கு எதுக்குடா கா.பா.வுக்கு நன்றி சொன்ன அப்படின்னு கேட்டீங்கன்னா எல்லாம் ஒரு விளம்பரம் தான்.. அண்ணனுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாக அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..வாழ்த்துக்கள் அண்ணா..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நான் மகான் அல்ல...விமர்சனம்!


கதை என்னவென்றால்...அட நிறுத்துங்க,நமக்கெல்லாம் எதுக்கு பாஸ் கதை.. கொடுக்குற 50 ரூபாய்க்கு நல்லா டைம்பாஸ் ஆகுதா அப்படின்னு கேட்டீங்கன்னா நீங்க என் கூட்டாளிங்க..

இல்லை..நாங்க படம் பார்த்தா அதுல ஒரு இலக்கணம்,இலக்கியம் வேணும்... காலேஜ் பசங்க எல்லாம் லவ் பண்ணக்கூடாது..சிகரெட்,கஞ்சா அடிக்கக்கூடாது.. காலேஜ் பசங்க அப்படின்னா புத்தகம் தான் படிக்கணும்... படத்துல ஒரு கதை இருக்கணும்.. கதாநாயகி சேலை மட்டும்தான் கட்டணும்..அப்படின்னு நினைக்கிறவங்க தயவு செய்து படத்திற்கு போகாதீங்க..அப்புறம் படம் பார்த்துவிட்டு, என்ன இந்த படத்துல காலேஜ் பசங்க கஞ்சா அடிக்கிறாங்க..இதை பார்த்துதான் எங்கூர் பசங்க எல்லாம் கெட்டு போறாங்க அப்படின்னு கண்டனப்பதிவு போடாதீங்க...

சரி விடுங்க படத்துக்கு வருவோம்...

கதை என்னன்னு கேட்டீங்கன்னா.. காலேஜ் படிக்கிற ஐந்து பசங்க போதைக்கு அடிமையாகி ஒரு காதல் ஜோடியை கொலை பண்றாங்க..அதுக்கு ஒரே சாட்சியா கதாநாயகனோட அப்பா..அவரையும் அந்த பசங்க கொலை பண்றாங்க.. தன் அப்பாவை கொன்ற அந்த பசங்களை திருப்பி பழி வாங்குவதே மீதிக்கதை.. இதற்கிடையில் காஜல் அகர்வாலுடன் காதல் கொள்ளும் கார்த்தி, என திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக நகர்த்தியுள்ளார் சுசீந்தரன்..

படத்தில் காலேஜ் பசங்களாக நடித்துள்ள ஐந்து பேரும் எக்ஸ்டிரானரி பெர்பார்மன்ஸ்.. அதிலும் நந்தா படத்தில் குட்டி சூர்யாவாக நடித்தவர் இதில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.. அதிலும் அவரது கண் சொல்லவே வேணாம்.. அப்புறம் பரட்டைத்தலையன், இந்த ஐந்து பேருக்கு துணை போகும் மாமா என எல்லோரும் தங்களது வேலையை கனகச்சிதமாக செய்துள்ளனர்...

காஜல் அகர்வால் முதல் பாதியில் காதலிக்க வருகிறார்..இரண்டாவது பாதியில் இரண்டு நிமிடம்.. ஒரு பாடல்.. அவ்வளவுதான்..

கார்த்தியின் தந்தையாக வரும் ஜெயபிரகாஷ் மிக அருமை...எல்லோருக்கும் இதே போல் அப்பா அமைந்தால் யோகம்தான்...

மற்றபடி வெண்ணிலா கபடிகுழுவில் வரும் 50 புரோட்டா சாப்பிடுபவர், குப்பத்தில் வசிக்கும் தாதா, இன்னும் நிறைய பேரை இயக்குனர் மிகச்சரியாக கையாண்டுள்ளார்..

படத்தின் இரண்டாவது ஹீரோ யுவன்... ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாயிருக்கும் நிலைமையில் படத்தின் பேக்கிரவுண்ட் மியூசிக்கிலும் கலக்கி இருக்கிறார்..

ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர், சண்டைப்பயிற்சி அனல் அரசு, என எல்லோரும் ரவுண்டி கட்டி அடித்துள்ளனர்..

முதல் பட வெற்றிக்குப்பின் சுசீந்திரன், நகரத்தை மையமாக கொண்டு ஒரு கமர்சியல் ஹிட் கொடுத்துள்ளார்..

படத்தின் நாயகன் கார்த்தி, முதல் பாதியில் எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்துடனே இருக்கிறார்.. இவர் நடிக்கும் படத்தில் காமெடி பண்ண தனியாக ஆட்கள் தேவையில்லை.. இதுக்கு மேல் இவரை பற்றி சொன்னா சூர்யா தம்பி அப்படிங்கிறதால தான் இவன் இப்படி பேசுறான்னு சொல்லுவீங்க.. :-))

நான் மகான் அல்லா - இறகை போலே பறக்கிறேனே..

______________________


படத்தின் இடைவேளையின் போது தல நட(டி)க்கும் மங்காத்தா டிரெய்லர் போடப்பட்டது.. டிரெய்லர் போட்டதிலிருந்து ரசிகர்களின் அமைதிக்கு அளவே இல்லை.. பக்கத்திலிருந்தவர் உடனே என்னிடம் சொன்னார்.. அதை ஏன் என்னை பார்த்து சொன்னார்ன்னு தெரியலை..

ஏன் எல்லோரும் அமைதியா இருக்காங்க தெரியுமா? என்றார்..

தெரியலையே அண்ணே..

இத்தனை நாளா நடந்த தல இப்போ தான் உட்கார்ந்து இருக்கார்.. ஒருவேளை நடந்து நடந்து கால்வலி வந்துருச்சோ அப்படின்னு எல்லாம் பீல் பண்ணிருப்பாங்க என்றார்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS