கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-5)

நகைச்சுவை:-

புத்தகத்தில் படிச்சும் புரியவில்லை;
தொலைக்காட்சியில் பார்த்தும் நம்பவில்லை;
ஆசிரியர் சொல்லியும் நம்பவில்லை;
ஆனால் உன்னைப் பார்த்தபின்பு தான் புரிந்து கொண்டேன்,
வால் இல்லாமலும் குரங்கு இருக்கும் என்று...

************************************************************************

NATPU எனக்கு ரொம்ப பிடிக்கும்'
ஏனென்றால்:-
N-நமீதா
A-அசின்
T-திரிஷா
P-பூஜா
u-ஊர்மிளா

****************************************************************************

மரணம் கூட சுகம் தான்
எப்போது தெரியுமா?

நமீதாவின் மடியில் உயிர் பிரியும் போது!!!

(BY NDF- Namitha Development Force)

JAi Namith

******************************************************************************

வாரணம் ஆயிரம் டையலாக்:-
படத்தின் பெயர்: காரணம் ஆயிரம்
ஹாய் சார்,ஐ யாம் கிருஷ்ணன்,இதை நான் சொல்லியே ஆகணும்,
கொஷ்டின் பேப்பர் அவ்ளோ கஷ்டம்,இங்க எவனும் இவ்ளோ கஷ்டமா ஒரு பேப்பரா பார்த்திருக்க மாட்டாங்க..

**************************************************************************************

லேடி 1:-உங்க கூந்தல் இவ்வளவு அழகாக இருக்கே எப்படி?
லேடி 2:-காலையில ஷாம்பூ மாலையில சோப்பு போடுவேன்..
லேடி 1:-அப்ப நைட்டுல?
லேடி 2:-கழட்டி ஆணியில போட்டிருவேன்!!

*********************************************************************************************

தத்துவம்:-

யார் கூட இருந்தா நன்றாக இருப்போம் என நினைப்பது பொண்ணுங்க மனசு,
யார் கூட இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என நினைப்பது பஸங்க மனசு,

*****************************************************************************

மண்ணில் மங்கை(பெண்கள்) இருக்கும் வரை
மனிதன் கண்ணில் கங்கை(கண்ணீர்) இருக்கும்..

********************************************************************************

வாழ்க்கையில் பிரச்சனை யாரால் வருகிறது தெரியுமா?

அப்பா?
அம்மா?
நண்பர்கள்?
உறவினர்கள்?
காதலி?

இவங்க யாராலும் கிடையாது..
100% ஈகோ தான் காரணம்..

********************************************************************************************

அழகை எதிர்பார்க்கும் பெண்களிடம் அன்பை காட்டாதே!!
உன்னிடம் அன்பை காட்டும் பெண்களிடம் அழகை எதிர்பார்க்காதே!!

***********************************************************************************************

இனிப்பு இல்லாத காபியை குடிக்க முடியாது

நல்ல பிகர் இல்லாத பள்ளியில் படிக்க முடியாது!!
(பிகர் இல்லாத ஒரே காரணத்தால் நன்றாக படிக்காதோர் சங்கம்)

***********************************************************************************************

கவிதை:-

தாஜ்மஹால் தொலைவில் இருந்து பார்த்தால்

ஒரு 'கோவில்'

அதில் வாழ நினைத்தால் அது

ஒரு 'கல்லறை'

அது போலவே "காதலும்"

*********************************************************************************************

கடவுள் கொடுத்த பரிசு

நண்பர்கள்

பரிசாக வந்த கடவுள்

அம்மா

*************************************************************************************************

இன்று நீ
தலை குனிந்து பார்
நாளை பலர் உன்னை
தலை நிமிர்ந்து பார்க்கச் செய்வேன்
இப்படிக்கு

'
புத்தகம்'

*************************************************************************************************

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
பிடிவாதமாக ஒரு முத்தம்
கன்னத்தில்

கொசுக்கடி

***************************************************************************************

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நீங்கள் ஒரு தமிழனா???? பரிசோதிக்க இங்கே க்ளிக் பண்ணவும்.........

கீழ் உள்ளவைகளின்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்...!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா
கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!
பேரு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்]
திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு சைஸ்
சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.
அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!

6. மளிகைப் பொருட்களின்பாலிதீன் உறைகளை பத்திரமா வைப்பீங்க..
பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு...!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் பார்ப்பீங்க.
சீல் விழாம இருந்தா, அந்த கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,
அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ,விரைவுப் பேருந்தோ..இருபக்க கை வைக்கும்
இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரிட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி.திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க..
ஏ.சி.கோச்சுன்னா,கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.!

11. விமானமோ,ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து
ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க....!

12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்
எடுத்துட்டு வருவீங்க.!கொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..
நம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு
ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க...!

13.. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான்
உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்தபிள்ளைகளைப் பாரு..எவ்வளவு சாமர்த்தியமாஇருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவேமாட்டாங்க.. அடுத்த
பெற்றோரைப் பாருங்க..எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு
நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா
தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி
குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு
இருக்கும். [உ-ம்.பிரஷர். குக்கர்,காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர்,பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன்,கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18.பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்...
உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-4)நகைச்சுவை:-

அசின்:-பதிவை படிக்கிற பையன் பாரேன்டி..
சிம்ரன்:- சூப்பரா இருக்கான்டி..
சினேகா:-அவன் என்னை பார்க்கத்தான் வருகிறான்..
நமிதா:-முதல்ல அவன் என் ஆளு தெரிஞ்சுக்கோங்க..
பாவனா:-அவன் என் மாமா பையன் தெரியுமா?..
பறவை முனியம்மா:-அடி சிறுக்கிங்களா,,அவன் என் புருஷன்டீ..
(சும்மா தமாசு..)

*************************************************************************************

ராமு:-டேய்,நாளைக்கு நான் சினிமாவுக்கு போரேன்..வர்ரியா?
சோமு:-முடிஞ்சா வரேன்டா..
ராமு:-முடிஞ்ச பிறகு ஏன்டா வர்ர..படம் ஆரம்பிக்கும் போதே வந்துவிடு..

*************************************************************************************

ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..

*************************************************************************************

ஆசிரியர்:-'சூரியன் மேற்கே மறையும்'இது நிகழ்காலமா,எதிர்காலமா,கடந்தகாலமா?
மாணவன்:-அது 'சாயங்காலம்'
ஆசிரியர்:-????

*************************************************************************************

காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என் மீது விழுந்தது..
எனக்கு பயங்கர சந்தோசம்..
சைக்கிள் துடைக்க துணி கிடைத்து விட்டது என்று..

*************************************************************************************

பசங்க மனசு மொபைல் மாதிரி..
பொண்ணுங்க மனசு தண்ணீர் மாதிரி..
தண்ணீர்ல மொபைல் விழுந்தாலும் மொபைல்ல தண்ணீத் விழ்ந்தாலும் ஆபத்து மொபைலுக்குத்தான்..

*************************************************************************************

காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.

*************************************************************************************

பிரிந்த காதல் சேரும் போது 'கண்ணீர் மட்டும் பேசும்..
பிரிந்த நட்பு சேரும் போது 'பீர்,சிக்கன் பிரியாணி,குவாட்டர்,கூட பேசும்..

*************************************************************************************

ராமு:-பஸ் ஸ்டாப்ல நின்னு மேலையே பார்த்து கிட்டு இருக்கீங்களே என்ன விஷயம்?
சோமு:-மதுரைக்கு போகின்ற பஸ் மூன்று மணிக்கு மேல வரும் என்று சொன்னார்கள் அதான்..

*************************************************************************************
கவிதை:-

வெளியே வந்த பிறகு உள்ளே செல்ல முடியாது.
''கருவறை''
உள்ளே சென்ற பிறகு வெளியே வர முடியாது.
''கல்லறை''

*************************************************************************************

சத்தம் போடாமல் சாகின்ற உயிர் எது தெரியுமா?
''இதயம்''
நேசித்துப் பாருங்கள் தெரியும்..

*************************************************************************************

நெருப்பு மட்டும் அல்ல;
சிரிப்பும் காயப்படுத்தும்
காதலித்துப்பாருங்கள்..
தெரியும்..

*************************************************************************************
தத்துவம்:-

பசங்களுக்கு பிடிச்சது பொண்ணுங்களை கொஞ்சுவது,
பொண்ணுங்களுக்கு பிடிச்சது பசங்க கெஞ்சுவது:,

************************************************************************************

காதலும் நட்பும் சந்தித்த போது காதல் கேட்டது:
நான் வந்துவிட்டபின் நீ எதற்கு என்று?
நட்பு சொன்னது:-நீ விட்டு சென்ற கண்ணீரை துடைக்க..

*************************************************************************************

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பைக் வாங்கலையோ பைக்!!!


இந்த புகைப்படங்கள் அனைத்தும் என்னுடைய மின்னஞ்சலில் வந்தவையே!!

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

காலில் விழுந்தது ஏன்?!!!


ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்கிற ஒரு பெரியவர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்திருந்தார்.அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு விவாதம் ஏற்பட்டது.

பெரியவர் சொன்னார்:எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல் ஆகவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள்.
அவர்களுக்கு தங்களுடைய தனித்தன்மை தெரிவதில்லை.

அப்படியா சொல்கிறீர்கள்?

ஆமாம்.. எல்லோருமே போலி நடத்தைக்காரர்கள்..மற்றவர்களைப் பார்த்து நடிப்பவர்கள்.

அப்படியென்றால் யாருக்கும் சொந்தப்புத்தி இல்லை என்கிறீர்களா?

கொஞ்சம் பொறுங்கள் உங்கள் சந்தேகத்தை நான் போக்குகிறேன்.அதற்கு நீங்களும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்!.

இப்போது-இங்கே என்னை பார்ப்பதற்கு உள்ளே யாரவது வருகிற போது அந்த நேரம் பார்த்து நீங்கள் என் காலைத் தொட்டு வணங்கி காலடியில் ஒரு நூறு ரூபாய் நோட்டைப் போடுங்கள்!..

சரி செய்கிறேன்.

அவர்கள் காத்திருந்தார்கள்

கொஞ்ச நேரத்தில்..

மூன்று பேர் உள்ளே வந்தார்கள்.

அவர்கள் நுழைகிற நேரம் பார்த்து இந்த நபர் அந்த பெரியவரின் காலடியில் நூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டு,அவர் காலைத் தொட்டுக் கண்களில் வைத்துக்கொண்டார்.அவ்வளவுதான்.

அடுத்தடுத்து என்ன நடந்தது தெரியுமா?..

வந்தவர்களும் வரிசையாக அவர் முன்னே ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் காலடியில் வைத்து தொட்டு வணங்கினார்கள்.கொஞ்ச நேரம் பேசிய பின் சென்றார்கள்.

அவர்கள் போனபிறகு,அந்த பெரியவர் நண்பரிடம் சொன்னார்.'இவர்கள் நாற்பது வருடங்களாக என்னைப் பார்க்க வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை ஒரு தடவை கூட ஒரு ரூபாய் தந்ததில்லை.இன்றைக்கு நூறு ரூபாய் போடுகிறார்கள்!!அதனால்தான் சொன்னேன்,மனிதர்கள் மற்றவர்களைப் போல் நடிப்பதில் கெட்டிக்காரர்கள் என்று!

*************************************************************************************

ஒரு அரங்கத்தின் உள்ளே இருந்து பெரியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அவர் பின்னால் இருந்து ஒருவன் ஓடிவந்து அவரிடம் காலில் விழுந்து வணங்கி பிறகு எழுந்து சென்றான்.

பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொருவன் இதைப்பார்த்தான்.உடனே அவனும் ஓடி வந்து அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டு பின் எழுந்து சென்றான்.

இரண்டாமவன் முதலில் விழுந்து வணங்கியவனிடம் போய் கேட்டான்"அவரு யாரு?..ரொம்ப பெரியவரா..எதுக்கா அவரு கால்லே விழுந்து வண்ங்கினாய்..

முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!..

************************************************************************************

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS