Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

அசல்- அசத்தலான விமர்சனம்


விமர்சனம் படிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்..நான் தீவிர விஜய் ரசிகனோ அல்லது அஜித் ரசிகனோ இல்லை..இது ஒரு நடுநிலைவாதியின் விமர்சனம் மட்டுமே... நான் ஒரு சூர்யாவின் ரசிகன்...

ஏகனின் படுதோல்விக்கு பின் அஜித்தின் 49 வது படம்..சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,சரணின் இயக்கத்தில்,பரத்வாஜின் இசையில் வெளிவந்துள்ள படம் "அசல்"

படத்தின் கதை:-


அப்பா அஜித் தன் முதல் மனைவிக்கு பிறக்கின்ற குழந்தைகளை நம்பாமல் இரண்டாம் மனைவிக்கு பிறக்கின்ற அஜித்திடம் தனது முழு சொத்தினை ஒப்படைக்கிறார். சொத்துக்கு ஆசைப்பட்டு அவர்கள் அப்பாவை கொன்றுவிட்டு தன் தம்பியையும் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.அவர்களிடம் இருந்து அஜித் தப்பித்து சொத்தை மீட்டாரா இல்லையா என்பதே மீதிக்கதை.....

சமீரா ரெட்டி அஜித்தின் எடுபுடியாக வருகிறார்...சில நேரங்களில் கவர்ச்சி..மற்றபடி சொல்ற மாதிரி ஒன்றும் இல்லை..

பாவனா சித்திரம் பேசுதடி படத்துக்கு பிறகு இப்போ தான் பார்க்க அழகாக இருக்கிறார்..தமிழக சினிமாவின் வழமை மாறாமல் லூசுப்பெண்ணாக அறிமுகமாகி இறுதியில் அஜித்தை மணக்கிறார்..

பிரபு தியேட்டரில் தெரிந்தார்.. தியேட்டரை விட்டு நான் வெளியே வந்த பிறகு அவர் எதுக்காக வந்தார் எதுக்காக போனார் என்று தெரியவில்லை..

படத்தில் வில்லன்கள் மிகப்பெரிய காமெடி..

பரத்வாஜின் இசை பாட்டு கேட்கும் போது இருந்த "டொட்டொயிங்" திரையில் பார்க்கும் போது சுத்தமாக இல்லை..

பிரசாந்த். படத்தின் எழுத்து போடும் போதே பாரிஸின் அழகை மிகவும் அருமையாக காட்டியுள்ளார்..பல இடங்களில் இவரது உழைப்பினால் படம் தூக்கம் வராமல் போகிறது...

ஆண்டனியின் எடிட்டிங் சூப்பர்...( ஆயிரத்தில் ஒருவன் 3.15 மணி நேரம் பார்த்த எனக்கு இந்த படம் 2 மணி நேரத்தில் முடிந்தது மிகவும் சந்தோஷம்)

சரண் கடைசியாக மோதி விளையாடிய சரண் இப்படத்தில் ரொம்பவே மோதியுள்ளார் திரைக்கதையுடன்...

அஜித்
இன்னும் எத்தனை நாளைக்கு தாங்க இவரை நடக்கவைப்பீங்க...படத்தில் மனுஷன் நடக்கிறார் நடக்கிறார் நடந்து கொண்டே இருக்கிறார்...இவர் நடப்பதை பார்த்தால் வெளிநாடு செல்ல விமானம் எல்லாம் தேவையில்லை..நடந்தே போய்விடுவார். நடிப்பு என்று சொன்னால் அப்பா அஜித் ஆக வரும் காட்சியில் இறக்கும் போது உள்ள காட்சி மட்டுமே.. டொட்டொயிங் பாட்டுக்கு அவரது டேன்ஸ் என்னை வியக்கவைத்துவிட்டது..வேணாம் தல..இந்த விபரீதபரீட்சை..படத்தில் நீங்க பேசாட்டாலும் உங்க கூட வருகிற சில அல்லக்கைகள் எப்போது பார்த்தாலும் தல தல அப்படின்னு கூவுறாங்களே ..ஏன் இந்த கொலைவெறி...

படத்தின் பிளஸ்:-

1.அஜித்தின் நடை..
2.பாவனாவின் அழகு..
3.சமீராவின் சிறிதளவு கவர்ச்சி..
4.கேமராமேன் பிரசாந்த்..

படத்தின் மைனஸ்:-


1.சரண்
2.பரத்வாஜ்
3.படத்தின் திரைக்கதை


1. நான் மதுரை சென்று பார்க்கும் இரண்டாவது படம்..முதல் படம் சீனா ஐயாவின் தயவால் இனாமாக பார்க்கமுடிந்தது..இரண்டாவது படமும் .சி.தான்.. எனது கம்பெனியின் ஓனர் தீவிரமான அஜித் ரசிகர் என்பதால் முழுவதும் அவரின் செலவு..

2.இவ்வளவும் படித்துவிட்டு படம் பார்க்கலாமா வேணாமா என்று எல்லாம் கேட்கக்கூடாது..கண்டிப்பாக அஜித்தின் நடைக்காக ஒரு முறை பார்க்கலாம்...

அசல்:- கம்மியான அசத்தல்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அசல் - இசை விமர்சனம்..





ஏகனின் படுதோல்விக்கு பின் அஜித்.. அஜித்தின் 49வது படம்..பலரின் எதிர்பார்ப்புகளுக்கிடையில் அசல் ஆடியோ வெளியாகிவிட்டது.. படம் முழுவதும் மலேசியாவிலும் பிரான்சிலும் எடுத்ததாக சொல்கிறார்கள்.. சிவகாசியில் ஆடியோ ரிலிஸ் வெகுவிமரிசையாக நடந்தது..இதுக்கே இப்படின்னா படம் வந்தா எப்படின்னு தெரியலை..நமக்கெதுக்குங்க அந்த பிரச்சினை எல்லாம்..நாம் பாடலின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்..இது ஒரு நடுநிலைவாதியின் விமர்சனம் மட்டுமே...

படத்தின் அனைத்து பாடல்களும் கவிஞர்.வைரமுத்து எழுதி உள்ளார்..

இசையமைப்பாளர்:- பரத்வாஜ்...

1.அசல்..(சுனிதா மேனன்)

காற்றை நிறுத்திக்கேளு
கடலை அழைத்துக்கேளு
இவன்தான் அசல்..
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா...

படத்தின் தொடக்கப்பாடல்... மேலே உள்ள வரிகளுடன் அமர்க்களமாய் தோன்றுகிறது. சுனிதா மேனன் மிகவும் ஸ்டைலிஸாக பாடியுள்ளார்..இடை இடையே வரும் தல போல வருமா என்னும் வரி அப்படியே அட்டகாசத்திலிருந்து எடுத்து வைத்துள்ளனர்..பாடல் முழுவதும் ஒரு மாஸ் ஹீரோ-வுக்கு உண்டான வரிகள்..அஜித் ரசிகர்களுக்கு இந்த பாட்டு சிம்ம சொப்பனம்..

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்பார்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்..

நித்தம் நித்தமும் யுத்தம்-இவன்
நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கில்லை...


*********************

2.
குதிரைக்கு தெரியும் - (சர்முகி, சரண்)

இந்த பாட்டு சமீராவுக்கா இல்லை பாவனாவுக்கா என்று தெரியவில்லை..ஒரு பெண்ணின் காம இச்சைகளை மிகவும் நாசூக்காக சொல்லி இருக்கிறார் வைரமுத்து...யாருக்காக இருப்பினும் பாடல் நிச்சயம் ஹிட்..இந்தப்பாடலில் முதலில் பாடும் சர்முகியின் குரல் நச்சென்று உள்ளது...

தொட்டுவிடு ஒருதரம்
தொல்லைகொடு இருதரம்
முத்தமிடு மூனுதரம்
முகர்ந்திடு நாலுதரம்
அள்ளிஎடு ஐந்துதரம்
கொள்ளையிடு ஆறுதரம்
இன்பம் கொடு ஏழுதரம்
இந்த சுகம் நிரந்தரம்
குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு...

*********************

3.டொட்டொடய்ங் - (முகேஷ், ஜனனி)

கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் காதல் மலர்ந்து விட்டவுடன் வரும் பாடல்...மெலடியாகவும் அல்லாமல் அடிப்பாட்டாகவும் இல்லாமல் செல்கிறது..அநேகமாக தியேட்டரில் அதிகமான சமோசாக்கள் விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..டொட்டொடய்ங்..

பச்சப்புள்ள போலிருப்பா
லச்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வச்சதன்ன
முந்திரிக்கா தோப்பா?

எப்படியெல்லாம் யோசிக்கிராங்கப்பா...

*********************

4.எங்கே எங்கே - (எஸ்.பி.பாலசுப்ரமணியன்)

வழக்கம்போல் எஸ்.பி.பி ராக்கிங்..வைரமுத்துவின் வரியும் எஸ்.பி.பி. சாரின் தீர்க்கமான குரலும் நம்மை எங்கோ கொண்டு செல்கின்றன..

எங்கே எங்கே
மனிதன் எங்கே
மனிதன் உடையில்
மிருகம் இங்கே..

ஓநாய் உள்ளம்
நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த
உலகம் இங்கே..

*********************

5.துஷ்யந்தா - (சர்முகி, குமரன்)

பழைய காலத்து படம் புதிய பறவை என்னும் படத்திலிருந்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்னும் பாடலின் ரீ-மேக் என்று நினைக்கிறேன்..அந்தப்பாடலின் சில வரிகள் இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ளன..ஒரு முறை கேட்கலாம்..

அந்த நீல நதிக்கரை ஓரம் - நீ
நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடிவந்தேன் ஒரு ராகம்
நாம் பழகிவந்தோம் சில காலம்..

*********************

6.எம் தந்தைதான் - (பரத்வாஜ்)

"தல போல வருமா" என்ற அட்டகாசமான பாடலை அட்டகாசத்திற்கு தந்த பரத்வாஜ் இந்த பாடலை பாடியுள்ளார்..முதலில் மிகவும் மெதுவாக தொடங்கும் பாடல் மெதுவாகவே முடிகிறது..கதாநாயகன் தன் தந்தையை நினைத்து பாடும் பாடல்....

*********************

7.எங்கே எங்கே - (கார்த்திகேயன் மற்றும் கோரஸ்)

படத்தில் பிண்ணனி இசைக்காக பயன்படுத்தி இருக்கலாம்..மற்றபடி சொல்ல ஒன்றுமில்லை....


மொத்தத்தில் பாடல்கள் கேட்கலாம்...மூன்று பாடல்கள் மட்டுமே திரும்ப கேட்க மனசு சொல்கிறது..


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS