எங்க தல கார்த்திகைப்பாண்டியன் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பதிவுலக கதாநாயகன்,எங்க கார்த்திகைப்பாண்டியன் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..


 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

மதுரையில் பதிவர்கள் சந்திப்பு (24-05-2009)

கடந்த ஞாயிற்றுக்கிழமை (24-05-2009) அன்று மாலை 5.00 மணி அளவில் மதுரை பதிவர்களின் சந்திப்பு இனிதே நடைபெற்றது.நான் மிகவும் ஆவலுடன் படிக்கின்ற பதிவுகளின் பதிவர்கள் என்னை கண்முன்னே நின்றனர்.மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.நல்ல பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது.இந்த மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி தந்த அண்ணன் கார்த்திகைப்பாண்டியனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட பதிவர்கள்:-

1.சீனா ஐயா:அசைபோடுவது என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.பதிவர் சந்திப்பின் முடிவின் போது கலந்து கொண்டார்.அவரது ஆசிர்வாதம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி

2.ஷேம் ஜார்ஜ்: தருமி என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.மிகவும் மூத்த பதிவர்.என்னைப் போன்ற இளைய பதிவர்களை ஊக்குவித்தார்.மேலும் கேமராவினை வைத்து படங்களை எடுப்பதி மிகவும் ஆர்வமாக இருந்தார்.அந்த ஐயாவினை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தேன்.

3.அருண்: வால் பையன் என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார். பதிவர் சந்திப்பிலே என்னை மிகவும் கவர்ந்த பதிவர்.சாதரணமான ஒரு இந்திய குடிமகனாக பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டார்.மிகவும் அருமையாக பேசினார்.பலரையும் தன் வால் திறமையால் பேசி வெற்றிபெற நினைத்தார்..ஆனால்.....

4.ராஜு: டக்ளஸ் என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார்.என்னை சூரத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்து என் எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள் கூறியவர்.இவரது பின்னூட்ட ரசிகன் நான்..வால் பையனை அடிக்கடி கலாய்த்துக் கொண்டிருந்தார்.அனைவரிடமும் மிக அன்பாக பழகினார்.

5.பாலகுமார்: சோலை அழகுபுரம் என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார்.இவருக்கும் வால்பையனுக்கும் ஏற்பட்ட விவாதங்கள் அருமையாகவும் பல விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் முடிந்தது.அனைவரது கேள்விக்கும் மிகவும் பொறுமையாக பதில் சொல்லிய அண்ணனை பார்க்கும் போது ஒரு கம்பீரம் தெரிந்தது.

6.கணேஷ் குமார்: இளைய கவி என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார்.சந்திப்பில் பல அறிவுரைகளையும் கருத்துக்களையும் பதிவர்களுக்கு வழங்கினார்.நன்றாக பழகினார்

7.ஸ்ரீதர்: ஸ்ரீ என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.நன்றாக பேசினார்.பல கருத்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்.மேலும் என்னை மிகவும் வாழ்த்தினார்...(சரி..சரி..கோபப்படாதீங்க)

8.சுந்தர்: தேனீ-சுந்தர் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.மிகவும் அன்போடு பழகினார்.மேலும் அவர் நான் இருக்கும் ஊரின் அருகில் வசித்திருக்கிறார்.அன்று பார்க்க இயலவில்லை.ஆனால் இம்முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

9.சுப்ரமணி: என்னோட்டம் என்னும் பெயரில் பதிவினை எழுதி வருகிறார்.இவரும் பதிவர் சந்திப்பில் பல அறிவுரைகளையும் கருத்துக்களையும் பதிவர்களுக்கு வழங்கினார்.இவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

10.தேவக்குமார்: தேவன் மாயம் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.சந்திப்பில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தார்.நன்றாக பேசினார்..

11.பீர் முகமது: ஜெய்ஹிந்துபுரம் என்னும் பெயரில் பதிவினை எழுதி வருகிறார்.வரும்போது பீர் கொண்டுவராவிட்டாலும் சைடிஸ்டிக் நிறைய வாங்கி வந்தார்.அவருக்கு நன்றிகள்.

12.ரவி: ஜாலி ஜம்பர் என்னும் பெயரில் பதிவு எழுதிவருகிறார்.என்னைப்போலவே மிகவும் அமைதியாக இருந்தார்.

13.அருண்: ஆங்கிலத்திலே மியூச்சுவல் பண்ட் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.மிகவும் கலகலப்பாக பேசினார்.

14.கார்த்திகைப்பாண்டியன்: பொன்னியின் செல்வன் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்..இந்த பதிவர் சந்திப்பு உருவாக காரணமாக இருந்தவர்..என்னை மிகவும் கவர்ந்த பதிவர்,ஆசிரியர்.எனக்கு பல கருத்துக்களை சொல்லியவர்.இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பதிவர்களை எல்லாம் எனக்கு காண்பித்த ஒரு நல்ல மனிதர்.என்னை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

15.அன்பு: ஓபன் ஹார்ட் என்னும் என்னும் பெயரில் பதிவு எழுதுகிறார்.வேற யாரும் இல்லைங்க அது நான் தான்.அண்ணன் கார்த்திகைப்பாண்டியனின் அழைப்பின் பேரில் சென்றேன்.சென்றவுடன் மதுரையில் நன்றாக மழை பெய்தது..என் காலடி பட்டவுடன் வானமே வழிவிட்டு வெளிச்சம் காட்டியது.சந்திப்பினில் அனைவரது கருத்துகளையும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இறுதியில் தொலைபேசியில் அழைத்து பேசிய ரம்யா அக்காவிற்கு என் நன்றிகள்.முதன் முதலாக அந்த அக்காவுடன் பேசினேன்.பேச வாய்ப்பு கொடுத்த அருண் அண்ணனுக்கு நன்றிகள் பல..

மற்றும் பதிவர் சந்திப்பினில் கலந்து கொண்ட இரு வாசகர்களுக்கும் நன்றிகள்..

பதிவர் சந்திப்பு:-நல்ல அனுபவம்

புகைப்படங்கள் கீழே:


 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அரசியல் கலாட்டா புகைப்படங்கள்...இந்த புகைப்படங்கள் அனைத்தும் என் இ-மெயிலில் வந்தவையே..

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

என்னவளின் புகைப்படம்:[2]


இதன் முந்தைய பதிவினை படிக்காதவர்கள் இங்கே கிளிக்கி படிக்கவும்:

அவள் வேறு யாரும் இல்லை என்னை பத்து மாதம் கருவில் சுமந்து பெற்றெடுத்த அன்னையே..
புகைப்படத்தை கண்டவுடன் என்னுள்ளே பல நிகழ்வுகள் நகர ஆரம்பித்தது.நானும் என் அன்னையும் முதன் முதலாக சேர்ந்து எடுத்த புகைப்படம் அது..எனது பள்ளிக்காலங்களில் மிகவும் இரசித்த புகைப்படம்.நான் மதிப்பெண் குறையும் போதெல்லாம் எனக்கு தைரியம் கொடுத்த புகைப்படம்..

நான் என் அப்பாவின் முகத்தை பார்த்ததில்லை.பார்க்கவும் முடியாது.நான் பிறந்து ஒரு வருடத்திலே அவர் இறந்துவிட்டார்.நான் பிறந்தது சென்னை என்னும் மாநகரிலே..வளர்ந்தது பேராபட்டி என்னும் கிராமத்திலே..சிறு வயதில் இருந்தே என் அம்மா என்னை மிகவும் சிரமப்பட்டு என்னை படிக்கவைத்தார்.நான் படித்த பள்ளியில்(1-8) என்னைத்தவிர யாரும் முதல் மதிப்பெண் பெற முடியாது.நன்றாக படித்தேன்.

ஒவ்வொரு பொங்கல் தீபாவளி அன்று எனக்கு புது துணிகள் எடுத்து அவள் பழைய சேலை உடுத்துவாள்.ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு மாறும் போது வாங்க வேண்டிய புத்தகங்கள்,நோட்டுகள் இது வாங்குவதற்காகவே பள்ளி விடுமுறையில் நான் வேலை செய்வதை தனியாக வைத்திருக்கும்படி சொல்வாள்.

எனக்கு உடம்பு சரியில்லாமல் போனால் நான் அவளிடம் சொல்ல ரொம்ப பயப்படுவேன்..ஏனென்றால் அடுத்த நிமிடமே அவளின் கண் கலங்கிவிடும். எனக்கு என்ன என்ன பிடிக்குமோ அதைத்தான் வீட்டில் செய்வாள்.

அவள் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்:

யார் கிட்டையும் கெட்டவன் என்று பெயர் என்று வாங்க கூடாது.
கஷ்டப்பட்டு வேலை செய்வதற்கு என்னைக்குமே பலன் உண்டு.
தேவையில்லாமல் செலவு செய்யக்கூடாது.

நான் என்னவள் என்றதும் பலரும் என் காதலி என்று கருதிவிட்டனர்.என் அன்னையும் என் முதல் காதலிதான்..

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS