நான் தான்டா கடவுள்..


திருடினேன் போலிஸ் துரத்தியது..
விபச்சார விடுதி கட்டி நடத்தினேன்..
மகளிர் சங்கங்கள் தடுத்தன..

வேலை செய்ய மனமுமில்லை..
அதற்கான எண்ணமும் இல்லை..

என்ன செய்யலாம் என்று
யோசித்த வேளையில்
காவி உடை அணிந்து
நான் தான்டா சாமியார் என்றேன்
ஒரு கும்பல் காலில் விழுந்தனர்..
நீ தான் என் இறைவன் என்றது இன்னொரு கும்பல்..

அடங்கொக்கமக்கா இப்படியும் வாழலாமோ
என்று எண்ணி முடிப்பதற்குள்
மாட மாளிகைகள் என்ன..
மாலை மரியாதை அணிவகுப்புகள் தான் என்ன..

குமுதமும்,குங்குமமும், போட்டி போட்டு
அழைக்கின்றன..கட்டுரை எழுத..

ஏற்கனவே எழுதுபவன் கூட
என்னை பற்றி புகழ்பாடுகிறான்..

காலையில் வேதம் ஓதம் பாடிய எனக்கு
மாலையில் சிறிது நேரம் ஓய்வு தேவையாகத்தான் இருந்தது..
அழைத்தேன் நடிகையை..
வந்தாள் காலை அமுக்கினாள்..
$%%^*‍)()
^‍%‍^*^*($%^^

ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா என்னா சுகமடா..

இது கூட அறியாமல் இன்றும்
காலையில் வேலைக்கு அவசரம் அவசரமாக
கிளம்புவனை பார்த்தால்
சிரிப்பாகவும் கேலியாகவும் இருக்கிறது..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS