Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

முக்கோணக்காதல்....


"என்னைக் கொஞ்சம் மாற்றி" என்ற பாடலை பாடியவாறே கண்ணாடியின் முன் தன் முகபாவனைகளை சரி செய்து கொண்டிருந்தாள் கார்த்திகா.
இவளின் வழக்கத்திற்கு மாறான அலப்பரையை பார்த்து வியந்து போய் "எங்கடி கிளம்பிட்ட" என்றாள் ராணி.

"ஒரு வாரமா என் பின்னால சுத்திக்கிட்டு இருந்தானே.. கார்த்திக், நேத்து பக்கத்துல வந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..நாளைக்கு தாஜ் ஹோட்டலுக்கு வரமுடியுமா? என்று கேட்டான்.. "

" நீ என்னடி சொன்ன?" என்றாள் ராணி..

"வரேன் என்று சொல்லிட்டேன்....

" அப்போ கார்த்திக்கை காதலிக்கிறாயா?"

" ஆமாம்.. "

"அப்போ ராஜாவின் நிலைமை??"

"அவன் என்னை காதலிப்பது நம்ம காலேஜூக்கே தெரியும்..இருந்தாலும் வந்து சொல்லமாட்டேன்கிறான்..அவன் என்னிக்கு வந்து என்கிட்ட சொல்லி...எனக்கு டைம் ஆச்சு நான் புறப்படுகிறேன்.. அப்புறம் இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்கு?"
"ம்ம்ம்..நல்லாத்தான் இருக்கு.. "

கார்த்திகாவும் ராணியும் கல்லூரி தோழிகள்..இருவருக்கும் ஒரே விடுதி..ஒரே அறை..இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்குச்செல்வர்..

அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து தாஜ் ஹோட்டலுக்கு சென்றடைவதற்குள் அறை மணி நேர தாமதம்..இருந்தாலும் கார்த்திக் எங்கு இருக்கிறான் என்று நோட்டமிட்டாள்..சிவப்பு நிற டி-ஷர்ட்டில் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தான்.. இருவரும் பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு புன்னகை..

கார்த்திக் அருகில் சென்று "வந்து ரொம்ப நேரம் ஆச்சா..?? "
"இல்லை 15 நிமிடம் தான்.. "

கார்த்திக் "ஐ லவ்" என்று ஆரம்பிக்க, சர்வர் "என்ன மேடம் வேணும்? " என்று சொல்ல..கார்த்திக் சிறிது அமைதியானான்..
"இரண்டு வெண்ணிலா.." என்று ஆர்டர் பண்ணிவிட்டு..

" கார்த்திகா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப பயமா இருக்கு.. அதுக்காக சொல்லாமலும் இருக்க முடியாது.. " என்று தயங்கினான்..

"பரவாயில்லை பயப்படாம சொல்லுங்க " என்றாள் கார்த்திகா.. தன் மேலான அவன் காதலை அவன் வாயாலையே சொல்வதை கேட்க..

கார்த்திக் மெல்ல தயங்கி, "நான் உங்க பிரண்ட் ராணியை... ராணியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்..அவங்க இல்லாமல் என்னால் இருக்க முடியாது..கிட்டதட்ட மூன்று வருஷமா அவங்களை காதலிக்கிறேன்..வாழ்ந்தா அவங்ககூடத்தான் வாழனும் என்று ஆசைப்படுறேன்..ஆனா அவங்ககிட்ட சொல்ல தைரியம் இல்லை..மேலும் சொன்னா என்னுடைய நிராகரித்துவிடுவார்களோ என்ற பயம்தான்..நீங்க தான் அவங்ககிட்ட பக்குவமா பேசி என்னுடைய காதலை சொல்லணும்" என்றான்..

இதை சற்றும் எதிர்பாராத கார்த்திகாவுக்கு சிறிது வியர்த்தாலும் சுதாரித்துகொண்டு "ம்ம் கண்டிப்பா சொல்றேன் " என்று கிளம்பினாள்..


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இவளா...இப்படி...!!

இந்த அபார்ட்மெண்டிற்கு குடி வந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை..சித்ரா யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என ஆச்சர்யமாய் கவனித்தான் சரவணன்.


பிளிஸ்..இந்த விஷயம் அவருக்கு தெரிய வேண்டாம்! நான் அப்புறமா வரேன்.என எதிர்த்த வீட்டு தடியனுடன் வழிந்து விட்டு பதட்டத்துடன் உள்ளே நுழைந்தால் சித்ரா..

அடப்பாவி மூனு வருஷம் நாய் மாதிரி அலைஞ்சுதான் சித்ராவை கை பிடிச்சேன்! அடேய்..தடியா..அஞ்சே நாள்ல மடக்கிட்டியேடா...என முணுமுணுத்தவாறே ஆபிஸிற்கு கிளம்பினான் சரவணன்..

சித்ராவிடம் நான் போயிட்டு வரேன்.என வால்டர் வெற்றிவேல் ஸ்டைலில் கூறிவிட்டு வெளியே வந்த சரவணனஇ அதே தடியன் எதிர்கொண்டான்.

என்ன சார்...ஆபிஸ் கிளம்பிட்டீங்க போல!..

இல்லை..ஆடு மேய்க்க கிளம்பிட்டேன்..வாய் வரை வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு,ஆமா சார் ..நீங்க போகலை..? என அசடு வழிந்தான் சரவணன்.

பொண்டாட்டியும் குழந்தையும் ஊருக்கு போய்ட்டாங்க சார்..! தடியன் முடிப்பதற்குள்..

ஏன் சார்...செகண்டு டெலிவரியா?..

ரொம்ப குறும்பு சார்.! உங்களுக்கு..அம்மா வீட்டுக்கு போறேன்னா..உடனே அனுப்பிட்டேன் சார்..மேரேஜ்க்கு அப்புறமா இது மாதிரி கிடைக்கிற பேச்சுலர் லைப்பை மிஸ் பண்ணக்கூடாது..அதுல ஒரு திரில் இருக்கு!இன்னைக்கு புல் டே ஜாலியா..வீட்டிலேயே..என்ஜாய் பண்ணப்போறேன் சார்.. தடியன் சொல்லிசிரிக்க..

'அடப்பாவி என் தலையில இடி விழ..' என திட்டியவாறே ஆபிஸுக்கு நடையை கட்டினான் சரவணன்.

ஆபிஸில் மதியம் வரை மனது ஒட்டாமல் வேலை பார்த்த சரவணன்,,சித்ராவிற்கு போன் போட..அது ஸ்விட்ச் ஆப் எனக்கூற..சரவணனுக்கு பயம் தொற்றி கொண்டது.

சித்ரா நல்ல பொண்ணுதான்..ஆனா..அந்த தடியன் கெட்டவனாச்சே...! என டென்ஷனுடன் லீவ் எழுதி கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்..'என்ன சார் இன்னிக்கு சீக்கிரமே வந்தீட்டீங்க' என வாட்ச்மேன் கேட்க..

கொஞ்சம் வேலை அதுதான்..!அவசர அவசரமாய் அபார்மெண்டில் நுழைந்த சரவணனிடம்...
சார்..அம்மா வீட்டிலே இல்ல சார்! இப்பத்தான் இ.பி கார்ட்டை கொடுக்கப்போனேன் கதவைத் திறக்கலை சார்..

வெளியே போனாங்களாப்பா..?

இல்ல சார்..நான் இங்கேயே தான் இருக்கேன்! வேற யாரு வீட்டிற்காவது போயிருப்பாங்க சார்..என வாட்ச்மேன் கூற..

டேய்..அவ என் பொண்டாட்டிடா..''இப்படி சித்ரவதை பண்றையேடி சித்ரா..''என மனதில் கருவிக்கொண்டே மாடி வாசல்படியில் பறந்தான் சரவணன்..வாட்ச்மேன் கூறியது சரியே..வெகுநேரம் காலிங்பெல் அழுத்தியும் சரவணன் மிகவும் யோசித்து விட்டு எதிர்த்த வீட்டு காலிங் பெல்லை அழுத்தப்போனவன்..கதவு திறந்தே இருக்க..தயங்கியபடியே உள்ளே சென்றான்..

'போதும்.... விடுங்க....' இன்னும் எத்தனை நேரம்!..சித்ராவின் குரல் சரவணனின் நெஞ்சில் நெருப்பள்ளிப்போட்டது..

ஆக்க பொறுத்துக்கிட்டு ஆறப் பொறுக்காம இருந்தா எப்படீங்க..? பிளிஸ் எனக்காக.. அதே தடியனின் குரல் தான்..

டென்ஷன் உச்சிக்கு போக..நரம்புகள் புடைக்க கோபத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தான் சரவணன்..

நம்ம சித்ராவா இப்படி..? கண்களை நம்ப முடியாமல் மலைத்து நின்றான் சரவணன்..சரவணனை கண்டதும் பிரமித்துப்போனாள் சித்ரா...

ஏங்க நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்..ஆனா இவருதான்.....வெகுளித்தனமாய் சித்ரா கூற..

வியப்புடன் அந்த தடியன் வரைந்த ஓவியத்தை இமை கொட்டாமல் பார்த்தான் சரவணன்.

வீணையை கையில் பிடித்தபடி அந்த சரஸ்வதி தேவி போல் வரைந்திருந்தான் சித்ராவை..

இன்னும் என்ன சேர்ல உட்கார்ந்துக்கிட்டு முதல்ல எந்திரி..என்ற சரவணன் அவசர அவசரமாய் சேரில் அமர்ந்து 'பிளிஸ் சார் என்னையும் ஒரு முறை வரையுங்களேன்' குழந்தைத்தனமாய் கெஞ்ச..சித்ராவும் அந்த தடியனும் இல்லை ஓவியரும் ஒரு சேர சிரித்தனர்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..!!!


முதலில் இக்கதையின் கதாநாயகனை பற்றிய ஒரு சிறு குறிப்பு:-

என்னைப்பற்றி சொல்ல ஒண்ணுமில்லைங்க..நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.. ஆனா உண்மையில நான் ரொம்ப கெட்டவன் என்று எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. மேலும் சொந்தமாக ஒரு Browsing Centre வைத்து நடத்தி வருகிறேன்.

ஒரு மாலை நேரப்பொழுது..மணி சரியாக தெரியாவிட்டாலும் கதிரவன் வானத்திற்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தான்..அந்த அழகினை மெல்ல ரசித்துக்கொண்டிருந்தேன்..'இயற்கையின் அழகே தனிதான்'என்று மனதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது..என்னடா இது இன்னும் கதிரவன் மறையவே இல்லை..அதற்குள் வெண்ணிலவா..ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில்...
சார்..மணிக்கு எவ்வளவு ரூபாய்?..

சுய நினைவுக்கு வந்தவனாய்...பத்து ரூபாய் மேடம்

இந்தாங்க..

பணத்தை வாங்கியவுடன் என் மனது ஏனோ திரும்பி பார்க்க சொல்லி கட்டளையிட்டது..

திரும்பிப் பார்த்தவுடன்..கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது.. Browsing பண்ணனும்...

ம்ம்..எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பண்ணுங்க..

மணிக்கு எவ்வளவு ரூபாய்?

ஐந்தே ரூபாய் தான் மேடம்..

ரொம்ப கம்மியாக இருக்கு..

ஆடித்தள்ளுபடி அதான்..ஒரு புன்சிரிப்புடன்..

அந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்...

சார் இந்த சிஸ்டம் வொர்க் பண்ணலை..

ச்செ..இது வேற மக்கர் பண்ணுது..என்று மனதிற்குள் புலம்பினவனாய்..

நீங்க இந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்..

சரி..

Browsing பண்ணி முடித்ததும் என் அருகில் வந்து இந்தாங்க..என்று 100 ரூபாயை நீட்டினாள்..

சில்லரை இல்லை மேடம்..அடுத்த முறை வரும் போது நான் வாங்கிக்கிறேன்..

அவளோ என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றாள்..

என்னடா நடக்குது இங்க..என் நண்பன் கேட்டான்..

சும்மாதான்டா..அந்த பொண்ணு அழகா இருக்காடா மச்சி..அதுவும் அவளோட அந்த தெத்துப்பல் அழகுக்கே அழகு சேர்ப்பது போல் உள்ளதுடா..

உனக்கு என்னமோ ஆச்சு..உட்கார்ந்து வேலையைப் பாருடா..

மறுநாள் மாலை..

அவளுக்காக நான் காத்திருக்க..

இம்முறை அனைத்து சிஸ்டம் வேலை செய்கிறதா என்று செக் பண்ணினேன்..

நினைத்தது போலவே அந்த அழகு தேவதை வந்தாள்..ஒரு புன் சிரிப்புடன்

Browsing பண்ணி முடித்தவுடன் சரியான சில்லறையை கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணினாள்..வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை..ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா? என்ற எண்ணம் என் மனதில் அலைபாயாமல் இல்லை..

கிட்ட போய்..anyhelp என்றேன்..

ya என்றாள்..

உடனே நான் ஹீரோயிசத்தினை காட்ட ஆரம்பித்தேன்..தோல்வியே கிடைத்தது தவிர வெற்றி கிட்டவில்லை..இறுதியில் ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க மேடம்..மெக்கானிக் வரச்சொல்றேன் என்றேன்..

மெக்கானிக் வந்து சரி பண்ணும் வரை அவளுடன் கலாய்த்துக்கொண்டிருந்தேன்..தான் காலேஜ் படிப்பதாக கூறினாள்..கஷ்டப்பட்டு அவளுடைய மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டேன்..

அன்று முதல் நாங்கள் எஸ்.எம்.எஸில்.பேசத்தொடங்கினோம்

அவள் : "Don't miss or avoid d person who really had a true affection on u. it may make u feel when they live without u and your memories....."

அவசர அவசரமாக பதிலளித்தேன்..

"hey... what a surprise... எப்படி இருக்கே? சாப்டாச்சா? "

அவள்: ஓ சாப்டாச்சு.. நீ சாப்டயா.. வீட்டுக்கு வந்தாச்சா..

சாப்டாச்சு.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு வரல.. ஆபிஸ்லதான் இருக்கிறேன்..

அவள்: ஏன்பா???

கொஞ்சம் அவசர வேலை இருக்கு.. நாளைக்குள்ள முடிக்கணும்.. அதுதான்..

அவள்: சரி.. continue பண்ணு.. Good night.. Sweet dreams.. bye..

ஒரு ஸ்வீட்டே ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்லுதே...

அவள்: ரொம்ப ஐஸ் வைக்காத.. வேலைய பாரு..

ஐஸ் கிரீமுக்கே யாரவது ஐஸ் வைக்க முடியுமா...

அவள்: ஐயோ முடியல... நா தூங்க போறேன்..

கனவுலையும் என் கூடத்தான் பேச போற.. அதுக்கு இப்பவே பேசலாம்ல..

அவள்: ஆசைதான்.. டைப் பண்ணி முடிச்சுட்டு சீக்கிரம் தூங்குடா.. Bye..

சரிங்க மேடம்.. Good night...

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து சோம்பல் முறித்தேன்.. கற்பனையில் கொஞ்ச ஆரம்பித்தேன்..

ஸ்பீக்கரில்
"காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை..
காதல் இன்றி யாரும் இங்கில்லை..." யேசுதாஸ் பாடி கொண்டிருந்தார்..

அப்படியே தூங்கி போனேன்..

டிஸ்கி:- 1.இது முழுக்க முழுக்க ஒரு பிரபல பதிவரை சார்ந்த காதல் கசமுசாக்கள்..

2.நான் கதை என்று நினைக்கிறேன்..நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நம்பிக்கை..!!(சிறுகதை போட்டிக்காக..)

அந்தத் தெருவாசிகளின் இயல்பு வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காத அந்த தெருக்குப்பை கண்ணனை மட்டும் என்னவோ செய்தது.

தன் வீட்டு முற்றத்தில் நின்று பல்துலக்கிக் கொண்டே தெருவினை நோட்டமிட்டான்.முதல் வீடான ஆடிட்டர் வீட்டிலிருந்து ஒரு இருபது உள்ளடக்கியது அந்த தெரு.அதிகாலை நேரத்திலேயே அனைத்து வீடுகளின் முற்றங்களிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு கோலம் வரையப்பட்டிருந்தது.

ஆனால் முற்றங்கள் தவிர்த்த அந்த நடைபாதை ஒரு இருபதடி நீளத்துக்கு சுத்தம் செய்யப்படாமல் தூசியும் குப்பைகளுமாய் இருந்தது.அந்தப்பாதையிலே தான் அனைவரும் போய் வந்து கொண்டிருந்தார்கள்.யாருக்குமே அதை சுத்தம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றவில்லை.அப்படியிருக்க தனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறதென்று தன்மேலேயே எரிச்சல் கூட வந்தது கண்ணனுக்கு..

தன் வீட்டு வாசலில் சின்ன அடுப்பு வைத்து பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தாள் கண்ணனின் அக்கா.தண்ணீர் பிடித்துக் கொண்டும் சமையல் செய்து கொண்டும் குறுக்கும் நெருக்குமாய் நடந்து கொண்டிருந்தாள் கண்ணனின் மனைவி.

வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணனை பார்த்து கேலியாய் சிரித்தபடி "என்னடா இன்னிக்கு தெருவை சுத்தம் பண்ணலியா"என்றாள் அக்கா

அதைத்தான் செய்யப்போகின்றேன்.நான் இரண்டு நாள் ஊரில் இல்லை அதுக்குள்ள எவ்வளவு குப்பையாப் போச்சு நம்ம தெரு.நான் இல்லைன்னா யாராச்சும் பெருக்குவாங்கன்னு நினைச்சேன்..

ம்ம்..அதைப்போயி யாரு பெருக்கிட்டு இருப்பா?..வேற வேலை இல்லையாக்கும்.என்றாள் மனைவி..

எனக்கு மட்டும் வேற வேலையில்லையா என்ன?..

உங்களை யாரு அதை எல்லாம் செய்ய சொன்னா?...பேசாமா இருக்க வேண்டியதுதானா...

என்னால் அப்படியிருக்க முடியவில்லை. அதைப்பார்க்கும் போதெல்லாம் அது வெறும் குப்பையாக மட்டும் தெரியவில்லை.நம்முடைய அலட்சியத்தையும்,பொறுப்பின்மையும்,புறக்கணிப்பையும் எதிரொலிக்கின்ற பொருளாகத்தான் தெரிகின்றது.

உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..நடந்து போகின்றவர்களெல்லாம் மனுஷன் இல்லை..

பிள்ளைங்க எல்லாம் எந்திருச்சிட்டாங்களா?... இல்லையா?..

எல்லாரும் எந்திருச்சாச்சு.உள்ள வாங்க..காபித்தண்ணி குடிச்சிட்டு எங்க வேணாலும் போங்க..

நம்ம மக ஸ்கூல்ல படிக்க வேற செய்றா..அவளாச்சும் அந்த இடத்தை சுத்தம் பண்ணலாம்..

அப்பா..என்னை ஏன் வம்புக்கு இழுக்குற..இப்ப சுத்தம் பண்ணா அப்படியே இருக்கப் போகுதா?..

எதையாவது சொல்லி தட்டிக் கழிச்சிடுங்க..அவங்க அவங்க பயன்படுத்துற வீடு மட்டும் எவ்வளவு அழகாக இருக்கு.ஆனா நிறையப்பேரு பயன்படுத்துற இந்தப்பாதை மட்டும் ஏன் இப்படி இருக்கணும்?..

சொன்ன வேகத்திலேயே ஒரு துடைப்பத்தையும் அட்டையும் எடுத்துட்டுப்போய் தெருவை சுத்தம் செய்து அந்தக் குப்பையை அள்ளி ஒரு குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வந்தான் கண்ணன்..

"இப்ப நிம்மதியாக்கும் உங்களுக்கு" என்றாள் மனைவி

என்னமோ தெரியவில்லை..எனக்கு அந்த நடைபாதையை பார்க்கும் போதெல்லாம் அது என்கிட்டே மட்டும் ஏதோ சொல்ற மாதிரி இருக்கு..

அது என்னவென்று சொல்லட்டுமா அப்பா..வீட்டுக்குள்ளே இருந்து காபி தம்ளரை கையில் பிடித்தபடி வந்தான் மூத்த மகன்...

என்ன? என்றான் கண்ணன்..

"ஒரு ஆளு பயன்படுத்துற வீடு நல்லா இருக்கும்..நிறைய பயன்படுத்துற நான் எப்படி இருக்கேன்னு பார்த்தியா?"என்னைப் போலத்தான் நீயும்.."நாலு பிள்ளைங்க இருந்தாலும் யாரும் உன்னைக்கவனிக்க மாட்டாங்க" என்று சொல்லி இருக்கும்..நான் சொல்றது சரியா அப்பா?

"மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டானே"..என்று மகனை வியப்பால் பார்த்தபடி நின்றான் கண்ணன்..

நீ ஒன்னும் கவலைப்பட தேவையில்லை அப்பா..நாங்க அப்படியெல்லாம் உங்களை கவனிக்காம விட்டுவிட மாட்டோம்.

அதை எப்படிடா நம்புவது?

சரி..நாளையிலேருந்து நாங்களே இந்த தெருவை சுத்தம் பண்ணுகிறோம் போதுமா?

ம்ம்..இப்ப தாண்டா உங்க மேல எனக்கு நம்பிக்கை வருது.

உங்களை வயசான காலத்துல நல்லா கவனிப்போம் என்றா..

இல்லைடா..நாட்டில் உள்ள பொதுச்சொத்தை நம்ம சொத்தா நினைச்சு பாதுக்காக்கிற யாருமே குடும்பத்தையும் நல்லா கவனிச்சிப்பாங்க..ஒவ்வொரு குடும்பமும் நல்லா இருந்தா இந்த நாடு என்ன உலகமே நல்லா இருக்கும்..என்றான் கண்ணன்..அவர் குரலில் திருப்தியோடு நம்பிக்கையும் ஒலித்தது..

{'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது }

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் படுத்தும் பாடு!!


தன் காதல் கடிதத்தை சாந்தியிடம் நீட்டினான் சக்தி..அவளும் அக்கடிதத்தை எதிர்பார்த்து இருந்திருப்பாள் போல..அவன் கொடுத்தவுடன் பெண்ணுக்கே உரிய வெட்கத்துடன் தலைகுனிந்து வாங்கிச்சென்றாள்.இவனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.என்ன செய்வதென்று தெரியவில்லை..ரோட்டில் தானாவே சிரித்தான்..அவனது கால்கள் ரோட்டில் ஆட்டம் போட்டுக்கொண்டே சென்றன..என்ன சொல்லப்போகிறாள் தெரியவில்லையே..மறுநாள் காலையில் தான் அவளை சந்திக்க இயலும்..ஓ.கே சொல்லிடுவாளா?

அன்றிரவு அவனுக்கு உறக்கம் வரவில்லை..நண்பர்களை தொலைபேசியில் அழைத்தான்..அனைவரும் வழக்கம் போல் கட்டைச்சுவரில் கூடினர்.

என்னடா மாப்ள..அவசரமா வரச்சொன்ன..

சும்மாதான்டா..

சொல்லேண்டா..10.00 மணியாச்சு தூங்கணும்

ஒண்ணுமில்லைடா இன்னிக்கு சாந்திக்கு லவ் லெட்டர் கொடுத்தேன்டா..

என்னடா சொன்னா..

காலையில சொல்றேன் சொன்னாடா..

மச்சி கலக்கிறடா..சரிடா காலையில பார்ப்போம்.

இருடா எனக்கு தூக்கமே வரலைடா..கொஞ்சம் பொறுடா.

எனக்கு தூக்கம் வருதேடா..அவ உனக்கு தான் மச்சான் கவலைப்படாதே..போய் தூங்குடா..

பிரியா மனதுடன் விடை பெற்று சென்றான்..

இரவு உறக்கம் வரவில்லை..தீடிரென விழித்தான்..அதிகாலை 4.00 மணி..விடியலை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தான்..கிழக்கில் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பித்தான்.மிக ஆர்வத்துடன் கல்லூரிக்கு கிளம்ப தயாரானான்.அவனிடம் இருப்பதிலே மிகவும் நல்ல ஆடையை அணிந்தான்..தலையை நூறு முறை சீவியும் அவனுக்கு அழகாக தெரியவில்லை..ஒருமனதாக கல்லூரிக்கு கிளம்பினான்..

மிகவும் ஆவலுடன் கல்லூரியின் வாசலை எதிர்நோக்கி இருந்தான்.மணி 9.00 ஆகியும் வரவில்லை..அவள் தோழிகளிடம் விசாரித்தான்..அனைவரும் தெரியவில்லை என்றே பதில் கூறினர்..மனம் உடைந்து போனான்..

யாரோ ஒருவர் ஓடி வருவதை உணர்ந்த அவன் திரும்பிபார்க்க..சாந்தி மூச்சிரைக்க ஓடி வந்தாள்..அவளைக்கண்டதும் அவன் மகிழ்ச்சியில் திளைத்தான்.
அவளிடம் இருந்து ஒரு வார்த்தைக்காக மிகவும் ஏங்கினான்..

அவளோ ச்.சீ போடா என்று சிணுங்கியபடி வகுப்புக்குள் ஓடினாள்..இவன் மனதுக்குள் ஒரு ஆயிரம் சூர்யா வந்துவிட்டது போல் துள்ளிகுதித்தான்..

துள்ளி குதித்ததில் அவனை அறியாமல் படுக்கையறையிலிருந்து கீழே விழுந்தான்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என்னவளின் புகைப்படம்......



நேற்று முழுவதும் கம்பெனியில் அதிகப்படியான வேலை..வீட்டிற்கு எப்படா போவோம் என்றாகிவிட்டது.வழக்கம்போல் போகும் போது எனது நண்பர்களுடன் கலாய்த்துக்கொண்டே வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன்.நாங்கள் தற்போது அதிகமாக பேசுவது ஐ.பி.எல்.தொடரைப்பற்றிதான்.வீட்டிற்கு சென்ற போது இரவு 10.00 மணி.சரி சாப்பிடும் என அமர்ந்தால்..

வீட்டிலே ஒரே குப்பையா கெடக்குது அதையெல்லாம் கொஞ்சம் நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்து ஒதுக்கிவையேன்டா என என் அம்மா இதுவரை ஓராயிரம் சொல்லியிருக்கிறார்கள்.இதுவரை நான் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டதில்லை..
திடீரென எனது இதழ் 'என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்'என்ற பாடலை முனுமுனுத்தது.சரி இன்றாவது ஒதுக்கி வைப்போம் என தயாரனேன்.என் அம்மா கூறிய குப்பைகள் அனைத்தும் என் பழைய நினைவுகள்.ஆம் என் பாடப்புத்தகங்கள்.ஒவ்வொரு பாடப்புத்தகத்தையும் எடுத்து என் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தேன்....

சில கிறுக்கல்கள்..சில கவிதைகள்.என ஒவ்வொரு பக்கமும் எனது வரலாற்றை நினைவு கூறியது.எனது இன்பம்,துன்பம் போன்றவற்றை சிறிதவளவு அந்த புத்தகங்களும் கண்டிருக்கின்றன.அப்படி பார்த்துக்கொண்டிருக்கையில் நான் கண்ட கவிதை என் புத்தகத்தில்..படிக்கின்ற காலத்தில் அக்கவிதை எனக்கு மிகவும் படிக்கும்.

'ரோஜா இதழ் என்று
முத்தம் கொடுத்தேன்..
உதட்டில் இரத்தம்..
முள் பட்டு..'

அதைக்கண்டவுடன் என்க்குள்ளாக ஒரு சிரிப்பு.இரவு 11 ஆகிவிட்டது.என் அம்மா உறங்கிவிட்டார்கள்..எனக்கு ஏனோ உறக்கம் வரவில்லை..திடீரென எதையோ தேடுவது போல் மிகவும் பரபரப்பாக தேடினேன்..கிடைக்கவில்லை.நானும் மனம் தளராமல் என் தேடலை தொடர்ந்தேன்.யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்த பொருள், இல்லை பரிசு,இல்லை அது ஒரு ஓவியம்.எப்படி சொல்வேன்.எத்தனை முறை பார்த்திருப்பேன்,ரசித்திருப்பேன்.

கிடைத்தது அந்த ஓவியம்.அதுதான் என் முதல் காதலியின் புகைப்படம்.இரவு 12.00 மணி எனது வீட்டு தொலைக்காட்சியினில் 'மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ'என்ற பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.வாழ்வினில் ஏதோ சாத்தித்தவனை போல் காணப்பட்டேன்.என்னை நானே கண்ணாடியில் ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன்.அவ்வளவு அழகாக இருந்தேன்,அவள் புகைப்படத்தை கையில் வைத்திருப்பதனால்..அவளுடன் பழகிய நாட்களை இந்த ஒரு பதிவில் சொல்லி விட முடியாது.எனவே அதனை அடுத்த பதிவினில் இடுகிறேன்..

டிஸ்கி:-என்னுடைய முதல் காதலி என்று கூறியிருப்பதால் இப்போது எத்தனை பேர் என்றெல்லாம் கேட்கக்கூடாது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காலில் விழுந்தது ஏன்?!!!


ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்கிற ஒரு பெரியவர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்திருந்தார்.அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு விவாதம் ஏற்பட்டது.

பெரியவர் சொன்னார்:எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல் ஆகவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள்.
அவர்களுக்கு தங்களுடைய தனித்தன்மை தெரிவதில்லை.

அப்படியா சொல்கிறீர்கள்?

ஆமாம்.. எல்லோருமே போலி நடத்தைக்காரர்கள்..மற்றவர்களைப் பார்த்து நடிப்பவர்கள்.

அப்படியென்றால் யாருக்கும் சொந்தப்புத்தி இல்லை என்கிறீர்களா?

கொஞ்சம் பொறுங்கள் உங்கள் சந்தேகத்தை நான் போக்குகிறேன்.அதற்கு நீங்களும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்!.

இப்போது-இங்கே என்னை பார்ப்பதற்கு உள்ளே யாரவது வருகிற போது அந்த நேரம் பார்த்து நீங்கள் என் காலைத் தொட்டு வணங்கி காலடியில் ஒரு நூறு ரூபாய் நோட்டைப் போடுங்கள்!..

சரி செய்கிறேன்.

அவர்கள் காத்திருந்தார்கள்

கொஞ்ச நேரத்தில்..

மூன்று பேர் உள்ளே வந்தார்கள்.

அவர்கள் நுழைகிற நேரம் பார்த்து இந்த நபர் அந்த பெரியவரின் காலடியில் நூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டு,அவர் காலைத் தொட்டுக் கண்களில் வைத்துக்கொண்டார்.அவ்வளவுதான்.

அடுத்தடுத்து என்ன நடந்தது தெரியுமா?..

வந்தவர்களும் வரிசையாக அவர் முன்னே ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் காலடியில் வைத்து தொட்டு வணங்கினார்கள்.கொஞ்ச நேரம் பேசிய பின் சென்றார்கள்.

அவர்கள் போனபிறகு,அந்த பெரியவர் நண்பரிடம் சொன்னார்.'இவர்கள் நாற்பது வருடங்களாக என்னைப் பார்க்க வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை ஒரு தடவை கூட ஒரு ரூபாய் தந்ததில்லை.இன்றைக்கு நூறு ரூபாய் போடுகிறார்கள்!!அதனால்தான் சொன்னேன்,மனிதர்கள் மற்றவர்களைப் போல் நடிப்பதில் கெட்டிக்காரர்கள் என்று!

*************************************************************************************

ஒரு அரங்கத்தின் உள்ளே இருந்து பெரியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அவர் பின்னால் இருந்து ஒருவன் ஓடிவந்து அவரிடம் காலில் விழுந்து வணங்கி பிறகு எழுந்து சென்றான்.

பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொருவன் இதைப்பார்த்தான்.உடனே அவனும் ஓடி வந்து அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டு பின் எழுந்து சென்றான்.

இரண்டாமவன் முதலில் விழுந்து வணங்கியவனிடம் போய் கேட்டான்"அவரு யாரு?..ரொம்ப பெரியவரா..எதுக்கா அவரு கால்லே விழுந்து வண்ங்கினாய்..

முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!..

************************************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முதல் காதல் கடிதம் !!!

அது ஒரு மாலை நேரப்பொழுது.மாலை 6.00 மணி இருக்கும் என நினைக்கிறேன்.சென்னை மெரினா கடற்கரையில் நான் தனியாக சென்று கொண்டிருந்தேன்.என்னுடைய வாக்மேனில் 'அன்பே என் அன்பே'என்ற பாடல் கேட்டவாறே சென்று கொண்டிருந்தேன்.அருமையான் பாடல் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் என்னை மறந்து சென்று கொண்டிருந்தேன்.

அழகான கடற்கரை,ஓய்வில்லாத அலையின் ஓசைகள்,ஆங்காங்கே சுண்டல் விற்கும் வண்டிகள்,அதை வாங்கி சாப்பிடுவோமா வேண்டாமா என்று கடலை போட்டு கொண்டிருக்கும் காதலர்கள்,சிலர் காதலனுக்காகவும் சிலர் காதலிக்காகவும் காத்துக்கொண்டிருந்தார்கள்.ஒரு சிலர் தொலைபேசி உரையாடலுடன்..

இவை அனைத்தையும் பார்க்கும் போதே என் மனதில் ஒரு நெருடல். இதில் வாக்மேனில் காதல் பாடல் வேறு.போதுமடா சாமி என்று கடற்கரையை விட்டு வெளியேற நினைக்கையில் எனது காலின் கீழே ஒரு பேப்பர் கிடந்தது. அது ஒரு காதல் கடிதம்:-
அன்புள்ள காதலிக்கு உன் முன்னால் காதலன் எழுதுவது.நீ இங்கு நலம் நான் அங்கு நலமா?..உனக்குத் தெரியுமா இதே நாள் (பிப்ரவரி 21) இந்த கடற்கரையில் தாம் நாம் முதன் முதலில் சந்தித்தோம்.இந்த கடற்கரையில் தான் உன்னுடைய முதல் காதல் கடிதத்தை கொடுத்தாய்.மூன்று வருடங்கள் கழித்து கொடுத்தாய் உன் திருமண பத்திரிக்கையை..

மூன்று வருடங்கள் சொர்க்கத்தில் இருந்தேன் என்றே சொல்லலாம். இன்றும் சொர்க்கத்தில் தான் இருக்கிறேன்..உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே!!

நானும் நீயும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த கடற்கரைக்கு வருவோம் ஞாபகமிருக்கிறதா? இன்று நான் மட்டும் தனியாக..இல்லை இல்லை என்னை மாதிரி தனி ஆளாக மாற எத்தனையோ இளைஞர்கள் இருப்பதைக் கண்டு எனக்கே ஒரு சிரிப்பு..

நானும் ஒவ்வொரு வாரமும் வந்து இந்த மாதிரி கடிதம் எழுதி வைத்து விட்டு செல்கிறேன்.என்றாவது ஒரு நாள் உன் கணவருடன் வந்து அதை நீ படிக்க மாட்டாயா? என்ற எண்ணம்..

உன்னோடு பழகிய அத்தனை நிகழ்வுகளையும் எழுதிவிட ஆசையாகத்தான் உள்ளது.ஆனால் அதை எழுதும் முன் என்னுடைய இன்றைய காதலி வந்து விடுவாளோ என்கிற பயம்தான்.என்ன இருந்தாலும் என்னுடைய முதல் காதலை மறக்க முடியவில்லை.'எங்கிருந்தாலும் வாழ்க'என்றும் உன் நினைவுடன் நான்!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடவுள் இருக்கிறாரா? இல்லையா???


ஒரு ஆற்றினில் தன் நண்பர்களுடன் ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். ஆற்றினில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவே நண்பர்கள் ஆற்றினில் இருந்து கரையேறினர்.ஆனால் ரமேஷ் மட்டும் கரையேரவில்லை.எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

தண்ணீர் அவன் இடுப்பளவு வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்கள் அவனை கரையேறும்படி வற்புறுத்தினர்.ஆனால் அவனோ எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

தண்ணீர் அவன் மார்பளவு வந்துவிட்டது.நண்பனில் ஒருவன் கயிறு கொடுத்து காப்பாற்ற உதவினான்.ஆனால் அவன் வரவில்லை.

தண்ணீர் அவன் வாய் வரை வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்களில் ஒருவன் கரையேறும்படி தான் கொண்டு வந்த சைக்கிள் டியூப்பினை அவனிடம் கொடுத்து கரையேறும்படி கூறினான்.

தண்ணீர் அவன் நெற்றியளவு வந்துவிட்டது.அவன் வானத்தை நோக்கி 'கடவுளை என்னைக் காப்பாற்று' எனக் கூறினான்.

அப்போது வானத்தில் தோன்றிய கடவுள் சொன்னார்.நான் உன்னைக் காப்பாற்றுவதற்காக முதலில் ஒருவனை அனுப்பினேன்.நீ வரவில்லை.என் மீது அதிக பாசம் வைத்துள்ளதால் மீண்டும் ஒருவனை அனுப்பினேன்.ஆனால் மீண்டும் நீ வரவில்லை. இதில் என் மீது எந்தக் குற்றமுமில்லை எனக் கூறினார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS