கரையும் உருவங்கள்..


இரவு மணி பதினொன்றை தாண்டியது..தெருவினில் ஆள் நடமாட்டம் அதிகமில்லை..சாலையோர டீக்கடையில் எப்.எம்.மில் "நினைத்தாலே இனிக்கும்" ஓடிக்கொண்டிருக்கிறது.தன்னுடைய பாத்திரங்களை தெருவில் போட்டு விளக்கிக்கொண்டிருந்தான் டீக்கடைக்காரன்..அதன் கழிவுநீர் ரோட்டினை அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தது..தன் நிழலை பார்த்தவாறே நடந்து வந்தான் கண்ணன்..தெருவின் கடைசியில் உள்ள மின்விளக்கு அவனுக்கு வழிகாட்டியது..கழிவுநீரை தாண்ட முயற்சி செய்கையில் இரண்டு நாளாக இப்போ பிய்ந்துவிடும் பிறகு பிய்ந்துவிடும் என்ற நிலையில் இருந்த செருப்பு அவன் வீட்டருகில் யாரும் இல்லாத வேளையில் அறுந்து போனது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..

செருப்பினை கையில் பிடித்தவாறே வீட்டினை நோக்கி நடக்கலானான்..வீட்டின் முன் நின்றான்..கதவினை தட்ட மனம் வரவில்லை..கண்களிலே கண்ணீர்தான் வந்தது.நிலையினை பிடித்தவாறே நின்றான்..திடீரென கதவினை திறந்தாள் அக்கா வாசுகி..

எவ்வளவு நேரமா வெளியில நிக்கிறடா..??

கதவினை தட்டவேண்டியதுதானா.??

கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டினுள் நுழைந்தான் கண்ணன்..

இந்த சத்தங்களுக்கு இடையே அப்பா கண்முழித்தார்..கண்ணா வந்துட்டியா..காலாகாலத்துலே சீக்கிரமா வரலாம்ல..பொம்பிளைப்புள்ளை எவ்வளவு நேரமா முழிச்சுக்கிட்டு இருப்பா..??

தட்டினில் சாதத்தினை வைத்து அவனை சாப்பிடச்சொன்னாள் வாசுகி..

எனக்கு சாப்பாடு வேண்டாம்..

ஏன்டா..துரை சாப்பிட்டு வந்திங்களோ..???

இல்லை..

பின்ன என்ன..??

பசிக்கலை..

ஆமா காலையில வேலை விஷயமா போனியே என்ன ஆச்சு..

கிடைக்கலை...

சரி விடுடா..நீ சாப்பிடு உனக்கு நல்லா வேலையா சீக்கிரமா கிடைக்கும்..

வருகிற வழியில் சுரேஷ் மாமாவை பார்த்தேன்..

என்ன சொன்னார்..அவர் மகனுக்கு வேலை கிடைச்சிருச்சாமே..

நாளைக்கு திருப்பூருக்கு போகச்சொன்னார்..அங்கே அவருக்கு தெரிந்த நண்பரிடம் வேலைக்கு சேர்த்துவிடுகிறேன் என்றார்..

சரி போயிட்டு வாடா..போக காசு வைத்திருக்கிறாயா என்று அவன் சட்டைப்பைக்குள் கையை நுழைத்தாள்..கிழிந்து போன ஐந்து ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது..இரு வருகிறேன் என்று தன் வளையல் டப்பாவுக்குள் எட்டு மடிப்பாக வைத்திருந்த ஐம்பது ரூபாய் தாளை நீட்டினாள்..

என்னடா பாக்குற..நீ கொடுத்ததுதான்.போன தீபாவளிக்கு கொடுத்தியே அந்த காசுதான்..

கண்களில் நீர் மல்க அவள் மடியினில் சாய்ந்தான் கண்ணன்..ஆறுதல் கூறியவாறே அழுது கொண்டிருந்தாள் அவள் அக்கா வாசுகி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு வரி கவிதைகள்...


நான்

என் பெயர்(அன்பு)

என் மனம்

என் அம்மா

நட்பு

காதல்

தோல்வி

அழுகை

சிரிப்பு

ஆதரவற்ற குழந்தைகள்

கடவுளின் "ஊனம்"

நொந்த மனம்

என் குரல்

என் நடனம்

என் கால்கள்

என் கற்பனை

என் கனவு

என் கவிதைகள்

என் கொள்கை

திறமை

நம்பிக்கை

கடவுள்

மயில் இறகு

நிலவு

மழை

காதல்

கோவில்

என் கோபம்

அப்பாவுடன் சண்டை

தம்பியுடன் மௌன விரதம்

என் பிடிவாதம்

பாசம்

நேசம்

என்னை புரியாத நட்பு

விரும்பும் வாழ்க்கை

வாழும் வாழ்க்கை

" நான் ஒரு கவிதை, என் பெயர் ஒரு கவிதை, என் மனம் ஒரு கவிதை,

புரிந்ததவருக்கும் நான் கவிதை,

புரியாதவருக்கும் நான் கவிதை,

மொத்தத்தில் கவிதையே நான்...

என் மீது நான் கொண்ட காதல் ஒரு கவிதை..


இது போதும்.. ஆனால் இன்னும் 1000 கவிதைகள் சொல்வதற்கு இருக்கிறது.. திரும்ப வருவேன் ..

புதிதாக.. புதிராக...

காத்திருங்கள்...

காத்திருப்பதும் கவிதை...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்னையின் பிறந்த நாளை தேடி..



ஆதர்ஷ நடிகனின் பிறந்த தினம்..
அவனுக்கு குழந்தை பிறந்த தினம்..

எதிர் வீட்டு பெண்ணின் பிறந்த தினம் அவள்
என்னை பார்த்து சிரித்த தினம்..

காதலர்க்கென்று ஒரு தினம்..
கல்லூரி பேருந்துக்கென்று ஒரு தினம்..

எல்லாம் தெரிகிறது,
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
என் அன்னையின் பிறந்த தினம்.

காணாத கடவுளர்களுக்கே
கிருஷ்ண ஜெயந்தியும், கிறிஸ்து ஜெயந்தியும் இருக்கையில்,
கண்முன்னே வாழும்
கருணை கடவுளுக்கு ஜெயந்தி எப்போது..

கனவில் வந்து சொல்வாரென
காலமான தாத்தாவை நினைத்துக்கொண்டே
கண் மூடுகிறேன் தினமும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2040-ல் இந்தியாவின் தலைப்புசெய்திகள்..


1.இந்திய பிரதமர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு.

2.வரும் முதல்வர் தேர்தலில் கண்டிப்பாக என் மகன் வெற்றி பெறுவான்,,,எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேச பேட்டி..

3.நான் அடுத்த உலக்கோப்பையிலும் விளையாட விருப்பமாக உள்ளேன் - சச்சின் பேட்டி...

4.முன்னால் உலக அழகி ஐஸ்வர்யாவின் மூன்றாவது திருமணத்திற்கு சல்மான் கான்,விவேக் ஓபராய்,அபிஷேக்பச்சன் வருகை தந்தனர்....

5.சிம்புவுடன் காதலா,இல்லை என மறுக்கிறார் சினேகா.....

6.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.5 உயர்வு..இனி 999/லிட்டர்......

7.ரஜினியின் கதாநாயகியாக தனுஷின் மகள் நடிக்க இருக்கிறார் ..தனுஷ் பெருமிதம்.......

8.வரலாற்று சிறப்புமிக்க கோலங்கள் தொடர் 25000 நாட்களை தொட்டது........

9.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தீடீர் மாரடைப்பால் மரணம்.........

10.விஜய் தனது அடுத்த படத்தில் காலேஜ் மாணவனாக வலம் வருகிறார்..........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பால் சைவமா..?? அசைவமா..??




இந்தக்கேள்வி இச்சிறுவனின் மனதில் சிறுவயதில் இருந்தே இருக்கிறது..

அசைவம் கூடாதென்ற காந்தியே, ஆட்டுப்பால் குடித்தாராம்.. எனவே பால் சைவம் என்பது காந்தியின் கருத்து..

தன் கோவிலுக்கு மாலை அணிந்துவரும் பக்தர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது என உத்தரவிட்ட ஐயப்பன் புலிப்பால் குடித்தாராம்..அதனால் அவரது பார்வையில் பால் சைவமே..



முட்டையை அசைவம் என்று கூறுகிறார்கள்..எப்படி கோழியின் வயிற்றிலிருந்து முட்டை வருகிறதோ..அதே மாதிரிதானே மாட்டின் மடியிலிருந்து பால் வருகிறது..எப்படி பால் மட்டும் சைவமாக இருக்க முடியும் என்பதே இச்சிறுவனின் கேள்வி..

*************

என்னுடைய வாழ்வினில் நடந்த சம்பவம்:-

நான் சிறுவனாக இருந்த போது எனது சித்தப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தார்.அந்த வருடம் அது அவருக்கு முதல் வருடம்.எனவே கன்னிச்சாமி என்றெல்லாம் அழைத்தார்கள்..அவரை கோவிலுக்கு வழியனுப்ப நானும் என்னோட அம்மாவும் போயிருந்தோம்.வழக்கமாக நாங்கள் போனால் எங்கள் சித்தி கறிகுழம்பு வைப்பது வழக்கம்..ஆனால் அன்று வைக்கவில்லை.ஏன் என்று கேட்டதற்கு சித்தப்பா அதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று அம்மா சொன்னாங்க..அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பால் குடித்தார்..

மறுபடியும் சந்தேகம்..பாலும் மாட்டிலிருந்து தானே வருகிறது..எப்படி சைவமாக முடியும்..

ஒரு உயிரை கொன்று அதன் இறைச்சியை புசிப்பது தான் அசைவம் என்றால் கன்றுக்குட்டி குடிக்க வேண்டிய பாலை மட்டும் நாம் குடிக்கலாமா..??

கன்றுக்குட்டியும் ஓர் உயிர்தானே..அதுக்கும் பசி என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும்...

*************

நாம் சைவம் என்று சாப்பிடிகின்ற நெல்,கத்திரிக்காய்,தக்காளி என எல்லா தாவரங்களுமே நிலத்தில் விழுந்தால் மறுபடியும் முளைக்கக்கூடியவைதான்..அப்படியானால் அதுக்கும் உயிர் இருக்கதான் செய்கிறது..உயிரைக்கொன்று தான் நாம் சாப்பிடுகிறோம்..

தாவரங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக பூக்கின்ற பூக்களை கூட மனிதர்கள் சைவம் என்று கூறியே சாப்பிடுகிறோம்..

*************

வீட்டில் என் அம்மாவிடம் ஒருமுறை காலையில் காபியை குடித்தவாறே கேட்டேன்.பால் சைவமா..அசைவமா என்று அவங்க சொன்ன பதில்..சைவமோ அசைவமோ "குடிச்சா நல்லா இருக்குல" என்கிறார்கள்..சரி நண்பர்களிடம் கேட்போம் என்று விவாதித்தால் "இவ்வளவு நாளா நல்லாதானாட இருந்த..தீடீரென்று என்ன ஆச்சு உனக்கு" அப்படி என்கிறார்கள்..

அதான் பதிவர்களிடம் விவாதிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன்...

தயவு செய்து விளக்கத்தினை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

விவாதத்துடன்:-

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனக்கு வந்த குறுஞ்செய்திகள்..



மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை..

**********************

அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..

****************

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..

****************

மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..

ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..

****************

சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..

****************

உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்...

****************

இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..

****************

எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..

****************

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!

****************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முக்கோணக்காதல்....


"என்னைக் கொஞ்சம் மாற்றி" என்ற பாடலை பாடியவாறே கண்ணாடியின் முன் தன் முகபாவனைகளை சரி செய்து கொண்டிருந்தாள் கார்த்திகா.
இவளின் வழக்கத்திற்கு மாறான அலப்பரையை பார்த்து வியந்து போய் "எங்கடி கிளம்பிட்ட" என்றாள் ராணி.

"ஒரு வாரமா என் பின்னால சுத்திக்கிட்டு இருந்தானே.. கார்த்திக், நேத்து பக்கத்துல வந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..நாளைக்கு தாஜ் ஹோட்டலுக்கு வரமுடியுமா? என்று கேட்டான்.. "

" நீ என்னடி சொன்ன?" என்றாள் ராணி..

"வரேன் என்று சொல்லிட்டேன்....

" அப்போ கார்த்திக்கை காதலிக்கிறாயா?"

" ஆமாம்.. "

"அப்போ ராஜாவின் நிலைமை??"

"அவன் என்னை காதலிப்பது நம்ம காலேஜூக்கே தெரியும்..இருந்தாலும் வந்து சொல்லமாட்டேன்கிறான்..அவன் என்னிக்கு வந்து என்கிட்ட சொல்லி...எனக்கு டைம் ஆச்சு நான் புறப்படுகிறேன்.. அப்புறம் இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்கு?"
"ம்ம்ம்..நல்லாத்தான் இருக்கு.. "

கார்த்திகாவும் ராணியும் கல்லூரி தோழிகள்..இருவருக்கும் ஒரே விடுதி..ஒரே அறை..இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்குச்செல்வர்..

அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து தாஜ் ஹோட்டலுக்கு சென்றடைவதற்குள் அறை மணி நேர தாமதம்..இருந்தாலும் கார்த்திக் எங்கு இருக்கிறான் என்று நோட்டமிட்டாள்..சிவப்பு நிற டி-ஷர்ட்டில் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தான்.. இருவரும் பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு புன்னகை..

கார்த்திக் அருகில் சென்று "வந்து ரொம்ப நேரம் ஆச்சா..?? "
"இல்லை 15 நிமிடம் தான்.. "

கார்த்திக் "ஐ லவ்" என்று ஆரம்பிக்க, சர்வர் "என்ன மேடம் வேணும்? " என்று சொல்ல..கார்த்திக் சிறிது அமைதியானான்..
"இரண்டு வெண்ணிலா.." என்று ஆர்டர் பண்ணிவிட்டு..

" கார்த்திகா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப பயமா இருக்கு.. அதுக்காக சொல்லாமலும் இருக்க முடியாது.. " என்று தயங்கினான்..

"பரவாயில்லை பயப்படாம சொல்லுங்க " என்றாள் கார்த்திகா.. தன் மேலான அவன் காதலை அவன் வாயாலையே சொல்வதை கேட்க..

கார்த்திக் மெல்ல தயங்கி, "நான் உங்க பிரண்ட் ராணியை... ராணியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்..அவங்க இல்லாமல் என்னால் இருக்க முடியாது..கிட்டதட்ட மூன்று வருஷமா அவங்களை காதலிக்கிறேன்..வாழ்ந்தா அவங்ககூடத்தான் வாழனும் என்று ஆசைப்படுறேன்..ஆனா அவங்ககிட்ட சொல்ல தைரியம் இல்லை..மேலும் சொன்னா என்னுடைய நிராகரித்துவிடுவார்களோ என்ற பயம்தான்..நீங்க தான் அவங்ககிட்ட பக்குவமா பேசி என்னுடைய காதலை சொல்லணும்" என்றான்..

இதை சற்றும் எதிர்பாராத கார்த்திகாவுக்கு சிறிது வியர்த்தாலும் சுதாரித்துகொண்டு "ம்ம் கண்டிப்பா சொல்றேன் " என்று கிளம்பினாள்..


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மதுரை சம்பவம்-சம்பவங்கள் பல..



தவறான தொழில் செய்தாலும் அதிலும் ஒரு நேர்மையை கடைபிடிக்கும் ரவுடியின் கதை..ரவுடியாக ஆலமரத்தான்(ராதாரவி). ராதாவின் மகனாக குட்டி(ஹரிக்குமார்).குட்டியின் அக்கா மகளாக கார்த்திகா.ராதாரவியின் பேரில் ஓட்டு வாங்கி எம்.பி.ஆகிறார் கட் அவுட் ஆளவந்தான் ( காதல் தண்டபாணி)..ஆனால் கள்ளச்சாரயம் காய்ச்ச்சுவதால் ராதாரவியின் எதிரி ஆகிறார்..இவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சினை முதல் பாதி..

இரண்டாம் பாதியில் என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட்டாக கரோலின் தாமஸ் (அனுயா). போலிஷ் வேஷத்தில் இருப்பதை விட மற்ற காஷ்டியூம்களில் கலக்குகிறார்..அருமையான நடிப்பு..இரண்டாம் பாதி முழுவதும் அவர் ரவுடியுடன் மோதுவது என படம் நகர்கிறது.

படத்தில் ஹீரோ பேசும் முதல் வார்த்தையே..

வடக்கிலே திண்டுக்கல்லு..
தெற்கிலே திருப்பரங்குன்றம்...
மேற்கிலே மேலூர்..
கிழக்கிலே கூடலூர்..என்கிற டையலாக்..

டையலாக் பேசுவதில் விஜயை மிஞ்சுகிறார்.மற்றபடி சண்டைக்காட்சிகளில் இவரிடம் அடி வாங்குபவர்கள் எல்லாம் எப்படி 20 அடி தூரம் தள்ளி விழுகிறார்கள் என்பது தெரியவில்லை..சண்டைக்காட்சிகளில் "அனல் அரசு" அனலை கக்குகிறார்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ஹரிக்குமார் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்..வசனங்கள் அனைவருக்கும் புரியும்படி தெளிவாக பேசிகிறார்..படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார்..மற்றாபடி ஒன்னுமில்லைங்க..



கார்த்திகா படத்தில் மூன்று காட்சிகளில் வருகிறார்..இரண்டு பாடல்களுக்கு ஆடுகிறார்..இரண்டு முறை அழுகிறார்..மற்றபடி எதுவும் இல்லைங்க..



அனுயா அழகாக இருக்கிறார்.நன்றாக நடித்திருக்கிறார்..ஹீரோவுடன் காதல் கொள்வதாக ஏமாற்றி அவர் அப்பாவையும் மாமாவையும் கொலை செய்கிறார்.இறுதியில் இறந்தும்விடுகிறார்..காதலுடன் ரொமான்ஸ் காட்சிகள் அருமை..

ஆனந்த் பாபு கூலிப்படை ரவுடியாக வருகிறார்..

இசை ஜான் பீட்டர் சொல்லிக்கொள்ளும் படி இல்லை..

படத்தின் பாடல்களையும் எழுதி இயக்கி இருப்பவர் யுரேகா..

படத்தில் பேசப்பட்ட வித்தியாசமான வசனங்கள்:-

1.ஆடு புளுக்கை போடுற மாதிரி அதிகமா பேசாத..
2.குட்டின்னா..பன்னிக்குட்டி இல்லைடி..சிங்கக்குட்டி..
3.கீழ விழுந்தா விழுந்த இடத்துல தான் எந்திக்க முடியும்..கொஞ்சம் தள்ளிப்போயா எந்திக்க முடியும்..
4.நாங்களெல்லாம் ஸ்விட்ச் போட்டாதான் லைட்டே எரியும்..நாங்களெல்லாம் ஸ்விட்ச் போட்டாதான் சூரியனே எரியும்..

இது போல் படத்தில் வசனங்களுக்கும் பஞ்ச் டையாலாக்கும் குறைவில்லை..

சம்பவங்கள்:

1.படம் முழுவதும் ஒரே சாவுக்காட்சிகள்..தியேட்டரே சுடுகாடு வாசம்..
2.நான் பார்த்தவரையில் வித்தியாசமான கிளைமேக்ஸ்..இதுவரை வந்த தமிழ் சினிமாவில் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒன்று சண்டையாக இருக்கும்..இல்லையென்றால் செண்டிமெண்டாக இருக்கும்..இதில் கொஞ்சம் வித்தியாசம்..பாருங்கள்..
3.மதுரை மெயின் ரோட்டில் ஒரு முத்தம் (ரோட்டில ஒருத்தர் கூட இல்லைங்க..)

மதுரைச்சம்பவம்:- சம்பவங்கள் நிறைய இருக்கு..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தொடர்பதிவு..


என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த "காதல் மன்னன்" லோகு அவர்களுக்கு என் நன்றிகள்..

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

*********
இனி...

1. A – Avatar (Blogger) Name / Original Name : /ஓபன் ஹார்ட்../அன்பு.(அன்புச்செல்வன் ஐ.பி.எஸ். இல்லைங்க..!!)

2. B – Best friend? : என்னோடு பழகிய அனைவரும் எனக்கும் பெஸ்ட்தான்..குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் என் அம்மா தான்..

3. C – Cake or Pie? : கேக் ரொம்ப பிடிக்கும்..

4. D – Drink of choice? தண்ணியடிக்கிற பழக்கம் எல்லாம் இல்லைங்க..பால் மட்டும் தான்.கொஞ்சம் டிக்காஷனோட..

5. E – Essential item you use every day? கண்கள்..(அவளை பார்த்த என் கண்களை என்றுமே பார்த்துக்கொண்டிருக்க ஆசைதான்..)

6. F – Favorite color? கறுப்பு,நீலம்,

7. G – Gummy Bears Or Worms : இதுல எதுவுமே எங்க ஊரில் இல்லைங்க..

8. H – Hometown? - பட்டாசு நகரம்,குட்டி ஜப்பான்,சிவகாசி தான்..

9. I – Indulgence? - அப்படின்னா..

10. J – January or February? - பிப்ரவரி (காதலர் தினம் இருப்பதால்)

11. K – Kids & their names? என்னோட சாய்ஸ்:- மாயா..

12. L – Life is incomplete without? Love (காதலிப்பவனுக்கே உரிய சுகம் )

13. M – Marriage date? - எங்க அம்மா தான் முடிவு எடுக்கணும்..

14. N – Number of siblings? 0...

15. O – Oranges or Apples? ஆப்பிள்..

16. P – Phobias/Fears? நாய்..

17. Q – Quote for today? கடமைச்செய்..பலனை எதிர்பாரதே..

18. R – Reason to smile? மனதில் வேதனைகள் இருப்பினும் வெளிக்காட்டாமல் இருக்க...

19. S – Season? வசந்த காலம்

20. T – Tag 4 People?-

கார்த்திகைப்பாண்டியன்

ராஜூ (டக்லஸ்)

இயற்கை

சிவசைலம்

21. U – Unknown fact about me? ரொம்ப நல்ல பையனாக இருந்தேன்..

22. V – Vegetable you don't like? வெண்டைக்காய்..

23. W – Worst habit? கோபப்படுதல்..(குறைக்க நினைக்கிறேன்..முடியலை)

24. X – X-rays you've had? இதுவரைக்கும் இல்லைங்க..

25. Y – Your favorite food? அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாரிக்கும் அனைத்துமே பிடிக்கும்..

26. Z – Zodiac sign? தனுசு..

***************************


1. அன்புக்குரியவர்கள் : நண்பர்கள்..

2. ஆசைக்குரியவர் : இனிமேல் வர இருக்கும் காதலி...அல்லது மனைவி....


3. இலவசமாய் கிடைப்பது : அம்மாவின் பாசம்..


4. ஈதலில் சிறந்தது : ஈதலே சிறந்தது தானே.

5. உலகத்தில் பயப்படுவது : தியேட்டரில் விஜய் படம் பார்ப்பது..

6. ஊமை கண்ட கனவு : தெரியலையே..

7. எப்போதும் உடனிருப்பது : அம்மா ஆசையுடன் வாங்கித்தந்த பேனா..

8. ஏன் இந்த பதிவு : நட்புக்காக

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : நோயற்ற வாழ்வு தான். ..

10.ஒரு ரகசியம் : அதான் ரகசியமாச்சே..!!


11.ஓசையில் பிடித்தது : குழந்தையின் சிரிப்பு..


12.ஔவை மொழி ஒன்று : தந்தை தாய் பேண்...

13.()ஃறிணையில் பிடித்தது: பூனைக்குட்டி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வேட்டைக்காரன்-முன்நவீனத்துவமான விமர்சனம்..


ஏ.வி.எம் தயாரிப்பில் சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் மிகவும் பிரம்மாண்டமாய் வந்திருக்கும் படம் வேட்டைக்காரன்...

பொதுவாகவே விஜய் படங்களில் முதலில் ஒரு ஓபனிங் சாங் வரும்..ஆனால் இப்படத்தின் முதல் காட்சியே நம் நெஞ்சை உருக்குகிறது..விஜய் பத்து வயது சிறுவனாக வருகிறார்..அதற்காக அவர் கடினமாக உழைத்திருப்பார் என எதிர்பார்க்கிறேன்..கண்ணில்லாத அக்கா...காலில்லாத தம்பி..ஆஸ்த்துமா நோயில் தாய்..மரண படுக்கையில் தந்தை..வேலையில்லாமல் விஜய்..என முதல் காட்சியிலே ஒரு குடும்பத்தின் கஷ்டங்களை நம் முன்னே காட்டுகிறார் இயக்குனர் பாபு சிவன்..

விஜய் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர இன்டர்வியூ போகிறார்..அங்கே இவரது திறமை அவமதிக்கப்படிகிறது உடனே"வேட்டைக்காரன் டோய் வேட்டைக்காரன் டோய்"..என்ற பாடல் ஒளிபரப்பாகிறது..பாடலிலே விஜய் அந்த கம்பெனியின் எம்.எடியை தீர்த்துக்கட்டுகிறார்..

இப்படி வேலை தேடிக்கொண்டிருக்கும் விஜயின் கனவு என்னவென்றால் தமிழகத்தின் முதல்வர் ஆவதுதான்..இதற்காக இவர் படும் கஷ்டங்கள்..படத்தில் மிகவும் அருமையாக சொல்லப்பட்டுள்ளன..



இடையில் அனுஷ்காவுடன் மோதல்..மோதலின் விளைவு காதல்..என தன் இளமைக்கால வாழ்க்கையையும் என்ஜாய் பண்ணுகிறார்..அனுஷ்கா மிகவும் அழகாக இருப்பதுடன் தன் காதலன் முதலமைச்சராக அவர் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை..



இக்கட்டத்தில் தமிழகத்தில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடவே ஆளுங்கட்சி கவிழ்கிறது..இந்நேரத்தில் விஜய் கட்சி உருவாக்குகிறார்..தேர்தலில் நிற்கிறார்..கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர்..மிகவும் கஷ்டப்படுகிறார்..படத்தில் சந்திரசேகர் விஜயின் மாமாவாக வருகிறார்..அருமையான நடிப்பு..அனுஷ்கா கட்சியின் விளம்பரத்தூதுவர்.

இறுதியில் தேர்தலில் வென்றும் விடுகிறார்...தமிழக முதல்வனாக விஜய்..வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டையில்..பார்க்கவே கொடுத்து வைக்கனும் நம் கண்களுக்கு ..

படத்தில் எந்த ஒரு பாமரனும் நினைத்தால் தமிழகத்தில் முதல்வர் ஆகலாம் என்ற உண்மையை எடுத்துக்காட்டியுள்ளனர். :-((

கிளைமேக்ஸ் காட்சியில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் அவர்கள் தமிழக மக்களுக்கு ஒரு இருபது நிமிடம் அறிவுரை கூறுகிறார்...

படத்தின் பிற்பாதியில் தமிழகத்தின் வறுமை எப்படி குறைந்தது..விஜயின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை மிகவும் அழகாக கூறியிருக்கார் இயக்குனர்..

படத்தில் பிண்ணனி இசையும் (விஜய் ஆண்டனி) கிளைமேக்ஸ் வசனங்களும் மிக அருமை..

வேட்டைக்காரன்:- தமிழகத்தின் பஞ்சத்தை வேட்டையாட வந்தவன்..

டிஸ்கி 1 : படத்தில் விஜய் ஆட்சி செய்வதை பார்க்கும்போது நமக்கே இவர் உண்மையிலே ஆட்சிக்கு வந்தால் எப்படிக்கு இருக்கும் தமிழகத்தின் பஞ்சம் தீர்ந்துவிடுமோ என்று தோன்றுகிறது..

டிஸ்கி 2 : இங்கு கூறியிருக்கும் அனைத்தும் கற்பனையே...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS