நம் சகோதரர் முத்துகுமரன் அண்ணனுக்கு வீரவணக்கங்கள்

இனவெறி சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிராய் , நம் தமிழ் இனத்தின் வாழ்வுக்காய் தன்னுயிர் நீத்த நம் சகோதரர் முத்துகுமரனுக்கு வீரவணக்கங்கள்.
அவரின் இறுதி அறிக்கை. முடிந்தவர்கள் மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புங்கள். பதிவிட முடிந்தவர்கள் பதிவிடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அறிந்ததும் அறியாததும்!!!

இதற்கு பெயர் தான் பாஸ்ட் புட்!!!

இவங்களும் அடிச்சிக்கிறாங்க!!!
உலகிலேயே மிகச்சிறிய பெயர் கொண்ட நகரம்(நார்வே)
உலகிலேயே மிகப்பெறிய பெயர் கொண்ட நகரம்(நியூசிலாந்து)
உலகிலேயே மிகச்சிறிய குதிரை 40 செ.மீ

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இரண்டரை மணிநேர சந்தோஷங்கள்

அரங்கு வாசல் வரிசையில் நின்று
அடித்துப் பிடித்து அருகே சென்றும் கிடைக்காமல்
அதிகப் பணம் கொடுத்து 'ப்ளாக்'கில் வாங்கி
உள்நுழைகையில் வியர்வையுடன் சிரிப்பு வரும்

ஷூ அணிந்த காலைக் காட்டி
கதாநாயகன் அறிமுகமாகையில்
"தலைவா...." போன்ற அடித்தொண்டை கத்தல்கள்
செவி கிழிக்கும்

ஒல்லி நாயகனின்
ஓரடியில் பத்துப்பேர் சுருண்டு விழுகையில்
கைத்தட்டல் காதைப் பிளக்கும்

ஏதோவொரு கட்டத்தில் வில்லன் நாயகனை
எதிர்த்துப் பேசுகையில்
எதிர்வரிசை இருக்கைகள்
எட்டி உதைக்கப்படும்

தன்னை விட
இருபது வயது இளைய நாயகியை நாயகன்
இறுக்கியணைக்கையில் விசில் பறக்கும்

எல்லாம் முடிந்து வெளிவருகையில்-நாளை
வட்டி கட்டப் பணமில்லாப் பையை
தடவிப்பார்க்கும் வலது கையில்
யதார்த்தம் சுடும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மீண்டும் அவள் என் அருகில்


வெகு நாட்களுக்கு பிறகு
ஒரு
மழை பொழுதில்
நாம் இருவரும் சந்தித்து கொண்டோம் ,

இடைவெளி குறைவு தான்
ஆனாலும் இருவரும் விலகியே நின்றோம் !

வார்த்தைகள் மரித்துபோய்,
விழிகள் மட்டும் மோதிக்கொண்டன
நலமா என்றாய் ,என சொல்வது ,

என்று தெரியாமல் உன்னை மட்டும்
பார்த்து கொண்டிருந்தன, உன் கேள்விக்கு
பிரம்மனால் கூட
பதில் சொல்ல முடியாது , நான் மட்டும் என்னடி !

பிறகு நீ உன் கணவனோடு
கை கோர்த்து கொண்டு,
திரும்பி பார்த்தாய் , கவலைபடாதே ,

எனக்கும் இன்னொருத்தி என்று ,
நீ சென்ற பின் இந்த
பாலை வானம் ,
மழை சாரலையே மறந்தே போனது !!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS