என்னவளின் புகைப்படம்......



நேற்று முழுவதும் கம்பெனியில் அதிகப்படியான வேலை..வீட்டிற்கு எப்படா போவோம் என்றாகிவிட்டது.வழக்கம்போல் போகும் போது எனது நண்பர்களுடன் கலாய்த்துக்கொண்டே வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன்.நாங்கள் தற்போது அதிகமாக பேசுவது ஐ.பி.எல்.தொடரைப்பற்றிதான்.வீட்டிற்கு சென்ற போது இரவு 10.00 மணி.சரி சாப்பிடும் என அமர்ந்தால்..

வீட்டிலே ஒரே குப்பையா கெடக்குது அதையெல்லாம் கொஞ்சம் நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்து ஒதுக்கிவையேன்டா என என் அம்மா இதுவரை ஓராயிரம் சொல்லியிருக்கிறார்கள்.இதுவரை நான் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டதில்லை..
திடீரென எனது இதழ் 'என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்'என்ற பாடலை முனுமுனுத்தது.சரி இன்றாவது ஒதுக்கி வைப்போம் என தயாரனேன்.என் அம்மா கூறிய குப்பைகள் அனைத்தும் என் பழைய நினைவுகள்.ஆம் என் பாடப்புத்தகங்கள்.ஒவ்வொரு பாடப்புத்தகத்தையும் எடுத்து என் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தேன்....

சில கிறுக்கல்கள்..சில கவிதைகள்.என ஒவ்வொரு பக்கமும் எனது வரலாற்றை நினைவு கூறியது.எனது இன்பம்,துன்பம் போன்றவற்றை சிறிதவளவு அந்த புத்தகங்களும் கண்டிருக்கின்றன.அப்படி பார்த்துக்கொண்டிருக்கையில் நான் கண்ட கவிதை என் புத்தகத்தில்..படிக்கின்ற காலத்தில் அக்கவிதை எனக்கு மிகவும் படிக்கும்.

'ரோஜா இதழ் என்று
முத்தம் கொடுத்தேன்..
உதட்டில் இரத்தம்..
முள் பட்டு..'

அதைக்கண்டவுடன் என்க்குள்ளாக ஒரு சிரிப்பு.இரவு 11 ஆகிவிட்டது.என் அம்மா உறங்கிவிட்டார்கள்..எனக்கு ஏனோ உறக்கம் வரவில்லை..திடீரென எதையோ தேடுவது போல் மிகவும் பரபரப்பாக தேடினேன்..கிடைக்கவில்லை.நானும் மனம் தளராமல் என் தேடலை தொடர்ந்தேன்.யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்த பொருள், இல்லை பரிசு,இல்லை அது ஒரு ஓவியம்.எப்படி சொல்வேன்.எத்தனை முறை பார்த்திருப்பேன்,ரசித்திருப்பேன்.

கிடைத்தது அந்த ஓவியம்.அதுதான் என் முதல் காதலியின் புகைப்படம்.இரவு 12.00 மணி எனது வீட்டு தொலைக்காட்சியினில் 'மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ'என்ற பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.வாழ்வினில் ஏதோ சாத்தித்தவனை போல் காணப்பட்டேன்.என்னை நானே கண்ணாடியில் ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன்.அவ்வளவு அழகாக இருந்தேன்,அவள் புகைப்படத்தை கையில் வைத்திருப்பதனால்..அவளுடன் பழகிய நாட்களை இந்த ஒரு பதிவில் சொல்லி விட முடியாது.எனவே அதனை அடுத்த பதிவினில் இடுகிறேன்..

டிஸ்கி:-என்னுடைய முதல் காதலி என்று கூறியிருப்பதால் இப்போது எத்தனை பேர் என்றெல்லாம் கேட்கக்கூடாது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

38 பின்னூட்டங்கள்:

கார்த்திகைப் பாண்டியன் said...

2009 - ஒரு லவ் ஸ்டோரியா.. நடத்து நடத்து..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வாழ்வினில் ஏதோ சாத்தித்தவனை போல் காணப்பட்டேன்.என்னை நானே கண்ணாடியில் ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன். அவ்வளவு அழகாக இருந்தேன்,அவள் புகைப்படத்தை கையில் வைத்திருப்பதனால்..//

இப்படி எல்லாம் வேறவா.. இதுல தொடரும் வேற.. சீக்கிரமா அடுத்த பாகத்த எழுது அன்பு..

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

2009 - ஒரு லவ் ஸ்டோரியா.. நடத்து நடத்து..\\

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தல..

கதை எப்படியிருக்கு என்று சொல்லவே இல்லை

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

//வாழ்வினில் ஏதோ சாத்தித்தவனை போல் காணப்பட்டேன்.என்னை நானே கண்ணாடியில் ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன். அவ்வளவு அழகாக இருந்தேன்,அவள் புகைப்படத்தை கையில் வைத்திருப்பதனால்..//

இப்படி எல்லாம் வேறவா.. இதுல தொடரும் வேற.. சீக்கிரமா அடுத்த பாகத்த எழுது அன்பு..\\


கண்டிப்பாக அண்ணா.சீக்கிரம் எழுதுகிறேன்..

Karthik said...

//'என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்'என்ற பாடலை முனுமுனுத்தது.சரி இன்றாவது ஒதுக்கி வைப்போம் என தயாரனேன்

ha..ha. en room um ippadi thaan irukku. nice writing anbu.
:)

ur ex is cho chweet! lol.

Anbu said...

\\Karthik said...

//'என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்'என்ற பாடலை முனுமுனுத்தது.சரி இன்றாவது ஒதுக்கி வைப்போம் என தயாரனேன்

ha..ha. en room um ippadi thaan irukku. nice writing anbu.
:)

ur ex is cho chweet! lol.\\

நன்றி சகா..வருகைக்கும் கருத்துக்கும்

Suresh said...

//'என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்'என்ற பாடலை முனுமுனுத்தது.சரி இன்றாவது ஒதுக்கி வைப்போம் என தயாரனேன்//

அம்மா சொன்னா கேட்காமா பிகர்க்காக ஹ்ம்ம்ம் நடத்து

Suresh said...

//'ரோஜா இதழ் என்று
முத்தம் கொடுத்தேன்..
உதட்டில் இரத்தம்..
முள் பட்டு..'/

டேய் அப்பவே கவிஞன் டா நீ :-)
ஹ அஹ பாடத்தை படிக்காம நாங்களும் படம் வரைச்சு கவிதை எழுதி டீச்சர் படிச்சு ... ஞாபகம் வருதே

Anbu said...

\\\Suresh said...

//'என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்'என்ற பாடலை முனுமுனுத்தது.சரி இன்றாவது ஒதுக்கி வைப்போம் என தயாரனேன்//

அம்மா சொன்னா கேட்காமா பிகர்க்காக ஹ்ம்ம்ம் நடத்து\\\

சும்மாதான் தல..அந்த பாடல் எனக்கு மிகப்பிடித்த பாடல் அதான்

Suresh said...

/என் முதல் காதலியின் புகைப்படம்.இரவு 12.00 மணி எனது வீட்டு தொலைக்காட்சியினில் 'மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ'என்ற பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.//

Night 12 manikku athai poi pakura chinna payana nee ha ha night 12 mani vara thungama enna polapu ithu

Anbu said...

\\Suresh said...

//'ரோஜா இதழ் என்று
முத்தம் கொடுத்தேன்..
உதட்டில் இரத்தம்..
முள் பட்டு..'/

டேய் அப்பவே கவிஞன் டா நீ :-)
ஹ அஹ பாடத்தை படிக்காம நாங்களும் படம் வரைச்சு கவிதை எழுதி டீச்சர் படிச்சு ... ஞாபகம் வருதே\\\


எல்லோருக்கும் அதே ஞாபகங்கள் தான்

Suresh said...

//ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன்.அவ்வளவு அழகாக இருந்தேன்,அவள் புகைப்படத்தை கையில் வைத்திருப்பதனால்///

manasachi thottu sollu huh sari antha ponu photo irukunu solli thabachita

Anbu said...

\\Suresh said...

/என் முதல் காதலியின் புகைப்படம்.இரவு 12.00 மணி எனது வீட்டு தொலைக்காட்சியினில் 'மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ'என்ற பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.//

Night 12 manikku athai poi pakura chinna payana nee ha ha night 12 mani vara thungama enna polapu ithu\\\

இது ஒரு சுகமான அனுபவம் தல!

Suresh said...
This comment has been removed by the author.
Suresh said...

Machan unnoda mothal kathali yaru unga mummy a.. yena enn amma than enaku muthal kathal...
u have some dappu suspense tomm

Anbu said...

\\Suresh said...

Machan unnoda mothal kathali yaru unga mummy a.. yena enn amma than enaku muthal kathal...
u have some dappu suspense tomm\\

பொறுத்திருந்து பாருங்க தல....

பாலகுமார் said...

nice writing, anbu ....

ச.பிரேம்குமார் said...

என்னது இது கதையா? ஓ மை காட்...........

RAMYA said...

ஹாய், தம்பி சொந்த கதையா ??
நல்லா இருக்கு??

கண்ணாடியில் அவ்வளவு அழகாவா இருந்தீங்க தம்பி.

கையிலே இருக்கிற போட்டோ வேலை செய்யுது :-)

சந்தோஷமா இருந்தா சரி, எங்களுக்கும் சந்தோஷமே :-)

RAMYA said...

தொடருமா? அது சரி
Treat எப்போ தம்பி :))

Anbu said...

\\பாலகுமார் said...

nice writing, anbu ....\\

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

Anbu said...

\\பிரேம்குமார் said...

என்னது இது கதையா? ஓ மை காட்...........\\

இது கதையல்ல நிஜம் அண்ணா

Anbu said...

\\\RAMYA said...

தொடருமா? அது சரி
Treat எப்போ தம்பி :))\\

விரைவில் அக்கா

வேத்தியன் said...

'ரோஜா இதழ் என்று
முத்தம் கொடுத்தேன்..
உதட்டில் இரத்தம்..
முள் பட்டு..'

ஆஹா கவிதை அருமையா இருக்கே...
:-)

வேத்தியன் said...

அதுதான் என் முதல் காதலியின் புகைப்படம்.//

இப்போ எங்கே???
:-)
காதல் வாழ்க...

வேத்தியன் said...

அவ்வளவு அழகாக இருந்தேன்,அவள் புகைப்படத்தை கையில் வைத்திருப்பதனால்..//

ஆஹா
என்னா அனுபவம்???
அபிராமி அபிராமி...

வேத்தியன் said...

அடுத்த பதிவை டக்குனு போடுப்பா...
ஆவலா இருக்கு...
:-)

வழிப்போக்கன் said...

'ரோஜா இதழ் என்று
முத்தம் கொடுத்தேன்..
உதட்டில் இரத்தம்..
முள் பட்டு..'//

ஹ்ம்ம்...
அழகான வரிகள்...

வழிப்போக்கன் said...

டிஸ்கி:-என்னுடைய முதல் காதலி என்று கூறியிருப்பதால் இப்போது எத்தனை பேர் என்றெல்லாம் கேட்கக்கூடாது.//

எல்லாரும் ர்ரொம்ப அலர்ட்டா தான் இருகீங்க....
:)))

வழிப்போக்கன் said...

வீட்டிலே ஒரே குப்பையா கெடக்குது அதையெல்லாம் கொஞ்சம் நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்து ஒதுக்கிவையேன்டா என என் அம்மா இதுவரை ஓராயிரம் சொல்லியிருக்கிறார்கள்//

இப்ப புரியுதா???
அம்மா எல்லாம் நல்லதற்கு தான் சொல்லுவாங்கன்னு...(அதனால் தானே இவ்வளவு சந்தோஷம்???)
:))))

Anbu said...

\\வேத்தியன் said...

அடுத்த பதிவை டக்குனு போடுப்பா...
ஆவலா இருக்கு...
:-)\\\

நன்றி தல..வெகு விரைவில் போட்டிருவோம்

Anbu said...

\\வழிப்போக்கன் said...

வீட்டிலே ஒரே குப்பையா கெடக்குது அதையெல்லாம் கொஞ்சம் நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்து ஒதுக்கிவையேன்டா என என் அம்மா இதுவரை ஓராயிரம் சொல்லியிருக்கிறார்கள்//

இப்ப புரியுதா???
அம்மா எல்லாம் நல்லதற்கு தான் சொல்லுவாங்கன்னு...(அதனால் தானே இவ்வளவு சந்தோஷம்???)
:))))\\

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

Raju said...

\\அவ்வளவு அழகாக இருந்தேன்,\\
அப்படியா..?
சொல்லவே இல்ல..!
என்னா ஒரு கொலை வெறி..!
நல்லாத்தான போயிக்கிட்டு இருந்துச்சு..!
என்னா உனக்கும் ஒரு கண்டன பதிவு போடனுமா?
(ச்சும்மா டமாஷூ..)

அடுத்த பார்ட்டுக்காக ஆவலுடன் வெயிட்டிக்கிட்டுருக்கேன்..

குமரை நிலாவன் said...

ம்ம்ம் கலக்குங்க... கலக்குங்க ...

சொல்லரசன் said...

//கிடைத்தது அந்த ஓவியம்.அதுதான் என் முதல் காதலியின் புகைப்படம்.//

மற்றதுயெல்லாம் எப்ப வரும் தம்பி

Happy Smiles said...

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com

அகநாழிகை said...

அன்பு,
இது கதையா அல்லது நிஜமாக நடந்ததா ?
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

sakthi said...

'ரோஜா இதழ் என்று
முத்தம் கொடுத்தேன்..
உதட்டில் இரத்தம்..
முள் பட்டு..'

அருமை