நம்பிக்கை..!!(சிறுகதை போட்டிக்காக..)

அந்தத் தெருவாசிகளின் இயல்பு வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காத அந்த தெருக்குப்பை கண்ணனை மட்டும் என்னவோ செய்தது.

தன் வீட்டு முற்றத்தில் நின்று பல்துலக்கிக் கொண்டே தெருவினை நோட்டமிட்டான்.முதல் வீடான ஆடிட்டர் வீட்டிலிருந்து ஒரு இருபது உள்ளடக்கியது அந்த தெரு.அதிகாலை நேரத்திலேயே அனைத்து வீடுகளின் முற்றங்களிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு கோலம் வரையப்பட்டிருந்தது.

ஆனால் முற்றங்கள் தவிர்த்த அந்த நடைபாதை ஒரு இருபதடி நீளத்துக்கு சுத்தம் செய்யப்படாமல் தூசியும் குப்பைகளுமாய் இருந்தது.அந்தப்பாதையிலே தான் அனைவரும் போய் வந்து கொண்டிருந்தார்கள்.யாருக்குமே அதை சுத்தம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றவில்லை.அப்படியிருக்க தனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறதென்று தன்மேலேயே எரிச்சல் கூட வந்தது கண்ணனுக்கு..

தன் வீட்டு வாசலில் சின்ன அடுப்பு வைத்து பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தாள் கண்ணனின் அக்கா.தண்ணீர் பிடித்துக் கொண்டும் சமையல் செய்து கொண்டும் குறுக்கும் நெருக்குமாய் நடந்து கொண்டிருந்தாள் கண்ணனின் மனைவி.

வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணனை பார்த்து கேலியாய் சிரித்தபடி "என்னடா இன்னிக்கு தெருவை சுத்தம் பண்ணலியா"என்றாள் அக்கா

அதைத்தான் செய்யப்போகின்றேன்.நான் இரண்டு நாள் ஊரில் இல்லை அதுக்குள்ள எவ்வளவு குப்பையாப் போச்சு நம்ம தெரு.நான் இல்லைன்னா யாராச்சும் பெருக்குவாங்கன்னு நினைச்சேன்..

ம்ம்..அதைப்போயி யாரு பெருக்கிட்டு இருப்பா?..வேற வேலை இல்லையாக்கும்.என்றாள் மனைவி..

எனக்கு மட்டும் வேற வேலையில்லையா என்ன?..

உங்களை யாரு அதை எல்லாம் செய்ய சொன்னா?...பேசாமா இருக்க வேண்டியதுதானா...

என்னால் அப்படியிருக்க முடியவில்லை. அதைப்பார்க்கும் போதெல்லாம் அது வெறும் குப்பையாக மட்டும் தெரியவில்லை.நம்முடைய அலட்சியத்தையும்,பொறுப்பின்மையும்,புறக்கணிப்பையும் எதிரொலிக்கின்ற பொருளாகத்தான் தெரிகின்றது.

உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..நடந்து போகின்றவர்களெல்லாம் மனுஷன் இல்லை..

பிள்ளைங்க எல்லாம் எந்திருச்சிட்டாங்களா?... இல்லையா?..

எல்லாரும் எந்திருச்சாச்சு.உள்ள வாங்க..காபித்தண்ணி குடிச்சிட்டு எங்க வேணாலும் போங்க..

நம்ம மக ஸ்கூல்ல படிக்க வேற செய்றா..அவளாச்சும் அந்த இடத்தை சுத்தம் பண்ணலாம்..

அப்பா..என்னை ஏன் வம்புக்கு இழுக்குற..இப்ப சுத்தம் பண்ணா அப்படியே இருக்கப் போகுதா?..

எதையாவது சொல்லி தட்டிக் கழிச்சிடுங்க..அவங்க அவங்க பயன்படுத்துற வீடு மட்டும் எவ்வளவு அழகாக இருக்கு.ஆனா நிறையப்பேரு பயன்படுத்துற இந்தப்பாதை மட்டும் ஏன் இப்படி இருக்கணும்?..

சொன்ன வேகத்திலேயே ஒரு துடைப்பத்தையும் அட்டையும் எடுத்துட்டுப்போய் தெருவை சுத்தம் செய்து அந்தக் குப்பையை அள்ளி ஒரு குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வந்தான் கண்ணன்..

"இப்ப நிம்மதியாக்கும் உங்களுக்கு" என்றாள் மனைவி

என்னமோ தெரியவில்லை..எனக்கு அந்த நடைபாதையை பார்க்கும் போதெல்லாம் அது என்கிட்டே மட்டும் ஏதோ சொல்ற மாதிரி இருக்கு..

அது என்னவென்று சொல்லட்டுமா அப்பா..வீட்டுக்குள்ளே இருந்து காபி தம்ளரை கையில் பிடித்தபடி வந்தான் மூத்த மகன்...

என்ன? என்றான் கண்ணன்..

"ஒரு ஆளு பயன்படுத்துற வீடு நல்லா இருக்கும்..நிறைய பயன்படுத்துற நான் எப்படி இருக்கேன்னு பார்த்தியா?"என்னைப் போலத்தான் நீயும்.."நாலு பிள்ளைங்க இருந்தாலும் யாரும் உன்னைக்கவனிக்க மாட்டாங்க" என்று சொல்லி இருக்கும்..நான் சொல்றது சரியா அப்பா?

"மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டானே"..என்று மகனை வியப்பால் பார்த்தபடி நின்றான் கண்ணன்..

நீ ஒன்னும் கவலைப்பட தேவையில்லை அப்பா..நாங்க அப்படியெல்லாம் உங்களை கவனிக்காம விட்டுவிட மாட்டோம்.

அதை எப்படிடா நம்புவது?

சரி..நாளையிலேருந்து நாங்களே இந்த தெருவை சுத்தம் பண்ணுகிறோம் போதுமா?

ம்ம்..இப்ப தாண்டா உங்க மேல எனக்கு நம்பிக்கை வருது.

உங்களை வயசான காலத்துல நல்லா கவனிப்போம் என்றா..

இல்லைடா..நாட்டில் உள்ள பொதுச்சொத்தை நம்ம சொத்தா நினைச்சு பாதுக்காக்கிற யாருமே குடும்பத்தையும் நல்லா கவனிச்சிப்பாங்க..ஒவ்வொரு குடும்பமும் நல்லா இருந்தா இந்த நாடு என்ன உலகமே நல்லா இருக்கும்..என்றான் கண்ணன்..அவர் குரலில் திருப்தியோடு நம்பிக்கையும் ஒலித்தது..

{'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது }

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

39 பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

RAMYA said...

ஹாய்!

கதை ரொம்ப நல்லா இருக்கு.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

*இயற்கை ராஜி* said...

கதை நல்லா இருக்கு
வெற்றி பெற வாழ்த்துகள்:-)

நட்புடன் ஜமால் said...

அப்படியிருக்க தனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறதென்று தன்மேலேயே எரிச்சல் கூட வந்தது கண்ணனுக்கு..\\

சரியான நிலை.

இதை உணர்ந்து இருக்கேன்

நட்புடன் ஜமால் said...

எனக்கு அந்த நடைபாதையை பார்க்கும் போதெல்லாம் அது என்கிட்டே மட்டும் ஏதோ சொல்ற மாதிரி இருக்கு..\\

அட ...

வால்பையன் said...

ஆனந்த விகடனுக்கே தகுதியான கதை!

உங்க தெருவை சுத்தம் பண்ணியாச்சா!

மொழி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Anbu said...

\\நட்புடன் ஜமால் said...

வெற்றி பெற வாழ்த்துகள்\\

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\ RAMYA said...

ஹாய்!

கதை ரொம்ப நல்லா இருக்கு.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!\\

வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா

வியா (Viyaa) said...

வெற்றி பெற வாழ்த்துகள்
கதை ரொம்ப நல்லா இருக்கு

Anbu said...

\\இய‌ற்கை said...

கதை நல்லா இருக்கு
வெற்றி பெற வாழ்த்துகள்:-)\\

வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா

Anbu said...

\\வால்பையன் said...

ஆனந்த விகடனுக்கே தகுதியான கதை!

உங்க தெருவை சுத்தம் பண்ணியாச்சா!\\

இன்னும் பண்ணவில்லை வால்
உதவிக்கு ஆட்கள் வேண்டும்
வர்ரீங்களா

Anbu said...

\\மொழி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...\\

வாழ்த்துக்களுக்கு நன்றி

Anbu said...

\\\வியா (Viyaa) said...

வெற்றி பெற வாழ்த்துகள்
கதை ரொம்ப நல்லா இருக்கு\\

வாழ்த்துக்களுக்கு நன்றி வியா

அக்னி பார்வை said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Anbu said...

\\அக்னி பார்வை said...

வெற்றி பெற வாழ்த்துகள்\\

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா

Raju said...

Raittu..
vazthukkal...
:)

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் தம்பி....

ஆ.ஞானசேகரன் said...

//நாட்டில் உள்ள பொதுச்சொத்தை நம்ம சொத்தா நினைச்சு பாதுக்காக்கிற யாருமே குடும்பத்தையும் நல்லா கவனிச்சிப்பாங்க..ஒவ்வொரு குடும்பமும் நல்லா இருந்தா இந்த நாடு என்ன உலகமே நல்லா இருக்கும்..என்றான் கண்ணன்//

நல்ல நோக்கதிற்கான கதை நல்லாவே இருக்கு நண்பா

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

கதையின் கரு அருமை - சொல்லப்பட்ட விதமும் நன்று. வெற்றி பெற நல்வாழ்த்துகள்

உதவிக்கி ஆள் வேண்டுமானால் நான் வருகிறேன் அன்பு - வாலும் வரட்டும்

கார்த்திகைப் பாண்டியன் said...

சமூக உணர்வுடன் கூடிய நல்ல கதை அன்பு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)

Anbu said...

\\டக்ளஸ்....... said...

Raittu..
vazthukkal...
:)\\

நன்றி தல..

Anbu said...

\\ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் தம்பி....\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\cheena (சீனா) said...

அன்பின் அன்பு

கதையின் கரு அருமை - சொல்லப்பட்ட விதமும் நன்று. வெற்றி பெற நல்வாழ்த்துகள்

உதவிக்கி ஆள் வேண்டுமானால் நான் வருகிறேன் அன்பு - வாலும் வரட்டும்\\

வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா..
கண்டிப்பாக வாங்க ஐயா

பாலகுமார் said...

அன்பு,
நல்ல மெஸேஜ், வாழ்த்துக்கள் !

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

சமூக உணர்வுடன் கூடிய நல்ல கதை அன்பு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)\\

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\பாலகுமார் said...

அன்பு,
நல்ல மெஸேஜ், வாழ்த்துக்கள் \\

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை,வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சுந்தர் said...

சமுதாய உணர்வினை அருமையாக வெளிபடுதியுள்ளாய் தம்பி, வாழ்த்துக்கள் வென்று விட்டாய்.

நையாண்டி நைனா said...

நல்ல கதை...

(இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும் இதுக்கு மேலே நோ கமண்ட்ஸ்.... பை பை சி யு )

குமரை நிலாவன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ராம்.CM said...

வெற்றி பெற வாழ்த்துகள்...

Anbu said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா...

@ஸ்ரீதர்

@தேனீ - சுந்தர்

@நையாண்டி நைனா

@குமரை நிலாவன்

@ராம்.CM

Cable சங்கர் said...

நல்ல கருத்துள்ள கதை.. அன்பு.. பரிசு பெற வாழ்த்துக்கள்.

Subankan said...

கதை நல்லா இருக்கு.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Anonymous said...

Pathetic. Your story stinks.

Anbu said...

நன்றி கேபிள் சங்கர் அண்ணா

நன்றி சுபாங்கன்

நன்றி அணானி

Anonymous said...

Good Story Boss...
Advance Wishes

Kalpagam said...

நல்ல கதை! ஆனால் தொடர்பு படுத்திய விதம் மட்டும் ஒட்டவில்லை... அதனால் என்ன, கதையின் கரு போதுமே!

சமூக அக்கறைக்கு வாழ்த்துகள்!