கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-3)


நகைச்சுவை:-
அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா?
மகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..
எழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..

பிகரோட கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடியதின் அருமை
பிகரோட அண்ணன் வீடு கட்டி அடிக்கும் போதுதான் தெரியும்..

காதலி:ஏங்க வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பீங்களா என்று என் அப்பா கேட்டார்
காதலன்:உங்க அப்பா-விற்காக இல்லாவிட்டாலும் உன் தங்கைச்சிக்காகவது இருக்கேன்டா செல்லம்..

நர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்
உறவினர்கள்:எப்படி?
நர்ஸ்:டாக்டர் வீட்டுக்கு போயிருப்பாரு!!

மாணவன்:சார்,இங்க பாருங்க என் தலையிலே எறும்பு ஊருது
ஆசிரியர்:அதை ஏன்டா என்கிட்டே சொல்றே?
மாணவன்:நீங்க தான சொன்னீங்க என் தலையிலே எதுவுமே ஏறாது என்று!!

ஆசிரியர்:காந்தி ஜெயந்தி குறிப்பு வரைக:-
மாணவன்:காந்தி ஒரு மிகச்சிறந்த மனிதர்.
ஜெயந்தி ஒரு சூப்பர் பிகர்.
ஒரு நாள் காந்தி ஜெயந்தியிடம் தன் காதலை சொன்னார்.
அந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படிகிறது.

ஆசிரியர்:ஏன்டா என் மேல சைக்கிள்ல மோதின?
மாணவன்:பிரேக் பிடிக்கலை சார்.
ஆசிரியர்:இதோ பிரேக் பிடிக்குதே!
மாணவன்:இல்லைச சார் நான் தான் பிரேக் பிடிக்கலை

அப்பா:என்னம்மா தினமும் மூன்று மணி நேரம் போன்ல பேசுவாய்.
இன்னைக்கு ஒரு மணி நேரத்திலே வைச்சுட்டே.
மகள்:ராங் ரம்பர் அப்பா அதான்!

அவள் என்னை திரும்பி பார்த்தாள்
நானும் அவளை பார்த்தேன்.
அவள் மறுபடியும் பார்த்தாள்
நானும் பார்த்தேன்

இரண்டு பேருக்குமே பரிட்சையிலே பதில் தெரியலை..

டீ.ஆர்.பஞ்ச் வசனங்கள்:
நாம அடிச்சா மொட்டை
அதுவா விழுந்தா அது சொட்டை

யானை மேலே நாம உக்கார்ந்த சவாரி
யானை நம்ம மேலே உக்கார்ந்த ஒப்பாரி

கவிதைகள்:-

கண்ணீர் விட்டுக் கொண்டே இருப்பேன்
நீ அணைக்கும் வரை

இப்படிக்கு
மெழுகுவர்த்தி

இந்த உலகத்தில் பல இதயங்கள் துடித்தாலும்
உனக்காக மட்டுமே துடிக்கும் ஒரே இதயம்

உன் இதயம் மட்டுமே!!

அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்
கன்னத்தில் குழி விழுந்தது.
நான் அவளைப் பார்த்து சிரித்தேன்.
என் வாழ்க்கையிலேயே குழி விழுந்தது..

காதலுக்கு கண் இல்லை-அன்று
காதலிக்க உண்மையான பெண்ணில்லை இன்று

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

முதல் காதல் கடிதம் !!!

அது ஒரு மாலை நேரப்பொழுது.மாலை 6.00 மணி இருக்கும் என நினைக்கிறேன்.சென்னை மெரினா கடற்கரையில் நான் தனியாக சென்று கொண்டிருந்தேன்.என்னுடைய வாக்மேனில் 'அன்பே என் அன்பே'என்ற பாடல் கேட்டவாறே சென்று கொண்டிருந்தேன்.அருமையான் பாடல் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் என்னை மறந்து சென்று கொண்டிருந்தேன்.

அழகான கடற்கரை,ஓய்வில்லாத அலையின் ஓசைகள்,ஆங்காங்கே சுண்டல் விற்கும் வண்டிகள்,அதை வாங்கி சாப்பிடுவோமா வேண்டாமா என்று கடலை போட்டு கொண்டிருக்கும் காதலர்கள்,சிலர் காதலனுக்காகவும் சிலர் காதலிக்காகவும் காத்துக்கொண்டிருந்தார்கள்.ஒரு சிலர் தொலைபேசி உரையாடலுடன்..

இவை அனைத்தையும் பார்க்கும் போதே என் மனதில் ஒரு நெருடல். இதில் வாக்மேனில் காதல் பாடல் வேறு.போதுமடா சாமி என்று கடற்கரையை விட்டு வெளியேற நினைக்கையில் எனது காலின் கீழே ஒரு பேப்பர் கிடந்தது. அது ஒரு காதல் கடிதம்:-
அன்புள்ள காதலிக்கு உன் முன்னால் காதலன் எழுதுவது.நீ இங்கு நலம் நான் அங்கு நலமா?..உனக்குத் தெரியுமா இதே நாள் (பிப்ரவரி 21) இந்த கடற்கரையில் தாம் நாம் முதன் முதலில் சந்தித்தோம்.இந்த கடற்கரையில் தான் உன்னுடைய முதல் காதல் கடிதத்தை கொடுத்தாய்.மூன்று வருடங்கள் கழித்து கொடுத்தாய் உன் திருமண பத்திரிக்கையை..

மூன்று வருடங்கள் சொர்க்கத்தில் இருந்தேன் என்றே சொல்லலாம். இன்றும் சொர்க்கத்தில் தான் இருக்கிறேன்..உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே!!

நானும் நீயும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த கடற்கரைக்கு வருவோம் ஞாபகமிருக்கிறதா? இன்று நான் மட்டும் தனியாக..இல்லை இல்லை என்னை மாதிரி தனி ஆளாக மாற எத்தனையோ இளைஞர்கள் இருப்பதைக் கண்டு எனக்கே ஒரு சிரிப்பு..

நானும் ஒவ்வொரு வாரமும் வந்து இந்த மாதிரி கடிதம் எழுதி வைத்து விட்டு செல்கிறேன்.என்றாவது ஒரு நாள் உன் கணவருடன் வந்து அதை நீ படிக்க மாட்டாயா? என்ற எண்ணம்..

உன்னோடு பழகிய அத்தனை நிகழ்வுகளையும் எழுதிவிட ஆசையாகத்தான் உள்ளது.ஆனால் அதை எழுதும் முன் என்னுடைய இன்றைய காதலி வந்து விடுவாளோ என்கிற பயம்தான்.என்ன இருந்தாலும் என்னுடைய முதல் காதலை மறக்க முடியவில்லை.'எங்கிருந்தாலும் வாழ்க'என்றும் உன் நினைவுடன் நான்!!

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கொஞ்சம் சிரிப்பு!கொஞ்சம் தத்துவம்!கவிதை! (பார்ட்-2)


நகைச்சுவை:

காதலி:என்கிட்ட உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?
என்னோட அழகான முகமா?
அன்பான மனமா?
பணிவான குணமா?
காதலன்:உன்னோட இந்த காமெடி தான்!!!

முதியவர்:சார் என்னோட அறுபதாம் கல்யாணத்திற்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும்..
போலிஸ் அதிகாரி:யாருக்கு நீங்க பயப்படுறீங்க?
முதியவர்:என்னோட 59 பொண்டாட்டிகளுக்கும் தான்!!

கடற்படை தலைவன்:கரை தெரியுது.கரை தெரியுது.
சர்தார்:சர்ப்-எக்ஸெல் போடுங்க.அந்த கரை இந்த கரை எல்லா கரையும் போயிடும்..

கொசு:அம்மா நான் சினிமாக்கு போறேன்.
அம்மா கொசு:வேண்டாம் யார் கையிலயாவது சிக்கி சின்னாபின்னமாகிடப்போற..
கொசு:பயப்படதீங்க அம்மா.நான் அஜித் படத்துக்கு தான் போறேன்.
அம்மா கொசு:அதுக்கு நீ யார் கையில் ஆவது சிக்கி உயிரையே விட்டு
விடலாம்.

தத்துவம்:


வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....
தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை......
தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம்....
(ஏகன் படம் வெளியான பிறகு அஜித் கூறிய தத்துவங்கள்)
(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

இன்னிக்கு இருக்கிற மீன் நாளைக்கு கருவாடாக மாறலாம்...
இன்னிக்கு இருக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டு குழம்பாக மாறமுடியுமா..?

அவளை காண்பதற்கு நான் பட்ட கஷ்டங்கள் கோடி..
அவளை கண்ட பின் நான் பட்ட நஷ்டங்கள் தாடி...

கவிதை:

பலருக்கு விருப்பம் உண்டு
உன்னை அடைய
எனக்கு மட்டுமே உரிமை உண்டு
உன்னை காக்க
'மலரே'
இப்படிக்கு
'முள்'

உங்களுக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் பின்னூட்டம் இடுங்கள்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்!! கவிதை

நகைச்சுவை
காதலிக்கிட்டேயும் மனைவிகிட்டேயும் எதை மறைக்க வேண்டும்?
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்!!

அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!

ராமு:ஹோட்டல்ல சாப்பிட்டு பார்க்கிறேன்.கையில காசு இல்லை
சோமு:அய்யோ!!அப்புறம்
ராமு:அப்புறம் என்ன பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தேன்!!

அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??

டாக்டர்:உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு
சர்தார்:என்ன கொடுமை டாக்டர் இது..?நான் என் கிட்னியை படிக்க வைக்கவே இல்லை!!அது எப்படி பெயில் ஆகும்!!

ஆசிரியர்: உலகத்தை முதலில் சுற்றி வந்தது யாரு?
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!!

ஆசிரியர்:ஏன் இவ்வளவு லேட்?
மாணவி:ஒரு பையன் என்னை பாலோ பண்ணிக்கிட்டே வந்தான் டீச்சர்
ஆசிரியர்:அதனால என்ன
மாணவி:அவன் ரொம்ப மெதுவாக நடந்து வந்தான் டீச்சர்!

கண்ணு கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பயன்?
குருவி செத்த பிறகு வில்லு விட்டு என்ன பயன் ??

மிக உயரமாக தாவக்கூடிய மிருகங்கள்:
பூனை :3.7மீ
நாய் : 4 மீ
கழுதை :6 மீ
குரங்கு :14.9 மீ
விஜய் : வானம் 35000 கி.மீ

வடிவேல் : நான் தான் பெரிய காமெடியன்
விவேக் : இல்லை நான் தான் உன்னை விட பெரிய காமெடியன்
கருணாஸ்: மெதுவாக பேசுடா மச்சான் பக்கத்துல அஜித் இருக்கார்!!

கவிதை
உனக்காக நான் துடிக்கிறேன்
ஆனால் நீ
என்னை தவிர யார் யாரையோ நினைக்கிறாய்
இப்படிக்கு
'இதயம்'

தத்துவம்
என்ன தான் பொண்ணுங்க கலரா இருந்தாலும் அவங்க நிழல் கருப்பாகத் தான் இருக்கும்!
என்ன தான் பசங்க கருப்பாக இருந்தாலும் அவங்க மனசு வெள்ளையாகத் தான் இருக்கும்!

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS