Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

உன்னைத்தவிர...


உன் தலையில் இருந்து
தவறி விழுந்த ஒற்றை முடி..

அந்த முடியில் குடி கொண்டிருந்த
சொர்க்கத்தை அடைந்த பூக்கள்...

உனக்கே தெரியாமல் உன்னிடம்
இருந்து களவாடிய ஹேர்-கிளிப்...

நீ முகம் துடைக்கையில் விழுந்த
ஸ்டிக்கர் பொட்டு...

கீழே விழுந்து நொறுங்கி போன
வளையல் துண்டுகள்..

நீ ஆசையாய் சாப்பிடும்
டைய்ரிமில்க் சாக்லெட் கவர்...

மை இல்லை என அலட்சியமாய் - நீ
தூக்கி எறிந்த பேனா...

உன் கழுத்தில் இன்பவேதனையை அனுபவித்து
அறுந்து விழுந்த பாசிமணி...

நீ அடிக்கடி வெட்டி கீழே போடும்
நகத்துண்டுகள்...

இவை அனைத்தும்
உன் நினைவுகளாய்
என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன...

உன்னைத்தவிர...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் கடிதங்கள்...


கனவே கனவே

என் கனவெல்லாம் நீயே...

அசுரனே வந்தாலும்
அசராத என்னை
சிறு புன்னைகையாலே
வெட்டி சாய்த்தாய்...

நீ நடக்கும் வீதியில்
தூசியே இருக்காது
நீ வருவாய் என்று
நூறு முறை
நான் கடந்து போவதால்...

நீ இருக்கும் இடத்தில்
வெயில் இருக்காது
நிழலாய் உன்னை
நான்
தொடருந்து வருவதால்...

நீ தூக்கி ஏறியும்
குப்பைக்குக்கூட
கால் இருக்கிறது
என் அறையில் எப்படியோ
அது குடி புகுவதால்...

என் வீட்டு கண்ணாடி
பொய் சொல்கிறது
அதில்
என்னைக் காணாமல்
உன்னைக் காண்பதால்

உன் பார்வை தூண்டிலில் தவிக்கும் மீன் நான்
ஆனால் இன்னும்
தூண்டிலைத்தான் காதலிக்கிறேன்

என்னைத் துண்டு
துண்டாக்கிவிட்டு நீயோ
தூரமாய் போகிறாய்...

தூக்கத்தைத் தொலைத்து நான்
திருடனாய் விழிக்க
உன்னிடம் கொடுக்காத
என் காதல் கடிதங்கள் மட்டும்
சுகமாய் தூங்குகின்றன
என் படுக்கை அறையில்...!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் காதலியின் பரிசுபொருள்

ஏதேதோ பேசிய பிறகு
இறுதியாய் கேட்டாய்..
நாளை என்ன நாளென்று..

அதை நீ சொல்லி நான்
கேட்க வேண்டும் என்பதற்காக
அமைதியாய் இருக்க..

சிறிது நேர மௌனத்திற்கு
பின் சொன்னாய்...
நம் காதலின் முதலாம் ஆண்டு
நிறைவு தினமென்று..

அப்போது தான் புரிந்து கொண்டவன் போல சிரிக்க..

நாளை என்ன பரிசு தருவாய் என்றாய்?

பதிலுக்கு நீ என்ன தருவாய் என்றேன்...

பதில் சொல்லவில்லை - சொன்னாய்
நீ கொண்டு வரும் பரிசு என் வாழ்நாளில் நான் மறக்கக்கூடாது - அதேபோல்
நான் கொண்டு வரும் பரிசும் அப்படியே தான் இருக்கும் என நினைக்கிறேன்...

மறுநாள் காலை விடியும் பொழுதே
ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனை போல
உன் பரிசு பொருளுக்காக காத்திருந்தேன்..

இருவரும் சந்தித்தோம்...
என்னை விட அவசரப்பட்டவளாய்...
எங்கே எனக்கான பரிசு பொருள் என்றாய்..

எதுவும் அறியாதவனாய் நிற்க...
அதுவரை உரையாடிய அவள் இதழ்கள்
உரையாடாமல் நின்றன..

உரையாடமல் நின்ற இதழ்களை
நான் சிறிது நேரம் உறவாடிக்கொள்ள
எனக்கான பரிசுப்பொருள் எங்கே என்றேன்..

அதனுடன் தானே இவ்வளவு நேரம்
உரையாடிக்கொண்டிருந்தாய் என்கிறாய்...

என்னவென்று புரியாமல் நான்.. :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதலர் தின பரிசு...


நாளை காலை
"காதலர் தினம்"
காலையிலே போன் பண்ணிணாய்..
நாளைக்கு என்ன ஸ்பெஷல்..
"எனக்கு நீ"
"உனக்கு நான்"
என்றேன்..

இதையே எவ்வளவு நாள் தான்டா
சொல்லுவாய் என்றாய்..
வேறு எதுவும் தெரிந்தால்
சொல்ல மாட்டேன் என்றா சொல்கிறேன்..

எனக்காக நாளைக்கு
ஒரு கவிதை எழுதி தருவாயா என்றாய்..
பதிலுக்கு நீ என்ன தருவாய் என்றேன்..
நீ வழக்கமாய் என்னிடம் ஒன்று கேட்பாயே
அது தருகிறேன் என்று சொல்லி
போனை வைத்தாய்..

என் ஆசையை நாளைக்காவது
அடைந்தாக வேண்டும் என்று
காலையிலிருந்து யோசிக்கிறேன்..
உன்னை பற்றி கவிதை எழுத..

எதுவும் தோன்றவில்லை
இந்த மடையனுக்கு..

திரும்பவும் உனக்கே கால் பண்ணுகிறேன்..
"என்ன கவிதை ரெடியா" என்கிறாய்..
என்ன சொல்வதென்று அறியாமல்
விழித்துவிட்டு "ம்ம் " என்றேன்..

நான் எழுதிய கவிதை இதோ


"எனக்கு நீ"

"உனக்கு நான்"


என்னங்க நான் ஆசைப்பட்டது கிடைக்குமா...
நாளை காலை எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்..


அனைவருக்கும்
காதலர் தின வாழ்த்துக்கள்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அ முதல் ஃ வரை...


த்தை பையன் என
தோழிகளிடம்
என்னை அறிமுகப்படுத்தையில்
வந்த வெட்கத்தை
மறைக்க முயன்றாயே..
அந்த நொடி
ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.

யிரம் முத்தம்
கொடுத்திருப்பாய்..
இன்னும் இனிக்கிறது
அவசரமாய் கொடுத்த
அந்த முதல் முத்தம்..

னிப்பு குறைவாகவே
இருக்கிறது
உன் எச்சில் படாத எந்த பண்டமும்..

ர்ப்பு விசை என்றால்
என்னவென்று உணர்ந்தேன்..
உன்னை முதன் முதலில்
பார்த்த தருணத்தில்..

தடுகளை
ஆயுதமாக்கி
என்னைக்கொல்லும்
அரக்கி நீ..

ஞ்சலாட
நீ வரவில்லையென
உண்ணாவிரதம் இருக்கிறது
மரம்..

ல்லா காதல்பாடல்களும்
உன்னைப்பற்றியே
எழுதப்பட்டிருப்பதாக
தோன்றுகிறது
எனக்கு..

க்கங்களும் தவிப்புகளும்

நீ சிரித்த
மறுநொடியில் காணமல்போகின்றன..

ந்து நிமிடத்தில்
வந்துவிடுவேன் என்றாய்...
அரை நிமிடம் முடிவதற்குள்
நீ வரும் பாதையை நோக்கி
என் கண்கள் ஆயிரம் முறை
பயணித்துவிட்டன..

ரு முத்தம் கேட்டு
கெஞ்சிய போது மறுத்துவிட்டு
இப்போது ஓராயிரம்
முத்தங்கள் தருகிறாய்
கனவில்...

டும் மேகங்கள் கூட
பூமியில் உன்னை பார்த்தால்
ஒரு நிமிடம் நின்று
ரசித்துவிட்டு தான் செல்கின்றன..

மேலே உள்ள கவிதைகள் அனைத்தும் மொக்கையாக இருக்க வேண்டும் என்று யோசிக்கப்பட்டவையே...இதில் யாரும் இலக்கண சுவையையும் இலக்கிய சுவையையும் தேடவேண்டாம்..

எவ்வளவோ முயன்றும் ஃ என்ற எழுத்துக்கு மொக்கையாக கவிதை யோசிக்கமுடியவில்லை...முடிந்தவர்கள் கமெண்டில் தெரியப்படுத்தவும்..


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதலர் தின ஸ்பெஷல்...


ஒரு அதிகாலை பொழுது
நீ நீராடிவிட்டு
பாவாடை தாவணியில்
தலையில் நீர் சொட்ட
உன் விட்டு வாசலில் கோலம்
போட்டு விட்டு ஓடிப்போனாய்
அன்று
நம் பள்ளி வரலாற்று
தேர்வில் வினா ஒன்று
உலகின் மிகச்சிறந்த ஓவியம்
எது என்று ?
சற்றும் தயங்காமல் எழுதினேன்
என் எதிர் வீட்டு கோலம்
என்று !!

******************************

அழகாய்தான்
இருந்தது.
நம் பள்ளி
பேருந்து நிறுத்தம் !

ஒரு வேலை ...
நாம் இருவரும் இருந்ததாலோ?...

பக்கத்தில் அமர்ந்து
பல முறை பேசியிருக்கிறோம் ..!
சில நேரம் சிரிப்பாய் ..
சில நேரம் சினமாய்...

ஏனோ
அப்போதெல்லாம்
நம்மை சுற்றி
நிறையப்பேர் இருந்தாலும்
"வெறிச்சோடி" இருப்பது போல்
ஒரு உணர்வு....

இதோ !
இன்று .....அந்த
இன்பமான நினைவுகளை
இதயத்தில்
சுமந்தவனாய் ....
அதே பள்ளி நிறுத்தத்தில்
வந்து சற்று நேரம்
அமர்ந்துவிட்டு செல்கிறேன் ...

ஏனோ இப்பொழுது
என்னை சுற்றி யாருமே இல்லையெனிலும்
நெரிசலாய்...நெருப்பாய்
ஒரு உணர்வு.......

******************************
இது ஒரு மீள்பதிவு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என்னவளுக்காக...


எனக்கு எது பிடிக்கும்,
எது பிடிக்காது,
என்று தெளிவாய் உன்னிடம்
சொல்லத்தெரிந்த எனக்கு
ஏனோ தெரியவில்லை...
"நான் உன்னை காதலிக்கிறேன்"
என்ற வார்த்தையை மட்டும்
சொல்லத் தெரியவில்லை...

நான் எழுதும் ஒவ்வொரு
கவிதையையும் படித்துவிட்டு,
ஒரு புன்சிரிப்புடன்,
இந்த கவிதைக்கு பின்னால்
"யாரோ ஒரு பெண் இருக்கிறாள்"
என்கிறாய்..அது நீ தான்
என்று உனக்கு தெரிந்தும் கூட..

தோழிகளோடு கலகலப்பாக
சிரித்துக்கொண்டு செல்கையில்,
என்னை பார்த்ததும்
ஏன் அமைதி கொள்கிறாய்..
அதை பார்த்தபின் தெரிந்துகொண்டேனடி
"நீயும் என்னைக்காதலிக்கிறாய்" என்பதை...!!!

நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என்னை பார்த்து
சிணுங்குகிறது..
ஆனால் நீ மட்டும்...!!!!

முற்றுப்புள்ளி வைக்காமல் தான் முடிக்கிறேன்
ஒவ்வொரு கவிதையும்..!!
உயிருள்ள காலம் வரை
வற்றிப்போய் விடுமோ
உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தனிமையின் துயரம்..


உனக்காக நான்,
எனக்காக நீ,
உன்னில் நான்,
என்னில் நீ,
என நாம் இருவரும்
நம்மை மறந்து,
நம் காதலினால் வயப்பட்டிருந்த காலத்தில்
காற்றுகூட புக முடியாமல்
இருவரும் நெருக்கமாய்
அமர்ந்து இருக்கிறோம்..

இருப்பினும்,
அந்த இடைவெளிக்குள்ளும்
அனுமதி வாங்காமலேயே,
வந்து அமர்கிறது காதல்....

பின் ஒரு நாளில்
கருத்து வேறுபாட்டின்,
கணத்த வேர்களுக்கு,
பால் ஊற்றியபடி,
பயணப்படுகிறது,
பக்குவமடையாத காதலும்,
பக்குவமடைந்த தலைக்கணமும்....

பேசி தீர்ப்பதென,
முடிவு செய்யப்பட்டு,
இருவரும்
கூடிய சந்திப்புகளில்,
மௌனமாய்,
இடைவெளி விட்டு,
அமர்ந்திருக்கிறோம்,
காதலுக்காக....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பேருந்து காதலி..


கூட்ட நெரிசல்..
வேலை அலைச்சல்..
எதுவும் தெரியவில்லை எனக்கு...
பேருந்தில் அவள் முகம் கண்டவுடன்...

பூமியில் நகரும் பேருந்து,
என்னை மட்டும்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பயணிக்க வைக்கிறது...

என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...

என்றும் மெதுவாய் செல்லும் பேருந்துக்கு,
இன்று மட்டும் ஏனோ அவசரம்!

நான் இறங்கும் இடத்தில்
அவளும் இறங்கினாள்...

அவளை முன்னே செல்லவிட்டு
நான் பின்னே நடந்தேன்..
அவளின் கால்தடத்தில்..

அவள் தலைமுடியிலிந்து விழும்
ஒவ்வொரு பூவின் இதழும்
மீண்டும் சொர்க்கத்தை அடைய ஏங்கின..
ஏனோ இயலவில்லை..

உன் வழியில் நீ சென்றாய்
என் வழியில் நான் சென்றேன்..
உன் நினைவுகளை சுமந்தபடி...

நாளையும் வருவாயா..
இதே பேருந்தில்...??

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முக்கோணக்காதல்....


"என்னைக் கொஞ்சம் மாற்றி" என்ற பாடலை பாடியவாறே கண்ணாடியின் முன் தன் முகபாவனைகளை சரி செய்து கொண்டிருந்தாள் கார்த்திகா.
இவளின் வழக்கத்திற்கு மாறான அலப்பரையை பார்த்து வியந்து போய் "எங்கடி கிளம்பிட்ட" என்றாள் ராணி.

"ஒரு வாரமா என் பின்னால சுத்திக்கிட்டு இருந்தானே.. கார்த்திக், நேத்து பக்கத்துல வந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..நாளைக்கு தாஜ் ஹோட்டலுக்கு வரமுடியுமா? என்று கேட்டான்.. "

" நீ என்னடி சொன்ன?" என்றாள் ராணி..

"வரேன் என்று சொல்லிட்டேன்....

" அப்போ கார்த்திக்கை காதலிக்கிறாயா?"

" ஆமாம்.. "

"அப்போ ராஜாவின் நிலைமை??"

"அவன் என்னை காதலிப்பது நம்ம காலேஜூக்கே தெரியும்..இருந்தாலும் வந்து சொல்லமாட்டேன்கிறான்..அவன் என்னிக்கு வந்து என்கிட்ட சொல்லி...எனக்கு டைம் ஆச்சு நான் புறப்படுகிறேன்.. அப்புறம் இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்கு?"
"ம்ம்ம்..நல்லாத்தான் இருக்கு.. "

கார்த்திகாவும் ராணியும் கல்லூரி தோழிகள்..இருவருக்கும் ஒரே விடுதி..ஒரே அறை..இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்குச்செல்வர்..

அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து தாஜ் ஹோட்டலுக்கு சென்றடைவதற்குள் அறை மணி நேர தாமதம்..இருந்தாலும் கார்த்திக் எங்கு இருக்கிறான் என்று நோட்டமிட்டாள்..சிவப்பு நிற டி-ஷர்ட்டில் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தான்.. இருவரும் பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு புன்னகை..

கார்த்திக் அருகில் சென்று "வந்து ரொம்ப நேரம் ஆச்சா..?? "
"இல்லை 15 நிமிடம் தான்.. "

கார்த்திக் "ஐ லவ்" என்று ஆரம்பிக்க, சர்வர் "என்ன மேடம் வேணும்? " என்று சொல்ல..கார்த்திக் சிறிது அமைதியானான்..
"இரண்டு வெண்ணிலா.." என்று ஆர்டர் பண்ணிவிட்டு..

" கார்த்திகா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப பயமா இருக்கு.. அதுக்காக சொல்லாமலும் இருக்க முடியாது.. " என்று தயங்கினான்..

"பரவாயில்லை பயப்படாம சொல்லுங்க " என்றாள் கார்த்திகா.. தன் மேலான அவன் காதலை அவன் வாயாலையே சொல்வதை கேட்க..

கார்த்திக் மெல்ல தயங்கி, "நான் உங்க பிரண்ட் ராணியை... ராணியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்..அவங்க இல்லாமல் என்னால் இருக்க முடியாது..கிட்டதட்ட மூன்று வருஷமா அவங்களை காதலிக்கிறேன்..வாழ்ந்தா அவங்ககூடத்தான் வாழனும் என்று ஆசைப்படுறேன்..ஆனா அவங்ககிட்ட சொல்ல தைரியம் இல்லை..மேலும் சொன்னா என்னுடைய நிராகரித்துவிடுவார்களோ என்ற பயம்தான்..நீங்க தான் அவங்ககிட்ட பக்குவமா பேசி என்னுடைய காதலை சொல்லணும்" என்றான்..

இதை சற்றும் எதிர்பாராத கார்த்திகாவுக்கு சிறிது வியர்த்தாலும் சுதாரித்துகொண்டு "ம்ம் கண்டிப்பா சொல்றேன் " என்று கிளம்பினாள்..


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எது காதல் தெரியவில்லை....

Angel Graphic #84





என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா...

மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டு கொண்டால் - என்
மனம் வதைபடுகிறதே
அதுதான் காதலா...

அருகில் நீ
இல்லாத போதும்
உன்னுடன்
உறவாடி உரையாடி
மகிழ்கிறேனே
இதுதான் காதலா...

எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாச காற்று உள்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா...

யார் கேட்டும்
இல்லை என்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்க தோன்றுமே
அதுதான் காதலா...

பிரிவுகள் நேரும்போது
ஏதோ ஓர் உணர்வு - நம்
விழிகளுக்குள் நீர் நிரப்பி
செல்கிறதே
அதுதான் காதலா...

ஊரே நம் உறவை
காதலென்ற போது
நீ மட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களேன்று'...

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியம்
என்பதால்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது காதலிக்காக...


உன்னுடன் என்ன
பேச வேண்டும் என
இரவு முழுவதும்
யோசித்து வந்தேன்..

உன்னை கண்ட நொடியில்
அத்தனையும் மறந்து
ஒன்றும் அறியாதவனாய்
நிற்கிறேன்..


****************************

உனக்காக நான்
எழுதும் காதல் கடிதம் கூட
என்னை பார்த்து சிரிக்கிறது..
இதையாவது அவளிடம்
கொடுப்பாயா என்று..

****************************

எனக்கு வரும்
ஒவ்வொரு அழைப்பும்
நீயாக இருக்க கூடாதா என
என்னை விட அதிகமாக
ஏங்குகிறது என் தொலைபேசி..
உன் குரல் அதுக்கும்
பிடித்திருக்கிறதாம்..

****************************

பூமியிலும் தேவதைகள்
இருக்கத்தான் செய்கிறார்கள்..
உன்னை கண்ட பின்தான்
தெரிந்துகொண்டேன்..

****************************

என் இனியவளே..
தொலைபேசியில் நான்
"ஹலோ" என்றதும்
சிறிது நேரம் அமைதி காத்து
பின் பேசுகிறாயே..
அதுக்கு என்ன அர்த்தமடி..
நீயும் காதலிக்க
கற்றுக்கொண்டாயோ..

****************************
தேவதையே...உன்னை காண
பேருந்து நிலையத்தில்
நிற்கும் ஒவ்வொரு நிமிடமும்
எனக்கு சொர்க்கம்தான்..

****************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பதிவர்களே போட்டிக்கு ரெடியா..

குழந்தை..

சோகங்கள் மறைத்திடும்..
கோபங்கள் போக்கிடும்..
அன்பின் உருவம் - குழந்தை..

*****************************

இது ஒரு ஹைக்கூ விளையாட்டுத்தொடர்..

இங்கு நான் ஒரு வார்த்தை தருகிறேன்..

"காதல்"

இந்த வார்த்தைக்கு ஒரு ஹைக்கூ கவிதை தயார் பண்ணி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

கவிதையினை தருபவர்கள் நீங்கள் ஒரு வார்த்தை தரலாம்..

அதற்கும் மற்றவர்கள் பதில் சொல்லலாம்...

என்ன போட்டிக்கு ரெடியா..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

18 வயசுல.....


நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?

**********************

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !

**********************

உன் கூந்தல் சிலுவையில் அறையப்படும்
மல்லிகைப்பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

**********************

பூஜைநேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது.

**********************

உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?

**********************

துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!

**********************

உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்.

**********************

பா.விஜய் அவர்கள் எழுதிய 18 வயசுல என்ற புத்தகத்தில் எனக்குப் பிடித்த கவிதைகள் இவை...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இது போதுமடி எனக்கு....



அதிகாலையில்

உன் கொலுசு ஒலியின் சத்தம்..

உன் கண்ணில் விழிக்கும்

என் கண்கள்

இது போதுமடி எனக்கு....

குளத்தில்

குளிக்கும் பறவைகளின் மத்தியில்

முகம் துடைக்க

உன் முந்தானை...

இது போதுமடி எனக்கு....

########‍‍$$$$########‍

கடற்கரை மணலில்

என் பாதச்சுவட்டின் மேலே

உன் கால் வைத்து நடந்து வந்தாய்...

தீடீரென நின்றதும்

கால் வலிக்கிறதா என்றேன்..

இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..

காதலுடன்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என்ன பெயர் வைக்க....


வானத்தில் கார்மேகத்தின்

அழகினை ரசித்திருக்கிறேன்...

பூமியிலும் கார்மேகம் தோன்றுமோ..

நீ கருப்பு சுரிதாரில் பவனி வரும் போது..


########‍‍$$$$########‍

எனது இதயம் கூட

சிறிது இடைவெளி விட்டுத்தான் துடிக்கிறது..

அந்த இடைவெளியிலும் கூட

என் மனம் உன்னை மட்டுமே

நினைக்கிறதே...

########‍‍$$$$########‍

உன்
பெயரில் என்ன

வசியம் உள்ளதடி....

என் வீட்டு பூனை கூட

உன் பெயர் சொன்னால்

ரசிக்கிறது....

########‍‍$$$$########‍

உனக்காக நான்...

எனக்காக நீ...

நமக்காக நம் காதல்..

இந்த ஒன்று போதுமே

என் வாழ்க்கை என்னும்

பயணத்தை கடக்க...

########‍‍$$$$########‍

பூக்கடைக்காரன் புலம்புகிறான்....

பூக்கள் கூட உன் முகம்

பார்த்தால் தான்

மலருகின்றனவாம்...

########‍‍$$$$########‍

என்ன பெயர் வைக்க

நம் குழந்தைக்கு...

நேற்றிரவு கனவில்

சொல்லாமல் போய்விட்டாய்...

########‍‍$$$$########‍

பேச வேண்டிய இதழ்கள்..

பேசிக்கொள்ளவில்லை;

பேசிக்கொண்டன விழிகள்...

மூடிக்கொண்டது இமை..

திறந்தது மனம்..

உறங்கவில்லை இதயம்

########‍‍$$$$########‍


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதலியுங்கள்....


நேசித்தால் காதல் வரும்...
வர்ணித்தால் கவிதை வரும்....
கவிதையை வாசியுங்கள்....
காதலியை நேசியுங்கள்...

கவிதையில் வருவது
திருத்தக்கூடிய பிழை....
ஆனால் காதலில் வருவது
வருந்தக்கூடிய பிழை....

கவிதைபிழையை திருத்தினால்
காதல்....
காதல்பிழையை திருத்தினால்
சாதல்.....

கவிதை காதலின் தாக்கமோ... !!

வருந்துவதை விட திருந்துவது
மேல் என்று எண்ணினேன்...
திருந்த முடியவில்லை
கவிதையினால் மட்டும்...

யோசித்தேன்...

அங்கு காதல் இல்லை
அதனால் கவிதையும் இல்லை..... !!
எப்படி திருந்துவது.. யோசித்தேன்...
"காதல் வயப்படுவதே மேலோ....."
என்று யூகித்தேன்.....

காதல் வசப்பட்டேன்....!!

இப்பொழுது வருத்தப்படவில்லை........
காதலியால் திருத்தப்பட்டுவிட்டேன்.....!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும் (06/07/09)



நன்றி...நன்றி..

பதிவுலகில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின்றன..இதற்குள் 56 பதிவுகள்..54 பாலோயர்கள்..இரண்டு முறை பதிவர் சந்திப்புகள்..நினைத்தாலே மனம் மகிழ்ச்சியாக உள்ளது..மேலும் என் எழுத்தையும் தொடர்ந்து ரசிக்கும் அந்த 54 பாலோயர்க்கும்,இனிமேல் பாலோயாராக சேர இருக்கும் நண்பர்களுக்கும் என் மனமானர்ந்த நன்றிகள்..

***********************************

நேற்று(05/07/09) நடைபெற விருந்த மேற்கு இந்தியத்தீவுக்களுக்கு எதிரான கடைசி ஒருதின போட்டி மழையால் கைவிடப்பட்டது..இருப்பினும் இந்திய அணி ஏற்கனவே முன்னிலையில் இருப்பதால் தொடரை எளிதாக கைப்பற்றியது..20 ஓவர் போட்டியில் கோப்பையை வெல்லமுடியாமல் போன இந்திய அணிக்கு இந்த போட்டி சற்று ஆறுதல் அளித்திருக்கும்..

மேலும் நேற்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் கோப்பையை கைப்பற்றினார்..இது அவருக்கு 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.அவர் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்..

***********************************

நேற்று காலை சன் டி.வி.யின் டாப்-டென் நிகழ்ச்சி காண நேரிட்டது..பெரும்பாலும் பாடல்களை மட்டும் கேட்கும் நான் சரி எந்த படம் தான் முதலிடத்தில் உள்ளது என பார்ப்போமே என பார்த்தால் ஒரே ஆச்சர்யம்

3வது இடத்தில் அயன்...

2வது இடத்தில் நாடோடிகள்

1வது இடத்தில் மாசிலாமணி..

மாசிலாமணி படத்தில் நல்ல பாடல்கள்,மற்றும் நல்ல கதைக்களம் என எல்லா அடிப்படைத்தேவைகளையும் இப்படம் பூர்த்தி செய்திருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..என்றனர்...

இந்த நிலைமை நீடித்தால் இந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் வெளியிட்ட படங்கள் மட்டுமே அவர்கள் டி.வி.யில் டாப்-டென்னாக இருக்கும்..

இந்த பிழைப்புக்கு....????

***********************************

சமீபத்தில் 'அதே நேரம் அதே இடத்தின்' பாடல்கள் கேட்டேன்..இப்படத்தின் இசையமைப்பாளர்-பிரேம்ஜி அமரன்..படத்தில் ஒரு பாடல் பெண்களை மையப்படுத்தி வந்துள்ளது..பாடலை பாடியவர்:வெங்கட் பிரபு..எழுதியது யார் என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.பாடல் மிக அருமை..பாடலின் தொடக்க வரிகள்..

நம்மூர் சென்னையில நாள்தோறும் வீதியிலே
பல நூறு பொண்ணுங்களை பார்த்தேனே..

என்னோட நெஞ்சுக்குள்ளே எப்போதும் கண்ணுக்குள்ளே
உயிராக ஒருத்தியாகத்தான் வைச்சேனே..

பாடலை ஸ்கிரினில் பார்க்க ஆவலாக உள்ளது...

***********************************

நகைச்சுவை:-

மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்..
அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங் போவோங்க.
கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..

***********************************

கவிதை:

நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..


***********************************

தத்துவம்:

தூசி பட்ட கண்களும் காதல் பட்ட இதயமும்
எப்போதுமே கலங்கி கொண்டே தான் இருக்கும்..

***********************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் ஒழிக..!!


உன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன
100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர

**********************************

என் காதல் தேசத்தின் கடவுள் நீதான்..
ஆனால் என்னை ஏன் நாத்திகன் ஆக்கினாய்...

**********************************

காதல் தெய்வீகமானது
அதிக கட்டணம் செலுத்தினால்
சிறப்பு தரிசனம்..

**********************************

நீ நம் காதலுக்காக உயிரையும் கொடுத்திருப்பாய்..
உன் அப்பா அமெரிக்காவில்
மாப்பிள்ளை பாக்காமல் இருந்திருந்தால்..

**********************************

காதலுக்கு ஜாதி, மதம்,
அழகு, வயது என
எதுவும் தடையில்லை..

என் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..

**********************************

கடும் தவம் புரிந்தால் தான்
ஞானம் பிறக்குமாம்..

யார் சொன்னது
உன்னை காதலித்திருந்தாலே போதுமே..

**********************************
என் இதயமே நீதான் என்றாய்
உன் புதுக்கணவன்
இதய மாற்று
அறுவைச்சிகிச்சை நிபுணராமே!

**********************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..!!!


முதலில் இக்கதையின் கதாநாயகனை பற்றிய ஒரு சிறு குறிப்பு:-

என்னைப்பற்றி சொல்ல ஒண்ணுமில்லைங்க..நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.. ஆனா உண்மையில நான் ரொம்ப கெட்டவன் என்று எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. மேலும் சொந்தமாக ஒரு Browsing Centre வைத்து நடத்தி வருகிறேன்.

ஒரு மாலை நேரப்பொழுது..மணி சரியாக தெரியாவிட்டாலும் கதிரவன் வானத்திற்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தான்..அந்த அழகினை மெல்ல ரசித்துக்கொண்டிருந்தேன்..'இயற்கையின் அழகே தனிதான்'என்று மனதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது..என்னடா இது இன்னும் கதிரவன் மறையவே இல்லை..அதற்குள் வெண்ணிலவா..ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில்...
சார்..மணிக்கு எவ்வளவு ரூபாய்?..

சுய நினைவுக்கு வந்தவனாய்...பத்து ரூபாய் மேடம்

இந்தாங்க..

பணத்தை வாங்கியவுடன் என் மனது ஏனோ திரும்பி பார்க்க சொல்லி கட்டளையிட்டது..

திரும்பிப் பார்த்தவுடன்..கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது.. Browsing பண்ணனும்...

ம்ம்..எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பண்ணுங்க..

மணிக்கு எவ்வளவு ரூபாய்?

ஐந்தே ரூபாய் தான் மேடம்..

ரொம்ப கம்மியாக இருக்கு..

ஆடித்தள்ளுபடி அதான்..ஒரு புன்சிரிப்புடன்..

அந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்...

சார் இந்த சிஸ்டம் வொர்க் பண்ணலை..

ச்செ..இது வேற மக்கர் பண்ணுது..என்று மனதிற்குள் புலம்பினவனாய்..

நீங்க இந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்..

சரி..

Browsing பண்ணி முடித்ததும் என் அருகில் வந்து இந்தாங்க..என்று 100 ரூபாயை நீட்டினாள்..

சில்லரை இல்லை மேடம்..அடுத்த முறை வரும் போது நான் வாங்கிக்கிறேன்..

அவளோ என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றாள்..

என்னடா நடக்குது இங்க..என் நண்பன் கேட்டான்..

சும்மாதான்டா..அந்த பொண்ணு அழகா இருக்காடா மச்சி..அதுவும் அவளோட அந்த தெத்துப்பல் அழகுக்கே அழகு சேர்ப்பது போல் உள்ளதுடா..

உனக்கு என்னமோ ஆச்சு..உட்கார்ந்து வேலையைப் பாருடா..

மறுநாள் மாலை..

அவளுக்காக நான் காத்திருக்க..

இம்முறை அனைத்து சிஸ்டம் வேலை செய்கிறதா என்று செக் பண்ணினேன்..

நினைத்தது போலவே அந்த அழகு தேவதை வந்தாள்..ஒரு புன் சிரிப்புடன்

Browsing பண்ணி முடித்தவுடன் சரியான சில்லறையை கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணினாள்..வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை..ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா? என்ற எண்ணம் என் மனதில் அலைபாயாமல் இல்லை..

கிட்ட போய்..anyhelp என்றேன்..

ya என்றாள்..

உடனே நான் ஹீரோயிசத்தினை காட்ட ஆரம்பித்தேன்..தோல்வியே கிடைத்தது தவிர வெற்றி கிட்டவில்லை..இறுதியில் ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க மேடம்..மெக்கானிக் வரச்சொல்றேன் என்றேன்..

மெக்கானிக் வந்து சரி பண்ணும் வரை அவளுடன் கலாய்த்துக்கொண்டிருந்தேன்..தான் காலேஜ் படிப்பதாக கூறினாள்..கஷ்டப்பட்டு அவளுடைய மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டேன்..

அன்று முதல் நாங்கள் எஸ்.எம்.எஸில்.பேசத்தொடங்கினோம்

அவள் : "Don't miss or avoid d person who really had a true affection on u. it may make u feel when they live without u and your memories....."

அவசர அவசரமாக பதிலளித்தேன்..

"hey... what a surprise... எப்படி இருக்கே? சாப்டாச்சா? "

அவள்: ஓ சாப்டாச்சு.. நீ சாப்டயா.. வீட்டுக்கு வந்தாச்சா..

சாப்டாச்சு.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு வரல.. ஆபிஸ்லதான் இருக்கிறேன்..

அவள்: ஏன்பா???

கொஞ்சம் அவசர வேலை இருக்கு.. நாளைக்குள்ள முடிக்கணும்.. அதுதான்..

அவள்: சரி.. continue பண்ணு.. Good night.. Sweet dreams.. bye..

ஒரு ஸ்வீட்டே ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்லுதே...

அவள்: ரொம்ப ஐஸ் வைக்காத.. வேலைய பாரு..

ஐஸ் கிரீமுக்கே யாரவது ஐஸ் வைக்க முடியுமா...

அவள்: ஐயோ முடியல... நா தூங்க போறேன்..

கனவுலையும் என் கூடத்தான் பேச போற.. அதுக்கு இப்பவே பேசலாம்ல..

அவள்: ஆசைதான்.. டைப் பண்ணி முடிச்சுட்டு சீக்கிரம் தூங்குடா.. Bye..

சரிங்க மேடம்.. Good night...

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து சோம்பல் முறித்தேன்.. கற்பனையில் கொஞ்ச ஆரம்பித்தேன்..

ஸ்பீக்கரில்
"காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை..
காதல் இன்றி யாரும் இங்கில்லை..." யேசுதாஸ் பாடி கொண்டிருந்தார்..

அப்படியே தூங்கி போனேன்..

டிஸ்கி:- 1.இது முழுக்க முழுக்க ஒரு பிரபல பதிவரை சார்ந்த காதல் கசமுசாக்கள்..

2.நான் கதை என்று நினைக்கிறேன்..நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS