என் உயிர் நண்பனுக்காக....


ஓ... தோழனே! தோழியே!!

காலையில் மலருவது
மல்லிகை என்றால்...

உன்னைக் கண்டதும்
மலர்வது முகமா
இல்லை என் மனமா!

புது மலருக்குப் பூச்சூட்டி
புத்தம் புது பூவினிற்கு
புடவை கட்டி...

பனித்துளியை நீராட்டி
பூங்காற்றை அனுப்புவேன்
உனக்கு தூது சொல்ல...

சாதி, மதம், இனம், மொழி
இவற்றை எல்லாம் கடந்து வரும்
காற்றைப் போல நம் தூய நட்பையும்
சுவாசிப்போம்!!

காற்று வீச மறந்தாலும்;
இலைகள் அசைய மறந்தாலும்;
கடல் அலையை மறந்தாலும்;
பறவை பறக்க மறந்தாலும்;
மான் துள்ளி ஓட மறந்தாலும்;
குயில் கூவ மறந்தாலும்;
மயில்தோகை விரிக்க மறந்தாலும்;
நான் ஒரு நாளும் உனை மறவேன்!!!!!!!!!!!

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும்..(27-07-09)


முதலில் சந்தோஷமான விஷயம் ஒன்று..நமது பாசக்காரப் பதிவர் சீனா ஐயாவின் மகள் பிரியா மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்..தாயும் சேயும் நலமாக உள்ளார்கள்..அவருக்கு அனைத்து வலைப் பதிவர்சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..நீங்களும் அவருக்கு உங்கள் வாழ்த்துக்களைத்தெரிவித்து அவரை மகிழ்விக்கவும்!!

****************************
பதிவுலகில் போன வாரம் விருதுகள் வாரம் என்று சொல்லலாம்..எனக்கு இயற்கை அக்கா மற்றும் வியா,அவர்கள் இன்டிரஸ்டிங் அவார்டு கொடுத்தார்கள்..இந்த வாரம் விஜயின் பரம எதிரியான மன்னிக்கவும் ரசிகனான பிரியமுடன் வசந்த் அவர்கள் ஒரு விருதினை வழங்கியுள்ளார்..அவருக்கு என் நன்றிகள்..மேலும் என்னோடு விருதினை வாங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..
****************************
நேற்று சன்டிவியில் ஆயிரத்தில் ஒருவன், பாடல் வெளியீட்டு விழா ஒளிபரப்பினது.. அதில் நடித்த நடிகை ஆண்டிரியா பாடிய பாடல் என்னை மெய்மறக்க செய்தது...அதே போல் தனுஷ் ஐஸ்வர்யா பாடிய பாடலும்,விஜய் ஜேசுதாஸ் மற்றும் நித்திய ஸ்ரீ மகாதேவன் ஆகியோர் பாடிய பாடலும் மிகவும் அருமையாக இருந்தது..
****************************
நிகழ்ச்சியின் இடையே வந்த ஏர்டெல் கம்பெனியின் விளம்பரம் ஒன்று என்னை மிகவும் ரசிக்க வைத்தது..ஒரு சிறு குழந்தை காகிதத்தில் கப்பல் செய்து தண்ணீரில் விடுகிறாள்..தண்ணீருடன் கப்பல் நன்றாக போய் கொண்டிருக்கிறது..தீடீரென மழை பொழிவதால் மழையில் காகிதக்கப்பல் நனையாமல் இருக்க தனது கை வைத்து கப்பலை மறைக்கிறாள்...சிறிது நேரத்தில் தன் இரண்டு கை மட்டுமே இருந்த இடத்தில் இன்னும் சிலர் வந்து கப்பலின் மீது கை வைத்து பாதுகாப்பாக கொண்டு செல்கின்றனர்..இவை அனைத்தும் வெறும் 45 வினாடிகளில்...அருமை..(மிகப்பெரிய நடிகர்களே தயவு செய்து அந்த சிறு குழந்தையிடம் நடிப்பினை கற்றுக்கொள்ளுங்கள்...)
****************************
கவிதை:-

எனது அறையின் தினசரி காலண்டர் கூட
கேலி பேசுகிறது என்னை..
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்த தேதியை மெதுவாக கிழிக்கின்றேனாம்...
பார்க்கவில்லையெனில்
பிய்த்து கசக்கி எறிகிறேனாம்...
****************************
தத்துவம்:-

லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..

கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்..
****************************
பொன்மொழி:-

எத்தனை துன்பங்கள் வந்தாலும்

எத்தனை தடைகள் வந்தாலும்

எனக்கு கவலையில்லை..

ஏனெனில், நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...

1000 முறை தோற்றவன்..

எடிசன்..
****************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விஜயிடம் ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விஷயங்கள்..(அன்பு)


1. ரொமான்ஸ் லுக்குனு சொல்லி காதல் காட்சிகள்ல கேவலமா ஒரு பார்வை பாப்பிங்களே அது புடிக்காது..

2. பன்ச் டயலாக் பேசறன்னு 'வாழ்க்கை ஒரு வட்டம், சதுரம், முக்கோணம்' அப்படின்னு எல்லாம் உளர்றது சுத்தமா புடிக்காது..

3. காமெடி பண்றேன்னு 'வாங்க்னா, போங்கனா' அப்படின்னு வாயை கோணலா வச்சுட்டு பேசுவீங்களே... அது கேவலமா இருக்குது..

4. பாடல் காட்சிகள்ல உங்க லிப் மூமெண்ட் ரொம்ப கேவலம்.. பாட்டுக்கு சிங்க் ஆகாம வாயசைப்பது....... முடியல..

5. நெஞ்சினிலே, சுக்ரன் படங்கள்ல அட்வைஸ் மழை பொழியுமே, தாங்க முடியல சாமி.. அந்த படத்துக்கு அப்புறம் எங்க ஊர் தியேட்டர் ஆபரேட்டர் ஒருத்தர் கோமாவில் கிடக்கிறார் தெரியுமா..

6. போக்கிரி படத்துல கூர்க்காவா வந்து 'காக்கி சட்டை' படத்தோட கதையை காமெடி பண்ணுனீங்களே அது ரொம்ப கொடுமை..

7. டேன்ஸ் ஆடறேன்னு கோட்டர் அடுச்ச குரங்கு மாதிரி குதிப்பிங்களே அது அத விட கொடுமை.. நீங்க ஆடறது டேன்ஸ் னா அந்த காலத்துல கமல் ஆடுனாரே அது பேரு என்னங்க..

8. எல்லா பங்க்சனுக்கும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரியே வருவீங்களே.. அது பாக்க சகிக்கலை..

9. பிரஸ் மீட்ல 'சைலென்ஸ்' ன்னு கத்துனீங்களே அத பார்த்து எங்க ஊர்ல பல பேருக்கு காய்ச்சல் வந்துடுச்சு..

10. காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கிட்டு அதை பெருமையா வேற போட்டுடீங்களே அது சுத்தமா புடிக்கலை..

11. வில்லு படத்துல பாரதியார் கெட்டப்புல வந்தீங்களே.. நல்ல வேளை பாரதியார் சின்ன வயசுல இறந்துட்டார்..

இப்படி உங்க கிட்ட பிடிக்காதது இன்னும் நிறைய இருக்கு...

டிஸ்கி 1: இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவோ, நேர் பதிவோ, சைடு பதிவோ இல்லை..

டிஸ்கி 2: இதை எழுத திருப்பூர் அரசாங்க கடை எண் 2000 க்கு பக்கத்தில் இருக்கும் எந்த பதிவரும் தூண்டவில்லை..
தூண்டவில்லை..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும்..(21-07-09)



நமது பதிவுலகில் மூத்த பதிவரான சீனா ஐயா அவர்கள் தம் இரண்டு பெண் குழந்தைகளையும் மற்றும் பேரன் பேத்திகளையும் பார்க்க 45 நாள் விடுப்பில் இலண்டன் சென்று உள்ளாராம்...அவரது இந்த சுற்றுலா பயணம் உல்லாசமாக அமைய எனது வாழ்த்துக்கள்..வரும்பொழுது எனக்கு ஒரு பரிசு பொருள் வாங்கிவதாக கூறியுள்ளார்..பரிசினைக்காண ஆவலாக உள்ளேன்..
*******************************************
பதிவுலகத்தை விட்டு சென்ற பிரபல பதிவர் சென்றதுக்கு காரணம் பிரச்சனை எதுவும் இல்லையாம்.. தொழிலில் கவனம் செலுத்தவே எழுதுவதை விட்டாராம். தொழில் சரியான பின் காதல் கவிதைகள் மீண்டும் பொழிவார் என தெரிகிறது..(எனக்கு இப்பவே கண்ணை கெட்டது)
*******************************************
பதிவுலக மங்கை இயற்கை அக்கா அவர்கள் எனக்கு ஒரு பிளாக்கர் விருது கொடுத்துள்ளார்கள்..அவர்களுக்கு என் நன்றிகள்..மேலும் என்னோடு அனைவ்ருக்கும் என் வாழ்த்துக்கள்.
*******************************************
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போகாமல் வீட்டினில் தொலைக்காட்சியினை மேய்ந்து கொண்டிருக்கையில் சன் மீயூசிக் சேனலை பார்த்தேன்..எனக்கு மிகவும் பிடித்த பாடல் குளிர் 100டிகிரி படத்திலிருந்து பூம் பூம் என்று ஆரம்பிக்கிற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.. பென்னிதயால்,அபிஷேக்,மற்றும் சிலர் படித்த பாடல்.பாடலில் ஒரு வரியில் 'மானாட மயிலாட' என்கிறஒரு வரி வரும்..அதை மட்டும் சன் மியூசிக் கணிணி வல்லுநர்கள் மீயூட் செய்துவிட்டனர்..எனக்கு அவர்களது கோழைத்தனத்தை பார்க்கும் போது ஒரே சிரிப்பு..
*******************************************
மேலும் ஒரு அருமையான நிகழ்ச்சினை காண நேர்ந்தது..அது விஜய் டி.வி.யின் 'நீயா நானா' நிகழ்ச்சி. 'காதலில் இருப்பவர்கள் காதலில் இருந்தவர்கள்' இரு தரப்பினர்களுக்கும் இடையான உரையாடல்..மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது..வெகுவிரைவில் இந்த நிகழ்ச்சி மாதிரி ஒரு நிகழ்ச்சி சன்.டி.வி.யில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கிறேன்..அவ்வ்வ்வ்வ்வ்
*******************************************
கவிதை:-

நீ நடக்கையில் உன்

நிழல் உன்னுடன் வருகிறது..

நான் நடக்கையில் மட்டும் என்னுடன்

இரண்டு நிழல்கள் வருவதாக உணர்கிறேன்...

நாம் இருவரும் நடக்கையில்

மூன்று நிழல்கள் நம்மை தொடர்கின்றன்..

அப்படியானால்

மூன்றாவது நிழல்...

நம் குழந்தையா..!!!

(டிஸ்கி:-இது என்னுடைய முதல் காதல் கவிதை..அதனால் நீங்க நல்லா இருக்கு என்று சொல்லியே ஆக வேண்டும்..இல்லைன்னா இது போல பல மொக்கைக்கவிதைகள் காத்து உள்ளன...)
*******************************************
நகைச்சுவை:-

மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..

மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..
*******************************************
தத்துவம்:-
காதல் என்பது அழகான ஓவியம் போல..

வரையத்தெரிந்தவன் புத்திசாலி..

வரையத்தெரியாதவன் அதிர்ஷ்டசாலி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..??



1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??

2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம்

மல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???

5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10.உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..??

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இவளா...இப்படி...!!

இந்த அபார்ட்மெண்டிற்கு குடி வந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை..சித்ரா யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என ஆச்சர்யமாய் கவனித்தான் சரவணன்.


பிளிஸ்..இந்த விஷயம் அவருக்கு தெரிய வேண்டாம்! நான் அப்புறமா வரேன்.என எதிர்த்த வீட்டு தடியனுடன் வழிந்து விட்டு பதட்டத்துடன் உள்ளே நுழைந்தால் சித்ரா..

அடப்பாவி மூனு வருஷம் நாய் மாதிரி அலைஞ்சுதான் சித்ராவை கை பிடிச்சேன்! அடேய்..தடியா..அஞ்சே நாள்ல மடக்கிட்டியேடா...என முணுமுணுத்தவாறே ஆபிஸிற்கு கிளம்பினான் சரவணன்..

சித்ராவிடம் நான் போயிட்டு வரேன்.என வால்டர் வெற்றிவேல் ஸ்டைலில் கூறிவிட்டு வெளியே வந்த சரவணனஇ அதே தடியன் எதிர்கொண்டான்.

என்ன சார்...ஆபிஸ் கிளம்பிட்டீங்க போல!..

இல்லை..ஆடு மேய்க்க கிளம்பிட்டேன்..வாய் வரை வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு,ஆமா சார் ..நீங்க போகலை..? என அசடு வழிந்தான் சரவணன்.

பொண்டாட்டியும் குழந்தையும் ஊருக்கு போய்ட்டாங்க சார்..! தடியன் முடிப்பதற்குள்..

ஏன் சார்...செகண்டு டெலிவரியா?..

ரொம்ப குறும்பு சார்.! உங்களுக்கு..அம்மா வீட்டுக்கு போறேன்னா..உடனே அனுப்பிட்டேன் சார்..மேரேஜ்க்கு அப்புறமா இது மாதிரி கிடைக்கிற பேச்சுலர் லைப்பை மிஸ் பண்ணக்கூடாது..அதுல ஒரு திரில் இருக்கு!இன்னைக்கு புல் டே ஜாலியா..வீட்டிலேயே..என்ஜாய் பண்ணப்போறேன் சார்.. தடியன் சொல்லிசிரிக்க..

'அடப்பாவி என் தலையில இடி விழ..' என திட்டியவாறே ஆபிஸுக்கு நடையை கட்டினான் சரவணன்.

ஆபிஸில் மதியம் வரை மனது ஒட்டாமல் வேலை பார்த்த சரவணன்,,சித்ராவிற்கு போன் போட..அது ஸ்விட்ச் ஆப் எனக்கூற..சரவணனுக்கு பயம் தொற்றி கொண்டது.

சித்ரா நல்ல பொண்ணுதான்..ஆனா..அந்த தடியன் கெட்டவனாச்சே...! என டென்ஷனுடன் லீவ் எழுதி கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்..'என்ன சார் இன்னிக்கு சீக்கிரமே வந்தீட்டீங்க' என வாட்ச்மேன் கேட்க..

கொஞ்சம் வேலை அதுதான்..!அவசர அவசரமாய் அபார்மெண்டில் நுழைந்த சரவணனிடம்...
சார்..அம்மா வீட்டிலே இல்ல சார்! இப்பத்தான் இ.பி கார்ட்டை கொடுக்கப்போனேன் கதவைத் திறக்கலை சார்..

வெளியே போனாங்களாப்பா..?

இல்ல சார்..நான் இங்கேயே தான் இருக்கேன்! வேற யாரு வீட்டிற்காவது போயிருப்பாங்க சார்..என வாட்ச்மேன் கூற..

டேய்..அவ என் பொண்டாட்டிடா..''இப்படி சித்ரவதை பண்றையேடி சித்ரா..''என மனதில் கருவிக்கொண்டே மாடி வாசல்படியில் பறந்தான் சரவணன்..வாட்ச்மேன் கூறியது சரியே..வெகுநேரம் காலிங்பெல் அழுத்தியும் சரவணன் மிகவும் யோசித்து விட்டு எதிர்த்த வீட்டு காலிங் பெல்லை அழுத்தப்போனவன்..கதவு திறந்தே இருக்க..தயங்கியபடியே உள்ளே சென்றான்..

'போதும்.... விடுங்க....' இன்னும் எத்தனை நேரம்!..சித்ராவின் குரல் சரவணனின் நெஞ்சில் நெருப்பள்ளிப்போட்டது..

ஆக்க பொறுத்துக்கிட்டு ஆறப் பொறுக்காம இருந்தா எப்படீங்க..? பிளிஸ் எனக்காக.. அதே தடியனின் குரல் தான்..

டென்ஷன் உச்சிக்கு போக..நரம்புகள் புடைக்க கோபத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தான் சரவணன்..

நம்ம சித்ராவா இப்படி..? கண்களை நம்ப முடியாமல் மலைத்து நின்றான் சரவணன்..சரவணனை கண்டதும் பிரமித்துப்போனாள் சித்ரா...

ஏங்க நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்..ஆனா இவருதான்.....வெகுளித்தனமாய் சித்ரா கூற..

வியப்புடன் அந்த தடியன் வரைந்த ஓவியத்தை இமை கொட்டாமல் பார்த்தான் சரவணன்.

வீணையை கையில் பிடித்தபடி அந்த சரஸ்வதி தேவி போல் வரைந்திருந்தான் சித்ராவை..

இன்னும் என்ன சேர்ல உட்கார்ந்துக்கிட்டு முதல்ல எந்திரி..என்ற சரவணன் அவசர அவசரமாய் சேரில் அமர்ந்து 'பிளிஸ் சார் என்னையும் ஒரு முறை வரையுங்களேன்' குழந்தைத்தனமாய் கெஞ்ச..சித்ராவும் அந்த தடியனும் இல்லை ஓவியரும் ஒரு சேர சிரித்தனர்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நீங்க எவ்வளவு பெரிய பதிவர்..பரிசோதிக்க ஒரு போட்டி..



படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கலாம்..

வந்தது வந்துட்டிங்க...ஒரு ஆறு வித்தியாசம் கண்டுபிடிச்சி பின்னூட்டம் போடுங்க பார்க்கலாம்.. முதலில் சொல்லுபவர்களுக்கு வால்பையனுடன் ஒரு விருந்து..பங்கு பெறுவீர்..போட்டியில்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பதிவுலக மங்கை இயற்கை அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இவர் இதயப்பூக்கள் என்னும் பெயரில் பதிவெழுதி வருகிறார்..

என்னருகே நீ இருந்தும் என்ற தொடர் பதிவு எழுதி அசத்தியவர்..

அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும் (06/07/09)



நன்றி...நன்றி..

பதிவுலகில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின்றன..இதற்குள் 56 பதிவுகள்..54 பாலோயர்கள்..இரண்டு முறை பதிவர் சந்திப்புகள்..நினைத்தாலே மனம் மகிழ்ச்சியாக உள்ளது..மேலும் என் எழுத்தையும் தொடர்ந்து ரசிக்கும் அந்த 54 பாலோயர்க்கும்,இனிமேல் பாலோயாராக சேர இருக்கும் நண்பர்களுக்கும் என் மனமானர்ந்த நன்றிகள்..

***********************************

நேற்று(05/07/09) நடைபெற விருந்த மேற்கு இந்தியத்தீவுக்களுக்கு எதிரான கடைசி ஒருதின போட்டி மழையால் கைவிடப்பட்டது..இருப்பினும் இந்திய அணி ஏற்கனவே முன்னிலையில் இருப்பதால் தொடரை எளிதாக கைப்பற்றியது..20 ஓவர் போட்டியில் கோப்பையை வெல்லமுடியாமல் போன இந்திய அணிக்கு இந்த போட்டி சற்று ஆறுதல் அளித்திருக்கும்..

மேலும் நேற்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் கோப்பையை கைப்பற்றினார்..இது அவருக்கு 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.அவர் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்..

***********************************

நேற்று காலை சன் டி.வி.யின் டாப்-டென் நிகழ்ச்சி காண நேரிட்டது..பெரும்பாலும் பாடல்களை மட்டும் கேட்கும் நான் சரி எந்த படம் தான் முதலிடத்தில் உள்ளது என பார்ப்போமே என பார்த்தால் ஒரே ஆச்சர்யம்

3வது இடத்தில் அயன்...

2வது இடத்தில் நாடோடிகள்

1வது இடத்தில் மாசிலாமணி..

மாசிலாமணி படத்தில் நல்ல பாடல்கள்,மற்றும் நல்ல கதைக்களம் என எல்லா அடிப்படைத்தேவைகளையும் இப்படம் பூர்த்தி செய்திருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..என்றனர்...

இந்த நிலைமை நீடித்தால் இந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் வெளியிட்ட படங்கள் மட்டுமே அவர்கள் டி.வி.யில் டாப்-டென்னாக இருக்கும்..

இந்த பிழைப்புக்கு....????

***********************************

சமீபத்தில் 'அதே நேரம் அதே இடத்தின்' பாடல்கள் கேட்டேன்..இப்படத்தின் இசையமைப்பாளர்-பிரேம்ஜி அமரன்..படத்தில் ஒரு பாடல் பெண்களை மையப்படுத்தி வந்துள்ளது..பாடலை பாடியவர்:வெங்கட் பிரபு..எழுதியது யார் என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.பாடல் மிக அருமை..பாடலின் தொடக்க வரிகள்..

நம்மூர் சென்னையில நாள்தோறும் வீதியிலே
பல நூறு பொண்ணுங்களை பார்த்தேனே..

என்னோட நெஞ்சுக்குள்ளே எப்போதும் கண்ணுக்குள்ளே
உயிராக ஒருத்தியாகத்தான் வைச்சேனே..

பாடலை ஸ்கிரினில் பார்க்க ஆவலாக உள்ளது...

***********************************

நகைச்சுவை:-

மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்..
அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங் போவோங்க.
கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..

***********************************

கவிதை:

நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..


***********************************

தத்துவம்:

தூசி பட்ட கண்களும் காதல் பட்ட இதயமும்
எப்போதுமே கலங்கி கொண்டே தான் இருக்கும்..

***********************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் ஒழிக..!!


உன் ஒவ்வொரு SMS ம் என் நெஞ்சில் பால் வார்க்கின்றன
100 ருவா டாப் அப் போடுடா என்று வந்த ஒன்றை தவிர

**********************************

என் காதல் தேசத்தின் கடவுள் நீதான்..
ஆனால் என்னை ஏன் நாத்திகன் ஆக்கினாய்...

**********************************

காதல் தெய்வீகமானது
அதிக கட்டணம் செலுத்தினால்
சிறப்பு தரிசனம்..

**********************************

நீ நம் காதலுக்காக உயிரையும் கொடுத்திருப்பாய்..
உன் அப்பா அமெரிக்காவில்
மாப்பிள்ளை பாக்காமல் இருந்திருந்தால்..

**********************************

காதலுக்கு ஜாதி, மதம்,
அழகு, வயது என
எதுவும் தடையில்லை..

என் குடிசை வீட்டை நீ பார்க்கும் வரை..

**********************************

கடும் தவம் புரிந்தால் தான்
ஞானம் பிறக்குமாம்..

யார் சொன்னது
உன்னை காதலித்திருந்தாலே போதுமே..

**********************************
என் இதயமே நீதான் என்றாய்
உன் புதுக்கணவன்
இதய மாற்று
அறுவைச்சிகிச்சை நிபுணராமே!

**********************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சதுரகிரி யாத்திரை-ஒரு பயணப்பதிவு...

கடந்த சனிக்கிழமை அன்று நான் மற்றும் எனக்கு இணைய உலகத்தை விளக்கி எடுத்துரைத்த எனது கம்பெனியின் எம்.டி.மற்றும் சிலர் சதுரகிரிக்கு யாத்திரை சென்றிருந்தோம்.மிகவும் நல்ல சுற்றுலா பயணமாக எனக்கு அமைந்தது.. நல்ல சுவையான அனுபவம் கிடைத்தது.என்னை அழைத்துச் சென்ற எனது எம்.டி.க்கு நன்றிகள் பல..அதைப்பற்றிய பதிவுதான் இங்கே..

மனித நேயம் அறிந்த மனிதனே மகான் ஆகிறான்.பின்னாளில் தெய்வமும் ஆகின்றான்.உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறந்தான்.தன் பிறப்பின் நோக்கம் என்ன என்று தொடான்கினான்.தேடலின் சுவை அறிந்தான்.சுகம் தேடினான்.உணவு தேடி அலைந்தவன் உணர்ச்சிகளை வளர்த்தான்..உண்மையைத்தேடி அலைந்தவன் ஆன்மீகத்தை வளர்த்துக்கொண்டான்..

உணவு வேண்டும்...உறையுள் வேண்டும்..என லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதன் தேடத்தொடங்கினான்..இன்றைக்கும் தேடிக்கொண்டே இருக்கிறான்..நாகரீக வள்ர்ச்சியோடும் நவீன வசதிகளோடும்..காலங்கள் மாறினாலும் காரியம் ஒன்றுதான்..

உண்மையைத் தேடி திரிந்தவர்கள் மலைகளில் தங்களது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டனர்.தவத்திலும் ஞானத்திலும் நாட்களை செலவிட்டனர்.அங்கு தினமும் பெரிய கொடூரமான மிருகங்களை சந்திக்க நேர்ந்தது.மிருகங்களையும் நண்பர்களாக முற்பட்டான்..கண்களில் கனிவையும் உள்ளத்தில் அன்பையும் வைத்து பாசத்தோடு பழகினான்..மிருகங்களும் தங்களது வாழ்க்கையில் வித்தியாசம் காட்டின.அவர்களுடன் நெருங்கி பழகின..காலம் கடந்த பின் அவர்கள் ஆன்மிகவாதிகள் ஆனார்கள்..கலைகளை கற்று தேர்ந்தார்கள்..

சதுரகிரி..

சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி என்கிறார்கள்.எண்ணற்ற சித்தர்கள் பலர் சதுரகிரி மலையில் கூடி ஆன்மீக விவாதங்கள் நடத்துவது உண்டாம்.இதற்கென அவர்கள் பயன்படுத்தும் குகைகள் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் காணப்படுகின்றன.சித்தர்கள் ஏற்படுத்திய தீர்த்தங்கள் இன்றைக்கும் இருக்கின்றன..சித்தர்கள் வசித்த குகைகளில் மனிதர்களால் செல்ல இன்றளவும் இயலாத ஒன்றாகவே உள்ளது.

வான்மீகி,கோரக்கர்,கமலமுனி,சட்டைமுனி,அகத்தியர்,சுந்தரானந்தர்,கருவூரார்,அகப்பைச்சித்தர்,கொங்கணர்,தன்வந்திரி,பாம்பாட்டிச்சித்தர்,ராமதேவர்,
இடைக்காட்டுச்சித்தர்,திருமூலர்,போகர்,அழுகுணிச்சித்தர்,காலாங்கிநாதர்,மச்சமுனி,ஆகியோர் பதிணென் சித்தர்கள் எனப்படுவர்..

தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாக்குவதில்லை மகாலிங்க ஸ்வாமிகள்.மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா.."என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும்..பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன..நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன...அந்த நிகழ்வை பார்க்கவே அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது..

அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு புனிதமான இடம்...மிஸ் பண்ணாதீங்க..

புகைப்படங்கள் கிழே:-






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும்..(1/7/09)


இது ஒரு மொக்கைப்பதிவுதான்..அதாவது அவியல்,குவியல்,உட்கார்ந்து யோசித்தது,ரூம் போட்டு யோசித்தது,காக்டெயில்,கொத்து புரோட்டா,மாதிரி இதுவும் ஒன்னுங்க....எனக்கும் இந்த மாதிரி ஒரு பதிவு எழுத வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசைங்க..ஆனால் அதிகமான ஆணி பிடுங்குதல்,சரியான தலைப்பு கிடைக்காததால் எழுத இயலவில்லை..இந்த தலைப்பின் சொந்தக்காரர் அண்ணன் ஸ்ரீ-க்கு என் மனமார்ந்த நன்றிகள்..

*******************************************************************

போன வெள்ளிக்கிழமையன்று வெளியான நாடோடிகள் திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளது.அனைவரும் போய் பார்க்க வேண்டிய படம்.
சசிகுமார் இயக்குனராகவும்,தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் கலக்கி வருகிறார்..அவரது நடனம் கூட நன்றாக உள்ளது...சமீபத்திய மொக்கைப்படங்கள் பார்த்த எனக்கு இப்படம் ஒரு திருப்தியாக இருந்தது.இனி நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்கள்..ஆயிரத்தில் ஒருவன்,கந்தசாமி.நந்தலாலா..பொறுத்திருந்து பார்ப்போம்..

*******************************************************************

சமீபத்தில் வந்த திரைப்பட பாடல்களில் என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரத்தில் ஒருவன் தான்..படத்தில் இருக்கும் பத்து பாடல்களும் அருமையாக உள்ளது.இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமார் தன் பணியை செவ்வென செய்து உள்ளார்..இருந்தாலும் செல்வராகவன் படம் என்றாலே என் நெஞ்சினில் வருவது யுவன்சங்கர் ராஜாவின் இசைதான்..துள்ளுவதோ இளமை, 7யின் தாக்கம்...இப்படத்திலும் இசையமைத்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.இருப்பினும் ஜீ.வி.பிரகாஷ்குமாருக்கு ஹேட்ஸ் ஆப்...

பாடல்களை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்க.

*******************************************************************

அண்ணன் பைத்தியக்காரன் அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டி நேற்றோடு நிறைவுக்கு வந்தது.பல மூத்த பதிவர்கள் பங்கு பெற்ற இப்போட்டியில் நானும் பங்குபெற்றது மிக்க மகிழ்ச்சி..மொத்தம் 219 கதைகளாம்.என்னோட சிறுகதை படிக்க..

*******************************************************************

24-6-09 அன்று அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் தங்கைக்கு மதுரையில் இனிதே நடைபெற்றது..இதில் பங்குகொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி.சொல்லரசன் மற்றும் ஆதவா ஆகிய இரு முக்கிய பதிவர்களை முதன் முதலாக சந்தித்தேன்.தங்கைக்கு கல்யாணம் முடிந்த கையுடன் தனக்கும் பொண்ணு தேடிக்கொண்டு வருகிறார் அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்.விண்ணப்பம் செய்பவர்கள் செய்யலாம்..


*******************************************************************

வழக்கமாக நான் பதிவெழுதாத நாட்களில் நம்ம கடையின் நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கும்..வெறும் பத்து ஹிட்ஸ் வந்து இருக்கும்..அதுவும் நான்தான் பார்த்திருப்பேன்..கடந்த இரண்டு நாட்களாக தினமும் 100 பேர் வருகின்றனர்...என்னவென்று தணிக்கைகுழு வைத்து ஆராய்ச்சி செய்ததில் டாக்டர் தேவன் சாரின் பதிவுலக மன்மதன்கள் என்ற பதிவுதான் காரணம் என தெரியவந்தது..எனவே டாக்டருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
மேலும் டாக்டரின் சமீபத்திய பதிவான காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை அவரது மனைவி படித்துவிட்டாராம்..வீட்டில் ஒரே கலாட்டாவாம்..
மேலும் விவரங்களுக்கு தேவா சாரை அணுகவும்...

*******************************************************************

பிரபல பதிவர் அவர் தன் காதலியிடன் சண்டையிட்டுக்கொண்டு உள்ளாராம்..தொ(ல்)லைபேசியில் வந்த குறுந்தகவல் தான் காரணமாம்..நல்லா பார்த்து எஸ்.எம்.எஸ். அனுப்புங்க மக்கா

*******************************************************************

நகைச்சுவை:-

ஆசிரியர்: ஒவ்வொருவரும் அவங்கிட்ட இருக்கிற தனித்திறமைப் பற்றி சொல்லுங்க..
மாணவன்:நான் பின்னாலே நடப்பேன் சார்..
ஆசிரியர்:எவ்வளவு தூரம்.
மாணவன்:உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுதோ அவ்வளவு தூரம்..
ஆசிரியர்:...????

*******************************************************************

கவிதை:-

பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...

ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்...

*******************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS