கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சீனா ஐயா அவர்கள் அவர் வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்துக்கொண்டிருந்தார்.. அதற்கு போன ஞாயிற்றுக்கிழமைதான் விடை கிடைத்தது..நானும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளம்பி மதியம் அவரது வீட்டினை அடைந்தேன்..அவர் இருக்கும் அபார்மென்டை பார்க்கும் போதே நானும் அங்கேயே தங்கிவிடலாமோ என நினைப்பு வந்தது (காரணம் கேட்பவர்கள் தனியாக மின்னஞ்சல் பண்ணவும்). வீட்டிற்குள் நுழைந்தவுடன் வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்தவுடன் சீனா ஐயாவின் மனைவி அவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடுத்தார்கள்.மிகவும் அருமையாக இருந்தது..பின் சிறிது நேரம் கதைத்து விட்டு அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்தேன்..மிகவும் அழகாக இருந்தது..பின் மதிய உணவு சாப்பிட்டோம்.. சாதம்,சாம்பார்,கேரட் பொரியல்,என அருமையான விருந்து.இந்த விருந்தை கார்த்தி அண்ணா மிஸ் பண்ணிவிட்டார்..பின் மின்சாரம் தடை செய்யப்படவே இருவரும் பேராண்மை படத்துக்கு கிளம்பினோம்..படமும் அருமை,தியேட்டரும் அருமை.ஏனென்றால் சிவாகாசியில் இருக்கும் தியேட்டரை விட பல மடங்கு நன்றாக இருந்தது..பின் வீட்டிற்கு வந்தவுடன் கார்த்தி அண்ணா வந்தார்..அதன் பின் ஸ்ரீதர் அண்ணா வந்தார்..மொத்தத்தில் ஒரு பதிவர் சந்திப்பினை நடத்திவிட்டு கிளம்பினோம்..பதிவர் சந்திப்பினில் நானும் ஸ்ரீதர் அண்ணனும் ஒரு குறும்படம் எடுப்பது உறுதியானது..எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்..அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...
*************************
அது என்னமோ ஏதோ தெரியவில்லை..எனக்கு எவனோ ஒருவன் அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போய்கிறது..போன முறை சிவகாசி வந்தவுடன் அழைத்தார்கள்..என்னால் செல்ல இயலவில்லை..இதோ இந்த சனிக்கிழமையும் அப்படியே நடந்தது.நான் அழைக்கும் போது அவர் கொஞ்சம் பிஸி.அவர் அழைக்கும் போது நான் கொஞ்சம் பிஸி..நாம் இருவரும் அடுத்த முறையாவது சந்தித்துவிடுவோமா அண்ணா...
*************************
அண்மையில் பார்த்த படங்களில் என்னை வெகுவாக ஈர்த்தது பேராண்மை...படத்தில் பல இடங்களில் பொண்வண்ணன் பேசும் போது கட் செய்யப்படுகின்றன.இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்களையே சென்சார் அனுமதித்து தொலைக்காட்சிகளில் வெளியிடும் போது ஒரு நல்ல படத்தின் வசனத்தை கத்தரிப்பது நன்றாக இல்லை.. மற்றபடி படத்தில் நடித்து உள்ள அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம் போல் இருக்கிறது..
கடந்த ஞாயிற்றுக்கிழமை (24-05-2009) அன்று மாலை 5.00 மணி அளவில் மதுரை பதிவர்களின் சந்திப்பு இனிதே நடைபெற்றது.நான் மிகவும் ஆவலுடன் படிக்கின்ற பதிவுகளின் பதிவர்கள் என்னை கண்முன்னே நின்றனர்.மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.நல்ல பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது.இந்த மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி தந்த அண்ணன் கார்த்திகைப்பாண்டியனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட பதிவர்கள்:-
1.சீனா ஐயா:அசைபோடுவது என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.பதிவர் சந்திப்பின் முடிவின் போது கலந்து கொண்டார்.அவரது ஆசிர்வாதம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி
2.ஷேம் ஜார்ஜ்: தருமி என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.மிகவும் மூத்த பதிவர்.என்னைப் போன்ற இளைய பதிவர்களை ஊக்குவித்தார்.மேலும் கேமராவினை வைத்து படங்களை எடுப்பதி மிகவும் ஆர்வமாக இருந்தார்.அந்த ஐயாவினை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தேன்.
3.அருண்: வால் பையன் என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார். பதிவர் சந்திப்பிலே என்னை மிகவும் கவர்ந்த பதிவர்.சாதரணமான ஒரு இந்திய குடிமகனாக பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டார்.மிகவும் அருமையாக பேசினார்.பலரையும் தன் வால் திறமையால் பேசி வெற்றிபெற நினைத்தார்..ஆனால்.....
4.ராஜு: டக்ளஸ் என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார்.என்னை சூரத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்து என் எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள் கூறியவர்.இவரது பின்னூட்ட ரசிகன் நான்..வால் பையனை அடிக்கடி கலாய்த்துக் கொண்டிருந்தார்.அனைவரிடமும் மிக அன்பாக பழகினார்.
5.பாலகுமார்: சோலை அழகுபுரம் என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார்.இவருக்கும் வால்பையனுக்கும் ஏற்பட்ட விவாதங்கள் அருமையாகவும் பல விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் முடிந்தது.அனைவரது கேள்விக்கும் மிகவும் பொறுமையாக பதில் சொல்லிய அண்ணனை பார்க்கும் போது ஒரு கம்பீரம் தெரிந்தது.
6.கணேஷ் குமார்: இளைய கவி என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார்.சந்திப்பில் பல அறிவுரைகளையும் கருத்துக்களையும் பதிவர்களுக்கு வழங்கினார்.நன்றாக பழகினார்
7.ஸ்ரீதர்: ஸ்ரீ என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.நன்றாக பேசினார்.பல கருத்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்.மேலும் என்னை மிகவும் வாழ்த்தினார்...(சரி..சரி..கோபப்படாதீங்க)
8.சுந்தர்: தேனீ-சுந்தர் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.மிகவும் அன்போடு பழகினார்.மேலும் அவர் நான் இருக்கும் ஊரின் அருகில் வசித்திருக்கிறார்.அன்று பார்க்க இயலவில்லை.ஆனால் இம்முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
9.சுப்ரமணி: என்னோட்டம் என்னும் பெயரில் பதிவினை எழுதி வருகிறார்.இவரும் பதிவர் சந்திப்பில் பல அறிவுரைகளையும் கருத்துக்களையும் பதிவர்களுக்கு வழங்கினார்.இவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
10.தேவக்குமார்: தேவன் மாயம் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.சந்திப்பில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தார்.நன்றாக பேசினார்..
11.பீர் முகமது: ஜெய்ஹிந்துபுரம் என்னும் பெயரில் பதிவினை எழுதி வருகிறார்.வரும்போது பீர் கொண்டுவராவிட்டாலும் சைடிஸ்டிக் நிறைய வாங்கி வந்தார்.அவருக்கு நன்றிகள்.
12.ரவி: ஜாலி ஜம்பர் என்னும் பெயரில் பதிவு எழுதிவருகிறார்.என்னைப்போலவே மிகவும் அமைதியாக இருந்தார்.
13.அருண்: ஆங்கிலத்திலே மியூச்சுவல் பண்ட் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.மிகவும் கலகலப்பாக பேசினார்.
14.கார்த்திகைப்பாண்டியன்: பொன்னியின் செல்வன் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்..இந்த பதிவர் சந்திப்பு உருவாக காரணமாக இருந்தவர்..என்னை மிகவும் கவர்ந்த பதிவர்,ஆசிரியர்.எனக்கு பல கருத்துக்களை சொல்லியவர்.இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பதிவர்களை எல்லாம் எனக்கு காண்பித்த ஒரு நல்ல மனிதர்.என்னை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
15.அன்பு: ஓபன் ஹார்ட் என்னும் என்னும் பெயரில் பதிவு எழுதுகிறார்.வேற யாரும் இல்லைங்க அது நான் தான்.அண்ணன் கார்த்திகைப்பாண்டியனின் அழைப்பின் பேரில் சென்றேன்.சென்றவுடன் மதுரையில் நன்றாக மழை பெய்தது..என் காலடி பட்டவுடன் வானமே வழிவிட்டு வெளிச்சம் காட்டியது.சந்திப்பினில் அனைவரது கருத்துகளையும் கேட்டுக்கொண்டிருந்தேன்.
இறுதியில் தொலைபேசியில் அழைத்து பேசிய ரம்யா அக்காவிற்கு என் நன்றிகள்.முதன் முதலாக அந்த அக்காவுடன் பேசினேன்.பேச வாய்ப்பு கொடுத்த அருண் அண்ணனுக்கு நன்றிகள் பல..
மற்றும் பதிவர் சந்திப்பினில் கலந்து கொண்ட இரு வாசகர்களுக்கும் நன்றிகள்..
நேற்று (05.04.2009) காலை 10.00 மணி.அப்பொழுதுதான்...தமிழ் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பேர் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்..மிகக் குறுகிய காலத்தில் நன்கு பிரபலமானவர்..எனக்கு பட்டாம்பூச்சி விருதினை கொடுத்து என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியவர்.இவரை சொன்னால் இந்த ஒரு பதிவு காணாது என கருதுகிறேன்.அவர் வேரு யாருமில்லை..கார்த்திகைப்பாண்டியன் அண்ணன்.அவர்களை முதன் முதலாக நேற்று தான் சந்தித்தேன்..என்னுடைய முதல் பதிவர் சந்திப்பும் இதுவே..மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் என்றே சொல்ல வேண்டும்..
அதற்கு முன் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..நான் இந்த பதிவு எழுதுவது என் அம்மாவிற்கு ஏற்கனவே தெரியும்..அவர்களும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்..அவர்கள் பெரிதாக படிக்காவிட்டாலும் நான் நன்றாக படிக்க வேண்டும் என்பதே அவர்கள் ஆசை..காலையில் கிளம்பி நான் வீட்டை விட்டு வெளியேறும் போது எனது வீட்டின் அருகில் உள்ள ஒரு பாட்டி என்ன ஐயா..இன்னிக்கு சீக்கிரமாக வேலைக்கு போகணுமா.? எனக்கேட்கும் போது எனது அம்மா,இல்லை சித்தி அவன் கதை எழுதுவதை பார்த்துஒரு வாத்தியார் அவனை பார்க்கணும் சொன்னாராம்.அதான் போறான்.என கண்கள் கலங்க கூறினார்..அதை பார்த்த என் உள் மனதினுள் ஏதோ ஒரு நெகிழ்வு.என்னவென்று சொல்ல..
காலை பத்து மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை வந்து அடைந்தேன்..மிகவும் பரபரப்பாக காணப்பட்டேன்.எப்படி இருப்பாரோ தெரியவில்லையே என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் என்னை ரொம்ப நேரம் காக்க வைக்காமல் வெகு விரைவில் வந்தார் கார்த்திகைபாண்டியன் அண்ணன்..பின் இருவரும் ஒன்றாக அவரது வீட்டிற்கு சென்றோம்..மிகவும் அமைதியான வீடு.அன்பான அப்பா..பாசமுள்ள அம்மா.வயதான அம்மாச்சி..என வீட்டினுள் உள்ளவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்..அனைவரும் என்னிடம் அன்பாக பழகினர்..
காலை உணவு முடித்துவிட்டு இருவரும் மீனாட்சி அம்மனை தரிசிக்க சென்றோம்..கோவில் கும்பாவிஷேகம் என்பதால் மிகவும் கூட்டமாக காணப்பட்டது.நான் முதன் முதலில் அந்த கோவிலுக்கு நேற்று தான் சென்றேன்.நன்றாக இருந்தது.கோவில்களின் சிறப்புகளை எனக்கு சொல்லிக்கொண்டே வந்தார் கார்த்திகை அண்ணன்..கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அம்மனை தரிசிக்க இயலவில்லை.பின் இருவரும் திருமலை நாயக்கர் மஹால் சென்றடைந்தோம்.நல்ல அமைதியான இடம்.அந்த இடத்தின் சிறப்பை சொல்லிக்கொண்டிருந்த வேளையில் அங்கே ஒரு இளைஞனும் இளைஞியும் கடலை போட்டுக்கொண்டிருந்தனர்..அதைப் பார்த்து அண்ணன் மிகவும் ஆத்திரப்பட்டார்..சிறப்புமிகுந்த அந்த தலங்களை மக்கள் பயன்படுத்தும் முறைகள் மிகவும் மோசமாக உள்ளது..பின் இருவரும் வாசுதேவன்(அகநாழிகை) அண்ணனிடம் தொலைபேசியில் உரையாடினோம்.முதன் முதலில் நான் அவருடன் பேசினேன்..பின் இருவரும் ஒன்றாக தெப்பக்குளத்தினை ரசித்து விட்டு வீடு திரும்பினோம்.
மதிய உணவு அம்மாவின் கைவண்ணத்தில் மிகவும் ருசியாக இருந்தது.பின் சொல்லரசன் அண்ணனிடம் இருவரும் தொலைபேசியில் உரையாடினோம்..அவருடன் பேசுவதும் இதுவே முதல் முறை..நன்றாகப்பேசினார்..பின் அம்மா,அப்பா,அம்மாச்சியிடம் விடைபெற்று வீடு திரும்பினேன்..என்னை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்றார் அண்ணன்..மிகவும் ஒரு நல்ல அனுபவம்..என்னை மென்மேலும் எழுத வேண்டும் எனத்தூண்டியது.என்னை அழைத்து விருந்தளித்த கார்த்திகைப்பாண்டியன் அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....
நான் திருமங்கலத்தில் இருந்து சிவகாசி வரும் பேருந்தில் ஒரு சிறுமியின் செயல் என்னை மிகவும் ரசிக்க வைத்தது.பேருந்தில் அதிகமான கூட்டம்.அந்த சிறுமியின் சேட்டைகளை ரசித்துக்கொண்டே வந்தேன்.அவளது அம்மா கண்டித்துக்கொண்டே வந்தார்..எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்..உன் பெயர் என்ன என்று கேட்டேன். உடனே அந்த சிறுமி உங்க பெயர் என்ன? எனக்கேட்டாள்.நான் எனது பெயரை சொன்ன பிறகே அவள் பெயரை சொன்னாள் 'ஜோதி' என்று.இருவரும் மழலை மொழியில் பேசிக்கொண்டு வருகையில் அம்மா எனக்கு பசிக்குது என்றாள்.உடனே அவள் தாய் ஒரு வெள்ளரிக்காயை எடுத்துக் கொடுத்தார்கள்.அவள் அதை அதை வாங்கி பாதியாக பிய்த்து 'இந்தாங்க உங்களுக்கு' என்றாள்..அந்த சிறுமியின் செயலை எண்ணிக்கொண்டே சிவகாசி வந்து சேர்ந்தேன்.
சிவகாசியில் பொங்கல் என்பதால் மக்கள் நடமாட்ட்ம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.அனைவருக்கும் ஊதியத்தொகை(போனஸ்) வழங்கும் நாள்..அந்த சிறுமியின் செயலை எண்ணிக்கொண்டே போகும் வேலையில் இருவர் மிகவும் அதிகமாக குடித்துவிட்டு நடுரோட்டினில் நாம் என்ன செய்கிறோம் என்பது கூட அறியாமல் படுத்துக்கிடந்தனர்..அதில் ஒருவரது மனைவி அவரை தூக்கவும் முடியாமல் அங்கே விட்டுச் செல்லவும் இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார்..
'எங்க ஊர் திருவிழா அதிகமான கூட்டம் கோவிலில் அல்ல: 'டாஸ்மாக்'கில்'