HATS OFF ABINAYA
சமீபத்தில் நான் பார்த்த படங்களிலேயே என்னை ரொம்ப கவர்ந்த படம் களவாணிதாங்க..மூன்று நிதிகளின் பிரச்சினையால் எங்கள் ஊரில் ஒரு பிட்டுபட தியேட்டரில் அந்த படத்தை ஓட்டினார்கள்.. சரி, நல்ல படத்தை எங்க போய் பார்த்த என்ன என்று எண்ணிக்கொண்டு வழக்கம்போல் ஓனரின் உபயத்தோடு படத்துக்கு சென்றேன். படம் நன்றாக இருந்தாலும் படம் பார்த்த இடம் சரியில்லை என்பதால் படம் மனதில் அவ்வளவாக நிலைக்கவில்லை..இருப்பினும் ஹரிஸ் ராகவேந்திராவின் குரல் மட்டும் நெஞ்சில் ஒலித்துக்கொண்டு இருந்தது..சரி இருக்கவே இருக்கு திருட்டு டி.வி.டி என்று வாங்கிவிட்டேன்..இதுவரை இரண்டு நாளில் நான்கு முறை பார்த்தாச்சு.. படம் பார்த்ததன் விளைவா என்னவென்று தெரியலை, தோழி பேசும் போதெல்லாம் "கட்டிக்கிறேன்னு சொல்லு" என்று சொல்லச்சொல்கிறேன்..படத்தின் கதாநாயகி ஓவியாவுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்ங்க..
நான் எப்போதுமே கிரிக்கெட் விளையாடும் போது ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன்..கடந்த சில வாரங்களாக நான் சரியாக விளையாடாத காரணத்தினால், வழக்கமாக நான்காவது ஆளாக களமிறங்கும் நான் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தேன்.. சரி டீம்லயாவது சேர்த்துக்குறாங்களே அப்படிங்கிற நம்பிக்கையில நானும் விளையாட போனேன்.. நேத்து எங்களுக்கும் எங்கள் ஊரின் அருகில் உள்ள விஸ்வநத்தம் என்கிற ஊருக்கும் மேட்ச்.. முதலில் பேட் செய்த அவர்கள் 16 ஓவர்களுக்கு 96 ரன் அடிச்சாங்க.. நாங்களும் திரும்ப மன தைரியத்தோட களமிறங்கி நல்லாத்தான் விளையாடுனோம்.. நானோ சந்தோஷமாக இருந்தேன், நல்லவேளை நாம இன்னிக்கு இறங்க வேண்டி இருக்காது என நினைத்துக்கொண்டிருக்கையில் வரிசையாக எல்லோரும் பேட்டை கொண்டுபோவதும், திரும்ப கொண்டு வருவதுமாய் இருந்தனர்.. இறுதியில் 1 ஒவருக்கு 4 ரன்கள் என்று இருக்கையில் நான் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே மனதை தைரியப்படுத்திக்கொண்டு களமிறங்கினேன்.. நான் சந்தித்த முதல் பந்தே பவுன்சர்.. நான் அம்பயரிடம் நோ-பால் கேட்க, அம்பயர் என்னை பார்த்து நீ இன்னும் வளரணும் தம்பி என்றார்.. கேட்டு அசிங்கப்பட்டுடீயேடா அன்பு என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அடுத்த பந்தை வீச அதுவும் கீப்பர் கைக்கே போனது. கீப்பர் தவறவிட்டவுடன் என்னோட பாட்னர் மிகவும் சிரத்தை ஓடி வர நானும் ஓடினேன்..அப்பாட தப்பிச்சோம் அப்படின்னு நினைக்கும் போதே பாவிப்பையன் சிங்கிள் தட்டிவிட்டான்..கடைசி 3 பந்து 2 ரன்கள்.. மனதிற்குள் ஆரோமலே பாடல் ஒலிக்க நானும் எப்படியாவது அடிக்கவேண்டும் என்று எத்தனிக்க மறுபடியும் மிஸ்ஸிங்.. இம்முறை கீப்பர் என்னருகே நிற்பதனால் பைஸ் ரன் கூட எடுக்கமுடியவில்லை. 2 பந்துகள் 2 ரன்கள்.. சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம் என்று முணுமுணுத்துக்கொண்டே மட்டையை ஓங்கினேன்.. என்னையும் அறியாமல் பந்து தானாகவே மட்டையில் பட்டு பவுண்டரி லைனை தொட்டது..அன்பு என்னிக்குமே நீ சிங்கம்தான்டா...
தயவு செய்து படிக்கிற மக்கள் கமெண்ட் போடுங்க.. வாழ்த்த மனமில்லை என்றாலும் ரெண்டு வார்த்தை திட்டிட்டாவது போங்க..