புது வருடத்தில் என் மனதில் தோன்றிய சில வரிகள்அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

இந்த வருடத்தில் நீங்கள் தொடங்குகின்ற எந்தவொரு செயலும் நன்றாக முடிய என் வாழ்த்துகள்!!!

2009-ம் வருடம் எப்படி இருக்க வேண்டும்!!!

ஈழம் ரத்தத்தால் ஈரம் ஆகாமலும்;
பாகிஸ்தான், பூச்செண்டுக்குள் வெடிகுண்டு வைத்து அமைதி பேச்சுவார்த்தைக்கு வராமலும்;
இந்தியா, ஆயுத வியாபாரி அமெரிக்காவுக்கு வாடிக்கையாளன் ஆகாமலும்;
தமிழகம், நடிகனை அரசியலுக்கு வரச்சொல்லி போராட்டம் நடத்தாமலும்....

அம்மா
பார்த்து பார்த்து நீ என்னை அலங்கரிப்பாய்,
புது புடவை பொருந்தாத நிறத்தில் ரவிக்கை
உனக்கு மட்டும் தீபாவளி எப்போதும் இப்படித்தான்!
என் கண்கள் பார்த்தே மனதை படிக்கும் வித்தை
உனக்கு கை வந்த கலை............!
கோபமாய் கத்துவேன்.......
செல்லமாய் கொஞ்சுவேன்........
புரிதலோடு ஏற்க உன்னால் மட்டுமே முடியும்..............!
என் துயர தருணங்களில் ஓடி வருவேன் உன்னிடம்
என் ரனங்களுக்கான மருந்து
கிடைத்து விடும் உன் மடியில்...............!
தாமதமாய் வீடு திரும்புவேன்
தவித்து போவாய்.........
தடுமாறி ஆங்கிலம் (english) பேசுவேன்
சிலிர்த்து போவாய்...............!
"விவரமான பையன் அவன்"
என்று என்னை ஊர் சொன்னாலும் நான் குழந்தை
என்ற நினைப்பு எப்போதும் உனக்கு.........!
வாழ்க்கை தந்தாய்........
வாழ வழி ஏற்ப்படுத்தினாய்.........
துவண்டு விடும் போதெல்லாம்
தூக்கி நிறுத்தி சக்தி தந்தாய்.........!
அன்பு துளிர் விட்டுக்கொண்டே இருக்கும்
அசாத்யம் உனக்குள் மட்டும் எப்படி.......?

அதனால்தான்
கடவுளின் மாற்றாய்.........
கடவுளினும் மேலே...........
சரியாய் பொருந்துகிறாய்....................அம்மா............. !!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

how can you write a so cool blog,i am watting your new post in the future!

தேவன் மாயம் said...

என் துயர தருணங்களில் ஓடி வருவேன் உன்னிடம்
என் ரனங்களுக்கான மருந்து
கிடைத்து விடும் உன் மடியில்...............!
தாமதமாய் வீடு திரும்புவேன்///

happy new year

Deva

*இயற்கை ராஜி* said...

suuupppeerrr:-)