2009-வில் தமிழ் சினிமா...


இந்த 2009-ம் வருடத்தில் மட்டும் தமிழ் சினிமாவில் 125 படங்கள் வெளியாகியுள்ளனவாம்..முதலில் இந்த 125 படங்களில் சில படங்களின் பெயர்களை பார்த்தால் இந்தப்படம் எப்போது வந்தது என இந்த அடியேனை அதிகமாக சிந்திக்கவைக்கிறது..பதிவுலக விமர்சன நாயகன் கேபிலார் அண்ணன் கூட அந்த படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை....

அந்தப்படங்களின் பெயர்கள்:-

கஜா,இரு விழிகள்,ஒரே மனசு,புதிய பயணம்,சாமி சொன்ன சரிதான்,பேட்டராசு, வெட்டாட்டம், இரு நதிகள்,பச்சையாபுரம்,தமிழகம்,தலையெழுத்து,கரகம்,நாளை நமதே,கண்ணா நீ எனக்கு தாண்டா,வேடப்பன்,குடியரசு,ஒலியும் ஒளியும்...

இந்த படங்களைப்பற்றி தகவல் அறிந்தவர்கள் தயவு செய்து அந்தப்படங்களின் கதாநாயகன்,கதாநாயகி யார் என தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து நாசமாய் போன படங்கள்:-

நான் கடவுள்:-

ஆர்யாவின் மூன்று வருட கடுமையான உழைப்பு, பாலாவின் இயக்கம்,இளையராஜாவின் இசை,என மிக பிரம்மாண்டமாக தோன்றிய படம் பத்து நாள் கூட எங்க ஊரில் ஓடவில்லை..மிகுந்த எதிர்பார்ப்பும்,மோசமான திரைக்கதையும் இப்படத்திற்கான தோல்வியாக அமைந்தது...

கந்தசாமி:-

எல்லோரையும் விட நான் அதிகமாக நம்பினேன் விக்ரமை...பீமாவின் தோல்வியை தொடர்ந்து ஒரு நல்ல படம் கொடுப்பார் என நினைத்தேன்..படம் பார்த்தபின் இந்த படத்தை மூன்று வருடமாய் எடுக்க என்னதான் இருக்கிறது என்று கடைசிவரை விளங்கலை...அதிலும் ஸ்ரேயா முடியலைடா சாமி...

ஆதவன்:-

சொல்லத்தேவையே இல்லை..சூர்யாவால் இப்படியும் படம் நடிக்க முடியுமா என்று இந்த அடியேனை யோசிக்கவைத்த படம்..இந்த படத்தினை பற்றி விமர்சனமே போட்டிருப்பதால் அங்கு சென்று பார்க்கவும்...

வில்லு:-

படத்தில் முதல் பாதி மட்டுமே பார்த்தேன்..நண்பர்களின் எச்சரிக்கையால் இரண்டாம் பாதி பார்க்காமல் பத்திரமாக வீடு வந்த சேர்ந்த படம்..மீதி பாதியை தைரியம் வரவழைத்து கொண்டு திருட்டு டி.வி.டி.யில் பார்க்க முயற்சித்தேன்..பார்த்தபின் தெரிந்தது நம் நண்பர்கள் சொல்வது எப்போதுமே நம்
நன்மைக்குத்தான் என்று..

வேட்டைக்காரன்:-


இருந்தாலும் என் மன தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்...எப்படியும் ஆதவனை மிஞ்சிவிடுமோ என்று பயந்து கொண்டே தியேட்டருக்கு சென்ற படம்.. நான்தாண்டா விஜய் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தார்..படத்தை பார்க்கும் போது ஆதவனையாவது வடிவேலு காப்பாற்றினார்..இந்தப்படத்தை...?

யோகி:-

இந்த படம் வருவதற்கு முன் அமீர் கொடுத்த பேட்டி என்ன..?அவர் இமேஜ் என்ன..? அத்தனையும் ஒரே படம் தலைகீழாக கவிழ்த்துவிட்டது..

பொக்கிஷம்:-

இது சேரனுக்கு மட்டுமே பொக்கிஷம்....எத்தனை நாளைக்குதாங்க நவ்யா நாயர்...பத்மபிரியா...வெளியில வாங்க பாஸ்....

படிக்காதவன்:-


சூர்யாவிற்கு அடுத்தபடியாக நான் விரும்பி பார்ப்பது தனுஷ் படங்களே..இந்த படத்துல ஏதோ மிஸ்ஸிங் தலைவா...குட்டியில் மீட் பண்ணலாம்..

வாமனன்:-


இந்த பட வரிசையிலே மிக மிக முக்கியமான படம் வாமனன்..இந்த மாதிரியினா படம் என் வாழ்நாளில் இனிமேல் எனக்கு கிடைக்காது என ஜெய் ஒரு பேட்டி அளித்தார்..ஆனால் அதன் அர்த்தம் படம் பார்த்தபின் புரிந்தது...

இன்னும் பல படங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் என்னால் பார்க்க இயலவில்லை...சோ நோ கமெண்ட்ஸ்...

*************************

என் பார்வையில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்:-

அயன்:-

இதுவரை 21 முறை பார்த்துவிட்டேன்..இன்னும் பார்க்க ஆசையாக உள்ளது..படத்தில் சூர்யாவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்..அவனது காஷ்டியூம்,நடிப்பு,பெர்பார்மன்ஸ் இன்னும் என்ன வேணாலும் சொல்லலாம்..ஹாரிஸின் இசையும் ஆனந்தின் இயக்கமும் அட்டகாசம்...2009-ன் பிளாக் பஸ்டர்..மொத்தத்தில் சன் பிக்ஸரின் முதல் வெற்றி...

நாடோடிகள்:-


சசிகுமாருக்கு இரண்டாவது முத்திரை பதித்த படம்..படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சூப்பர்..சசிகுமாரின் அடுத்த படத்திற்காக வெயிட்டிங்...

பேராண்மை:-

சாக்லேட் ஹீரோ மாதிரி வலம் வந்த ஜெயம் ரவியை கோமணத்தோடு திரையில் காட்டிய படம்..தமிழ் சினிமாவின் வழக்கமான படங்களை விட கொஞ்சம் மாறுதல்..

பசங்க:-

சிறுவர்களையும் வைத்தும் படம் எடுக்க முடியும் என நிருபித்துக்காட்டினார் பாண்டியராஜன்.. மிகவும் அருமையான படம்..

வெண்ணிலா கபடிக்குழு:-


கிராமத்திய மண் வாசனையான படம்...கதாநாயகன் பெயர் தெரியவில்லை...சரண்யாவின் அழகுக்காவே இப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்..

யாவரும் நலம்:-

திகில் படம்..பிண்ணனி இசையும் சரி திரைக்கதையும் சரி கலக்கல்..


ஈரம்:-

ஆதி, நந்தா,சிந்து மேனன் இவர்களுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த படம்..தண்ணீரை காட்டியே பயமுறுத்தினாங்க....

உன்னைப்போல் ஒருவன்:-

காமன் மேன்..

ரேனிகுண்டா:-

இன்னொரு முறை பார்க்கனும்...

*************************

2009-ல் வெளியான 125 படங்களின் பெயர்கள்:-

1.
2.படிக்காதவன்
3.வில்லு
4.காதல்னா சும்மா இல்லை
5.என்னைத்தெரியுமா
6.வெண்ணிலா கபடிக்குழு
7.கஜா
8.சற்று முன் கிடைத்த தகவல்
9.பஞ்சாமிர்தம்
10.குடியரசு
11.பெருமாள்
12..நா.07-அல-4777
13.சிவா மனசுல சக்தி
14.தீ
15.இன்னொருவன்
16.யாவரும் நலம்
17.1997
18.ஆறுபடை
19.அடடா என்ன அழகு
20.நேசிக்கிறேன்
21.பட்டாளம்
22.அயன்
23.நாளை நமதே
24.கார்த்திக் அனிதா
25.ஆனந்த தாண்டவம்
26.நாள் நட்சத்திரம்
27.மரியாதை
28.குரு என் ஆளு
29.குங்குமப்பூவும் கொஞ்சுப்புறாவும்
30.இளம்புயல்
31.பசங்க
32.நீயூட்டனின் மூன்றாம் விதி
33.பிரம்மதேவா
34.சர்வம்
35.ராஜாதிராஜா
36.தோரணை
37.மாயாண்டி குடும்பத்தார்
38.குளிர் 100 டிகிரி
39.மஞ்சள் வெயில்
40.ராகவன்
41.மாசிலாமணி
42.முத்திரை
43.வால்மீகி
44.நாடோடிகள்
45.ஒலியும் ஒளியும்
46.புதிய பயணம்
47.நீ உன்னை அறிந்தால்
48.சிரித்தால் ரசிப்பேன்
49.உன்னைக்கண் தேடுதே..
50.தொட்டுச் செல்லும் தென்றலே
51.வாமனன்
52.தலையெழுத்து
53.இந்திரவிழா
54.வெடிகுண்டு முருகேசன்
55.வைகை
56.அச்சமுண்டு அச்சமுண்டு
57.மோதி விளையாடு
58.மலையன்
59.ஐந்தாம் படை
60.அந்தோணி-யார்
61.ஆறுமனமே
62.மலை மலை
63.சிந்தனை செய்
64.ஞாபகங்கள்
65.எங்கள் ஆசான்
66.நேற்று போல் இன்று இல்லை
67.மாதவி
68.ஈசா
69.சிவகிரி
70.பொக்கிஷம்
71.நினைத்தாலே இனிக்கும்
72.மதுரை சம்பவம்
73.வண்ணத்துபூச்சி
74.அழகர் மலை
75.நேசி
76.ஈரம்
77.உன்னை போல் ஒருவன்
78.சொல்ல சொல்ல இனிக்கும்
79.ஆறுமுகம்
80.திரு திரு துறு துறு
81.மதுரை டூ தேனி
82.சூரியன் சட்டக்கல்லூரி
83.கண்ணுக்குள்ளே
84.மூணார்
85.வேடப்பன்
86.பேராண்மை
87.கண்டேன் காதலை
88.ஆதவன்
89.ஜெகன் மோகினி
90.சா..பூ.திரி
91.கரகம்
92.அதே நேரம் அதே இடம்
93.வைதேகி
94.கண்ணா நீ எனக்கு தாண்டா
95.பாலைவனச்சோலை
96.தம்பிவுடையான்
97.ஸ்வேதா
98.விழியிலே மலர்ந்தது
99.தமிழகம்
100.மத்திய சென்னை
101.யோகி
102.வேலு பிரபாகரனின் காதல் கதை
103.பிஞ்சு மனசு
104.எதுவும் நடக்கும்
105.பச்சையாபுரம்
106.ரேனிகுண்டா
107.வெட்டாட்டம்
108.கந்தசாமி
109.பேட்டராசு
110.லாடம்
111.இரு நதிகள்
112.எங்கள் ராசி நல்ல ராசி
113.மெய்ப்பொருள்
114.சாமி சொன்ன சரிதான்
115.புதிய பயணம்
116.ஒரே மனசு
117.இரு விழிகள்
118.தோழி
119.வேட்டைக்காரன்
120.நான் அவன் இல்லை-2
121.கந்தக்கோட்டை
122.ஓடிப்போலாமா
123.புதிய பார்வை
124.நாய்க்குட்டி
125.நான் கடவுள்

*************************

2010-ல் ஆவலாக எதிர்பார்ப்பது:-

சிங்கம்,பையா,ரோபோ,தமிழ்படம்,சுறா,அங்காடித்தெரு,நந்தலாலா,ஆயிரத்தில் ஒருவன்,..

நன்றி
:- விக்கிபீடியா..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS