கடந்த ஒரு மாதமாக தீபாவளி சீக்கிரம் வராதா என எதிர்பார்த்த பல கோடி மக்களில் நானும் ஒருவன்..காரணம் ஒன்றே ஒன்று தான்..வேட்டைக்காரனும் ஆதவனும் ஒரே தேதியில் வெளியிடுவதுதான்..கடைசி நேரங்களில் வேட்டைக்காரன் வெளியிடவில்லை என உறுதியானது..இருப்பினும் என் மனம் சூர்யா,,சூர்யா,,என கத்திக்கொண்டிருந்தது..செல்போனில் காலர்டீயூன் முதல் கணிணியில் நான் தினமும் கேட்கும் முதல் பாடல் என ஆதவனே இருந்தான்...
ஒருவளியாக தீபாவளியும் வந்தது..சூர்யாவின் தீவிர ரசிகன் என்பதால் என் சொந்த செலவிலேயே என் நண்பர்களுக்கும் டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருந்தேன்..மதியம் 2.30க்கு படம்..நானோ 12.30க்கே கிளம்பிவிட்டேன்..ஒவ்வொரு நண்பனுக்கும் போன் போட்டு வரசொல்லி தியேட்டருக்குள் நுழையும் போது என் நண்பனின் கையில் இருந்த 1000 வாலா சரவெடியை போட்டு பட்டையைக்கிளப்பினோம்...
ஒருவளியாக தீபாவளியும் வந்தது..சூர்யாவின் தீவிர ரசிகன் என்பதால் என் சொந்த செலவிலேயே என் நண்பர்களுக்கும் டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருந்தேன்..மதியம் 2.30க்கு படம்..நானோ 12.30க்கே கிளம்பிவிட்டேன்..ஒவ்வொரு நண்பனுக்கும் போன் போட்டு வரசொல்லி தியேட்டருக்குள் நுழையும் போது என் நண்பனின் கையில் இருந்த 1000 வாலா சரவெடியை போட்டு பட்டையைக்கிளப்பினோம்...
நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம்...
தியேட்டரில் சூர்யா என எழுத்து வரும்போது விசில் சத்தம் விண்ணை பிளந்தது..படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் படத்தில் எல்லோரும் இங்கிலிஸ் பீசுலே பேசுனாங்க...சரி படம் எங்கேயோ போகப்போகுது என நினைத்துக்கொண்டிருந்தேன்.சூர்யா கையில் மவுத் ஆர்கனுடன் வரும்போது உடம்பெல்லாம் ஒரே வித்தியாசமான அனுபவம்..
எதிலும் குறிபார்த்து சுடுகின்ற சூர்யா ஒருமுறை குறி தவறிவிட அவனை பத்து நாட்களுக்குள் கொன்று விடுவதாக சபதம் எடுக்கிறார்..தியேட்டரில் சரோஜாதேவி பளபளக்க,,நயன்தாரா பாட்டி மினுமினுக்க என ஒரே காமெடி..கிட்டத்தட்ட ஒரு ஐம்பது பேர்..எப்போதும் திரையில் இருந்தார்கள்..எதற்கென்றே தெரியவில்லை..
முதல் பாதி முடிவதற்குள் நான் சிறிது தூங்கிவிட அருகிலிருந்த நண்பன் என்னடா மாப்ள தூங்கிட்ட...
முதல் பாதி முடிவதற்குள் நான் சிறிது தூங்கிவிட அருகிலிருந்த நண்பன் என்னடா மாப்ள தூங்கிட்ட...
அது ஒன்னுமில்லைடா...சிரித்துக்கொண்டே சமாளிப்பதற்குள்..
இடைவேளை...
என்னடா படம் இவ்வளவு மொக்கையா இருக்கு..
வடிவேலு இல்லைனா படம் இவ்வளவு தூரம் கூட வந்துக்காதுடா மச்சான் என்றான் இன்னொருவன்...
நான் தூக்கக்கலைப்பை போக்க ஒரு காபி குடித்துவிட்டு,விடு மச்சான் இனிமே படம் விறுவிறுப்பா போகும்டா என அவனுக்கு நம்பிக்கை அளித்துவிட்டு நானும் சிறிது தைரியத்துடன் வந்து உட்கார்ந்தேன்..
இடைவேளைக்கு பின் பன்னிரண்டு வயது சூர்யா..ஒரு பத்து நிமிட காட்சி மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி இருந்தது....மற்றபடி விஜய் அஜித் என அனைத்து நடிகர்களும் நடித்த கமர்சியல் படங்களின் தொகுப்பு..ஹசிலி பிசிலியே ரசமளி என்ற பாடல் திரையில் வரும் போது தியேட்டரில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சற்று கண்முழித்து பார்த்தனர்..
படத்தின் பிளஸ்:-
1.சூர்யா..சூர்யாவின் நடிப்பு..
2.வடிவேலுவின் காமெடி..
படத்தின் மைனஸ்:-
1.பிண்ணனி இசை..
2.கதை,திரைக்கதை,
3.சண்டைக்காட்சிகள் (குறிப்பாக கிளைமேக்ஸ் சண்டை)
4.நயன்தாரா..(தயவு செய்து இந்த பாட்டி இனிமே தமிழ் சினிமாக்கு வேணாம்)
இன்னும் நிறைய இருக்கு...
(இனிமேலும் உங்க மூனு பேரை ஒன்னுபோல பார்த்தேன்..)
படம் முடிந்து வெளிவருகையில்..
நண்பன் ஒருவன்...மாப்ள ஒரு உண்மையை சொன்னா கோவிச்சுக்கிட மாட்டீயே,,,
சொல்லுடா....
இந்த படத்துக்கு குருவி எவ்வளவோ பெட்டர்....
என்னடா இப்படி சொல்லிட்டே...சரி விடுடா...
எல்லோருக்கு ஜெயிக்கிற காலம் வரும்..
புல் கூடத்தான் பூமியை பிளந்து வரும்
இதுக்கு பதிலா பேராண்மைக்கு போய் இருக்கலாம்டா...
விடு மாப்ள..இதுக்கெல்லாம் சிங்கம் பதில் சொல்லும்டா..என்று மனதை தேற்றிக்கொண்டேன்...
டிஸ்கி:-
1.மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...வேட்டைக்காரனை
2.தற்சமயம் செல்போனில் காலர்டியூனும் மாற்றப்பட்டுள்ளது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
1.மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...வேட்டைக்காரனை
2.தற்சமயம் செல்போனில் காலர்டியூனும் மாற்றப்பட்டுள்ளது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
53 பின்னூட்டங்கள்:
உனக்கு சேட்டை வர வர ஜாஸ்தியாப் போச்சு..
//படத்தின் பிளஸ்:-
1.சூர்யா..சூர்யாவின் நடிப்பு..//
சூர்யா இந்தப் படத்துல எங்கப்பா நடிச்சு இருக்கார்? படம் ஓரளவு பாக்குற மாதிரித்தான்ப்பா இருக்கு.. வடிவேலுக்காக ஓடும்..
ஹாஹாஹா.. வேட்டைக்காரன் இவ்வளவு மோசமாக இருக்காது என நம்புகிறேன்
நானும் இதைப் பார்த்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டேன். வேற என்னத்தைச் சொல்ல?
இதையும் படீங்க.
ஆதவன் – முற்றுமுழுதாக ஒரு பார்வை
/விடு மாப்ள..இதுக்கெல்லாம் சிங்கம் பதில் சொல்லும்டா..என்று மனதை தேற்றிக்கொண்டேன்...
//
என்னா ஒரு நம்பிக்கை.. கார்க்கிக்குதான் எவ்வள்வு சந்தோஷம். :)
கேபிள் சங்கர்
வெள்ளி மலர் போட்டி இலக்கம். 8க்கு ; "ஆதவன் - விமர்சனம்" என்ற தலைப்பின்
கீழ் அமையும் பதிவுகளை சமர்ப்பிக்கலாம்.
இந்தபோட்டியில் பூச்சரம் அங்கத்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து
பதிவர்களையும் ஈடுபடுத்தும் புது முயற்சி பரீட்சிக்கப்படுகின்றது. எனவே
இலங்கைப்பதிவர்கட்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படிருந்த போட்டி அனைத்து
பதிவர்கட்காகவும் திறந்துவிடப்பட்டுள்ளது.
http://poosaram.blogspot.com/
நா கூட இது வேட்டைக்காரன் விமர்சனம் மாதிரி இருக்குமோன்னு நினைச்சு வந்தேன்....
//மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...வேட்டை//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
இப்படித்தான் நடக்கும்ன்னு எதிர்பார்த்தேன்.. ஹா.. ஹா..
haaaaaaaaai jolly :))
post a comment அப்டின்றதையே காணோமே என்ன பண்றதுன்னு யோசிச்சி .. ஒரு வழியா அதக் கண்டுபிடிச்ச பிறகு .. பதிவைப் பத்தி என்னத்த சொல்றதுன்னு நினச்சது மறந்து போயி ...
ஏம்'பா .. அம்புட்டு மோசமா ..?
மக்களே,
இந்தப் பதிவைப் படித்து எங்கேயோ எப்படியோ போய் இந்த யூட்யூப் பாத்துட்டேன். இந்தப் படம் முழுசா பார்க்கணும்னு ஒரே ஆசையா போச்சு ..!
!
படம் பார்க்க போகலாமா வேண்டாமா? அத சொல்லுங்க அன்பு
\\\கார்த்திகைப் பாண்டியன் said...
உனக்கு சேட்டை வர வர ஜாஸ்தியாப் போச்சு..
//படத்தின் பிளஸ்:-
1.சூர்யா..சூர்யாவின் நடிப்பு..//
சூர்யா இந்தப் படத்துல எங்கப்பா நடிச்சு இருக்கார்? படம் ஓரளவு பாக்குற மாதிரித்தான்ப்பா இருக்கு.. வடிவேலுக்காக ஓடும்..\\\
வடிவேலு இல்லை என்றால் தியேட்டரை விட்டு படம் ஓடும்...
வருகைக்கு நன்றி அண்ணா..
\\\ கார்க்கி said...
ஹாஹாஹா.. வேட்டைக்காரன் இவ்வளவு மோசமாக இருக்காது என நம்புகிறேன்\\\
ரைட்டுங்கண்ணாவ்...அதையும் தான் பார்ப்போம்
//நயன்தாரா..(தயவு செய்து இந்த பாட்டி இனிமே தமிழ் சினிமாக்கு வேணாம்)//
என்னா வில்லத்தனம்!
\\\Subankan said...
நானும் இதைப் பார்த்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டேன். வேற என்னத்தைச் சொல்ல?
இதையும் படீங்க.
ஆதவன் – முற்றுமுழுதாக ஒரு பார்வை\\\\
சேம் பிளட் அண்ணா...
உங்க விமர்சனமும் படிச்சாச்சு..
\\\shortfilmindia.com said...
/விடு மாப்ள..இதுக்கெல்லாம் சிங்கம் பதில் சொல்லும்டா..என்று மனதை தேற்றிக்கொண்டேன்...
//
என்னா ஒரு நம்பிக்கை.. கார்க்கிக்குதான் எவ்வள்வு சந்தோஷம். :)
கேபிள் சங்கர்\\\
படம் வருகிற வரைக்கும் கார்க்கி அண்ணாவுக்கு சந்தோஷம் தான்..
வருகைக்கு நன்றி அண்ணா..
\\எவனோ ஒருவன் said...
நா கூட இது வேட்டைக்காரன் விமர்சனம் மாதிரி இருக்குமோன்னு நினைச்சு வந்தேன்....\\\\
இனிமே தான் தல வேட்டைக்காரன் வரும்..
உங்க வருகைக்கு நன்றி தல..
\\ஆயில்யன் said...
//மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...வேட்டை//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !\\\
எதுக்கு குலைக்கின்றிங்க...புரியலையே
\\\லோகு said...
இப்படித்தான் நடக்கும்ன்னு எதிர்பார்த்தேன்.. ஹா.. ஹா..\\\
விடுங்க மச்சான்...
எல்லோருக்கு ஜெயிக்கிற காலம் வரும்..
புல் கூடத்தான் பூமியை பிளந்து வரும்
:))
//படம் ஓரளவு பாக்குற மாதிரித்தான்ப்பா இருக்கு.. //
கார்த்தி மட்டும் தான் இப்படி சொலிட்டு இருக்கார்.. பாக்க்கலாம் பாஸ்..
\\\ mayil said...
haaaaaaaaai jolly :))\\\
எதுக்கு ஜாலி..
\\\தருமி said...
post a comment அப்டின்றதையே காணோமே என்ன பண்றதுன்னு யோசிச்சி .. ஒரு வழியா அதக் கண்டுபிடிச்ச பிறகு .. பதிவைப் பத்தி என்னத்த சொல்றதுன்னு நினச்சது மறந்து போயி ...
ஏம்'பா .. அம்புட்டு மோசமா ..?\\\
முடியலை சார் முடியலை..
\\\ஆ.ஞானசேகரன் said...
படம் பார்க்க போகலாமா வேண்டாமா? அத சொல்லுங்க அன்பு\\\
இவ்வளவு சொல்லியும் கேட்கலையா நீங்க..
\\\ வால்பையன் said...
//நயன்தாரா..(தயவு செய்து இந்த பாட்டி இனிமே தமிழ் சினிமாக்கு வேணாம்)//
என்னா வில்லத்தனம்!\\\
நாமெல்லாம் யூத் தல..
\\ தீப்பெட்டி said...
:))
//படம் ஓரளவு பாக்குற மாதிரித்தான்ப்பா இருக்கு.. //
கார்த்தி மட்டும் தான் இப்படி சொலிட்டு இருக்கார்.. பாக்க்கலாம் பாஸ்..\\\
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலீங் பாஸ்...
/*
(இனிமேலும் உங்க மூனு பேரை ஒன்னுபோல பார்த்தேன்..)
*/
நான் வாழ்க்கையில் ரொம்ப விழுந்து விழுந்து சிரிச்ச வரிகள்.... நன்றி நண்பரே!
ஆகா ஆகா - இப்படியும் ஒரு விமர்சனமா
மூணு பேரயும் இன்னொரு மொற பாத்தேன் ..... அவ்ளோ கோபமா
ம்ம்ம்ம் - நான் பாத்துட்டுப் பதில் சொல்றேன்
மைனஸ் பாய்ண்ட் 4, இந்த தீர்ப்ப மட்டும் கொஞ்சம் மாத்தி சொல்லுங்க அன்பு...
//தருமி said...
post a comment அப்டின்றதையே காணோமே என்ன பண்றதுன்னு யோசிச்சி .. ஒரு வழியா அதக் கண்டுபிடிச்ச பிறகு .. //
அன்பு, உங்க பதிவில் லிங்க் கலர் வெள்ளை (#FFFFFF) குடுத்து வச்சிருக்கீங்க.. வேற கலர் (நீலம்) மாத்தினா இந்தப்பிரச்சனை சரியாகிடும்.
எதாவது உதவி வேணும்னா மெயில் பண்ணுங்க.
//விடு மாப்ள..இதுக்கெல்லாம் சிங்கம் பதில் சொல்லும்டா..என்று மனதை தேற்றிக்கொண்டேன்...
///
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா தம்பி.........................ஆனாலும் உன் நம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்குதுப்பா
அடப்பாவி நயன் புள்ள அந்தளவுக்கா மாறி போச்சு...
// jackiesekar said...
அடப்பாவி நயன் புள்ள அந்தளவுக்கா மாறி போச்சு...//
வேற வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம்!
சட்டுன்னு சிலர் நாறிபோச்சுன்னு படிக்க வாய்ப்புண்டு!
(பத்த வச்சிட்டியே பரட்ட)
Good review :D
thusyanthan
france
//நயன்தாரா..(தயவு செய்து இந்த பாட்டி இனிமே தமிழ் சினிமாக்கு வேணாம்)//
ninga mathum mudivu panina sarijaaa
illyijallum singam singam than
tamil cinema ku nayan pollea inoru nadikai verade ini rempa kasram..
miss pannadinga..
//கார்த்தி மட்டும் தான் இப்படி சொலிட்டு இருக்கார்.. பாக்க்கலாம் பாஸ்..
//
படம் ஓகே தான் பாஸ்...
ஓட வச்சிருவாங்க
இன்னும் நிறைய இருக்கு...
////(இனிமேலும் உங்க மூனு பேரை ஒன்னுபோல பார்த்தேன்..)
ஹே!ஹே!ஹே! ஐ லைக் இட் :) /////
ஆதவனுக்கு ஹைப் கிரியேட் செஞ்சி மொக்க பன்னிட்ட... அன்பு வேட்டைக்காரனாவது பொழச்சி போகட்டும்... கண்டுக்காம வுடு!
//இந்த படத்துக்கு குருவி எவ்வளவோ பெட்டர்.... //
சூர்யா தற்கொலை செய்யலாம்... இப்படிக் கருத்தையெல்லாம் கேட்க வேண்டி ஆயிற்றுதே...
இது ஒரு கமர்ஷியல் மசாலா அவ்வளவே. Nothing Special. நல்லா இருக்கு அன்பு
நச் விமர்சனம்
//இனிமேலும் உங்க மூனு பேரை ஒன்னுபோல பார்த்தேன்//
அந்த அளவுக்கு உங்கள
நோகடிச்சிடங்களா அன்பு
//தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சற்று கண்முழித்து பார்த்தனர்//
ஹ ஹ ஹ செம குத்து :-)
ரொம்ப வித்தியாசமான விமர்சனம். ஏமாற்றத்தை இயல்பாக நகைச்சுவையாக சொல்லியிருப்பது அருமை. சரோஜாதேவி, நயன்தாரா ஒப்பீடும் நன்று.
கமர்சியல் வின்னர் ஹரிக்காக சிங்கத்தை நம்பலாம்....
\\\My Dear Friend said...
/*
(இனிமேலும் உங்க மூனு பேரை ஒன்னுபோல பார்த்தேன்..)
*/
நான் வாழ்க்கையில் ரொம்ப விழுந்து விழுந்து சிரிச்ச வரிகள்.... நன்றி நண்பரே!\\\
ரொம்ப நன்றி அண்ணா..முதல் வருகைக்கும் கருத்துக்கும்..
\\\cheena (சீனா) said...
ஆகா ஆகா - இப்படியும் ஒரு விமர்சனமா
மூணு பேரயும் இன்னொரு மொற பாத்தேன் ..... அவ்ளோ கோபமா
ம்ம்ம்ம் - நான் பாத்துட்டுப் பதில் சொல்றேன்\\\
சீக்கிரமா பாருங்க சார்...
\\\பீர் | Peer said...
மைனஸ் பாய்ண்ட் 4, இந்த தீர்ப்ப மட்டும் கொஞ்சம் மாத்தி சொல்லுங்க அன்பு...\\\
எந்த பாயிண்டை வேண்டும் என்றாலும் மாத்துறேன் அண்ணா..
அந்த பாட்டி மட்டும் இனிமே வேணாம்..
\\\பீர் | Peer said...
//தருமி said...
post a comment அப்டின்றதையே காணோமே என்ன பண்றதுன்னு யோசிச்சி .. ஒரு வழியா அதக் கண்டுபிடிச்ச பிறகு .. //
அன்பு, உங்க பதிவில் லிங்க் கலர் வெள்ளை (#FFFFFF) குடுத்து வச்சிருக்கீங்க.. வேற கலர் (நீலம்) மாத்தினா இந்தப்பிரச்சனை சரியாகிடும்.
எதாவது உதவி வேணும்னா மெயில் பண்ணுங்க.\\\
உங்கள் உதவிக்கு ரொம்ப நன்றி அண்ணா
\\\\அத்திரி said...
//விடு மாப்ள..இதுக்கெல்லாம் சிங்கம் பதில் சொல்லும்டா..என்று மனதை தேற்றிக்கொண்டேன்...
///
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா தம்பி.........................ஆனாலும் உன் நம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்குதுப்பா\\\
வேற என்ன செய்ய முடியும் நம்மால்...வருகைக்கு நன்றி அண்ணா
\\jackiesekar said...
அடப்பாவி நயன் புள்ள அந்தளவுக்கா மாறி போச்சு...\\\
ஆமாங்க..வருகைக்கு நன்றி அண்ணா
தேவையா?
பாவம்னே நீங்க..
செம் ப்லட்..
நம்ம விமர்சனமும் பார்த்தீங்களா? ;)
சூர்யா ஒவர் ஆக்டிங் இப்போதெல்லாம்..யார் கேட்டாங்க???
நல்ல வேளை. பதிவுலக நண்பர்களின் எச்சரிக்கையால் நான் தப்பித்தேன்.
Post a Comment