முதல் காதல் கடிதம் !!!

அது ஒரு மாலை நேரப்பொழுது.மாலை 6.00 மணி இருக்கும் என நினைக்கிறேன்.சென்னை மெரினா கடற்கரையில் நான் தனியாக சென்று கொண்டிருந்தேன்.என்னுடைய வாக்மேனில் 'அன்பே என் அன்பே'என்ற பாடல் கேட்டவாறே சென்று கொண்டிருந்தேன்.அருமையான் பாடல் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் என்னை மறந்து சென்று கொண்டிருந்தேன்.

அழகான கடற்கரை,ஓய்வில்லாத அலையின் ஓசைகள்,ஆங்காங்கே சுண்டல் விற்கும் வண்டிகள்,அதை வாங்கி சாப்பிடுவோமா வேண்டாமா என்று கடலை போட்டு கொண்டிருக்கும் காதலர்கள்,சிலர் காதலனுக்காகவும் சிலர் காதலிக்காகவும் காத்துக்கொண்டிருந்தார்கள்.ஒரு சிலர் தொலைபேசி உரையாடலுடன்..

இவை அனைத்தையும் பார்க்கும் போதே என் மனதில் ஒரு நெருடல். இதில் வாக்மேனில் காதல் பாடல் வேறு.போதுமடா சாமி என்று கடற்கரையை விட்டு வெளியேற நினைக்கையில் எனது காலின் கீழே ஒரு பேப்பர் கிடந்தது. அது ஒரு காதல் கடிதம்:-
அன்புள்ள காதலிக்கு உன் முன்னால் காதலன் எழுதுவது.நீ இங்கு நலம் நான் அங்கு நலமா?..உனக்குத் தெரியுமா இதே நாள் (பிப்ரவரி 21) இந்த கடற்கரையில் தாம் நாம் முதன் முதலில் சந்தித்தோம்.இந்த கடற்கரையில் தான் உன்னுடைய முதல் காதல் கடிதத்தை கொடுத்தாய்.மூன்று வருடங்கள் கழித்து கொடுத்தாய் உன் திருமண பத்திரிக்கையை..

மூன்று வருடங்கள் சொர்க்கத்தில் இருந்தேன் என்றே சொல்லலாம். இன்றும் சொர்க்கத்தில் தான் இருக்கிறேன்..உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே!!

நானும் நீயும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த கடற்கரைக்கு வருவோம் ஞாபகமிருக்கிறதா? இன்று நான் மட்டும் தனியாக..இல்லை இல்லை என்னை மாதிரி தனி ஆளாக மாற எத்தனையோ இளைஞர்கள் இருப்பதைக் கண்டு எனக்கே ஒரு சிரிப்பு..

நானும் ஒவ்வொரு வாரமும் வந்து இந்த மாதிரி கடிதம் எழுதி வைத்து விட்டு செல்கிறேன்.என்றாவது ஒரு நாள் உன் கணவருடன் வந்து அதை நீ படிக்க மாட்டாயா? என்ற எண்ணம்..

உன்னோடு பழகிய அத்தனை நிகழ்வுகளையும் எழுதிவிட ஆசையாகத்தான் உள்ளது.ஆனால் அதை எழுதும் முன் என்னுடைய இன்றைய காதலி வந்து விடுவாளோ என்கிற பயம்தான்.என்ன இருந்தாலும் என்னுடைய முதல் காதலை மறக்க முடியவில்லை.'எங்கிருந்தாலும் வாழ்க'என்றும் உன் நினைவுடன் நான்!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

16 பின்னூட்டங்கள்:

Anonymous said...

hello anbu you must write same dialogue for your second lover no..
no...no... forever lover

கார்க்கிபவா said...

/அழகான கடற்கரை,ஓய்வில்லாத அலையின் ஓசைகள்,ஆங்காங்கே சுண்டல் விற்கும் வண்டிகள்,அதை வாங்கி சாப்பிடுவோமா வேண்டாமா என்று கடலை போட்டு கொண்டிருக்கும் காதலர்கள்,சிலர் காதலனுக்காகவும் சிலர் காதலிக்காகவும் காத்துக்கொண்டிருந்தார்கள்.ஒரு சிலர் தொலைபேசி உரையாடலுடன்//

நல்லா கவனிச்சிருக்க.. சிவகாசில கடற்கரையா?

Anbu said...

நன்ற் கார்க்கி அண்ணா

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

இது ஓர் கற்பனைக் கதை மட்டுமே!!

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பு.. தப்பாக நினைக்க வேண்டாம்.. பதிவு இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்து இருக்கலாம்.. கடைசியில் வரும் ஒரு வரியை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே எழுதியது போல் உள்ளது..

coolzkarthi said...

ஹி ஹி ஹி.....ஹையோ ஹையோ.....நாமளும் லேசு பட்டவங்க இல்ல.....

Cable சங்கர் said...

நல்ல பதிவுக்கான முயற்சி. இன்னும் கொஞ்சம் கண்டெண்ட் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அன்பு. இது என் கருத்து.. வாழ்த்துக்கள்.

Anbu said...

\\ கார்த்திகைப் பாண்டியன் said...
அன்பு.. தப்பாக நினைக்க வேண்டாம்.. பதிவு இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்து இருக்கலாம்.. கடைசியில் வரும் ஒரு வரியை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே எழுதியது போல் உள்ளது..\\\

அடுத்த முறை கண்டிப்பாக நன்றாக எழுதுகிறேன் அண்ணா

நன்றி அண்ணா கருத்துக்கும் ஆதரவுக்கும்!!

Anbu said...

coolzkarthi said...

ஹி ஹி ஹி.....ஹையோ ஹையோ.....நாமளும் லேசு பட்டவங்க இல்ல.....

பிறகு சும்மாவா

நன்றி அண்ணா கருத்துக்கும் ஆதரவுக்கும்!!

Anbu said...

நல்ல பதிவுக்கான முயற்சி. இன்னும் கொஞ்சம் கண்டெண்ட் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அன்பு. இது என் கருத்து.. வாழ்த்துக்கள்.


அடுத்த முறை கண்டிப்பாக நன்றாக எழுதுகிறேன் அண்ணா

நன்றி அண்ணா கருத்துக்கும் ஆதரவுக்கும்!!

ஆதவா said...

கதை நன்னா இருக்கு.... இன்னும் கொஞ்சம் செதுக்கணும்... நல்ல நடை உங்கள் எழுத்துக்களில் எட்டிப் பார்க்கறது.

வாழ்த்துகள்.

வியா (Viyaa) said...

என்றுமே முதல் காதலை நெஞ்சம் மறக்காது..
அது ஒரு அழகான வாழ்க்கை பயணம்..!
அருமையான படைப்பு அன்பு..

Anbu said...

\\வியா (Viyaa) said...

என்றுமே முதல் காதலை நெஞ்சம் மறக்காது..
அது ஒரு அழகான வாழ்க்கை பயணம்..!
அருமையான படைப்பு அன்பு..\\\

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வேத்தியன் said...

கதை ரொம்ப நல்லா இருக்கு அன்பு...

இன்னும் கொஞ்சம் விவரிச்சு
நீளமா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்..

கருத்து தான்..
மற்றும்படி கதையை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அறிவில்லை..
சூப்பர்...
வாழ்த்துகள்...

Anonymous said...

kevalama irukku.appa ivalum vittutu pona avalukkum serthu 2letter vaipiya

Anonymous said...

kevalama irukku.appa ivalum vittutu pona avalukkum serthu 2letter vaipiya

Anonymous said...

great pa.. yaralum avangloda nudhal kadhalai maraka mudiyadhu. ennadan namaku varapora wife kita "nan idhuvaraikum yarayum love panla nu" poi sonnalum nambaloda mudhal kadhal nam ninaivil oru orama irukadhan seyyum... adhai ninaichu parkum bothu varum pun siripum (or) azhugayum thavirka mudiyadhadhu dhan pa...