காலில் விழுந்தது ஏன்?!!!

ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்கிற ஒரு பெரியவர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்திருந்தார்.அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு விவாதம் ஏற்பட்டது.

பெரியவர் சொன்னார்:எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல் ஆகவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள்.
அவர்களுக்கு தங்களுடைய தனித்தன்மை தெரிவதில்லை.

அப்படியா சொல்கிறீர்கள்?

ஆமாம்.. எல்லோருமே போலி நடத்தைக்காரர்கள்..மற்றவர்களைப் பார்த்து நடிப்பவர்கள்.

அப்படியென்றால் யாருக்கும் சொந்தப்புத்தி இல்லை என்கிறீர்களா?

கொஞ்சம் பொறுங்கள் உங்கள் சந்தேகத்தை நான் போக்குகிறேன்.அதற்கு நீங்களும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்!.

இப்போது-இங்கே என்னை பார்ப்பதற்கு உள்ளே யாரவது வருகிற போது அந்த நேரம் பார்த்து நீங்கள் என் காலைத் தொட்டு வணங்கி காலடியில் ஒரு நூறு ரூபாய் நோட்டைப் போடுங்கள்!..

சரி செய்கிறேன்.

அவர்கள் காத்திருந்தார்கள்

கொஞ்ச நேரத்தில்..

மூன்று பேர் உள்ளே வந்தார்கள்.

அவர்கள் நுழைகிற நேரம் பார்த்து இந்த நபர் அந்த பெரியவரின் காலடியில் நூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டு,அவர் காலைத் தொட்டுக் கண்களில் வைத்துக்கொண்டார்.அவ்வளவுதான்.

அடுத்தடுத்து என்ன நடந்தது தெரியுமா?..

வந்தவர்களும் வரிசையாக அவர் முன்னே ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் காலடியில் வைத்து தொட்டு வணங்கினார்கள்.கொஞ்ச நேரம் பேசிய பின் சென்றார்கள்.

அவர்கள் போனபிறகு,அந்த பெரியவர் நண்பரிடம் சொன்னார்.'இவர்கள் நாற்பது வருடங்களாக என்னைப் பார்க்க வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை ஒரு தடவை கூட ஒரு ரூபாய் தந்ததில்லை.இன்றைக்கு நூறு ரூபாய் போடுகிறார்கள்!!அதனால்தான் சொன்னேன்,மனிதர்கள் மற்றவர்களைப் போல் நடிப்பதில் கெட்டிக்காரர்கள் என்று!

*************************************************************************************

ஒரு அரங்கத்தின் உள்ளே இருந்து பெரியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அவர் பின்னால் இருந்து ஒருவன் ஓடிவந்து அவரிடம் காலில் விழுந்து வணங்கி பிறகு எழுந்து சென்றான்.

பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொருவன் இதைப்பார்த்தான்.உடனே அவனும் ஓடி வந்து அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டு பின் எழுந்து சென்றான்.

இரண்டாமவன் முதலில் விழுந்து வணங்கியவனிடம் போய் கேட்டான்"அவரு யாரு?..ரொம்ப பெரியவரா..எதுக்கா அவரு கால்லே விழுந்து வண்ங்கினாய்..

முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!..

************************************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

16 பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் said...

\\முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!.\\

ஹா ஹா ஹா

கடைசி அருமைப்பா

Anbu said...

\\\நட்புடன் ஜமால் said...

\\முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!.\\

ஹா ஹா ஹா

கடைசி அருமைப்பா\\\

முதன் முறையாக என்னுடைய தளத்திற்கு வந்திள்ளீர்கள்

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா சிந்திக்கத் தூண்டும் கதைகள் அன்பு.. வாழ்த்துக்கள்.

Anbu said...

\\\கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா சிந்திக்கத் தூண்டும் கதைகள் அன்பு.. வாழ்த்துக்கள்.

வாங்க அண்ணா

நன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு\\\

அன்புடன் அருணா said...

இது 100% உண்மை....நல்லா எழுதிருக்கீங்க...
அன்புடன் அருணா

Anbu said...

\\\அன்புடன் அருணா said...

இது 100% உண்மை....நல்லா எழுதிருக்கீங்க...
அன்புடன் அருணா\\\

முதன் முறையாக என்னுடைய தளத்திற்கு வந்திள்ளீர்கள்
நன்றி அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

சின்னப் பையன் said...

\\முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!.\\

ஹா ஹா ஹா...

Unknown said...

//எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல் ஆகவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள்.
அவர்களுக்கு தங்களுடைய தனித்தன்மை தெரிவதில்லை.//

நல்ல பதிவு.தனித்தன்மையை சிந்திக்க வைக்கும் உங்க சிறு முயற்சிக்கு வாழ்த்துகள்

ஆதவா said...

முதல் கதை சிந்திக்க,
இரண்டாவது சிரிக்க...

கலக்கல்......

Anbu said...

\\\\ச்சின்னப் பையன் said...

\\முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!.\\

ஹா ஹா ஹா...\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Anbu said...

\\\\ sollarasan said...
நல்ல பதிவு.தனித்தன்மையை சிந்திக்க வைக்கும் உங்க சிறு முயற்சிக்கு வாழ்த்துகள்\\\

முதன் முறையாக என்னுடைய தளத்திற்கு வந்திள்ளீர்கள்

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Anbu said...

\\\முதல் கதை சிந்திக்க,
இரண்டாவது சிரிக்க...

கலக்கல்......\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Cable சங்கர் said...

//
முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!..//

சூப்பர்.. அன்பு..

Anbu said...

\\\Cable Sankar said...
முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!..//

சூப்பர்.. அன்பு..\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

அறிவிலி said...

அந்த பூனை படம் ஜூப்பர்...

Anbu said...

\\அறிவிலி said...

அந்த பூனை படம் ஜூப்பர்...\\

முதன் முறையாக என்னுடைய தளத்திற்கு வந்ததுள்ளீர்கள்

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்