என் காதலி..

என்னவளே..
என் இனியவளே..
என்னுடன் இருப்பவளே..

காலையில் என்னை எழுப்பும்
அலாரம் நீ..

மழையோ,வெயிலோ,
இரவோ,பகலோ,
நீ அழைத்தால் உடனே
ஓடி வருவேன்..

என் கைக்குள் அடங்கும்
சொர்க்கம் நீ..
உன் அழகில் மயங்கும்
பித்தன் நான்..

என் உயிர்மூச்சு இருக்கும்வரை
என்னோடு நீ இருப்பாய்
கண்ணே..

உன்னை வருடாத நாளில்லை..
உன்னை காதோடு உரசாத நொடியில்லை..

என் செல்போனே..
என் காதலி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

12 பின்னூட்டங்கள்:

Balakumar Vijayaraman said...

செல்போனே காதலியா, செல்போன் மூலமா காதலியா ? :)

வால்பையன் said...

காதலியும் செலவு வைக்கிறா,
செல்போனும் செலவு வைக்குது!

ரைட்டு தான்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சீக்கிரம் கல்யாணம் பண்ணு தம்பி, எல்லாம் சரியாயிடும்.

சொல்லரசன் said...

//என் உயிர்மூச்சு இருக்கும்வரை
என்னோடு நீ இருப்பாய்
கண்ணே..//

எங்களிடம் இர‌ண்டு வ‌ருட‌த்திற்கு மேல் இருப்ப‌துயில்லை,உங்க‌ளுக்கு எப்படி உயிர்மூச்சு வ‌ரை இருக்கும்.அடிக்க‌டி மாற்றினால்தான் காதலி.

சிங்கக்குட்டி said...

அருமையான வரிகள் அன்பு.

//என் கைக்குள் அடங்கும்
சொர்க்கம் நீ//

மிக தெரிந்த வரிகள் என்றாலும், பொருத்தமான இடத்தில நல்ல சிந்தனை.

angel said...

enga ore love poems ah iruku?
any feelings?
kavala padathinga ethuva irunthalum goodwoods

வியா (Viyaa) said...

செல்போன்?காதலியா?
அருமை..!

ஆ.ஞானசேகரன் said...

//பாலகுமார் said...

செல்போனே காதலியா, செல்போன் மூலமா காதலியா ? //

ரிபீட்ட்ட்ட்

கலையரசன் said...

எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருங்க!!

அத்திரி said...

என்னமோ நடக்குது

பூங்குன்றன்.வே said...

//உன்னை வருடாத நாளில்லை..
உன்னை காதோடு உரசாத நொடியில்லை..

என் செல்போனே..
என் காதலி..//

என்னப்பா இது ராசா? என்ன ஆச்சு?போன வராம் வரை நல்லாத்தானே இருந்தீங்க :)
நல்லா இருக்கு தல.

அன்புடன் நான் said...

மிக ரசித்தேன்..... அருமை. தொடருங்க.