எனக்கு பிடித்த பாடல்...
திரைப்பட பாடலாசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் என்றுமே நா.முத்துக்குமார் தான்..இவர் எழுதும் பாடல்கள் மிகவும் எளிதான வார்த்தைகளை கொண்டும்,கேட்டவுடன் மனதில் பதியுமாறும் இருக்கும்..இவரது பாடல்களை எப்போதுமே தனி போல்டரில் போட்டு கேட்டுக்கொண்டு
இருப்பேன்.. இவரை திறமைக்கு 7G படத்தில் கண் பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை என்னும் பாடல் ஒன்று போதும்...அந்தப்பாடலில் எனக்கு பிடித்த சில வரிகள்:-

காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை...
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை!

தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை..

மின்னலின் ஒளியைப் பிடிக்க‌ மின்மினிப் பூச்சிக்கு தெரியவில்லை!


தற்சமயம் எனது காலர்டியூனாகவும்,என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் பாடல் பையாவின் ன் காதல் சொல்ல நேரமில்லை..என்னும் பாடல்.. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் அவரே பாடி இருக்கிறார்..பாடலை எழுதியவர் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர்..நா.முத்துக்குமார்.இப்பாடலின் ஒவ்வொரு வரியும் முதல் முறை கேட்கும் போதே மனதில் அப்படியே பதிந்துவிட்டது..காதலிக்காக காதலன் ஏங்கும் ஆசைகளை மிகத்தெளிவாக கூறி இருக்கிறார்..

என் காதல் சொல்ல நேரமில்லை..
உன் காதல் சொல்ல தேவையில்லை..
நம் காதல் சொல்லும் வார்த்தையில்லை..
உண்மை மறைத்தாலும் மறையாதடி...

உன் கையில் சேர ஏக்கமில்லை...
உன் தோளில் சாய ஆசையில்லை...
நீ போன பின்பு சோகமில்லை...
என்று பொய் சொல்ல தெரியாதடி...

உன் அழகாலே அழகாலே
என் வெயில்காலம் அது மழைக்காலம்...

உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்....

சரணம்:1

காற்றோடு கைவீசி நீ பேசினால்
என்தன் நெஞ்சோடு புயல் வீசுதே...
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலைவீசுதே..

காதல் வந்தாலே கண்ணோடுதான்
கள்ளத்தனம் வந்து குடியேறுமோ..?

கொஞ்சம் நடித்தேனடி..கொஞ்சம் துடித்தேனடி..
இந்த விளையாட்டை ரசித்தேனடி..


சரணம்:2

ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி..
இந்த நிமிடங்கள் நீளட்டுமே..
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி..
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே...

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்...
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்...

சிறு பிள்ளையென என்தன் இமைகளது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே...

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்..

என் அந்திமாலை என் அந்திமாலை
உன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்...
பின்குறிப்பு:-

1. கார்க்கி,டக்லஸ்,கார்த்திகைப்பாண்டியன் இந்த மூன்று பேரும் எழுதிய பாட்டு விமர்சனத்தை பார்த்ததால் அடியேனுக்கும் சிறிது ஆசை..அதை நிறைவேற்றவே இந்த முயற்சி...

2.பையாவில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானதாலும் சூர்யாவின் தம்பி கார்த்திக் நடித்திருக்கிறார் என்பதாலும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் படத்திற்காக...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

15 பின்னூட்டங்கள்:

Raju said...

போலாம்.ரை..ரை..ரை.

கடைக்குட்டி said...

சூர்யாவின் தம்பி என்பதால் கார்த்தி படத்துக்கும் சேர்த்து வெயிட்டிங்கா???

அட மக்கா.. நீ மகா உண்மையான ரசிகனப்பா... :-)

கார்க்கிபவா said...

இறங்கியாச்சா?ரைட்டு

//நீ போன பின்பு சோகமில்லை...
என்று பொய் சொல்ல தெரியாதடி//

இந்த வரிகள் அவர்கள் பிரிந்தது போல் உணர வைக்கிறது..

ஆனால் பாடல் முழுவது காதல் வந்த ஒருவனது உணர்வுகளை சொல்வது போல் இருக்கிறது. உனக்கு என்னப்பா தோணுது?

Raju said...

\\கார்க்கி said...
உனக்கு என்னப்பா தோணுது?\\

ஹல்லோ, அந்த பையன்கிட்ட கேட்டு, நீங்க யூத்தா இல்லையான்னு டெஸ்ட்டு பண்ணிக்கிறீங்களா அங்கிள்..?

Anbu said...

\\\ ♠ ராஜு ♠ said...

போலாம்.ரை..ரை..ரை.\\\

எங்க தல போகப்போறீங்க....

Anbu said...

\\\\கடைக்குட்டி said...

சூர்யாவின் தம்பி என்பதால் கார்த்தி படத்துக்கும் சேர்த்து வெயிட்டிங்கா???

அட மக்கா.. நீ மகா உண்மையான ரசிகனப்பா... :-)\\\\

நன்றி அண்ணா...

ரொம்ப நாளா ஆளையையே காணோம் அண்ணா..

Anbu said...

\\\கார்க்கி said...

இறங்கியாச்சா?ரைட்டு

//நீ போன பின்பு சோகமில்லை...
என்று பொய் சொல்ல தெரியாதடி//

இந்த வரிகள் அவர்கள் பிரிந்தது போல் உணர வைக்கிறது..

ஆனால் பாடல் முழுவது காதல் வந்த ஒருவனது உணர்வுகளை சொல்வது போல் இருக்கிறது. உனக்கு என்னப்பா தோணுது?\\\

எனக்கும் அதே பீலிங்ஸ் தான் அங்கிள்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அங்கிள்...

Anbu said...

\\\ ♠ ராஜு ♠ said...

\\கார்க்கி said...
உனக்கு என்னப்பா தோணுது?\\

ஹல்லோ, அந்த பையன்கிட்ட கேட்டு, நீங்க யூத்தா இல்லையான்னு டெஸ்ட்டு பண்ணிக்கிறீங்களா அங்கிள்..?\\

சரி..சரி..விடுங்க தல..அந்த அங்கிள் ரொம்ப பீலிங்ஸ்-ல இருக்கார்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லா ரசிக்கிற தம்பி.

கார்த்திகைப் பாண்டியன் said...

பாட்டைக் கேட்டுக்கிட்டே இந்த பின்னூட்டம் போடுறேன் அன்பு.. இந்தப் பாட்டும் சுடச் சுட பாட்டும் .. பட்டாசு கிளப்புது

வால்பையன் said...

காதலிச்சா, கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும் அன்பு அண்ணே!

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

நலாத்தான் இருக்கு பாட்டு - தேர்ந்தெடுக்கப் பட்ட சொற்கள் -காதல் ரசம் சொட்டுகிறது - பொய் சொல்லத் தெரியாதா - காதலர்களுக்கா - இதுவெ பொய் தான் அன்பு

பாடல் ரசிக்கத்தக்கது - இது பொய் அல்ல

நல்வாழ்த்துகள் அன்பு

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சிங்கக்குட்டி said...

கலக்கல் அன்பு.

என்ன ஆச்சு உங்கள் தளத்துக்கு? முன்பு போல் எளிதாக திறக்க முடியவில்லை :-)