ஏகனின் படுதோல்விக்கு பின் அஜித்.. அஜித்தின் 49வது படம்..பலரின் எதிர்பார்ப்புகளுக்கிடையில் அசல் ஆடியோ வெளியாகிவிட்டது.. படம் முழுவதும் மலேசியாவிலும் பிரான்சிலும் எடுத்ததாக சொல்கிறார்கள்.. சிவகாசியில் ஆடியோ ரிலிஸ் வெகுவிமரிசையாக நடந்தது..இதுக்கே இப்படின்னா படம் வந்தா எப்படின்னு தெரியலை..நமக்கெதுக்குங்க அந்த பிரச்சினை எல்லாம்..நாம் பாடலின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்..இது ஒரு நடுநிலைவாதியின் விமர்சனம் மட்டுமே...
படத்தின் அனைத்து பாடல்களும் கவிஞர்.வைரமுத்து எழுதி உள்ளார்..
இசையமைப்பாளர்:- பரத்வாஜ்...
1.அசல்..(சுனிதா மேனன்)
காற்றை நிறுத்திக்கேளு
கடலை அழைத்துக்கேளு
இவன்தான் அசல்..
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா...
காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்பார்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்..
நித்தம் நித்தமும் யுத்தம்-இவன்
நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கில்லை...
2.குதிரைக்கு தெரியும் - (சர்முகி, சரண்)
தொட்டுவிடு ஒருதரம்
தொல்லைகொடு இருதரம்
முத்தமிடு மூனுதரம்
முகர்ந்திடு நாலுதரம்
அள்ளிஎடு ஐந்துதரம்
கொள்ளையிடு ஆறுதரம்
இன்பம் கொடு ஏழுதரம்
இந்த சுகம் நிரந்தரம்
குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு...
1.அசல்..(சுனிதா மேனன்)
காற்றை நிறுத்திக்கேளு
கடலை அழைத்துக்கேளு
இவன்தான் அசல்..
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா...
படத்தின் தொடக்கப்பாடல்... மேலே உள்ள வரிகளுடன் அமர்க்களமாய் தோன்றுகிறது. சுனிதா மேனன் மிகவும் ஸ்டைலிஸாக பாடியுள்ளார்..இடை இடையே வரும் தல போல வருமா என்னும் வரி அப்படியே அட்டகாசத்திலிருந்து எடுத்து வைத்துள்ளனர்..பாடல் முழுவதும் ஒரு மாஸ் ஹீரோ-வுக்கு உண்டான வரிகள்..அஜித் ரசிகர்களுக்கு இந்த பாட்டு சிம்ம சொப்பனம்..
காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்பார்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்..
நித்தம் நித்தமும் யுத்தம்-இவன்
நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கில்லை...
*********************
இந்த பாட்டு சமீராவுக்கா இல்லை பாவனாவுக்கா என்று தெரியவில்லை..ஒரு பெண்ணின் காம இச்சைகளை மிகவும் நாசூக்காக சொல்லி இருக்கிறார் வைரமுத்து...யாருக்காக இருப்பினும் பாடல் நிச்சயம் ஹிட்..இந்தப்பாடலில் முதலில் பாடும் சர்முகியின் குரல் நச்சென்று உள்ளது...
தொட்டுவிடு ஒருதரம்
தொல்லைகொடு இருதரம்
முத்தமிடு மூனுதரம்
முகர்ந்திடு நாலுதரம்
அள்ளிஎடு ஐந்துதரம்
கொள்ளையிடு ஆறுதரம்
இன்பம் கொடு ஏழுதரம்
இந்த சுகம் நிரந்தரம்
குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு...
*********************
கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் காதல் மலர்ந்து விட்டவுடன் வரும் பாடல்...மெலடியாகவும் அல்லாமல் அடிப்பாட்டாகவும் இல்லாமல் செல்கிறது..அநேகமாக தியேட்டரில் அதிகமான சமோசாக்கள் விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..டொட்டொடய்ங்..
பச்சப்புள்ள போலிருப்பா
லச்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வச்சதன்ன
முந்திரிக்கா தோப்பா?
எப்படியெல்லாம் யோசிக்கிராங்கப்பா...
*********************
வழக்கம்போல் எஸ்.பி.பி ராக்கிங்..வைரமுத்துவின் வரியும் எஸ்.பி.பி. சாரின் தீர்க்கமான குரலும் நம்மை எங்கோ கொண்டு செல்கின்றன..
எங்கே எங்கே
மனிதன் எங்கே
மனிதன் உடையில்
மிருகம் இங்கே..
ஓநாய் உள்ளம்
நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த
உலகம் இங்கே..
*********************
பழைய காலத்து படம் புதிய பறவை என்னும் படத்திலிருந்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்னும் பாடலின் ரீ-மேக் என்று நினைக்கிறேன்..அந்தப்பாடலின் சில வரிகள் இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ளன..ஒரு முறை கேட்கலாம்..
அந்த நீல நதிக்கரை ஓரம் - நீ
நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடிவந்தேன் ஒரு ராகம்
நாம் பழகிவந்தோம் சில காலம்..
*********************
"தல போல வருமா" என்ற அட்டகாசமான பாடலை அட்டகாசத்திற்கு தந்த பரத்வாஜ் இந்த பாடலை பாடியுள்ளார்..முதலில் மிகவும் மெதுவாக தொடங்கும் பாடல் மெதுவாகவே முடிகிறது..கதாநாயகன் தன் தந்தையை நினைத்து பாடும் பாடல்....
*********************
படத்தில் பிண்ணனி இசைக்காக பயன்படுத்தி இருக்கலாம்..மற்றபடி சொல்ல ஒன்றுமில்லை....
மொத்தத்தில் பாடல்கள் கேட்கலாம்...மூன்று பாடல்கள் மட்டுமே திரும்ப கேட்க மனசு சொல்கிறது..
25 பின்னூட்டங்கள்:
க்ரேட் அன்பு. நன்றி. நானும் கேட்கிறேன். :)
:))
நாளைக்குதாம்பா நானு..!
இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.
தல பாட்டுனா சும்மாவா... அமர்களமா அடுத்த அட்டகாசம் ஆரம்பம் ஆகிடுச்சிடோ.......
செம ஸ்பீட்ப்பா நீ...கேட்டுட்டு சொல்றேன்
//"தல போல வருமா" என்ற அட்டகாசமான பாடலை அட்டகாசத்திற்கு தந்த பரத்வாஜ் இந்த பாடலை பாடியுள்ளார்..முதலில் மிகவும் மெதுவாக தொடங்கும் பாடல் மெதுவாகவே முடிகிறது..கதாநாயகன் தன் தந்தையை நினைத்து பாடும் பாடல்....
//
பாடல் வரிகளை கேட்டால் முழுக்க முழுக்க நடிகர் திலகம் சிவாஜி -யை பற்றி பாடுவது போல உள்ளது.
அது....
என் சாய்ஸ்..
1) டொட்டடாயிங்
2) துஷ்யந்தா
3) குதிரைக்கு தெரியும்
4) அசல்
5)எங்கே எங்கே
6) எம் தந்தைதான்
எல்லாப் பாடல்களுமே ரொம்ப கேட்சியா தொடங்குது. ஆனா முதல் இண்ட்டெர்லியுடிலே டல்லடிக்கிறது. படம் ரிலிஸானாதான் பிக்கப் ஆகும். ஏகன் இசையில் இருந்த இளமை இதில் இல்லை.
இந்த பாட்டுக்கு எல்லாம் அவரு ஆடுவாராமா???
\\\Karthik said...
க்ரேட் அன்பு. நன்றி. நானும் கேட்கிறேன். :)\\\
சீக்கிரம் கேளு தல..
\\கார்க்கி said...
:))\\\
வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி அண்ணா..
\\ ♠ ராஜு ♠ said...
நாளைக்குதாம்பா நானு..!\\\
இவ்ளோ லேட்டா தல..சீக்கிரம்..
\\\Anonymous said...
தல பாட்டுனா சும்மாவா... அமர்களமா அடுத்த அட்டகாசம் ஆரம்பம் ஆகிடுச்சிடோ.....\\
நன்றி அனானி
\\\ ♠ ராஜு ♠ said...
இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.\\\
அடுத்த முறை கண்டிப்பாக முயற்சிக்கிறேன் தல..
\\\ஜெட்லி said...
செம ஸ்பீட்ப்பா நீ...கேட்டுட்டு சொல்றேன்\\\
நன்றி அண்ணா..
\\ ஜோ/Joe said...
//"தல போல வருமா" என்ற அட்டகாசமான பாடலை அட்டகாசத்திற்கு தந்த பரத்வாஜ் இந்த பாடலை பாடியுள்ளார்..முதலில் மிகவும் மெதுவாக தொடங்கும் பாடல் மெதுவாகவே முடிகிறது..கதாநாயகன் தன் தந்தையை நினைத்து பாடும் பாடல்....
//
பாடல் வரிகளை கேட்டால் முழுக்க முழுக்க நடிகர் திலகம் சிவாஜி -யை பற்றி பாடுவது போல உள்ளது.\\
சிவாஜி புரொடக்ஸன்ஸ் என்பதால் இருக்கலாம் அண்ணா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா..
\\\துபாய் ராஜா said...
அது....\\
எது...
\\\ கார்க்கி said...
என் சாய்ஸ்..
1) டொட்டடாயிங்
2) துஷ்யந்தா
3) குதிரைக்கு தெரியும்
4) அசல்
5)எங்கே எங்கே
6) எம் தந்தைதான்
எல்லாப் பாடல்களுமே ரொம்ப கேட்சியா தொடங்குது. ஆனா முதல் இண்ட்டெர்லியுடிலே டல்லடிக்கிறது. படம் ரிலிஸானாதான் பிக்கப் ஆகும். ஏகன் இசையில் இருந்த இளமை இதில் இல்லை.\\\
கண்டிப்பாக பரத்வாஜ் தவிர வேறு நபர் யூஸ் பண்ணி இருக்கலாம்.
\\\கலையரசன் said...
இந்த பாட்டுக்கு எல்லாம் அவரு ஆடுவாராமா???\\\
அதுக்குத்தான் ரெண்டு பேர் இருக்கிறார்கள் அல்லவா..அவுங்க பார்த்துக்குவாங்க அண்ணா
என்னாப்பா இது.. ஆளாளுக்கு நடுநிலையா பதிவு எழுத ஆரம்பிச்சுட்டீங்க? :)
பாட்டு எங்க கிடைக்கும்?
கேட்ப்போம் எப்படி இருக்குன்னு..;)
அன்பு
சிவகாசியவெ கலக்கறியே
நல்வாழ்த்துகள் - நல்ல இடுகைக்கு
Good Music Review
Download Asal Mp3 Songs - http://moviegalleri.blogspot.com/2010/01/asal-mp3-songs-free-download-download.html
படம் எப்படி இருக்குன்னு பாப்போம்.
Post a Comment