தனிமையின் துயரம்..


உனக்காக நான்,
எனக்காக நீ,
உன்னில் நான்,
என்னில் நீ,
என நாம் இருவரும்
நம்மை மறந்து,
நம் காதலினால் வயப்பட்டிருந்த காலத்தில்
காற்றுகூட புக முடியாமல்
இருவரும் நெருக்கமாய்
அமர்ந்து இருக்கிறோம்..

இருப்பினும்,
அந்த இடைவெளிக்குள்ளும்
அனுமதி வாங்காமலேயே,
வந்து அமர்கிறது காதல்....

பின் ஒரு நாளில்
கருத்து வேறுபாட்டின்,
கணத்த வேர்களுக்கு,
பால் ஊற்றியபடி,
பயணப்படுகிறது,
பக்குவமடையாத காதலும்,
பக்குவமடைந்த தலைக்கணமும்....

பேசி தீர்ப்பதென,
முடிவு செய்யப்பட்டு,
இருவரும்
கூடிய சந்திப்புகளில்,
மௌனமாய்,
இடைவெளி விட்டு,
அமர்ந்திருக்கிறோம்,
காதலுக்காக....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

16 பின்னூட்டங்கள்:

லோகு said...

ஒரு அஞ்சு வெள்ளிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிட்டு வந்தா, இது கொஞ்சம் தெளியும்.

இரவு நேரங்களில் தனியே போக வேண்டாம்.மோகினி பிசாசுகள் நடமாடும்..

Jokes apart, கவிதை ரொம்ப நல்லா இருக்கு மாப்ள.. வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

ஆகா ஆகா

இறுக்கமாக இடைவெளி இன்றி அமர்ந்திருந்த போது வந்த காதல் - ஊடலுக்குப் பின் - பேசித் தீர்த்துக் கொள்ள வந்த போது பெரிய இடைவெளி - ம்ம்ம்ம்

நன்று நன்று நல்ல கவிதை

நல்வாழ்த்துகள் அன்பு

பரிசல்காரன் said...

நல்லாருக்கு.
கவிதையும் அதன் தலைப்பும்!

Unknown said...

//பின் ஒரு நாளில்
கருத்து வேறுபாட்டின்,
கணத்த வேர்களுக்கு,
பால் ஊற்றியபடி,
பயணப்படுகிறது,
பக்குவமடையாத காதலும்,
பக்குவமடைந்த தலைக்கணமும்...//


புரிந்தால் சரி,

கவிதை அருமை

அத்திரி said...

தம்பி பாஸ் பண்ணிட்டியா

வினோத் கெளதம் said...

ஏன்..நல்லா தானே போய்க்கிட்டு இருந்துச்சு..:)
இருந்தாலும் நல்லா இருக்கு..

ஆ.ஞானசேகரன் said...

///இடைவெளி விட்டு,
அமர்ந்திருக்கிறோம்,
காதலுக்காக....////


நன்று

Raju said...

:-)

Vidhoosh said...

ரொம்ப நாளா காணோம்!!!
நல்ல கவிதையோடு வந்திருக்கிறீர்கள்.
புத்தாண்டு / பொங்கல் வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி said...

தம்பி, சின்னப் பையனா நீ... ரொம்ப நல்ல மெச்சூரிட்டி. நல்லா இருக்கு அன்பு.

மனோரஞ்சன் said...

//கருத்து வேறுபாட்டின்,
கணத்த வேர்களுக்கு,
பால் ஊற்றியபடி,
பயணப்படுகிறது,
பக்குவமடையாத காதலும்,
பக்குவமடைந்த தலைக்கணமும்....//
அருமையான வரிகள். ஏனைய வரிகளும் நன்றாக இருக்கின்றன. Keep it up.

shortfilmindia.com said...

:)

cablesankar

Anbu said...

\\\\லோகு said...

ஒரு அஞ்சு வெள்ளிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிட்டு வந்தா, இது கொஞ்சம் தெளியும். \\\

சரி மச்சான்...

நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா..

Anbu said...

நன்றி சீனா ஐயா

நன்றி பரிசல் அண்ணா..முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

நன்றி சொல்லரசன் அண்ணா..

அத்திரி..
பாஸ் பண்ணலை அண்ணா..

நன்றி வினோத் தல..

நன்றி ஞானசேகரன் அண்ணா..

நன்றி தல..

கொஞ்சம் வேலைங்க அதான் வர முடியலை..இனிமே தொடர்ந்து எழுதுகிறேன்..

நன்றி மனோரஞ்சகன் அண்ணா..

நன்றி கேபிள் அண்ணா..

priyamudanprabu said...

நல்ல கவிதை

அன்பரசன் said...

லேட்டா சொன்னாலும் பரவாயில்ல.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.