என்னவளுக்காக...


எனக்கு எது பிடிக்கும்,
எது பிடிக்காது,
என்று தெளிவாய் உன்னிடம்
சொல்லத்தெரிந்த எனக்கு
ஏனோ தெரியவில்லை...
"நான் உன்னை காதலிக்கிறேன்"
என்ற வார்த்தையை மட்டும்
சொல்லத் தெரியவில்லை...

நான் எழுதும் ஒவ்வொரு
கவிதையையும் படித்துவிட்டு,
ஒரு புன்சிரிப்புடன்,
இந்த கவிதைக்கு பின்னால்
"யாரோ ஒரு பெண் இருக்கிறாள்"
என்கிறாய்..அது நீ தான்
என்று உனக்கு தெரிந்தும் கூட..

தோழிகளோடு கலகலப்பாக
சிரித்துக்கொண்டு செல்கையில்,
என்னை பார்த்ததும்
ஏன் அமைதி கொள்கிறாய்..
அதை பார்த்தபின் தெரிந்துகொண்டேனடி
"நீயும் என்னைக்காதலிக்கிறாய்" என்பதை...!!!

நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என்னை பார்த்து
சிணுங்குகிறது..
ஆனால் நீ மட்டும்...!!!!

முற்றுப்புள்ளி வைக்காமல் தான் முடிக்கிறேன்
ஒவ்வொரு கவிதையும்..!!
உயிருள்ள காலம் வரை
வற்றிப்போய் விடுமோ
உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

20 பின்னூட்டங்கள்:

லோகு said...

இது நல்லதுக்கு இல்ல மாப்ள.. அளவுக்கு மீறி போய்கிட்டு இருக்கு, கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு..

ஆனா கவிதை ரொம்ப நல்லாருக்கு.. கவிதை புனைவாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். :)

sathishsangkavi.blogspot.com said...

//நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என்னை பார்த்து
சிணுங்குகிறது..
ஆனால் நீ மட்டும்...!!!!//

தோழரே அந்த பொண்ணு யாருங்க...

துபாய் ராஜா said...

//முற்றுப்புள்ளி வைக்காமல் தான் முடிக்கிறேன்
ஒவ்வொரு கவிதையும்..!!
உயிருள்ள காலம் வரை
வற்றிப்போய் விடுமோ
உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!//

ஆஹா..ஆஹா.. கவிதை.கவிதை. அருமை அன்பு தம்பி. அப்படியே அடிச்சு ஆடுங்க.

ஈரோடு கதிர் said...

அழகு

பரிசல்காரன் said...

கடைசி வரிகள் அருமை.

Ram Kumar said...

ரொம்ப சூப்பராக இருக்கு

Karthika said...

Great!!!

அத்திரி said...

ம்ம்ம்ம்ம்ம்ம் ஓஓஓஓகே.......................டோன்ட் வொரி பீ ஹாப்பி.கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

நிலாமதி said...

நிறைவேற வாழ்த்துக்கள். காதல் வந்தால் கவிதையும் கூட வருமாம்.
உண்மையாங்க........

Thamiz Priyan said...

புரியிற மாதிரி கவிதை எழுதும் உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு அன்பு. கவிதை அழகா இருக்கு.

Sinthu said...

இது கற்பனையா நிஜமா அன்பு?
நன்றாக இருக்கிறது.

கார்க்கிபவா said...

உலர்ந்த ஆடைகளை

எடுக்க வந்தவள்

ஆடைகளோடு என்

மனதையும்

மடித்து

பத்திரப் படுத்தி போனாள்.

கார்க்கிபவா said...

:))

pudugaithendral said...

ரைட்டு

Unknown said...

நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என்னை பார்த்து
சிணுங்குகிறது..
ஆனால் நீ மட்டும்...!!!!


////


அடடா
கலக்கல்

கடைசி வரிகளும்

Unknown said...

///
கவிதை புனைவாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். :)
///


ஏன் ஏன்??????

ஆ.ஞானசேகரன் said...

//நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என்னை பார்த்து
சிணுங்குகிறது..
ஆனால் நீ மட்டும்...!!!!//

அட ம்ம்ம் கலக்கல் வரிகள்

விக்னேஷ்வரி said...

கடைசி வரிகள் நல்லாருக்கு அன்பு.

அன்பரசன் said...

நல்ல வரிகள்

சிங்கக்குட்டி said...

கலக்குங்க அன்பு :-) அருமையாக இருக்கிறது.