விமர்சனம் படிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்..நான் தீவிர விஜய் ரசிகனோ அல்லது அஜித் ரசிகனோ இல்லை..இது ஒரு நடுநிலைவாதியின் விமர்சனம் மட்டுமே... நான் ஒரு சூர்யாவின் ரசிகன்...
ஏகனின் படுதோல்விக்கு பின் அஜித்தின் 49 வது படம்..சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,சரணின் இயக்கத்தில்,பரத்வாஜின் இசையில் வெளிவந்துள்ள படம் "அசல்"
படத்தின் கதை:-
அப்பா அஜித் தன் முதல் மனைவிக்கு பிறக்கின்ற குழந்தைகளை நம்பாமல் இரண்டாம் மனைவிக்கு பிறக்கின்ற அஜித்திடம் தனது முழு சொத்தினை ஒப்படைக்கிறார். சொத்துக்கு ஆசைப்பட்டு அவர்கள் அப்பாவை கொன்றுவிட்டு தன் தம்பியையும் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.அவர்களிடம் இருந்து அஜித் தப்பித்து சொத்தை மீட்டாரா இல்லையா என்பதே மீதிக்கதை.....
சமீரா ரெட்டி அஜித்தின் எடுபுடியாக வருகிறார்...சில நேரங்களில் கவர்ச்சி..மற்றபடி சொல்ற மாதிரி ஒன்றும் இல்லை..
பாவனா சித்திரம் பேசுதடி படத்துக்கு பிறகு இப்போ தான் பார்க்க அழகாக இருக்கிறார்..தமிழக சினிமாவின் வழமை மாறாமல் லூசுப்பெண்ணாக அறிமுகமாகி இறுதியில் அஜித்தை மணக்கிறார்..
பிரபு தியேட்டரில் தெரிந்தார்.. தியேட்டரை விட்டு நான் வெளியே வந்த பிறகு அவர் எதுக்காக வந்தார் எதுக்காக போனார் என்று தெரியவில்லை..
படத்தில் வில்லன்கள் மிகப்பெரிய காமெடி..
பரத்வாஜின் இசை பாட்டு கேட்கும் போது இருந்த "டொட்டொயிங்" திரையில் பார்க்கும் போது சுத்தமாக இல்லை..
பிரசாந்த். படத்தின் எழுத்து போடும் போதே பாரிஸின் அழகை மிகவும் அருமையாக காட்டியுள்ளார்..பல இடங்களில் இவரது உழைப்பினால் படம் தூக்கம் வராமல் போகிறது...
ஆண்டனியின் எடிட்டிங் சூப்பர்...( ஆயிரத்தில் ஒருவன் 3.15 மணி நேரம் பார்த்த எனக்கு இந்த படம் 2 மணி நேரத்தில் முடிந்தது மிகவும் சந்தோஷம்)
சரண் கடைசியாக மோதி விளையாடிய சரண் இப்படத்தில் ரொம்பவே மோதியுள்ளார் திரைக்கதையுடன்...
அஜித் இன்னும் எத்தனை நாளைக்கு தாங்க இவரை நடக்கவைப்பீங்க...படத்தில் மனுஷன் நடக்கிறார் நடக்கிறார் நடந்து கொண்டே இருக்கிறார்...இவர் நடப்பதை பார்த்தால் வெளிநாடு செல்ல விமானம் எல்லாம் தேவையில்லை..நடந்தே போய்விடுவார். நடிப்பு என்று சொன்னால் அப்பா அஜித் ஆக வரும் காட்சியில் இறக்கும் போது உள்ள காட்சி மட்டுமே.. டொட்டொயிங் பாட்டுக்கு அவரது டேன்ஸ் என்னை வியக்கவைத்துவிட்டது..வேணாம் தல..இந்த விபரீதபரீட்சை..படத்தில் நீங்க பேசாட்டாலும் உங்க கூட வருகிற சில அல்லக்கைகள் எப்போது பார்த்தாலும் தல தல அப்படின்னு கூவுறாங்களே ..ஏன் இந்த கொலைவெறி...
படத்தின் பிளஸ்:-
1.அஜித்தின் நடை..
2.பாவனாவின் அழகு..
3.சமீராவின் சிறிதளவு கவர்ச்சி..
4.கேமராமேன் பிரசாந்த்..
படத்தின் மைனஸ்:-
1.சரண்
2.பரத்வாஜ்
3.படத்தின் திரைக்கதை
1. நான் மதுரை சென்று பார்க்கும் இரண்டாவது படம்..முதல் படம் சீனா ஐயாவின் தயவால் இனாமாக பார்க்கமுடிந்தது..இரண்டாவது படமும் ஓ.சி.தான்.. எனது கம்பெனியின் ஓனர் தீவிரமான அஜித் ரசிகர் என்பதால் முழுவதும் அவரின் செலவு..
2.இவ்வளவும் படித்துவிட்டு படம் பார்க்கலாமா வேணாமா என்று எல்லாம் கேட்கக்கூடாது..கண்டிப்பாக அஜித்தின் நடைக்காக ஒரு முறை பார்க்கலாம்...
அசல்:- கம்மியான அசத்தல்
அசல்:- கம்மியான அசத்தல்
15 பின்னூட்டங்கள்:
உங்களுக்கெல்லாம் பொறாமை.. :)
இந்த படத்தை பார்க்க வேண்டாம்னு மறைமுகமா நீ சொல்றது புரியுது தம்பி
அன்பு
மூணாவது படம் பாக்க மதுரைக்கு எப்ப வரே ! ஏன் இப்ப வந்ததச் சொல்லலே
அப்போ யாராவது ஓசியில் கூட்டிட்டு போனா பார்க்கலாம்கிறியா தம்பி.... :))
:)
ஓகேபா தேறிடும்ல?
நன்றி. :)
படம் உண்மையிலேயே நல்லாத்தாம்பா இருக்கு
கண்டிப்பா பாக்கப் போறேன்.
//இவர் நடப்பதை பார்த்தால் வெளிநாடு செல்ல விமானம் எல்லாம் தேவையில்லை..நடந்தே போய்விடுவார்.//
ஹிஹிஹிஹி..
ஆனாலும் கார்த்திக்.. சரி விடு...
பதிவு படிச்சுதான் பின்னூட்டம் போட்டியாப்பா? :))
@கார்க்கி
நான் இதைவிட படுமோசமா இருக்கும்னு நினைச்சேன். ட்ரெயிலர் பார்த்தீங்கள்ல? சுபாங்கன் விமர்சனம் படிங்க. "மவுத் டாக்" பாஸிட்டிவ். :))
அட விடுங்கப்பா கார்க்கிக்கு அஜித் படம்
நல்லா இருந்தா புடிக்காது....
:))
:-))))))
இருக்கட்டும்.....
//நான் தீவிர விஜய் ரசிகனோ அல்லது அஜித் ரசிகனோ இல்லை..இது ஒரு நடுநிலைவாதியின் விமர்சனம் மட்டுமே... நான் ஒரு சூர்யாவின் ரசிகன்...//
சூர்யா ரசிகர்கள் நடுநிலையா தான் இருப்பாங்களோ!?
யாருக்காவது ரசிகரா இல்லைனா பிறந்த பிறப்புக்கு அர்த்தம் இல்லாமப்போயிருமோ!?
nee yellam oru aalu punda...
sunni...
Post a Comment