காதலர் தின ஸ்பெஷல்...


ஒரு அதிகாலை பொழுது
நீ நீராடிவிட்டு
பாவாடை தாவணியில்
தலையில் நீர் சொட்ட
உன் விட்டு வாசலில் கோலம்
போட்டு விட்டு ஓடிப்போனாய்
அன்று
நம் பள்ளி வரலாற்று
தேர்வில் வினா ஒன்று
உலகின் மிகச்சிறந்த ஓவியம்
எது என்று ?
சற்றும் தயங்காமல் எழுதினேன்
என் எதிர் வீட்டு கோலம்
என்று !!

******************************

அழகாய்தான்
இருந்தது.
நம் பள்ளி
பேருந்து நிறுத்தம் !

ஒரு வேலை ...
நாம் இருவரும் இருந்ததாலோ?...

பக்கத்தில் அமர்ந்து
பல முறை பேசியிருக்கிறோம் ..!
சில நேரம் சிரிப்பாய் ..
சில நேரம் சினமாய்...

ஏனோ
அப்போதெல்லாம்
நம்மை சுற்றி
நிறையப்பேர் இருந்தாலும்
"வெறிச்சோடி" இருப்பது போல்
ஒரு உணர்வு....

இதோ !
இன்று .....அந்த
இன்பமான நினைவுகளை
இதயத்தில்
சுமந்தவனாய் ....
அதே பள்ளி நிறுத்தத்தில்
வந்து சற்று நேரம்
அமர்ந்துவிட்டு செல்கிறேன் ...

ஏனோ இப்பொழுது
என்னை சுற்றி யாருமே இல்லையெனிலும்
நெரிசலாய்...நெருப்பாய்
ஒரு உணர்வு.......

******************************
இது ஒரு மீள்பதிவு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

11 பின்னூட்டங்கள்:

sathishsangkavi.blogspot.com said...

//உலகின் மிகச்சிறந்த ஓவியம்
எது என்று ?
சற்றும் தயங்காமல் எழுதினேன்
என் எதிர் வீட்டு கோலம்
என்று !!//

உங்கள் கவிதை கோலம் போல் அழகு...

Unknown said...

// ஏனோ இப்பொழுது
என்னை சுற்றி யாருமே இல்லையெனிலும்
நெரிசலாய்...நெருப்பாய்
ஒரு உணர்வு....... //

வலி மிகுந்த வரிகள்

விக்னேஷ்வரி said...

தம்பி, நீ சின்னப் பையனா... முதல் கவிதை ரொம்ப அழகு.

அப்துல்மாலிக் said...

அழகான வரிகளின் கொசுவத்தி சுருளை பத்தவெச்சிட்டீங்க தல

நல்லாயிருந்தது

மணிஜி said...

காதலிக்கிறாயா?

priyamudanprabu said...

நல்லாயிருந்தது

priyamudanprabu said...

நல்லாயிருந்தது

கார்க்கிபவா said...

ரைட்டு.. பல இடத்துல வெடிக்குதா பத்த வச்சுது?

cheena (சீனா) said...

அன்பின் அன்பு மதி

காதல் கவிதை அருமை - சிறந்த ஓவியம் ஃபிகரு போட்ட கோலமா - வாழ்க வாழ்க உனது காதல்

நல்வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

என்னடா சீசன் டயத்துல பயபுள்ள ஒன்னும் எழுதாம இருக்கேன்னு பார்த்தேன்.. ரைட்டு..

Tamilparks said...

அருமை வாழ்த்துக்கள்