அ முதல் ஃ வரை...


த்தை பையன் என
தோழிகளிடம்
என்னை அறிமுகப்படுத்தையில்
வந்த வெட்கத்தை
மறைக்க முயன்றாயே..
அந்த நொடி
ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.

யிரம் முத்தம்
கொடுத்திருப்பாய்..
இன்னும் இனிக்கிறது
அவசரமாய் கொடுத்த
அந்த முதல் முத்தம்..

னிப்பு குறைவாகவே
இருக்கிறது
உன் எச்சில் படாத எந்த பண்டமும்..

ர்ப்பு விசை என்றால்
என்னவென்று உணர்ந்தேன்..
உன்னை முதன் முதலில்
பார்த்த தருணத்தில்..

தடுகளை
ஆயுதமாக்கி
என்னைக்கொல்லும்
அரக்கி நீ..

ஞ்சலாட
நீ வரவில்லையென
உண்ணாவிரதம் இருக்கிறது
மரம்..

ல்லா காதல்பாடல்களும்
உன்னைப்பற்றியே
எழுதப்பட்டிருப்பதாக
தோன்றுகிறது
எனக்கு..

க்கங்களும் தவிப்புகளும்

நீ சிரித்த
மறுநொடியில் காணமல்போகின்றன..

ந்து நிமிடத்தில்
வந்துவிடுவேன் என்றாய்...
அரை நிமிடம் முடிவதற்குள்
நீ வரும் பாதையை நோக்கி
என் கண்கள் ஆயிரம் முறை
பயணித்துவிட்டன..

ரு முத்தம் கேட்டு
கெஞ்சிய போது மறுத்துவிட்டு
இப்போது ஓராயிரம்
முத்தங்கள் தருகிறாய்
கனவில்...

டும் மேகங்கள் கூட
பூமியில் உன்னை பார்த்தால்
ஒரு நிமிடம் நின்று
ரசித்துவிட்டு தான் செல்கின்றன..

மேலே உள்ள கவிதைகள் அனைத்தும் மொக்கையாக இருக்க வேண்டும் என்று யோசிக்கப்பட்டவையே...இதில் யாரும் இலக்கண சுவையையும் இலக்கிய சுவையையும் தேடவேண்டாம்..

எவ்வளவோ முயன்றும் ஃ என்ற எழுத்துக்கு மொக்கையாக கவிதை யோசிக்கமுடியவில்லை...முடிந்தவர்கள் கமெண்டில் தெரியப்படுத்தவும்..


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

27 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சூப்பர் அ முதல் ஃ வரை அருமை

Unknown said...

//ஐந்து நிமிடத்தில்
வந்துவிடுவேன் என்றாய்...
அரை நிமிடம் முடிவதற்குள்
நீ வரும் பாதையை நோக்கி
என் கண்கள் ஆயிரம் முறை
பயணித்துவிட்டன..//அருமை

அப்துல்மாலிக் said...

இது மொக்கையா?

உங்க பெருந்தன்மை எனக்கு புடிச்சிருக்கு

மிகவும் ரசித்தேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

அசத்துற அன்பு.. பட்டாசா இருக்குப்பா..:-))

சரவணகுமரன் said...

சூப்பர்...

Toto said...

க‌ல‌க்க‌லா எழுதியிருக்கீங்க‌.. வாழ்த்துக்க‌ள்.

-Toto

மதுரை சரவணன் said...

akkththe inikkirathu kaathal. ok va. super

அகல்விளக்கு said...

சூப்பர் நண்பா.

கார்க்கிபவா said...


எனக்கு புடிக்கல.
அதுல மூணு புள்ளி இருக்கு
என்று சலித்துக் கொள்பவளே..

அந்த மூன்றாவது புள்ளி
நம் காதல் என்பதை
எப்படி புரியவைப்பது?

MANO said...

அட்டகாசம் அன்பு SIR....
முதலில் நான் follower ஆகிடறேன்

Anbu said...

\\\nanrasitha said...

சூப்பர் அ முதல் ஃ வரை அருமை\\

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

Anbu said...

\\\சிநேகிதி said...

//ஐந்து நிமிடத்தில்
வந்துவிடுவேன் என்றாய்...
அரை நிமிடம் முடிவதற்குள்
நீ வரும் பாதையை நோக்கி
என் கண்கள் ஆயிரம் முறை
பயணித்துவிட்டன..//அருமை\\

நன்றி அக்கா

Anbu said...

\\\அபுஅஃப்ஸர் said...

இது மொக்கையா?

உங்க பெருந்தன்மை எனக்கு புடிச்சிருக்கு

மிகவும் ரசித்தேன்\\\

நன்றி அண்ணா

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

அசத்துற அன்பு.. பட்டாசா இருக்குப்பா..:-))\\

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் அண்ணா..

Anbu said...

\\சரவணகுமரன் said...

சூப்பர்...\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\ Toto said...

க‌ல‌க்க‌லா எழுதியிருக்கீங்க‌.. வாழ்த்துக்க‌ள்.\\\

நன்றி todo

Anbu said...

\\\ Madurai Saravanan said...

akkththe inikkirathu kaathal. ok va. super\\

Thanks

Anbu said...

\\அகல்விளக்கு said...

சூப்பர் நண்பா.\\

நன்றி நண்பா..

Anbu said...

\\\கார்க்கி said...


எனக்கு புடிக்கல.
அதுல மூணு புள்ளி இருக்கு
என்று சலித்துக் கொள்பவளே..

அந்த மூன்றாவது புள்ளி
நம் காதல் என்பதை
எப்படி புரியவைப்பது?\\

அழகு அண்ணா..

Anbu said...

\\\MANO said...

அட்டகாசம் அன்பு SIR....
முதலில் நான் follower ஆகிடறேன்\\

நான் SIR எல்லாம் இல்லைங்க அண்ணா..

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

cheena (சீனா) said...

அன்பு

சரவெடி கொழுத்திப் போடறாப்ல இருக்கு

நவீன அவ்வையாரா

கலக்குறேப்பா

cheena (சீனா) said...

அன்பு ஔவன்னா என்னாயிற்று அன்பு

cheena (சீனா) said...

அன்பு

ஔடதமாய் நீ இருப்பாய்
என்று நினைத்தேன்
ஆசை நோயை
அன்புப் பார்வையால் அழைத்தாயே

அஃதென்ன அனைவர்க்கும்
இந்தக் காதல்
புதிதாய் இருக்கிறதே !

புதுமைதானோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நல்லாருப்பா அன்பு

ஆர்வா said...

ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்.. ரைட்டு...

காதலர் தினத்துக்கு என்ன ஸ்பெஷல் அன்பு?

ஆர்வா said...

அன்புக்காக ஒரு குட்டி கவிதை... அன்புவின் ரகசிய ஸ்நேகிதி சொல்வது போல் ஒரு குட்டி கவிதை
******************************
ரமேஷ் = இனிமையானவன்
பிரபு = வள்ளல்
கணேஷ் = கடவுள்

என் ஒவ்வொரு தோழியரும்
தத்தம் காதலர் பெயரின் அர்த்தம் சொல்லி யார் காதல் உயர்ந்தது
என்று கர்வத்துடன் பேசிக்கொண்டனர்.

சட்டென்று நான் அவர்களை உற்றுப்பார்த்து என்னவரின்
பெயரை உச்சரித்து
அன்பு = காதல் என்றேன்.

அங்கு கர்வம் ஓடி ஒளிந்தது......

ஆர்வா said...

அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்

அத்திரி said...

சூப்பர்