காதலர் தின பரிசு...


நாளை காலை
"காதலர் தினம்"
காலையிலே போன் பண்ணிணாய்..
நாளைக்கு என்ன ஸ்பெஷல்..
"எனக்கு நீ"
"உனக்கு நான்"
என்றேன்..

இதையே எவ்வளவு நாள் தான்டா
சொல்லுவாய் என்றாய்..
வேறு எதுவும் தெரிந்தால்
சொல்ல மாட்டேன் என்றா சொல்கிறேன்..

எனக்காக நாளைக்கு
ஒரு கவிதை எழுதி தருவாயா என்றாய்..
பதிலுக்கு நீ என்ன தருவாய் என்றேன்..
நீ வழக்கமாய் என்னிடம் ஒன்று கேட்பாயே
அது தருகிறேன் என்று சொல்லி
போனை வைத்தாய்..

என் ஆசையை நாளைக்காவது
அடைந்தாக வேண்டும் என்று
காலையிலிருந்து யோசிக்கிறேன்..
உன்னை பற்றி கவிதை எழுத..

எதுவும் தோன்றவில்லை
இந்த மடையனுக்கு..

திரும்பவும் உனக்கே கால் பண்ணுகிறேன்..
"என்ன கவிதை ரெடியா" என்கிறாய்..
என்ன சொல்வதென்று அறியாமல்
விழித்துவிட்டு "ம்ம் " என்றேன்..

நான் எழுதிய கவிதை இதோ


"எனக்கு நீ"

"உனக்கு நான்"


என்னங்க நான் ஆசைப்பட்டது கிடைக்குமா...
நாளை காலை எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்..


அனைவருக்கும்
காதலர் தின வாழ்த்துக்கள்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

10 பின்னூட்டங்கள்:

அத்திரி said...

வாழ்த்துக்கள் தம்பி

cheena (சீனா) said...

கேட்டது கிடைக்க நல்வாழ்த்துகள் அன்பு

என்ன அது - தொட்டுப் பேசும் இதழ்களா - ( அது நட்புதானே - காதல் இல்லையே )

லோகு said...

அய்யோ.. அய்யோ..

அகல்விளக்கு said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் தல...

கார்த்திகைப் பாண்டியன் said...

ஊரு மேல போற மாரியாத்தா.. எம்மேலையும் கொஞ்சம் வந்து ஏறு ஆத்தா..:-))))

அத்திரி said...

ஏலே தம்பி போட்டொவுல நீயா பால் வடியிற முகமாயிருக்கு உனக்கு இது தேவையா?????????

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள் தம்பி.

அப்துல்மாலிக் said...

வயசுக்கோளாறு நாமலும் ஏன் இந்த நாளை கொண்டாடக்கூடாதுனு நினைக்கிறிய போலருக்கு

murali said...

All the best kanna ! I am also keep on repeating the same statement (!!!) every year. Anaal adhu alukuradhu illai .

Anonymous said...

"எனக்கு நீ"
"உனக்கு நான்"

கவிதை அருமை