நடிகர் விஜயும்,கேபிளும்,கார்க்கியும்..


குறிப்பு:- கீழே உள்ள பதிவில் சிகப்பு கலரில் காட்டப்பட்டுள்ளது அவர்களுடைய மைண்டு வாய்ஸ் ஆக குறிப்பிடப்பட்டுள்ளது

குருவி,வில்லு,வேட்டைக்காரன் என பல வெற்றிப்படங்களை கொடுத்து கொண்டிருக்கின்ற இளைய தளபதி (டாக்)டர்.விஜய் அவர்களின் தீவிர ரசிகனும்,அவரின் கட்சியின் மேனேஜருமாக கார்க்கி இருக்கிறார்..

இருவரும் ஒரு ஹோட்டலில் சந்தித்து தன் அடுத்த படத்திற்கான விவாதத்தினை தொடங்குகின்றனர்...

கார்க்கி, என்னோட அடுத்த படம் ஒரு வித்தியாசமாகவும்,அதே சமயம் அரசியல், மக்களின் பிரச்சினைகள், சமுதாய கருத்துக்கள் பற்றி எடுத்துரைப்பதாகவும் இருக்கணும் என்று நினைக்கிறேன்..நீ என்ன நினைக்கிற..

இல்லை தலைவா..ஏற்கனவே தமிழ்படத்தில் நம்மளை பற்றி நாரடிச்சுட்டாங்க..இனிமேலும் இது எல்லாம் கொஞ்சம் வேணாமே..

இல்லை கார்க்கி..நான் உறுதியான முடிவோட இருக்கேன்..அடுத்த படத்தில் நான் அரசியல் கேரக்டரில் நடிச்சே ஆகணும்..

அப்ப சரி உன்னை யார் வந்து திருத்தமுடியும்..

என்ன கார்க்கி ஒன்னும் பேசாம இருக்கே..

இல்லை தலைவா..எனக்கு தெரிந்த இயக்குனர் ஒருத்தர் ரொம்ப நாளாக படம் பண்ண துடித்துக்கொண்டிருக்கிறார்..அவரிடம் நிறைய கதைகள் உள்ளன.அவரை வேணா வரச்சொல்லட்டுமா..

யாருப்பா அவர்..

வேற யாருமில்லை..கேபிள்சங்கர் னு சொல்லி முடிப்பதற்குள்...

அவரா..எல்லா படமும் பார்த்துவிட்டு முதல் நாளே விமர்சனம் எழுதுவாரே அவர் தானே..அப்ப சரி..

என்ன தலைவா..உடனே .கே.சொல்லிடுங்க..

அதாவது கார்க்கி..அவர் படம் எடுத்தா விமர்சனம் நல்லா இருக்குன்னு எழுதுவார்..அதை வச்சாவது ஒரு 1000 பேர் படம் பார்க்க வருவாங்க இல்லையா...
இந்த பொழைப்புக்கு...

என்ன கார்க்கி அமைதியா இருக்க..நான் சொல்றது சரிதானே...

ம்ம்ம் சரிதான் தலைவா..எப்படி பார்த்தாலும் பத்து நாள் ஓடப்போகுது..

சரி அவரை நாளைக்கே வீட்டுக்கு வரச்சொல்லு..வரும் போதே நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட கதைகள் ரெடி பண்ணி கொண்டுவர சொல்லு..

மெரினா கடற்கரையில் கேபிளும் கார்க்கியும்..

என்ன கார்க்கி திடீரென்று வரச்சொல்லி இருக்க..

இல்லை அண்ணே..எங்க தளபதி உங்க கூட ஒரு படம் பண்ணலாம் என்று நினைக்கிறார்..நீங்க என்ன பீல் பண்றிங்க..அதுவும் அரசியல் சப்ஜெக்ட் ஆகத்தான் இருக்கணும் என்று நினைக்கிறார்..

அரசியலா..இல்லை கார்க்கி என்னோட முதல் படம் கொஞ்சம் காதல் கதையா இருந்தா நல்லா இருக்கும்ன்னு பீல் பண்றேன்..

எனக்காக அண்ணே..சும்மா கதை மட்டும் வந்து சொல்லுங்க.. கதை பிடித்திருந்தால் அதுக்கு அப்புறம் மிச்சத்தை பார்ப்போம்..

சரி கார்க்கி உனக்காக வருகிறேன்..

மறுநாள் காலை..விஜய், கார்க்கி, கேபிள்சங்கர்..


வாங்க, வாங்க, சங்கர் சார்....எப்படி இருக்கீங்க?.

நல்லா இருக்கேன் சார்..நீங்க எப்படி இருக்கீங்க?..

எனக்கென்ன இந்த தமிழக ரசிகர்கள் இருக்கும் வரை கவலை இல்லையே. நான் என்ன பண்ணினாலும் நல்லா இருக்குன்னு சொல்றாங்க...எனக்கே காமெடியாத்தான் இருக்கு..அது சரி..கதை என்ன வென்று சொல்லுங்க..

சார் படத்தின் கதைப்படி நீங்க மூன்று முக்கிய கேரக்டரில் நடிக்கீறிங்க..

என்ன சொல்றீங்க சங்கர் சார் நிஜமாவா..

ஆமா சார்..படத்தோட ஓபனிங் சீன்ல அமெரிக்கா வெள்ளை மாளிகை காட்டுறோம்..அங்கே அமெரிக்க அதிபரை பின்பக்கமாக நிக்கிறார்..

யாரு..பராக் ஓபாமாவா...

இல்லை சார்..அமெரிக்க அதிபரே நீங்கதான்.

கிழிஞ்சது போ (கார்க்கி)

அப்புறம்..(விஜய்)

இந்திய பிரதமருடன் பேசிக்கொள்கிறார்..இங்கே இந்திய பிரதமராகவும் நீங்களே..

சபாஷ்..வெரி குட் சங்கர் சார்..இதை இதை இதைத்தான் இத்தனை நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..என்ன பேசிக்கிறாங்க..

அமெரிக்காவும் இந்தியாவும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது பற்றி தீவிரமாக பேசிக்கிறாங்க..

அப்புறம்..

இதற்கு இடையூறாக சீன நாட்டின் பிரதமர் இருக்கிறார்..இவரை கொலை செய்ய தமிழகத்தின் தீவிர முன்னணி ரவுடியாக மூன்றாவது கேரக்டரில் களமிறங்குறீர்கள்..

வாவ்..அட்டகாசம்..கேட்கும் போதே... ம்ம்ம் மேலே சொல்லுங்க சார்..

ரவுடி கேரக்டரில் வருபவர் மதுரையில் சிறு கிராமத்தில் வசிக்கிறார்..கிராமத்தில் தண்ணீர் வசதியோ,கரண்ட் வசதியோ,படிப்பறிவோ எதுவும் இல்லை..தன் கிராம மக்களின் நிலையை கண்டு மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். எப்படியாவது தன் கிராம மக்களுக்கு இந்த சுதந்திர நாட்டில் சுதந்திரம் வாங்கித்தர ஆசைப்படுகிறார்..இவன் ரவுடி தான் என்றாலும் மனதுக்குள் கொஞ்சம் பாசமும்,இரக்கமும் உண்டு..தன் கிராமம் முன்னேற வேண்டுமானால் நான் முதலமைச்சராக வேண்டும் என தீர்மானிக்கிறார்..

இந்நிலையில் அவருக்கு பிரதமரிடம் இருந்து அழைப்பு வருகிறது..சீன அதிபரை கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்..

கொலை செய்தால் பதிலுக்கு என்ன கூலி கிடைக்கும்..

என்ன வேண்டும்..

தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும்..

என்னது முதல்வர் பதவியா..

ஆமாம் முதல்வர் பதவி கிடைத்தால் நான் இந்த வேலையை செய்கிறேன் என்கிறார்..

சிறிது நேரம் யோசித்த பிரதமர் சரி என்று சொல்லிவிட நீங்கள் சீனா செல்ல தயாராகிறீர்கள்..

ஒருவழியாக சீன அதிபரை கொன்றுவிட்டு முதல்வர் ஆசையுடன் இந்தியா திரும்பும் வேளையில்..பிரதமர் உங்களை ஏமாற்றிவிடுகிறார்..

சீனாவுக்கே சென்று அவனை கொன்ற எனக்கு இந்தியாவில் உன்னை கொல்ல நேரம் ஆகாதுடா என்று சவால்விடுகிறார்கள்..

இதோட இடைவேளை...

இதற்குபின் இந்திய பிரதமரை கொலைசெய்ய முயற்சிக்கிறீர்கள்..ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் தப்பித்துவிடுகிறார்..ஆனால் கடைசியில் அவரை கொல்லும் தருவாயில் இதுவரை அனாதையாக வாழந்து வந்த உங்களுக்கு அவர்தான் அப்பா என்று தெரிய வருகிறது...

எப்படி எண்ணே (கார்க்கி)

என்னது எப்படி...

எப்படி தெரியும் கடைசி நேரத்தில் அவர்தான் அப்பா என்று..

மச்சம் ரெண்டு பேருக்கும் ஒரே இடத்தில் இருக்கும்..அதே மாதிரி இருவரும் ஒரே மாதிரி செயின் அணிந்து இருப்பர்..

இல்லை அண்ணே..இதுலே லாஜிக் இடிக்குது..

இதுல மட்டுமா லாஜிக் இடிக்குது. நான் அமெரிக்க அதிபர் என்பதிலே மிகப்பெரிய லாஜிக் இடிக்குது...இதுக்குப்போய் லாஜிக் எல்லாம் பார்த்துக்கிட்டு..நீங்க சொல்லுங்க சங்கர் சார்..நான் கதைப்படி அப்பாவை கொன்றுவிடுவேனா..இல்லையா..என்னாலே சஸ்பென்ஸ் தாங்க முடியலை..
அதை இனிமேல் தான் யோசிக்கணும்...ம்ம்ம் அதுவந்து படம் எடுக்கும்போது யோசிப்போமே...

அதுவும் சரிதான்..ஏனென்றால் படம் எடுக்கும் போது நிறைய ஐடியா கிடைக்கும்..

இது தப்பு சங்கர் அண்ணே..சரியான கதைக்கரு நீங்கள் இல்லாமல்
களமிறங்குறீர்கள்..

கார்க்கி அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இருக்காது..நீ சும்மா இரு..

நாசமா போச்சு..(கார்க்கி) அமைதியாக வெளியேறுகிறார்..

அப்புறம் அதிகமாக அரசியல் வசனங்கள் எல்லாம் வரவேண்டும்..அதே சமயம் சென்சார் கட் பண்ணிட கூடாது..

கவலையை விடுங்க பாஸ்..நம்ம தயாரிப்பாளரே கலைஞர் மகன் தான்..ஒன்னும் கவலைப்படாதீங்க..

அப்புறம் படத்துல ஜோடி யாருன்னு சொல்லவே இல்லை..மூன்று கதாபாத்திரம் என்பதால் மூன்றி அறிமுக சாங் வைக்கணும்..ஒவ்வொரு சாங்கிலும் நம்ம கட்சிக்கொடி பின்னாலே தெரியணும்..பாட்டை நம்ம கபிலனையே எழுத சொல்லிடுவோம்..ஒரே ஒரு மெலடி..ஒரு தத்துவப்பாடல்..ஒரு தீம் சாங்..மியூசிக் வந்து விஜய் ஆண்டனியே போதும்..என்ன நான் சொல்றது சரிதானே சார்..

உன்னை திருத்தவே முடியாதுடா சாமி...அவசரமா என் மனைவி போன் பண்றா என்னவென்று தெரியவில்லை..இதோ ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன் என்று தலைதெறிக்க ஓடுகிறார் கேபிள் சங்கர்...

கேபிள் ஓடுவதை பார்த்த கார்க்கி உள்ளே வந்து என்ன தலைவா என்ன ஆச்சு..

ஓபனிங் சாங் பற்றி பேசினோம்...

இதோ டீ குடிச்சுட்டு வரேன் தலைவா..

ஏய் கார்க்கி..கார்க்கி நில்லுப்பா..

டிஸ்கி:-1 இந்த பதிவுக்கு நீங்கள் ஆதரவினை பார்த்து என் அடுத்த பதிவில் அஜித்தும்,கார்த்திகைபாண்டியனும்,கேபிளும்.. என்ற தலைப்பில் எழுதலாம் என்றிருக்கிறேன்..

டிஸ்கி:-2 இந்த மாதிரியான மொக்கை எல்லாம் எனக்கு முதல் முயற்சியே..தவறு எதுவும் இருந்தால் வோட் போட்டும்,கருத்துரையிட்டும் மன்னித்தருளவும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

17 பின்னூட்டங்கள்:

கார்க்கிபவா said...

டிஸ்கி 1க்காக மட்டும் என் ஆதரவினை எந்த நிபந்தனையுமின்றி தெரிவித்துக் கொள்கிறேன்

Sen22 said...

:))))))

வரதராஜலு .பூ said...

நல்லாவே கலாய்க்கறிங்க, நடத்துங்க நடத்துங்க

//Blogger கார்க்கி said...

டிஸ்கி 1க்காக மட்டும் என் ஆதரவினை எந்த நிபந்தனையுமின்றி தெரிவித்துக் கொள்கிறேன்//

தெரிவிங்க தெரிவிங்க

விக்னேஷ்வரி said...

ம், நடத்துங்க. :)

நாமக்கல் சிபி said...

:)
கலக்குங்க!

shortfilmindia.com said...

ரைட்டு.. இன்னும் கலாய்ச்சிருக்கலாமோ.. நான் என்னைய சொன்னேன் கார்க்கி கோவிச்சிக்க போறாரு..:)
கேபிள் சங்கர்

வேத்தியன் said...

நல்லா இருந்துச்சு அன்பு...
ரொம்ப நாளைக்கு பிறகு ப்ளாக் படிக்கிறேன்... அப்போவும் எனக்கு ரொம்ப பிடிச்ச விஜய் பத்தி இருக்கு... :-)
கலக்கீட்டீங்க...

Raju said...

அடுத்தது அஜித் பற்றிய பதிவு வெளியானால், அதற்கடுத்து சூர்யா பற்றிய அதிரடி பதிவொன்று இடி போல் இறங்கும் என்பதை இங்கே திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கின்றேன்.

Raju said...

ஆகையால், அந்த எண்ணத்தை அடியோடு கைவிட்டுவிடவும்.

Unknown said...

டிஸ்கி 1 க்கு எனது ஆதரவை தெரிவித்துகொள்கிறேன்

அத்திரி said...

// கார்க்கி said...
டிஸ்கி 1க்காக மட்டும் என் ஆதரவினை எந்த நிபந்தனையுமின்றி தெரிவித்துக் கொள்கிறேன்//

repeattu................. illana autothan

ஈரோடு கதிர் said...
This comment has been removed by the author.
கார்த்திகைப் பாண்டியன் said...

இடுகைக்கான தீவிரமான என்னுடைய ஆதரவை பதிவு செய்யும் அதே வேளையில், டிஸ்கி ஒன்றுக்கான பலான எதிர்ப்பையும், சீ சீ.. பலமான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்..

நண்பர் ராஜூவின் பின்னோட்டம் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.. அதற்கு என்னாலான உதவியை செய்ய எப்போதும் தயாராக இருக்கேன்..:-))

cheena (சீனா) said...

ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு

அன்பு நல்வாழ்த்துகள்

roomno104 said...

mokkai

வெற்றி said...

//டிஸ்கி 1க்காக மட்டும் என் ஆதரவினை எந்த நிபந்தனையுமின்றி தெரிவித்துக் கொள்கிறேன்//

நானும் நானும் :)

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in