நான் தான்டா கடவுள்..


திருடினேன் போலிஸ் துரத்தியது..
விபச்சார விடுதி கட்டி நடத்தினேன்..
மகளிர் சங்கங்கள் தடுத்தன..

வேலை செய்ய மனமுமில்லை..
அதற்கான எண்ணமும் இல்லை..

என்ன செய்யலாம் என்று
யோசித்த வேளையில்
காவி உடை அணிந்து
நான் தான்டா சாமியார் என்றேன்
ஒரு கும்பல் காலில் விழுந்தனர்..
நீ தான் என் இறைவன் என்றது இன்னொரு கும்பல்..

அடங்கொக்கமக்கா இப்படியும் வாழலாமோ
என்று எண்ணி முடிப்பதற்குள்
மாட மாளிகைகள் என்ன..
மாலை மரியாதை அணிவகுப்புகள் தான் என்ன..

குமுதமும்,குங்குமமும், போட்டி போட்டு
அழைக்கின்றன..கட்டுரை எழுத..

ஏற்கனவே எழுதுபவன் கூட
என்னை பற்றி புகழ்பாடுகிறான்..

காலையில் வேதம் ஓதம் பாடிய எனக்கு
மாலையில் சிறிது நேரம் ஓய்வு தேவையாகத்தான் இருந்தது..
அழைத்தேன் நடிகையை..
வந்தாள் காலை அமுக்கினாள்..
$%%^*‍)()
^‍%‍^*^*($%^^

ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா என்னா சுகமடா..

இது கூட அறியாமல் இன்றும்
காலையில் வேலைக்கு அவசரம் அவசரமாக
கிளம்புவனை பார்த்தால்
சிரிப்பாகவும் கேலியாகவும் இருக்கிறது..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

19 பின்னூட்டங்கள்:

அத்திரி said...

ஹா ஹா நீயுமா கலக்கல்

Anonymous said...

அருமை, காவி உடையை கண்டதும் மூளையை கழற்றி சட்டை பைக்குள் வைத்துக்கொண்டு அவர்கள்
பின்னால் செல்பவர்கள் இனியாவது மூளையை கொஞ்சம் பயன்படுத்தினால் நல்லது.
M. Jayaprakash

வினோத்கெளதம் said...

அடப்பையா நீயும் எழுதுத்தியா..;)

Anonymous said...

Very Nice.

Lovely, Singapore

வால்பையன் said...

அடடே!

பாட்டாவே பாடிட்டியா!?

Anonymous said...

good good :))

♠ ராஜு ♠ said...

ரைட்டு ராசா.. நடத்துங்க.

A.சிவசங்கர் said...

ஹா ஹா கலக்கிடிங்க பாவம் சாமி விடுங்க அவர

Anonymous said...

kalakkal kavithai.sooper.

விக்னேஷ்வரி said...

ரைட்டு.

Anonymous said...

அடடே! இது தெரியாம போச்சே:-(

sakthikumar said...

கடவுள் இல்லை என்று சொல்பவனையும் நம்பலாம்

கடவுள் இருக்கு என்று சொல்பவனையும் நம்பலாம்

ஆனால் நான் தான் கடவுள் என்று சொல்பவனை

மட்டும் நம்ப கூடாது.

சி. கருணாகரசு said...

கலக்கல்... தம்பி.

cheena (சீனா) said...

ஹேய் அன்பு - லொள்ளு ஜாஸ்திடா உனக்கு - ஓய்வா - ம்ம்ம்ம்

காலைல வேலைக்கு அவசரமாக் கிளம்புறவனப் பாத்தா சிப்பா வர்தா

ஸ்ரீ said...

ரைட்டு.

பிரியமுடன் பிரபு said...

அருமை,

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

என் மன ஓட்டங்களை இங்கே பார்த்தேன்..

நன்றி...

அஷீதா said...

ethanai peru ya kelambuveenga...?!

சர்பத் said...

ஹா ஹா ஹா... அருமையா...