என் காதலியின் பரிசுபொருள்

ஏதேதோ பேசிய பிறகு
இறுதியாய் கேட்டாய்..
நாளை என்ன நாளென்று..

அதை நீ சொல்லி நான்
கேட்க வேண்டும் என்பதற்காக
அமைதியாய் இருக்க..

சிறிது நேர மௌனத்திற்கு
பின் சொன்னாய்...
நம் காதலின் முதலாம் ஆண்டு
நிறைவு தினமென்று..

அப்போது தான் புரிந்து கொண்டவன் போல சிரிக்க..

நாளை என்ன பரிசு தருவாய் என்றாய்?

பதிலுக்கு நீ என்ன தருவாய் என்றேன்...

பதில் சொல்லவில்லை - சொன்னாய்
நீ கொண்டு வரும் பரிசு என் வாழ்நாளில் நான் மறக்கக்கூடாது - அதேபோல்
நான் கொண்டு வரும் பரிசும் அப்படியே தான் இருக்கும் என நினைக்கிறேன்...

மறுநாள் காலை விடியும் பொழுதே
ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனை போல
உன் பரிசு பொருளுக்காக காத்திருந்தேன்..

இருவரும் சந்தித்தோம்...
என்னை விட அவசரப்பட்டவளாய்...
எங்கே எனக்கான பரிசு பொருள் என்றாய்..

எதுவும் அறியாதவனாய் நிற்க...
அதுவரை உரையாடிய அவள் இதழ்கள்
உரையாடாமல் நின்றன..

உரையாடமல் நின்ற இதழ்களை
நான் சிறிது நேரம் உறவாடிக்கொள்ள
எனக்கான பரிசுப்பொருள் எங்கே என்றேன்..

அதனுடன் தானே இவ்வளவு நேரம்
உரையாடிக்கொண்டிருந்தாய் என்கிறாய்...

என்னவென்று புரியாமல் நான்.. :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

12 பின்னூட்டங்கள்:

அத்திரி said...

//அதனுடன் தானே இவ்வளவு நேரம்
உரையாடிக்கொண்டிருந்தாய் என்கிறாய்...என்னவென்று புரியாமல் நான்.. :-)
//

அவ்ளோ பச்சப்புள்ளயா நீ???

அத்திரி said...

//நம் காதலின் முதலாம் ஆண்டு
நிறைவு தினமென்று..//

நான் நினைவு தினம்னு நெனைச்சேன்

வால்பையன் said...

//என்னவென்று புரியாமல் நான்.. :-)//


போயா மக்கு பிள்ளையார்!

Mohan said...

எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணுமே புரியலைங்கிறீங்களே!

Mohan said...

எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணுமே புரியலைங்கிறீங்களே!

அன்புடன் நான் said...

என்னவென்று புரியாமல் நான்.. :-)//

கவிதைக்கு பொய் அழகுதான் அதுக்குன்னு இப்படியா?

VELU.G said...

விவரமான ஆளுதாங்க

கவிதை அருமை

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

கொஞ்ச நாளாக் காணலியே எங்கெ போனே - இவ பின்னாலேயா = சரி சரி வந்துட்டே - எழுது தொடர்க - தொடர்பு கொள்க - கவிதை அருமை - தேறிட்டே

நல்வாழ்த்துகள் அன்பு
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

வாலு புள்ளயார்ன்றார் - என்னாபா இது

Anbu said...

॰அத்திரி, நான் பச்சப்புள்ள தான் அண்ணே..

॰வால் அண்ணே, உங்களுக்கு சம்பந்தமில்லாத பிள்ளையார்..எப்படிண்ணே?

॰மோகன், நன்றி அண்ணா,

॰சி. கருணாகரசு , சும்மா தமாசுக்கு..

॰வேலு, நன்றி அண்ணா..

॰சீனா ஐயா, வேலை கொஞ்சம் அதிகம்..அதான் பேச முடியலை, மன்னிக்கவும்..

வால்பையன் said...

//வால் அண்ணே, உங்களுக்கு சம்பந்தமில்லாத பிள்ளையார்..எப்படிண்ணே?//

ரெண்டு பேரும் அசையாம உட்கார்ந்தக்க வேண்டியது தான்!
வேறு ஒன்னும் பண்றதுகில்ல!

ஆ.ஞானசேகரன் said...

//என்னவென்று புரியாமல் நான்.. :-)//

அதானே பார்த்தேன்....