அது என்னவென்று தெரியலைங்க.. இயக்குனர் பாலா கிட்ட வொர்க் பண்ணபிறகு எல்லாரும் நல்லா நடிக்க ஆரம்பிச்சுடுறாங்க...விக்ரம், சூர்யா வரிசையில் இப்போது ஆர்யா...
மதுரையிலிருந்த தமிழ் சினிமாவை கொஞ்சம் நகர்த்தி சென்னைக்கு கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் விஜய்..அதிலும் 1947 க்கு. கீரிடம் படம் எடுத்தவரா இவர் என எல்லோரையும் அசர வைத்துவிட்டார்.
படத்தின் கதை என்னவென்றால் தியேட்டரில் போய் பாருங்க மக்களே..அப்புறம் எதுக்குடா பதிவு போட்ட அப்படீன்னு கேட்டீங்கன்னா...கீழே கொஞ்சம் படிங்க கடைசியில சொல்றேன்..
ஆர்யா: சத்தியமா இவர்கிட்ட இருந்து இப்படி ஒரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லைங்க. அவர் பேசுறதுக்கு முன்னாடியே அவர் கண் பேசுது. மல்யுத்த வீரனாகவும் சரி,ஏமியுடன் காதல் கொள்ளும் காட்சியுலும் சரி, பாடல் காட்சிகளிலும் சரி, மனுஷன் பின்னுகிறார்..அதிலும் நீங்க இங்கிலிஸ் பாடம் கத்துக்கிறப்ப தியேட்டரே கொஞ்சம் அலறித்தான் போனது..மற்றபடி தல,தளபதி,லொட்டு,லொசுக்கு,மண்ணு,மண்ணாங்கட்டி, இவங்க கூட எல்லாம் உங்களை ஒப்பிடும் போது நீங்க எங்கேயோ போயிட்டீங்க பாஸ்..
ஏமி: எந்த ஊரு தாயி நீ.. உருக்கி வைச்ச மெழுகுவர்த்தி சிலை மாதிரி இருக்கியேயம்மா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு..ஆர்யா இங்கிலிஸ் படித்து அதை ஏமியிடம் ஒப்பிக்கும் போது மறந்துவிட உடனே ஏமி "ம ற ந் து ட் டி யா" என்று தமிழ்ல பேசுவாங்க..அப்ப அவங்க ரெண்டு கண்களை காட்டும் போது ஒரு பிண்ணனி இசை வரும் சான்ஸ்லெஸ் ஜி.வி.. படம் பார்க்குறவங்க இந்த சீனை மறந்துவிடாதீங்க.. படம் முழுக்க இவங்க ஆட்சிதான்...
ஜீ.வி.பிரகாஷ்: தமிழ் சினிமாவிற்கு நல்ல பிண்ணனி இசையமைப்பாளராக இருக்கிறார். ஆரூயிரே இந்த பாட்டை தவிர எல்லா பாட்டும் செம. பல இடங்களில் உங்க இசை படத்தை இன்னும் சுவாரஸ்சியமாக்கிருக்கிறது..
எடிட்டிங் ஆண்டனி படத்துக்கு பேர் போடும் போதே நீங்க பாதி ஜெயிச்சுட்டீங்க பாஸ்..
ஆர்ட் டைரக்டர் செல்வகுமார், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, இந்த ரெண்டு பேரும் இந்த படத்துக்கு ரொம்ப உழைச்சு இருக்காங்க.. 1947 - ல் உள்ள, சென்ட்ரல், ஸ்பென்ஸர் பிளாஷா, பின்புறம் ஹார்லிக்ஸ் விளம்பரம், என ஒவ்வொரு சீனிலும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க..
மற்றபடி படத்தில், நாசர், எம்.எஸ்.வி.பாஸ்கர், வெள்ளைக்கார போலீஸ்துரை, ஏரோபிளேன் பறந்தாலே குண்டு போட போடுறாங்க என்று சொல்லி கொண்டே ஓடும் நபர், ஒரே ஒரு வாத்தியார், எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கும் வெண்ணிலா கபடிகுழு அப்பு குட்டி, படகு ஓட்டிச்செல்லும் வயதான கிழவர் இன்னும் எத்தனையோ பேர் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர்..
கடைசியாய் இயக்குனர் விஜய் உங்களை எப்படி பாராட்டினாலும் போதாதுங்க..லண்டனில் இருந்து கிளம்பி சென்னை மற்றும் மதராசப்பட்டினத்தை மாற்றி மாற்றி காண்பித்து திரைக்கதையை கொஞ்சம் கூட தளரவிடாமல் கொண்டு போயிருக்கீங்க..உங்க கிட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம் பாஸ்...
அப்புறம் எதுக்குடா பதிவு போட்ட அப்படீன்னு கேட்டீங்கன்னா...
மேலே குறிப்பிட்ட அனைவருக்கும் நன்றி சொல்லத்தான்.!!!கிட்டத்தட்ட 2.45 மணி நேரம் ஓடுகின்ற இந்த படத்தை எந்தவித அலுப்பும் தட்டாமல் நம்மை இருக்கையோடு இருக்கையாக உட்காரச்செய்திருக்கிறார்கள்..
தியேட்டர் கமெண்ட்ஸ்:-
ஏமி ஒரு காட்சியில் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஆர்யாவுடன் டாவ்வடித்துக்கொண்டிருக்கும்..அதைப்பார்த்து பின் வரிசையில் இருந்த ஒருவர் "மாப்ள அப்பவே முக்காடு போட்டுக்கிட்டு சுத்தி இருக்காங்கடா" என்றார்..
போலீஸ் நிலையத்தில் ஒரு போலிஸ்காரன் ஆர்யாவிடம் "இந்த தடவை நீ தப்பிச்சிட்ட அடுத்த தடவை உயிரோட போக மாட்டே" என்பான். அதற்கு ஆர்யா "நானும் அதே தான் சொல்றேன்" என்று சொல்லும் போதும் ரசிகர்களின் கைத்தட்டல் கொஞ்சம் அதிகம்...
**********************
படம் முடிந்து வெளியேறும் போது தீவிர விஜய் ரசிகனான என் நண்பனிடம் கேட்டேன்...
மாப்ள...இந்த படத்துல ஒரு வேளை உங்க தலைவர் விஜய் நடிச்சிருந்தா எப்படிடா இருந்திருக்கும் என்றேன்..
என்னை ஒரு மாதிரி ஏறஇறங்க பார்த்துவிட்டு "ஏன்டா உனக்கு மட்டும் இப்படி யோசிக்கத்தோணுது" என்றான்..
இல்லை மாப்ள..படத்துல ஒரு சீன்ல ஆர்யா ரொம்ப போலிஸ்துரை கூட சண்டை போடுவார்..ஒருவேலை உங்க தலைவரா இருந்தா ஒரு நிமிஷம் தான் எதிரில் நிற்பவன் ஆள் காலி என்றேன்..
அருகிலிருந்த தெரியாத நபர் ஒருவர் உடனே "படம் பார்க்குற நம்மளும் காலியாயிடுவோம் தம்பி" என்றார்..
மதராசப்பட்டினம் - ஒரு தடவை இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்...

9 பின்னூட்டங்கள்:
//தலைவர் விஜய் நடிச்சிருந்தா எப்படிடா இருந்திருக்கும் என்றேன்..
//
ஏம்ப்பா....நல்ல படம் வர்றது உனக்கு பிடிக்கலையா...??
எதுக்கு இப்படி ஒரு கேள்வி...
Nice review brother..:)
//மாப்ள...இந்த படத்துல ஒரு வேளை உங்க தலைவர் விஜய் நடிச்சிருந்தா எப்படிடா இருந்திருக்கும் என்றேன்..
//
ஏம்பா அன்பு, ஏன்? ஏன்? ஏன்?
அன்பின் அன்பு
நல்லதொரு விமர்சனம் - படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம்
நல்வாழ்த்துகள் அன்பு
நட்புடன் சீனா
தல, தள்பதியா?
சரி, சிங்கம் படத்த விடவா இது நல்லாயிருக்கு????????????????????????????
மதராசபட்டினம் பரவலாக எல்லார் பாராட்டையும் பெற்றுள்ளது. Good Anbu..
nalla vimarsanam pa........... padatha ethana murai venumnalum parkalam.............adhu sari
yaaruda indha kaarki................madrasapatinatha poi singam kooda compare pandra...... singamlam oru padama?ungalukellam yen ivlo kevalamana taste.......... neengalam ipdi irukradhalathan masala padangalnu ivanunga innum thirundhama irukanungairukanga...........madrasapattinam madhiri nalla padangal parungapa
hello MR.karki........... nee ellam ini indha blog pakkam vandhidatha........... kaduppugala kilappikittu.............
hello karki.......... thirundhungapa
Post a Comment