பல் விளக்கிட்டியா தோழி.....


கடற்கரை மணலில் கடலை போட்டுக்கொண்டிருந்த போது சொர்க்கம்னா என்னடா என்றாள் தோழி..உன் மடியில் தலை வைத்து தூங்குவது மாதிரி என்றேன்..அப்படின்னா நரகம்னா எப்படிடா இருக்கும் என்றாள்..சிறிது நேர தயக்கத்திற்குப்பின் சொன்னேன்..அந்த சம்பவம் உண்மையில் நடந்தால் அது தான் நரகம் என்றேன் என்றேன்..கோபத்துடன் திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்...

போனில் சிணுங்கியவாறே என்னைய உனக்கு எவ்வளவுடா பிடிக்கும் என்றாள்.. ஐம்பது ரூபாய்க்கு பிடிக்கும் என்றேன்..புரியாதவளாய் விளக்கம் கேட்டாள்..ஐம்பது ரூபாய்க்கு டாப்-அப் போட்டு நீயே கால் பண்ணி பேசுறியே அதான் என்றேன்..

தினமும் கவிதையா எழுதுறியே இதெல்லாம் நீயா எழுதுறியா இல்லை எதையும் பார்த்து காப்பி அடிக்கிறியா என்றாள்..காப்பி தான் அடிக்கிறேன் என்றேன்..பலத்த சிரிப்புடன் எதை பார்த்துடா காப்பி அடிச்ச என்றாள்..உன்னைப்பார்த்துத்தான் தினமும் காப்பி அடிக்கிறேன் என்றேன்..

என்ன காலர்டீயூன் வைக்கலாம் என தோழியிடம் கேட்டேன்..உனக்குத்தான் சூர்யா பிடிக்குமே சிங்கம் படத்திலிருந்து வை என்றாள்..சிறிது நேரம் கழித்து கேட்கிறாள்..ஜோதிகாவை எவ்வளவுடா பிடிக்கும் என்று...என்ன சொல்ல என்று தெரியாமல் இருக்கிறேன்..

உதட்டோடு உதடாக தேன் பருக வந்த தோழியை தடுத்து நிறுத்தினேன்..வெட்கப்பட்டவளாய் தலைகுனிந்தபடி என்னடா என்றாள். காலையில் பல் விளக்கிட்டியா என்றேன்..மீண்டும் அதே கோபத்துடன்...

டிஸ்கி:-
1.எப்படி சிவகாசியில் கடற்கரை இல்லையோ அதே மாதிரி எனக்கு தோழியும் இல்லைங்க..எல்லாமே புனைவுதான்..
2.இந்த பதிவை பார்த்து கார்க்கி அண்ணன் மன்னிப்பாராக...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

10 பின்னூட்டங்கள்:

கார்க்கிபவா said...

அண்ணன் மன்னிக்கிறது முக்கியமில்லப்பா.. அண்ணியும் மன்னிக்கனும் :)

Raju said...

எல்லாரும் நல்லாவே இருங்க..!

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.... சூப்பர் தம்பி.

அத்திரி said...

முதல்ல நீ பல்லு விளக்குனியா????

Anonymous said...

:))))))

அன்புடன் நான் said...

மிக ரசனையா இருக்கு.கலக்கல்.

அத்திரி said...

//எப்படி சிவகாசியில் கடற்கரை இல்லையோ//

கடற்கரை இல்லைனா என்ன குளக்கரை இருக்குதுல்லா???


//அதே மாதிரி எனக்கு தோழியும் இல்லைங்க..எல்லாமே புனைவுதான்..//

நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பிட்டோம்

கார்த்திகைப் பாண்டியன் said...

அட்டகாசம் ஆரம்பம்.. ரைட்டு..:-)))

//அத்திரி said...
முதல்ல நீ பல்லு விளக்குனியா????//

பாம்பின் கால்..

cheena (சீனா) said...

பல்லு வெளக்காததுக்கெல்லாம் கோபப்படுவாங்களா என்ன ------அதுவும் தோழி கிட்டெ - டூ பேட்

நல்லாருங்கப்பா ரெண்டு பேரும்

நல்வாழ்த்துகள் அன்பு
நட்புடன் சீனா

தெய்வசுகந்தி said...

கலக்கல்!!!!!!!!!!!