நேற்று முழுவதும் கம்பெனியில் அதிகப்படியான வேலை..வீட்டிற்கு எப்படா போவோம் என்றாகிவிட்டது.வழக்கம்போல் போகும் போது எனது நண்பர்களுடன் கலாய்த்துக்கொண்டே வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன்.நாங்கள் தற்போது அதிகமாக பேசுவது ஐ.பி.எல்.தொடரைப்பற்றிதான்.வீட்டிற்கு சென்ற போது இரவு 10.00 மணி.சரி சாப்பிடும் என அமர்ந்தால்..
வீட்டிலே ஒரே குப்பையா கெடக்குது அதையெல்லாம் கொஞ்சம் நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்து ஒதுக்கிவையேன்டா என என் அம்மா இதுவரை ஓராயிரம் சொல்லியிருக்கிறார்கள்.இதுவரை நான் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டதில்லை..
திடீரென எனது இதழ் 'என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்'என்ற பாடலை முனுமுனுத்தது.சரி இன்றாவது ஒதுக்கி வைப்போம் என தயாரனேன்.என் அம்மா கூறிய குப்பைகள் அனைத்தும் என் பழைய நினைவுகள்.ஆம் என் பாடப்புத்தகங்கள்.ஒவ்வொரு பாடப்புத்தகத்தையும் எடுத்து என் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தேன்....
சில கிறுக்கல்கள்..சில கவிதைகள்.என ஒவ்வொரு பக்கமும் எனது வரலாற்றை நினைவு கூறியது.எனது இன்பம்,துன்பம் போன்றவற்றை சிறிதவளவு அந்த புத்தகங்களும் கண்டிருக்கின்றன.அப்படி பார்த்துக்கொண்டிருக்கையில் நான் கண்ட கவிதை என் புத்தகத்தில்..படிக்கின்ற காலத்தில் அக்கவிதை எனக்கு மிகவும் படிக்கும்.
'ரோஜா இதழ் என்று
முத்தம் கொடுத்தேன்..
உதட்டில் இரத்தம்..
முள் பட்டு..'
அதைக்கண்டவுடன் என்க்குள்ளாக ஒரு சிரிப்பு.இரவு 11 ஆகிவிட்டது.என் அம்மா உறங்கிவிட்டார்கள்..எனக்கு ஏனோ உறக்கம் வரவில்லை..திடீரென எதையோ தேடுவது போல் மிகவும் பரபரப்பாக தேடினேன்..கிடைக்கவில்லை.நானும் மனம் தளராமல் என் தேடலை தொடர்ந்தேன்.யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்த பொருள், இல்லை பரிசு,இல்லை அது ஒரு ஓவியம்.எப்படி சொல்வேன்.எத்தனை முறை பார்த்திருப்பேன்,ரசித்திருப்பேன்.
கிடைத்தது அந்த ஓவியம்.அதுதான் என் முதல் காதலியின் புகைப்படம்.இரவு 12.00 மணி எனது வீட்டு தொலைக்காட்சியினில் 'மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ'என்ற பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.வாழ்வினில் ஏதோ சாத்தித்தவனை போல் காணப்பட்டேன்.என்னை நானே கண்ணாடியில் ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன்.அவ்வளவு அழகாக இருந்தேன்,அவள் புகைப்படத்தை கையில் வைத்திருப்பதனால்..அவளுடன் பழகிய நாட்களை இந்த ஒரு பதிவில் சொல்லி விட முடியாது.எனவே அதனை அடுத்த பதிவினில் இடுகிறேன்..
டிஸ்கி:-என்னுடைய முதல் காதலி என்று கூறியிருப்பதால் இப்போது எத்தனை பேர் என்றெல்லாம் கேட்கக்கூடாது.
என்னவளின் புகைப்படம்......
கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-7)
நகைச்சுவை:-
காலேஜ் பகவத் கீதை:-
எதை நீ படித்தாய் மறப்பதற்கு;
எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;
என்று நீ காலேஜ் ஒழுங்காக வந்தாய்
அட்டண்டென்ஸ் சார்ட்டேஜ் அடிக்காமல் இருப்பதற்கு;
எந்த பிகர் இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவராகிறது
மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...
******************************************************************************************************
அசின் அங்கு வந்தாளா?
வரலையா?
ஒன்னுமில்லை
சாம்பார்ல ஏன்டி உப்பு போடலை கேட்டேன்.
உடனே கோவிச்சிட்டிக்கிட்டு "அண்ணன்" வீட்டுக்கு போரேன் கிளம்பிட்டா.
வந்தா அனுப்பிவிடுங்க................
******************************************************************************************************
நோயாளி:காதில ஏதோ ரயில் ஓடுற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்..
டாக்டர்: செக் பண்ணினேன் அது எல்லாம் ஒன்னும் இல்லையே..
நோயாளி:ஒரு வேளை ஏதாவது ஸ்டேஷன்ல நின்றிருக்குமோ?
டாக்டர்:???
******************************************************************************************************
ஒரு பொண்ணு வாந்தி எடுத்தால் யாரு அந்த 'பரதேசி நாய்' என்று கேட்பார்கள்
ஒரு பையன் வாந்தி எடுத்தால் 'பரதேசி கொஞ்சாமாத்தான் குடிக்கிறது'
யாரு வாந்தி எடுத்தாலும் திட்டு வாங்குவது பையன்கள் தான்
******************************************************************************************************
சர்தார் புதுசா ஒரு வண்ணத் தொலைக்காட்சி வாங்கினார்.
வீட்டிற்கு வந்தவுடனே அதை தண்ணிரில் போட்டார்..
ஏன் தெரியுமா..?
வண்ணம் போகுமா என்று பார்க்கத்தான்..
******************************************************************************************************
கவிதை:-
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..
******************************************************************************************************
நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'
******************************************************************************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ
******************************************************************************************************
நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை
******************************************************************************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..
******************************************************************************************************
என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...
******************************************************************************************************
அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'
******************************************************************************************************
தத்துவம்:
ஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம்
ஒருவரை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியாது..
******************************************************************************************************
விடியும் வரை தெரியவில்லை கண்டது கனவு என்று.
வாழ்க்கையும் அதே மாதிரி தான்
முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று.,,
******************************************************************************************************
1988-ல் தெண்டுல்கர் பத்தாம் வகுப்பில் தேக்கம் அடைந்தார்...
இன்று பத்தாம் வகுப்பு முதல் பாடமே 'தெண்டுல்கர்'
தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்..
******************************************************************************************************
முள் இருக்கும் பயத்தில் சென்றால் கால்கள் தான் புண்ணாகும்
பெண் இருக்கும் பயத்தில் சென்றால் வாழ்க்கையே பஞ்சராகி விடும்..
******************************************************************************************************
என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்
******************************************************************************************************
கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-6)
நகைச்சுவை:-
ஒருவர்:எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
மற்றொருவர்: ஏன்?
ஒருவர்:கீதையில சொல்லியிருக்கே'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது'அதான்..
***********************************************************************************************************************
என் மனைவி அருவி மாதிரி
ஏன்டா?
அவ!எந்த நேரமும் கொட்டிக்கிட்டே(சாப்பிட்டிக்கிட்டே) இருப்பா..
****************************************************************************************
என் கணவரை சந்தோஷப்படுத்துறதுதான் என் நோக்கமே!
நிஜமாக சொல்ற?
பின்னே..இன்னிக்கு காலையில கூட
சாம்பார் ரொம்ப அருமையாக இருக்கு..என்று
சொல்லி அவரை சந்தோஷப்படுத்தினே..
****************************************************************************************
ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்
அதுக்கு எதுக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க?
ஆவி பிடிக்கலாமேன்னு தான்
****************************************************************************************
டாக்டர்:மீன் முட்டை சாப்பிடுவதை நீங்க உடனே நிறுத்திடனும்..
நோயாளி:மீன் முட்டையை நான் கண்ணால் கூட பார்த்ததில்லை டாக்டர்..
டாக்டர்:????
****************************************************************************************
டாக்டர்:நான் கொடுத்த தூக்க மாத்திரை நன்றாக வேலை செய்யுதா?
நோயாளி:தெரியலை டாக்டர்! மாத்திரை சாப்பிட்ட உடனே நான் நல்லா தூங்கிட்டேன்..
****************************************************************************************
ஒருவர்:என்னப்பா..உன் மகன் சிகரெட் அடிக்கிறானே..அவனை தட்டி கேட்க மாட்டியா..
மற்றொருவர்:கேட்டேன்..தர மாட்டேங்கிறான்..
****************************************************************************************
மனைவி:ஒரு மணி நேரமா எதையோ தேடிக்கிட்டு இருக்கிங்களே..பேசாம கண்ணாடி போட்டு தேட வேண்டியதுதானா..
கணவர்: அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்..
****************************************************************************************
மகன்:அப்பா..நானும் அம்மாவும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறோம்.நான் எங்கு ஒளிந்து கொள்ள.
அப்பா:சமையலறையில் ஒளிஞ்சுக்க...உங்க அம்மா அங்க வரமாட்டா..
****************************************************************************************
அப்பா:உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாரு தெரியுமா?
மகன்:அவர் உஙக் வயசில ஜனாதிபதியாக இருக்கார்..நீங்களும் இருக்கீங்களே..
****************************************************************************************
மனைவி:எதிர்வீட்டுக்காரன் மனைவி எங்கேயோ ஓடிப்போயிட்டாலாம்..
கணவன்:அவன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும்..
மனைவி:...???
***************************************************************************************
கவிதை:-
'மலடி'
என்று பட்டம் சூட்டி
அழைத்தார்கள் அவளை
வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன்
'அம்மா' என்று
**************************************************************************************
ஒரு நாள் கொல்லும்
'மரணம்'
ஒவ்வொரு நாளும் கொல்லும்
'மவுனம்'
*******************************************************************************************
உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன்
ஏனென்றால் உன்னை துடிக்க விட்டு
நான் உயிர் வாழ பிடிக்கவில்லை..
****************************************************************************************
தத்துவம்:-
1.என்னதான் கூகுள் மிகப்பெரிய தேடுதல் தளமாக இருந்தாலும் கோவிலில் காணாமல் போன செருப்பை கண்டுபிடித்து தருமா?
2.தூக்க மாத்திரை போட்டா தூக்கம் வரும்.ஆனால் தலைவலி மாத்திரை போட்டா தலைவலி வருமா?
3.நாமாளா எடுத்தா அது மொட்டை அதுவா விழுந்தா அது சொட்டை..
4.என்னதான் பேச்சாளராக இருந்தாலும் கோமா 'ஸ்டேஜ்'ல அவரால பேச முடியுமா?..
5.போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணினா போலிஸ் வரும்.ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் பண்ணினா ரயில் வருமா?
6.பஸ் மீது நாம ஏறீனாலும் பஸ் நம்ம மீது ஏறீனாலும் டிக்கெட் வாங்கறது நாமதான்...
7.படித்த பெண்ணை வேலைக்கு சேர்க்க கூடாது.பெருக்க சொன்னா கால்குலேட்டரை தூக்கிட்டு வருது.
8.குற்றாலத்தில் எந்த நியூஸ் சொன்னாலும் நம்ப மாட்டாங்க..ஏன் தெரியுமா?அது எல்லாமே 'பால்ஸ் நியூஸ்'
9.தண்ணீரை 'தண்ணி' சொல்லுவோம்.பன்னீரை 'பன்னி'னு சொல்லலாமா?..
10.எல்லாரும் சிரிக்கும் போது ஒருவன் சிந்தித்தால் அவன் காதலிப்பவன்
எல்லாரும் சிந்திக்கும் போது ஒருவன் சிரித்தால் அவன் காதலித்தவன்
நானும் கார்த்திகைப்பாண்டியன் அண்ணனும்..
நேற்று (05.04.2009) காலை 10.00 மணி.அப்பொழுதுதான்...தமிழ் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பேர் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்..மிகக் குறுகிய காலத்தில் நன்கு பிரபலமானவர்..எனக்கு பட்டாம்பூச்சி விருதினை கொடுத்து என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியவர்.இவரை சொன்னால் இந்த ஒரு பதிவு காணாது என கருதுகிறேன்.அவர் வேரு யாருமில்லை..கார்த்திகைப்பாண்டியன் அண்ணன்.அவர்களை முதன் முதலாக நேற்று தான் சந்தித்தேன்..என்னுடைய முதல் பதிவர் சந்திப்பும் இதுவே..மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் என்றே சொல்ல வேண்டும்..
அதற்கு முன் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..நான் இந்த பதிவு எழுதுவது என் அம்மாவிற்கு ஏற்கனவே தெரியும்..அவர்களும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்..அவர்கள் பெரிதாக படிக்காவிட்டாலும் நான் நன்றாக படிக்க வேண்டும் என்பதே அவர்கள் ஆசை..காலையில் கிளம்பி நான் வீட்டை விட்டு வெளியேறும் போது எனது வீட்டின் அருகில் உள்ள ஒரு பாட்டி என்ன ஐயா..இன்னிக்கு சீக்கிரமாக வேலைக்கு போகணுமா.? எனக்கேட்கும் போது எனது அம்மா,இல்லை சித்தி அவன் கதை எழுதுவதை பார்த்துஒரு வாத்தியார் அவனை பார்க்கணும் சொன்னாராம்.அதான் போறான்.என கண்கள் கலங்க கூறினார்..அதை பார்த்த என் உள் மனதினுள் ஏதோ ஒரு நெகிழ்வு.என்னவென்று சொல்ல..
காலை பத்து மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை வந்து அடைந்தேன்..மிகவும் பரபரப்பாக காணப்பட்டேன்.எப்படி இருப்பாரோ தெரியவில்லையே என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் என்னை ரொம்ப நேரம் காக்க வைக்காமல் வெகு விரைவில் வந்தார் கார்த்திகைபாண்டியன் அண்ணன்..பின் இருவரும் ஒன்றாக அவரது வீட்டிற்கு சென்றோம்..மிகவும் அமைதியான வீடு.அன்பான அப்பா..பாசமுள்ள அம்மா.வயதான அம்மாச்சி..என வீட்டினுள் உள்ளவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்..அனைவரும் என்னிடம் அன்பாக பழகினர்..
காலை உணவு முடித்துவிட்டு இருவரும் மீனாட்சி அம்மனை தரிசிக்க சென்றோம்..கோவில் கும்பாவிஷேகம் என்பதால் மிகவும் கூட்டமாக காணப்பட்டது.நான் முதன் முதலில் அந்த கோவிலுக்கு நேற்று தான் சென்றேன்.நன்றாக இருந்தது.கோவில்களின் சிறப்புகளை எனக்கு சொல்லிக்கொண்டே வந்தார் கார்த்திகை அண்ணன்..கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அம்மனை தரிசிக்க இயலவில்லை.பின் இருவரும் திருமலை நாயக்கர் மஹால் சென்றடைந்தோம்.நல்ல அமைதியான இடம்.அந்த இடத்தின் சிறப்பை சொல்லிக்கொண்டிருந்த வேளையில் அங்கே ஒரு இளைஞனும் இளைஞியும் கடலை போட்டுக்கொண்டிருந்தனர்..அதைப் பார்த்து அண்ணன் மிகவும் ஆத்திரப்பட்டார்..சிறப்புமிகுந்த அந்த தலங்களை மக்கள் பயன்படுத்தும் முறைகள் மிகவும் மோசமாக உள்ளது..பின் இருவரும் வாசுதேவன்(அகநாழிகை) அண்ணனிடம் தொலைபேசியில் உரையாடினோம்.முதன் முதலில் நான் அவருடன் பேசினேன்..பின் இருவரும் ஒன்றாக தெப்பக்குளத்தினை ரசித்து விட்டு வீடு திரும்பினோம்.
மதிய உணவு அம்மாவின் கைவண்ணத்தில் மிகவும் ருசியாக இருந்தது.பின் சொல்லரசன் அண்ணனிடம் இருவரும் தொலைபேசியில் உரையாடினோம்..அவருடன் பேசுவதும் இதுவே முதல் முறை..நன்றாகப்பேசினார்..பின் அம்மா,அப்பா,அம்மாச்சியிடம் விடைபெற்று வீடு திரும்பினேன்..என்னை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்றார் அண்ணன்..மிகவும் ஒரு நல்ல அனுபவம்..என்னை மென்மேலும் எழுத வேண்டும் எனத்தூண்டியது.என்னை அழைத்து விருந்தளித்த கார்த்திகைப்பாண்டியன் அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....
நான் திருமங்கலத்தில் இருந்து சிவகாசி வரும் பேருந்தில் ஒரு சிறுமியின் செயல் என்னை மிகவும் ரசிக்க வைத்தது.பேருந்தில் அதிகமான கூட்டம்.அந்த சிறுமியின் சேட்டைகளை ரசித்துக்கொண்டே வந்தேன்.அவளது அம்மா கண்டித்துக்கொண்டே வந்தார்..எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்..உன் பெயர் என்ன என்று கேட்டேன். உடனே அந்த சிறுமி உங்க பெயர் என்ன? எனக்கேட்டாள்.நான் எனது பெயரை சொன்ன பிறகே அவள் பெயரை சொன்னாள் 'ஜோதி' என்று.இருவரும் மழலை மொழியில் பேசிக்கொண்டு வருகையில் அம்மா எனக்கு பசிக்குது என்றாள்.உடனே அவள் தாய் ஒரு வெள்ளரிக்காயை எடுத்துக் கொடுத்தார்கள்.அவள் அதை அதை வாங்கி பாதியாக பிய்த்து 'இந்தாங்க உங்களுக்கு' என்றாள்..அந்த சிறுமியின் செயலை எண்ணிக்கொண்டே சிவகாசி வந்து சேர்ந்தேன்.
சிவகாசியில் பொங்கல் என்பதால் மக்கள் நடமாட்ட்ம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.அனைவருக்கும் ஊதியத்தொகை(போனஸ்) வழங்கும் நாள்..அந்த சிறுமியின் செயலை எண்ணிக்கொண்டே போகும் வேலையில் இருவர் மிகவும் அதிகமாக குடித்துவிட்டு நடுரோட்டினில் நாம் என்ன செய்கிறோம் என்பது கூட அறியாமல் படுத்துக்கிடந்தனர்..அதில் ஒருவரது மனைவி அவரை தூக்கவும் முடியாமல் அங்கே விட்டுச் செல்லவும் இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார்..
'எங்க ஊர் திருவிழா
அதிகமான கூட்டம்
கோவிலில் அல்ல:
'டாஸ்மாக்'கில்'
இப்படியும் சிலர் இருக்கிறார்கள்..
அயன்-ஒரு ரசிகனின் பார்வையில்....
ஏவிஎம் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் இயக்குநர் கே.வி.ஆனந்த்தின் 2-வது படம் அயன்.இரு கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான ஒரு படம்..வெளிநாடுகளில் கிடைக்கும் தங்கம்,வைரம்,போன்ற பொருட்களை கொண்டு வந்து தமிழ்நாட்டிலே விற்றல்..இந்த கடத்தல் கும்பல்களில் ஒன்று பிரபு.மற்றொன்று பிரபல தாதாவின் (பெயர் தெரியவில்லை) மகனான கமலேஷ் (இயற்பெயர்:ஆகாஷ்தீப் ஷேகல்) பிரபுவின் செயல்களை தடுத்து பஜாரில் நம்பர் 1 இடத்தை பிடிக்க நினைக்கிறான். இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை...
பிரபுவின் அடியாளாக சூர்யா..சும்மா வீரத்திலும் விவேகத்திலும் கலக்குகிறார்..படத்தின் முதல் பாடலில் பல வேடங்களில் வந்து கலக்குகிறார்.பார்க்க அருமையாக உள்ளது. சூர்யாவின் நண்பனாக விஜய் டி.வி நண்டு..நண்டுவின் தங்கையாக.....தமன்னா..சும்மா சொல்லக்கூடாது.இரவு 10.30 மணி ஏ.சி தியேட்டரிலும் சிறிது வேர்க்கத்தான் செய்தது..அவ்வளவு அழகாக இருக்கிறார்..பார்த்தவுடனே காதல்..வரத்தானே செய்யும்..(வழக்கமான தமிழ் சினிமாக்களில் போல)
காதலுக்கு அண்ணனே உதவியாக இருப்பது(மாமா வேலை) பார்ப்பது நன்றாக சிரிப்பாக இருந்தாலும் கலாச்சாரத்திற்கு ஒத்து வராதது போல் தோன்றுகிறது..
தமன்னா படத்தில் மொத்தம் பத்து காட்சிகளில் வருகிறார்..மூன்று பாடல்களுக்கு ஆட்டம் போடுகிறார்..அதற்கு மேல் ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டும்.
படத்தின் முதல் சண்டைக்காட்சி மிக அருமை..கனல் கண்ணன் கலக்குகிறார்..சூர்யாவின் வீரமும் துடிப்பும் கலக்கல்..ஹாலிவிட்டிற்கு நிகரான காட்சிகள்..ஜாக்கிசான் நினைவுக்கு வருகிறார்...'விழி மூடி' கேட்பதை விட திரையில் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது..ஐரோப்பாவின் கலாச்சாரத்தை வெறும் 10 நிமிடங்களில் காட்டி விடுகிறார் கே.வி.ஆனந்த் சார்..
சூர்யா சொல்லவே வேண்டியதில்லை..நடிப்பை சும்மா ஊதித்தள்ளிவிட்டார்..அழகுன்னா அழகு அப்படியொரு அழகு..தனக்கே உரித்தான சிக்ஸ் பேக்கில் கலக்குகிறார்..தமன்னா சூர்யாவிடம் உங்களுடைய பேவரைட் நாயகி அசினா..? சமீராவா..? எனக்கேட்கும் போது எனக்கு எப்போதும் 'ஜோ' தான் என்று சொல்லும் போது தியேட்டரே அதிருகிறது..கூட வரும் கருணாஸ் சும்மா வந்து போகிறார்..
பிரபு தியேட்டரின் பாதி அளவை மறைத்து விட்டார்..சில காட்சிகளில் கைத்தட்டல்களையும் பெறுகிறார்.அலட்டிக்காத நடிப்பு...
வெளிநாடுகளில் இருந்து அவர் கொண்டுவரும் சி.டி.,வைரம்,போன்றவற்றை எப்படி விவேகமாக விமான நிலையத்தை விட்டு எடுத்து செல்கிறார் என்பதை காட்டி இருக்குவிதம் மிக நன்றாக இருக்கிறது.
படத்தின் பலம்:ஹாரிஸ் ஜெயராஜ் மீயூசிக்..பாடல்கள் அனைத்தும் கேட்க மிக அருமை..பார்ப்பதற்கு 'விழி மூடி' 'நெஞ்சே நெஞ்சே' பாடல் மிக அருமையாக உள்ளது..பிண்ணனி இசையில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்...ஹாரிஸ் அண்ணா..ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் மிக அருமை..
படத்தின் பலவீனம்:வில்லனாக வரும் கமலேஷ் சூர்யாவின் முன் அவர் நடிப்பு சிறிதும் எடுபடவில்லை..கிளைமாக்ஸ் சண்டை காட்சி..சுத்த மோசம்..
படத்தின் முதல் பாதி சூப்பர்
படத்தின் பின் பாதி சில காட்சிகளை நாமே ஊகித்துக்கொள்ளும்படியாக உள்ளது.சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது..
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் நல்ல படம்..
அயன்:இன்னும் கொஞ்சம் சூடேற்றிருக்கலாம்...
டிஸ்கி:என்னுடைய முதல் விமர்சனப்பதிவு..உங்களுக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.
யோசனை1: திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.
யோசனை2: இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட் நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்க வருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.
யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்” பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது
யோசனை4: டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை,ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.
யோசனை5: திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.
யோசனை6: திரையரங்க வாயிலில் ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,இதயபலகீனமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம். இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள்.
யோசனை7: உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசனங்கள் மற்றும் பஞ்ச் டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.
யோசனை8: குறிப்பாக நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அதுமட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்
யோசனை9: டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக "இளைய தலைவலி" என படித்துவிடுகிறார்கள்.எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம்.மசாலா புயல் பேரரசுவிடம் கன்சல்ட் செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.
யோசனை10: குருவி,வில்லு போன்ற பேரடிகளை மறக்க கொஞ்ச நாளைக்கு வடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து,முத்துக்காளை ஆகியோரைப் போல காமெடி வேடங்களில் நடிக்கலாம்.காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ண வேண்டாம். நீங்கள் சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.
யோசனை 11: உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத் ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவை அமைத்து பதிலுக்கு பதில் வீடியோ விடலாம். கவனமாக இருக்கவும் அந்தக் குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்துவிடுவார்கள்
பின்குறிப்பு: இனிமேல் எந்த மாதிரி படங்களை ரீமேக் செய்யலாம்:
மகேஷ்பாபு போன்றவர்களின் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தால் இனி போனியாகாது.
* மலையாளத்தில் வெற்றி கண்ட ஷகிலா படங்களை ரீமேக் செய்து நடிக்கலாம்
* எம்ஜியார் நடித்த “ரிக் ஷாக்காரன்” படத்தை "திரிஷாக்காரன்" என்ற பெயரில் ரீமேக்
செய்யலாம். மெரினா பீச்சில் திரிஷாவோடு "கடலோரம் வாங்குனேன் காப்பு, வில்லுக்கு
வச்சிட்டாய்ங்கே ஆப்பு" என அருமையான டூயட் போட்டு அசத்திவிடலாம்
* பழைய ராமராஜன் படங்களை ரீமேக் செய்து "எங்க ஊரு எருமக்காரன்" என்ற பெயரில்
நடிக்கலாம்.
அறிவிப்பு: அன்பு நெஞ்சங்களே! இது வெறும் காமெடிக்கான பதிவுதானன்றி யார் மீதும் காண்டு காட்டும் பதிவு அல்ல.தயவு செய்து இதை வெறும் காமெடியாக மட்டுமே எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டு விட்டுவிடவும்..இவை அனைத்தும் என்னுடைய இ-மெயிலில் வந்தவையே...