ஏவிஎம் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் இயக்குநர் கே.வி.ஆனந்த்தின் 2-வது படம் அயன்.இரு கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான ஒரு படம்..வெளிநாடுகளில் கிடைக்கும் தங்கம்,வைரம்,போன்ற பொருட்களை கொண்டு வந்து தமிழ்நாட்டிலே விற்றல்..இந்த கடத்தல் கும்பல்களில் ஒன்று பிரபு.மற்றொன்று பிரபல தாதாவின் (பெயர் தெரியவில்லை) மகனான கமலேஷ் (இயற்பெயர்:ஆகாஷ்தீப் ஷேகல்) பிரபுவின் செயல்களை தடுத்து பஜாரில் நம்பர் 1 இடத்தை பிடிக்க நினைக்கிறான். இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை...
பிரபுவின் அடியாளாக சூர்யா..சும்மா வீரத்திலும் விவேகத்திலும் கலக்குகிறார்..படத்தின் முதல் பாடலில் பல வேடங்களில் வந்து கலக்குகிறார்.பார்க்க அருமையாக உள்ளது. சூர்யாவின் நண்பனாக விஜய் டி.வி நண்டு..நண்டுவின் தங்கையாக.....தமன்னா..சும்மா சொல்லக்கூடாது.இரவு 10.30 மணி ஏ.சி தியேட்டரிலும் சிறிது வேர்க்கத்தான் செய்தது..அவ்வளவு அழகாக இருக்கிறார்..பார்த்தவுடனே காதல்..வரத்தானே செய்யும்..(வழக்கமான தமிழ் சினிமாக்களில் போல)
காதலுக்கு அண்ணனே உதவியாக இருப்பது(மாமா வேலை) பார்ப்பது நன்றாக சிரிப்பாக இருந்தாலும் கலாச்சாரத்திற்கு ஒத்து வராதது போல் தோன்றுகிறது..
தமன்னா படத்தில் மொத்தம் பத்து காட்சிகளில் வருகிறார்..மூன்று பாடல்களுக்கு ஆட்டம் போடுகிறார்..அதற்கு மேல் ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டும்.
படத்தின் முதல் சண்டைக்காட்சி மிக அருமை..கனல் கண்ணன் கலக்குகிறார்..சூர்யாவின் வீரமும் துடிப்பும் கலக்கல்..ஹாலிவிட்டிற்கு நிகரான காட்சிகள்..ஜாக்கிசான் நினைவுக்கு வருகிறார்...'விழி மூடி' கேட்பதை விட திரையில் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது..ஐரோப்பாவின் கலாச்சாரத்தை வெறும் 10 நிமிடங்களில் காட்டி விடுகிறார் கே.வி.ஆனந்த் சார்..
சூர்யா சொல்லவே வேண்டியதில்லை..நடிப்பை சும்மா ஊதித்தள்ளிவிட்டார்..அழகுன்னா அழகு அப்படியொரு அழகு..தனக்கே உரித்தான சிக்ஸ் பேக்கில் கலக்குகிறார்..தமன்னா சூர்யாவிடம் உங்களுடைய பேவரைட் நாயகி அசினா..? சமீராவா..? எனக்கேட்கும் போது எனக்கு எப்போதும் 'ஜோ' தான் என்று சொல்லும் போது தியேட்டரே அதிருகிறது..கூட வரும் கருணாஸ் சும்மா வந்து போகிறார்..
பிரபு தியேட்டரின் பாதி அளவை மறைத்து விட்டார்..சில காட்சிகளில் கைத்தட்டல்களையும் பெறுகிறார்.அலட்டிக்காத நடிப்பு...
வெளிநாடுகளில் இருந்து அவர் கொண்டுவரும் சி.டி.,வைரம்,போன்றவற்றை எப்படி விவேகமாக விமான நிலையத்தை விட்டு எடுத்து செல்கிறார் என்பதை காட்டி இருக்குவிதம் மிக நன்றாக இருக்கிறது.
படத்தின் பலம்:ஹாரிஸ் ஜெயராஜ் மீயூசிக்..பாடல்கள் அனைத்தும் கேட்க மிக அருமை..பார்ப்பதற்கு 'விழி மூடி' 'நெஞ்சே நெஞ்சே' பாடல் மிக அருமையாக உள்ளது..பிண்ணனி இசையில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்...ஹாரிஸ் அண்ணா..ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் மிக அருமை..
படத்தின் பலவீனம்:வில்லனாக வரும் கமலேஷ் சூர்யாவின் முன் அவர் நடிப்பு சிறிதும் எடுபடவில்லை..கிளைமாக்ஸ் சண்டை காட்சி..சுத்த மோசம்..
படத்தின் முதல் பாதி சூப்பர்
படத்தின் பின் பாதி சில காட்சிகளை நாமே ஊகித்துக்கொள்ளும்படியாக உள்ளது.சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது..
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் நல்ல படம்..
அயன்:இன்னும் கொஞ்சம் சூடேற்றிருக்கலாம்...
டிஸ்கி:என்னுடைய முதல் விமர்சனப்பதிவு..உங்களுக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..
அயன்-ஒரு ரசிகனின் பார்வையில்....
Subscribe to:
Post Comments (Atom)
27 பின்னூட்டங்கள்:
விழி மூடி பாடல் சுப்பர்..
எனக்கு பிடித்தமான பாடலும் கூட..
நல்ல ஒரு ஆய்வு அன்பு,,வாழ்த்துக்கள்
என்னைவிட ரெண்டு வயசு சின்ன பையன்.. எழுத்து அப்பிடி இல்ல.. நல்லாத்தான் இருக்கு..
// சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் நல்ல படம்..//
நச் டா.. நெறய எழுது.. நம்ம கட பக்கமும் கொஞ்சம் வா!!
//இரவு 10.30 மணி ஏ.சி தியேட்டரிலும் சிறிது வேர்க்கத்தான் செய்தது..//
தமன்னா காய்ச்சல் ஓவரா இருக்குதோ தம்பி..............
விமர்சனம் நல்லா இருக்கு
அன்பு...
திறந்த மனதுடன்
நன்றாக எழுதியிருந்தீர்கள்.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் நண்பா.
அப்போ கட்டாயம் பார்க்கலாம் என்கிறீர்களா???
\\\வியா (Viyaa) said...
விழி மூடி பாடல் சுப்பர்..
எனக்கு பிடித்தமான பாடலும் கூட..
நல்ல ஒரு ஆய்வு அன்பு,,வாழ்த்துக்கள்\\\
நன்றி வியா தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்...
\\\கடைக்குட்டி said...
என்னைவிட ரெண்டு வயசு சின்ன பையன்.. எழுத்து அப்பிடி இல்ல.. நல்லாத்தான் இருக்கு..
// சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் நல்ல படம்..//
நச் டா.. நெறய எழுது.. நம்ம கட பக்கமும் கொஞ்சம் வா!!\\\
நன்றி அண்ணா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...
கண்டிப்பாக நான் வருகிறேன் அண்ணா..
\\\அத்திரி said...
//இரவு 10.30 மணி ஏ.சி தியேட்டரிலும் சிறிது வேர்க்கத்தான் செய்தது..//
தமன்னா காய்ச்சல் ஓவரா இருக்குதோ தம்பி..............
விமர்சனம் நல்லா இருக்கு\\\
காய்ச்சல் கொஞ்சம் ஓவர்தான் அண்ணா
நன்றி அண்ணா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...
\\\அகநாழிகை said...
அன்பு...
திறந்த மனதுடன்
நன்றாக எழுதியிருந்தீர்கள்.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் நண்பா.\\\
\
நன்றி அண்ணா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...
\\\பிரேம்குமார் said...
அப்போ கட்டாயம் பார்க்கலாம் என்கிறீர்களா???\\\
பார்க்கலாம் அண்ணா..வில்லு,தீ,பெருமாள் போன்ற படங்களுக்கு மத்தியில் பார்க்கும் போது நன்றாகத்தான் தெரிகிறது...
நன்றி அண்ணா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...
நீயும் ஆரம்பிச்சிடியா தம்பி.. வாழ்த்துக்கள். விமர்சனம் நல்லாருக்கு
:-) .
/தமன்னா..சும்மா சொல்லக்கூடாது.இரவு 10.30 மணி ஏ.சி தியேட்டரிலும் சிறிது வேர்க்கத்தான் செய்தது //
ஹ ஹா அருமை தம்பி நல்லா தான்யா சூப்பரா எழுதுரிங்க :-)
எல்லாருக்கும் ஒரே ரசனை :-) வில்லன் தான் சொதப்பல்
சூப்பர் அன்பு..
பணி தொடர வாழ்த்துக்கள்
paarkkalama?
nice review. :)
\\Cable Sankar said...
நீயும் ஆரம்பிச்சிடியா தம்பி.. வாழ்த்துக்கள். விமர்சனம் நல்லாருக்கு\\
ஆமா அண்ணா..
நன்றி அண்ணா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...
\\\Suresh said...
:-) .
/தமன்னா..சும்மா சொல்லக்கூடாது.இரவு 10.30 மணி ஏ.சி தியேட்டரிலும் சிறிது வேர்க்கத்தான் செய்தது //
ஹ ஹா அருமை தம்பி நல்லா தான்யா சூப்பரா எழுதுரிங்க :-)
எல்லாருக்கும் ஒரே ரசனை :-) வில்லன் தான் சொதப்பல்\\\
நன்றி அண்ணா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...
\\டக்ளஸ்....... said...
சூப்பர் அன்பு..\
பணி தொடர வாழ்த்துக்கள்\\\
நன்றி அண்ணா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...
\\Karthik said...
paarkkalama?
nice review. :)\\\
பார்க்கலாம்
நன்றி அண்ணா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...
நான் இன்னும் படம் பார்க்கலை அன்பு.. உங்க விமர்சனம் நல்லா இருக்கு.. தைரியமா தொடரலாம்..
\\\கார்த்திகைப் பாண்டியன் said...
நான் இன்னும் படம் பார்க்கலை அன்பு.. உங்க விமர்சனம் நல்லா இருக்கு.. தைரியமா தொடரலாம்..\\\
நன்றி அண்ணா...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...
நல்ல விமர்சனம்.. படத்தை ரொம்பவே ரசித்து பார்த்து இருக்கீங்கன்னு தெரியுது.. இதை போல நிறைய விமர்சங்கள் எழுதவும் நன்றி
நல்ல விமர்சனம் :)
\\\ Arun Kumar said...
நல்ல விமர்சனம்.. படத்தை ரொம்பவே ரசித்து பார்த்து இருக்கீங்கன்னு தெரியுது.. இதை போல நிறைய விமர்சங்கள் எழுதவும் நன்றி\\
நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..
\\\பிரேம்குமார் said...
நல்ல விமர்சனம் :)\\
நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..
நல்ல விமர்சனம்...
சூர்யா கலக்கியிருக்கார்ல...
\\\வேத்தியன் said...
நல்ல விமர்சனம்...\
சூர்யா கலக்கியிருக்கார்ல\\\\
ஆமா தல!!
:))))
Post a Comment