என்னவளின் புகைப்படம்:[2]


இதன் முந்தைய பதிவினை படிக்காதவர்கள் இங்கே கிளிக்கி படிக்கவும்:

அவள் வேறு யாரும் இல்லை என்னை பத்து மாதம் கருவில் சுமந்து பெற்றெடுத்த அன்னையே..
புகைப்படத்தை கண்டவுடன் என்னுள்ளே பல நிகழ்வுகள் நகர ஆரம்பித்தது.நானும் என் அன்னையும் முதன் முதலாக சேர்ந்து எடுத்த புகைப்படம் அது..எனது பள்ளிக்காலங்களில் மிகவும் இரசித்த புகைப்படம்.நான் மதிப்பெண் குறையும் போதெல்லாம் எனக்கு தைரியம் கொடுத்த புகைப்படம்..

நான் என் அப்பாவின் முகத்தை பார்த்ததில்லை.பார்க்கவும் முடியாது.நான் பிறந்து ஒரு வருடத்திலே அவர் இறந்துவிட்டார்.நான் பிறந்தது சென்னை என்னும் மாநகரிலே..வளர்ந்தது பேராபட்டி என்னும் கிராமத்திலே..சிறு வயதில் இருந்தே என் அம்மா என்னை மிகவும் சிரமப்பட்டு என்னை படிக்கவைத்தார்.நான் படித்த பள்ளியில்(1-8) என்னைத்தவிர யாரும் முதல் மதிப்பெண் பெற முடியாது.நன்றாக படித்தேன்.

ஒவ்வொரு பொங்கல் தீபாவளி அன்று எனக்கு புது துணிகள் எடுத்து அவள் பழைய சேலை உடுத்துவாள்.ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு மாறும் போது வாங்க வேண்டிய புத்தகங்கள்,நோட்டுகள் இது வாங்குவதற்காகவே பள்ளி விடுமுறையில் நான் வேலை செய்வதை தனியாக வைத்திருக்கும்படி சொல்வாள்.

எனக்கு உடம்பு சரியில்லாமல் போனால் நான் அவளிடம் சொல்ல ரொம்ப பயப்படுவேன்..ஏனென்றால் அடுத்த நிமிடமே அவளின் கண் கலங்கிவிடும். எனக்கு என்ன என்ன பிடிக்குமோ அதைத்தான் வீட்டில் செய்வாள்.

அவள் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்:

யார் கிட்டையும் கெட்டவன் என்று பெயர் என்று வாங்க கூடாது.
கஷ்டப்பட்டு வேலை செய்வதற்கு என்னைக்குமே பலன் உண்டு.
தேவையில்லாமல் செலவு செய்யக்கூடாது.

நான் என்னவள் என்றதும் பலரும் என் காதலி என்று கருதிவிட்டனர்.என் அன்னையும் என் முதல் காதலிதான்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

17 பின்னூட்டங்கள்:

வால்பையன் said...

அன்னையும் என் அன்புக்குறியவள் தான் என்றால் சரியாக இருந்திருக்கும்!

காதல்னும் சொல்லலாம், ஆனா தமிழ் நாடு நீங்க நினைக்கிரத அப்படியே புரிஞ்சுக்காது!

நீங்க கால்ன்னு உங்க காலை சொன்ன, ஆமா அரையில பாதின்னு இன்னொரு கால சொல்லுவான்!

ஆங்கிலத்துக்கு வேணா நீங்க சொல்ல வர்ற கருத்து சரியாக இருக்கும்!

அப்புறம் கழிவிரக்கம் வேண்டாம்!
தன்னம்பிக்கையுடன் இருங்க!
இல்லைனா இங்கே வந்தா எப்ப பார்த்தாலும் அழவுடுவாண்டான்னு யாரும் வர மாட்டாங்க!

புரிஞ்சிக்குவிங்கன்னு நினைக்கிறேன்!
என் வயசுகாரர இருக்கிங்க அதனால தான் சொல்றேன்! தப்பா எடுத்துகாதிங்க!

பதிவை விட பின்னூட்டம் பெருசா போனதுக்கு ஸாரி

Unknown said...

அன்னையர் தினத்தன்று வரவேண்டிய பதிவு அன்பு.
உங்க அன்பிற்கு வாழ்த்துகள்.

Suresh said...

மிக அருமையான பதிவு ....நானும் என்னை அன்னையை மிகவும் நேசிப்பவன்

Cable சங்கர் said...

உருக்கமான பதிவு.. வால்பையன் சொன்னதை போல கழிவிரக்கம் வேண்டாம்.. எங்க ஆளையே காணோம்

வேத்தியன் said...

நல்ல சிந்தனை அன்பு...

நானும் அன்னையின் அன்புக்கு அடிமையானவன் தான்...

Anbu said...

\\வால்பையன் said...

அன்னையும் என் அன்புக்குறியவள் தான் என்றால் சரியாக இருந்திருக்கும்!

அப்புறம் கழிவிரக்கம் வேண்டாம்!
தன்னம்பிக்கையுடன் இருங்க!
இல்லைனா இங்கே வந்தா எப்ப பார்த்தாலும் அழவுடுவாண்டான்னு யாரும் வர மாட்டாங்க!\\\

புரிந்து கொண்டேன் அண்ணா

Anbu said...

\\\sollarasan said...

அன்னையர் தினத்தன்று வரவேண்டிய பதிவு அன்பு.
உங்க அன்பிற்கு வாழ்த்துகள்.\\

ஆமாம் அண்ணா.அன்று கொஞ்சம் வேலை அதான்

Anbu said...

\\\Suresh said...

மிக அருமையான பதிவு ....நானும் என்னை அன்னையை மிகவும் நேசிப்பவன்\\\\\

நன்றி தல

Anbu said...

\\ Cable Sankar said...

உருக்கமான பதிவு.. வால்பையன் சொன்னதை போல கழிவிரக்கம் வேண்டாம்.. எங்க ஆளையே காணோம்\\\

நன்றி அண்ணா

Anbu said...

\\வேத்தியன் said...

நல்ல சிந்தனை அன்பு...

நானும் அன்னையின் அன்புக்கு அடிமையானவன் தான்..\\


நன்றி தல

குமரை நிலாவன் said...

மிக அருமையான பதிவு ....நானும் என்னை அன்னையை மிகவும் நேசிப்பவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

அம்மா மீதான அன்பை சொல்லி இருக்கீங்க அன்பு.. வாழ்த்துக்கள்..

//வால்பையன்..//

அண்ணே.. நீங்க அன்புக்கு சொன்னது எல்லாமே சரி..

//என் வயசுகாரர இருக்கிங்க அதனால தான் சொல்றேன்!//

இது என்னாது?

வால்பையன் said...

//அண்ணே.. நீங்க அன்புக்கு சொன்னது எல்லாமே சரி..
//என் வயசுகாரர இருக்கிங்க அதனால தான் சொல்றேன்!//
இது என்னாது? //

இதிலென்ன சந்தேகம் நானும் அன்புவும் ஒரு வயசுகாரங்கன்னு அர்த்தம்!

கடைக்குட்டி said...

//யார் கிட்டையும் கெட்டவன் என்று பெயர் என்று வாங்க கூடாது.
கஷ்டப்பட்டு வேலை செய்வதற்கு என்னைக்குமே பலன் உண்டு.
தேவையில்லாமல் செலவு செய்யக்கூடாது.//

ஆல் மம்மீஸ் இப்பிடிதானா??? :-)

கடைக்குட்டி said...

தம்பி அடுத்து சிரிசிரிக்க ஒரு பதி(ல்)வு போடுடா!!!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பதிவு, தலைப்பு கொஞ்சம் மாறுதல் செய்யலாம்...

Anbu said...

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

@குமரை நிலாவன்

@கார்த்திகைப் பாண்டியன்

@கடைக்குட்டி

@ஆ.ஞானசேகரன்