மதுரையில் பதிவர்கள் சந்திப்பு (24-05-2009)

கடந்த ஞாயிற்றுக்கிழமை (24-05-2009) அன்று மாலை 5.00 மணி அளவில் மதுரை பதிவர்களின் சந்திப்பு இனிதே நடைபெற்றது.நான் மிகவும் ஆவலுடன் படிக்கின்ற பதிவுகளின் பதிவர்கள் என்னை கண்முன்னே நின்றனர்.மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.நல்ல பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது.இந்த மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி தந்த அண்ணன் கார்த்திகைப்பாண்டியனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட பதிவர்கள்:-

1.சீனா ஐயா:அசைபோடுவது என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.பதிவர் சந்திப்பின் முடிவின் போது கலந்து கொண்டார்.அவரது ஆசிர்வாதம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி

2.ஷேம் ஜார்ஜ்: தருமி என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.மிகவும் மூத்த பதிவர்.என்னைப் போன்ற இளைய பதிவர்களை ஊக்குவித்தார்.மேலும் கேமராவினை வைத்து படங்களை எடுப்பதி மிகவும் ஆர்வமாக இருந்தார்.அந்த ஐயாவினை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தேன்.

3.அருண்: வால் பையன் என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார். பதிவர் சந்திப்பிலே என்னை மிகவும் கவர்ந்த பதிவர்.சாதரணமான ஒரு இந்திய குடிமகனாக பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டார்.மிகவும் அருமையாக பேசினார்.பலரையும் தன் வால் திறமையால் பேசி வெற்றிபெற நினைத்தார்..ஆனால்.....

4.ராஜு: டக்ளஸ் என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார்.என்னை சூரத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்து என் எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள் கூறியவர்.இவரது பின்னூட்ட ரசிகன் நான்..வால் பையனை அடிக்கடி கலாய்த்துக் கொண்டிருந்தார்.அனைவரிடமும் மிக அன்பாக பழகினார்.

5.பாலகுமார்: சோலை அழகுபுரம் என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார்.இவருக்கும் வால்பையனுக்கும் ஏற்பட்ட விவாதங்கள் அருமையாகவும் பல விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் முடிந்தது.அனைவரது கேள்விக்கும் மிகவும் பொறுமையாக பதில் சொல்லிய அண்ணனை பார்க்கும் போது ஒரு கம்பீரம் தெரிந்தது.

6.கணேஷ் குமார்: இளைய கவி என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார்.சந்திப்பில் பல அறிவுரைகளையும் கருத்துக்களையும் பதிவர்களுக்கு வழங்கினார்.நன்றாக பழகினார்

7.ஸ்ரீதர்: ஸ்ரீ என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.நன்றாக பேசினார்.பல கருத்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்.மேலும் என்னை மிகவும் வாழ்த்தினார்...(சரி..சரி..கோபப்படாதீங்க)

8.சுந்தர்: தேனீ-சுந்தர் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.மிகவும் அன்போடு பழகினார்.மேலும் அவர் நான் இருக்கும் ஊரின் அருகில் வசித்திருக்கிறார்.அன்று பார்க்க இயலவில்லை.ஆனால் இம்முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

9.சுப்ரமணி: என்னோட்டம் என்னும் பெயரில் பதிவினை எழுதி வருகிறார்.இவரும் பதிவர் சந்திப்பில் பல அறிவுரைகளையும் கருத்துக்களையும் பதிவர்களுக்கு வழங்கினார்.இவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

10.தேவக்குமார்: தேவன் மாயம் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.சந்திப்பில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தார்.நன்றாக பேசினார்..

11.பீர் முகமது: ஜெய்ஹிந்துபுரம் என்னும் பெயரில் பதிவினை எழுதி வருகிறார்.வரும்போது பீர் கொண்டுவராவிட்டாலும் சைடிஸ்டிக் நிறைய வாங்கி வந்தார்.அவருக்கு நன்றிகள்.

12.ரவி: ஜாலி ஜம்பர் என்னும் பெயரில் பதிவு எழுதிவருகிறார்.என்னைப்போலவே மிகவும் அமைதியாக இருந்தார்.

13.அருண்: ஆங்கிலத்திலே மியூச்சுவல் பண்ட் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்.மிகவும் கலகலப்பாக பேசினார்.

14.கார்த்திகைப்பாண்டியன்: பொன்னியின் செல்வன் என்னும் பெயரில் பதிவு எழுதி வருகிறார்..இந்த பதிவர் சந்திப்பு உருவாக காரணமாக இருந்தவர்..என்னை மிகவும் கவர்ந்த பதிவர்,ஆசிரியர்.எனக்கு பல கருத்துக்களை சொல்லியவர்.இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பதிவர்களை எல்லாம் எனக்கு காண்பித்த ஒரு நல்ல மனிதர்.என்னை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

15.அன்பு: ஓபன் ஹார்ட் என்னும் என்னும் பெயரில் பதிவு எழுதுகிறார்.வேற யாரும் இல்லைங்க அது நான் தான்.அண்ணன் கார்த்திகைப்பாண்டியனின் அழைப்பின் பேரில் சென்றேன்.சென்றவுடன் மதுரையில் நன்றாக மழை பெய்தது..என் காலடி பட்டவுடன் வானமே வழிவிட்டு வெளிச்சம் காட்டியது.சந்திப்பினில் அனைவரது கருத்துகளையும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இறுதியில் தொலைபேசியில் அழைத்து பேசிய ரம்யா அக்காவிற்கு என் நன்றிகள்.முதன் முதலாக அந்த அக்காவுடன் பேசினேன்.பேச வாய்ப்பு கொடுத்த அருண் அண்ணனுக்கு நன்றிகள் பல..

மற்றும் பதிவர் சந்திப்பினில் கலந்து கொண்ட இரு வாசகர்களுக்கும் நன்றிகள்..

பதிவர் சந்திப்பு:-நல்ல அனுபவம்

புகைப்படங்கள் கீழே:


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

54 பின்னூட்டங்கள்:

Osai Chella said...

மகிழ்ச்சி நண்பர்களே! தருமி அவர்கள் எனது மூத்த ஆசிரியர்.. மற்றும் என் நலம் விரும்பி! அடுத்தமுறை அவரைச் சந்திப்பதற்க்காகவேனும் மதுரை வருவேன்! அவசியம் தொடர்பில் இருங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்...
ஓசை செல்லா, கோவை
http://osaichella.blogspot.com

Anbu said...

\\OSAI Chella said...

மகிழ்ச்சி நண்பர்களே! தருமி அவர்கள் எனது மூத்த ஆசிரியர்.. மற்றும் என் நலம் விரும்பி! அடுத்தமுறை அவரைச் சந்திப்பதற்க்காகவேனும் மதுரை வருவேன்! அவசியம் தொடர்பில் இருங்கள். வாழ்த்துக்கள்.\\

நன்றி அண்ணா...

coolzkarthi said...

cool...anbu

அகநாழிகை said...

அன்பு,
பதிவர் சந்திப்பு குறித்து வாசித்தேன். வரமுடியவில்லையே என்ற வருத்தத்தை போக்கியது.வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Anbu said...

\\\coolzkarthi said...

cool...anbu\\

நன்றி அண்ணா

Anbu said...

\\\"அகநாழிகை" said...

அன்பு,
பதிவர் சந்திப்பு குறித்து வாசித்தேன். வரமுடியவில்லையே என்ற வருத்தத்தை போக்கியது.வாழ்த்துக்கள்.\\

நீங்கள் வரவில்லை என்று எனக்கும் வருத்தம்தான் அண்ணா.
நான் திருச்சியில் கலந்திருந்தால் கண்டிப்பாக உங்களை பார்த்திருப்பேன்.
இன்னொரு முறை கண்டிப்பாக சந்திப்போம் அண்ணா

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

Suresh said...

மிக அழகாக இருக்குது நண்பா, நானும் வந்து இருக்கலாம், ஒவ்வொருவரையும் பார்க்கும் போது

BEST FUNDS ARUN said...

நான் எப்படா ரம்யா அக்கா கோட பெசினென்?

அவங யாருன்னு கோட தெரியாதெய்

குப்பன்.யாஹூ said...

its nice,thanks for sharing.

வினோத் கெளதம் said...

எல்லாம் சேர்ந்து கலக்கி இருக்கீங்க..

Cable சங்கர் said...

மகிழ்ச்சி அன்பு.. உன்னுடய முதல் பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியது குறித்த உன் பதிவும் அருமை.. வாழ்த்துக்கள்.

சொல்லரசன் said...

பதிவர் சந்திப்பை பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் அன்பு

Anonymous said...

அடடே வாழ்த்துக்கள் அன்பு!

பதிவர் விழாவை விலாவாரியாக சொல்லியிருக்கிறாய். அருமையான சந்திப்பு மேலும் தொடர வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

அன்பு!!
அருமையாகத்தொகுத்து
இருக்கிறீர்கள்!
மேலும் படங்களை
என் பதிவில்
பாருங்கள்!!

Anbu said...

\\ Suresh said...

மிக அழகாக இருக்குது நண்பா, நானும் வந்து இருக்கலாம், ஒவ்வொருவரையும் பார்க்கும் போது\\

கண்டிப்பாக அண்ணா.மிகவும் நன்றாக இருந்தது.நீங்களும் வந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்..

Anbu said...

\\\BEST FUNDS ARUN said...

நான் எப்படா ரம்யா அக்கா கோட பெசினென்?

அவங யாருன்னு கோட தெரியாதெய்\\

அண்ணா அது நீங்கள் இல்லை.வால்பையனைத்தான் அருண் என்று குறிப்பிட்டுவிட்டேன்..

Anbu said...

\\ குப்பன்_யாஹூ said...

its nice,thanks for sharing.\\

கருத்துக்கு நன்றி அண்ணா

வேத்தியன் said...

பதிவர் சந்திப்பு இனிதாக நடந்தது குறித்து மகிழ்ச்சி அன்பு...

நல்ல பகிர்வு...

Anbu said...

\\vinoth gowtham said...

எல்லாம் சேர்ந்து கலக்கி இருக்கீங்க.\\

ஆமாம் அண்ணா.நல்ல மகிழ்ச்சியான தருணம்.

Anbu said...

\\Cable Sankar said...

மகிழ்ச்சி அன்பு.. உன்னுடய முதல் பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியது குறித்த உன் பதிவும் அருமை.. வாழ்த்துக்கள்.\\

நன்றி அண்ணா உங்கள் வாழ்த்துக்களுக்கு

Anbu said...

\\சொல்லரசன் said...

பதிவர் சந்திப்பை பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் அன்பு\\

நன்றி அண்ணா

Anbu said...

\\\ ஷீ-நிசி said...

அடடே வாழ்த்துக்கள் அன்பு!

பதிவர் விழாவை விலாவாரியாக சொல்லியிருக்கிறாய். அருமையான சந்திப்பு மேலும் தொடர வாழ்த்துக்கள்\\

வாழ்த்துக்கள் கூறியமைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\ thevanmayam said...

அன்பு!!
அருமையாகத்தொகுத்து
இருக்கிறீர்கள்!
மேலும் படங்களை
என் பதிவில்
பாருங்கள்!!\\

பார்த்தேன் அண்ணா உங்கள் பதிவினை நன்றாக இருந்தது

Anbu said...

\\வேத்தியன் said...

பதிவர் சந்திப்பு இனிதாக நடந்தது குறித்து மகிழ்ச்சி அன்பு...

நல்ல பகிர்வு...\\\

நன்றி தல

சுந்தர் said...

நல்லா எழுதியிருக்க தம்பி, வாழ்த்துக்கள்.,

பாலகுமார் said...

பகிர்விற்கு நன்றி அன்பு !!!!

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

பூச்சரம் said...

இலங்கை இந்திய பதிவர்களுக்கிடையான பாலம்..

கேளுங்க.. கேளுங்க.. நல்லா கேளுங்க..
விரைவில்..பிரபல பதிவர்களை உங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க களம் அமைக்கிறது.. பூச்சரம்
(இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS)

பூச்சரம் ONLINE பதிவர் சந்திப்பு வெகு விரைவில்..

Anbu said...

\\தேனீ - சுந்தர் said...

நல்லா எழுதியிருக்க தம்பி, வாழ்த்துக்கள்.,\\\

நன்றி அண்ணா

Anbu said...

\\பாலகுமார் said...

பகிர்விற்கு நன்றி அன்பு !!!!\\

நன்றி அண்ணா

குமரை நிலாவன் said...

பதிவர் சந்திப்பு
பகிர்தலுக்கு நன்றி அன்பு

Anonymous said...

பதிவர் சந்திப்பு இனிதாக நடந்தது குறித்து மகிழ்ச்சி

குடந்தை அன்புமணி said...

பதிவர் சந்திப்பு குறித்த தங்களாவது சற்று விரிவாக நடந்தை எழுதினால் நன்றாக இருக்கும். யார் யார் கலந்து கொண்டது என்று மட்டும் தெரிந்து என்னவாகப் போகிறது... (சாதாரணமாத்தான் கேட்கிறேன்)ஏதேனும் சுவராசியமான தகவல்...? எங்களுக்கும் பயன்படுவது மாதிரியான விசயங்கள்...?

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் அன்பு.. நல்ல பதிவு..

சாலிசம்பர் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள் அன்பு.குடிமகன் விமர்சனம் சூப்பர்.

Anbu said...

\\\குமரை நிலாவன் said...

பதிவர் சந்திப்பு
பகிர்தலுக்கு நன்றி அன்பு\\\

நன்றி அண்ணா...

Anbu said...

\\கடையம் ஆனந்த் said...

பதிவர் சந்திப்பு இனிதாக நடந்தது குறித்து மகிழ்ச்சி\\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\\குடந்தை அன்புமணி said...

பதிவர் சந்திப்பு குறித்த தங்களாவது சற்று விரிவாக நடந்தை எழுதினால் நன்றாக இருக்கும். யார் யார் கலந்து கொண்டது என்று மட்டும் தெரிந்து என்னவாகப் போகிறது... (சாதாரணமாத்தான் கேட்கிறேன்)ஏதேனும் சுவராசியமான தகவல்...? எங்களுக்கும் பயன்படுவது மாதிரியான விசயங்கள்...?\\

மன்னிக்கவும் அண்ணா..அடுத்த முறை கண்டிப்பாக விரிவாக எழுதுகிறேன் அண்ணா

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் அன்பு.. நல்ல பதிவு.\\

நன்றி அண்ணா...

Anbu said...

\\சாலிசம்பர் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள் அன்பு.குடிமகன் விமர்சனம் சூப்பர்.\\\

நன்றி அண்ணா...

Raju said...

\\என்னைப்போலவே மிகவும் அமைதியாக இருந்தார்.\\

டேய்..இது உனக்கே ஒவராத் தெரியல..!

Raju said...

அது யாருப்பா அன்பு..!
கடைசி போட்டோல செம ஸ்மார்ட்டா ஒரு ஆளு..!

Anbu said...

\\ டக்ளஸ்....... said...

\\என்னைப்போலவே மிகவும் அமைதியாக இருந்தார்.\\

டேய்..இது உனக்கே ஒவராத் தெரியல..!\\\

தெரியவில்லை அண்ணா

Anbu said...

\\டக்ளஸ்....... said...

அது யாருப்பா அன்பு..!
கடைசி போட்டோல செம ஸ்மார்ட்டா ஒரு ஆளு..!\\


:-((

வியா (Viyaa) said...

வாழ்த்துக்கள் அன்பு!

Anbu said...

நன்றி வியா

ஆ.ஞானசேகரன் said...

பதிவும், அவர்களைப் பற்றிய விவரங்களும் அருமை, புகைப்படங்கள் சூப்பர்....

Anbu said...

\\ஆ.ஞானசேகரன் said...

பதிவும், அவர்களைப் பற்றிய விவரங்களும் அருமை, புகைப்படங்கள் சூப்பர்....\\

நன்றி அண்ணா...

வால்பையன் said...

ஆனால் என்ன ஆனால்
அதான் வச்சு கும்மி எடுத்துட்டிங்களே!

நல்லா இருங்க மக்களே!

Anbu said...

\\வால்பையன் said...

ஆனால் என்ன ஆனால்
அதான் வச்சு கும்மி எடுத்துட்டிங்களே!

நல்லா இருங்க மக்களே!\\

நன்றி வால்

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

அருமையான பதிவு

சந்தித்த்தில் - சில நிமிடங்களே என்ற போதும் - மனம் மகிழ்ந்தது.

தொடர்பு கொள்ளலாமே

வாலினைப் பற்றிய அறிமுகம் நன்று.

அதனை விட மறுமொழிகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது - அனைவரையும் அண்ணா அண்ணா என அழைக்கும் அன்பு நெகிழச்செய்தது. வாலினிற்கு இட்ட மறுமொழியில் மட்டும் உரிமையாக நன்றி வால் என்றது எனக்குப் பிடித்தது.

நல்வாழ்த்துகள் அன்பு

Anbu said...

நன்றி ஐயா

KRICONS said...

மதுரைலே பதிவர் சந்திப்பா???? சொல்லவே இல்ல...
மிஸ் பண்ணிட்டேன்... :(
நெக்ஸ்ட் மீட் பண்றேன்...