எது காதல் தெரியவில்லை....
என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா...
மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டு கொண்டால் - என்
மனம் வதைபடுகிறதே
அதுதான் காதலா...
அருகில் நீ
இல்லாத போதும்
உன்னுடன்
உறவாடி உரையாடி
மகிழ்கிறேனே
இதுதான் காதலா...
எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாச காற்று உள்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா...
யார் கேட்டும்
இல்லை என்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்க தோன்றுமே
அதுதான் காதலா...
பிரிவுகள் நேரும்போது
ஏதோ ஓர் உணர்வு - நம்
விழிகளுக்குள் நீர் நிரப்பி
செல்கிறதே
அதுதான் காதலா...
ஊரே நம் உறவை
காதலென்ற போது
நீ மட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களேன்று'...
எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியம்
என்பதால்...
எனது காதலிக்காக...
உன்னுடன் என்ன
பேச வேண்டும் என
இரவு முழுவதும்
யோசித்து வந்தேன்..
உன்னை கண்ட நொடியில்
அத்தனையும் மறந்து
ஒன்றும் அறியாதவனாய்
நிற்கிறேன்..
****************************
உனக்காக நான்
எழுதும் காதல் கடிதம் கூட
என்னை பார்த்து சிரிக்கிறது..
இதையாவது அவளிடம்
கொடுப்பாயா என்று..
****************************
எனக்கு வரும்
ஒவ்வொரு அழைப்பும்
நீயாக இருக்க கூடாதா என
என்னை விட அதிகமாக
ஏங்குகிறது என் தொலைபேசி..
உன் குரல் அதுக்கும்
பிடித்திருக்கிறதாம்..
****************************
பூமியிலும் தேவதைகள்
இருக்கத்தான் செய்கிறார்கள்..
உன்னை கண்ட பின்தான்
தெரிந்துகொண்டேன்..
****************************
என் இனியவளே..
தொலைபேசியில் நான்
"ஹலோ" என்றதும்
சிறிது நேரம் அமைதி காத்து
பின் பேசுகிறாயே..
அதுக்கு என்ன அர்த்தமடி..
நீயும் காதலிக்க
கற்றுக்கொண்டாயோ..
****************************
பேருந்து நிலையத்தில்
நிற்கும் ஒவ்வொரு நிமிடமும்
எனக்கு சொர்க்கம்தான்..
****************************
பதிவர்களே போட்டிக்கு ரெடியா..
குழந்தை..
சோகங்கள் மறைத்திடும்..
கோபங்கள் போக்கிடும்..
அன்பின் உருவம் - குழந்தை..
இது ஒரு ஹைக்கூ விளையாட்டுத்தொடர்..
இங்கு நான் ஒரு வார்த்தை தருகிறேன்..
"காதல்"
இந்த வார்த்தைக்கு ஒரு ஹைக்கூ கவிதை தயார் பண்ணி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..
கவிதையினை தருபவர்கள் நீங்கள் ஒரு வார்த்தை தரலாம்..
அதற்கும் மற்றவர்கள் பதில் சொல்லலாம்...
என்ன போட்டிக்கு ரெடியா..
18 வயசுல.....
நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?
**********************
கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !
**********************
உன் கூந்தல் சிலுவையில் அறையப்படும்
மல்லிகைப்பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன
**********************
பூஜைநேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது.
**********************
உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?
**********************
துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!
**********************
உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்.
**********************
பா.விஜய் அவர்கள் எழுதிய 18 வயசுல என்ற புத்தகத்தில் எனக்குப் பிடித்த கவிதைகள் இவை...
செல்போனில் இ-மெயில் தகவலைப்பெற...
செல்போன் பயன்கள் அனைவரும் அறிந்ததே...
அதில் இன்னும் கூடுதல் வசதியாக நமது செல்போனில் நமக்கு வரும் இ-மெயில் தகவல்களை பெறுவதை பற்றி இப்போது பார்க்கலாம். நாம் ஒவ்வொரு முறையும் கணிணியை ஆன் செய்து நமக்கு இ-மெயில் வந்துள்ளதா என பார்க்கவேண்டாம்.
இந்த தளத்தில் நமது விவரங்களை பதிவு செய்தாலே போதும். நமக்கு இ-மெயில் வந்ததும் , நம்முடைய cellphone-ல் sms வந்து விடும்.முதலில் இந்த இலவச சேவையை பெற இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு முதலில் இந்த தளம் ஓப்பன் ஆகும்.
இதன் மேற்புறம் உள்ள இந்த விண்டோ வில் உள்ள Signup for free என்பதனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து Register கிளிக் செய்யுங்கள்.
இந்த தளத்தை மூடிவிடுங்கள். இப்போது உங்களுடைய செல்போனில் ஒரு குறுந்தகவல்( SMS ) வரும். அதில் உங்களுக்கு பாஸ்வேர்ட் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதை குறித்துக்கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும் அதே தளத்தை திறங்கள்..இதில் உள்ள மொபைல் நம்பர் என்கிற இடத்தில் உங்கள் மொபைல் எண்ணை குறிப்பிடுங்கள். அதன் கீழ் உள்ள Password-ல் உங்களின் செல்போனில் வந்த பாஸ்வேர்டை குறிப்பிட்டு லாகின் ஆகுங்கள். இப்போது உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை கொடுத்துவிட்டு Submit செய்யுங்கள். உங்களுடைய தகவல்களை பதிவு செய்தபின் இந்த Conform விண்டோ ஓப்பன் ஆகும்.
விண்டோவை மூடி விடுங்கள். இப்போது உங்கள் ஜி-மெயில் ஓப்பன் செய்யுங்கள்.அதில மேற்புறம் உள்ள Settings கிளிக் செய்யுங்கள்.அதில் ஐந்தாவது காலத்தில் உள்ள Forwarding and POP/IMAP கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Forwarding எதிரில் உள்ள Forward a copy of incoming mail to என்கிற ரேடியோ பட்டனை கிளிக் செய்த பின்னர் Forward a copy of incoming mail to
பக்கத்தில் உள்ள பாக்ஸில் 91போட்டு பக்கத்தில் உங்கள் செல்போன் எண்ணை தட்டச்சு செய்து அதன் உடன் @m3m.in சேருங்கள்.
உதாரணமாக:- 91 xxx xxx xxxx @ m3m.in என வரவேண்டும். இதில் x -போட்டுள்ள இடத்தில் உங்கள் செல்போன் எண்ணை குறிப்பிடுங்கள்.
இறுதியாக Save Changes கிளிக் செய்யுங்கள்.அவ்வளவுதான். இனி டெஸ்டிங்காக வேறு ஒரு இ-மெயிலிருந்து உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி பாருங்கள். அல்லதுஉங்கள் நண்பர் யாரையாவது மெயில் அனுப்பச் சொலலுங்கள். இப்போது ஓரே நேரத்தில் உங்கள் செல்போனுக்கும் கணிணிக்கும் மெயில் வருவதை காண்பீர்கள்.
தகவலுடன்..
இது போதுமடி எனக்கு....
அதிகாலையில்
உன் கொலுசு ஒலியின் சத்தம்..
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்
இது போதுமடி எனக்கு....
குளத்தில்
குளிக்கும் பறவைகளின் மத்தியில்
முகம் துடைக்க
உன் முந்தானை...
இது போதுமடி எனக்கு....
கடற்கரை மணலில்
என் பாதச்சுவட்டின் மேலே
உன் கால் வைத்து நடந்து வந்தாய்...
தீடீரென நின்றதும்
கால் வலிக்கிறதா என்றேன்..
இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..
காதலுடன்...
என்ன பெயர் வைக்க....
வானத்தில் கார்மேகத்தின்
அழகினை ரசித்திருக்கிறேன்...
பூமியிலும் கார்மேகம் தோன்றுமோ..
நீ கருப்பு சுரிதாரில் பவனி வரும் போது..
########$$$$########
எனது இதயம் கூட
சிறிது இடைவெளி விட்டுத்தான் துடிக்கிறது..
அந்த இடைவெளியிலும் கூட
என் மனம் உன்னை மட்டுமே
நினைக்கிறதே...
உன் பெயரில் என்ன
வசியம் உள்ளதடி....
என் வீட்டு பூனை கூட
உன் பெயர் சொன்னால்
ரசிக்கிறது....
உனக்காக நான்...
எனக்காக நீ...
நமக்காக நம் காதல்..
இந்த ஒன்று போதுமே
என் வாழ்க்கை என்னும்
பயணத்தை கடக்க...
பூக்கள் கூட உன் முகம்
பார்த்தால் தான்
மலருகின்றனவாம்...
என்ன பெயர் வைக்க
நம் குழந்தைக்கு...
நேற்றிரவு கனவில்
சொல்லாமல் போய்விட்டாய்...
பேச வேண்டிய இதழ்கள்..
பேசிக்கொள்ளவில்லை;
பேசிக்கொண்டன விழிகள்...
மூடிக்கொண்டது இமை..
திறந்தது மனம்..
உறங்கவில்லை இதயம்
காதலியுங்கள்....
நேசித்தால் காதல் வரும்...
வர்ணித்தால் கவிதை வரும்....
கவிதையை வாசியுங்கள்....
காதலியை நேசியுங்கள்...
கவிதையில் வருவது
திருத்தக்கூடிய பிழை....
ஆனால் காதலில் வருவது
வருந்தக்கூடிய பிழை....
கவிதைபிழையை திருத்தினால்
காதல்....
காதல்பிழையை திருத்தினால்
சாதல்.....
கவிதை காதலின் தாக்கமோ... !!
வருந்துவதை விட திருந்துவது
மேல் என்று எண்ணினேன்...
திருந்த முடியவில்லை
கவிதையினால் மட்டும்...
யோசித்தேன்...
அங்கு காதல் இல்லை
அதனால் கவிதையும் இல்லை..... !!
எப்படி திருந்துவது.. யோசித்தேன்...
"காதல் வயப்படுவதே மேலோ....."
என்று யூகித்தேன்.....
காதல் வசப்பட்டேன்....!!
இப்பொழுது வருத்தப்படவில்லை........
காதலியால் திருத்தப்பட்டுவிட்டேன்.....!!