எது காதல் தெரியவில்லை....

Angel Graphic #84





என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா...

மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டு கொண்டால் - என்
மனம் வதைபடுகிறதே
அதுதான் காதலா...

அருகில் நீ
இல்லாத போதும்
உன்னுடன்
உறவாடி உரையாடி
மகிழ்கிறேனே
இதுதான் காதலா...

எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாச காற்று உள்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா...

யார் கேட்டும்
இல்லை என்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்க தோன்றுமே
அதுதான் காதலா...

பிரிவுகள் நேரும்போது
ஏதோ ஓர் உணர்வு - நம்
விழிகளுக்குள் நீர் நிரப்பி
செல்கிறதே
அதுதான் காதலா...

ஊரே நம் உறவை
காதலென்ற போது
நீ மட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களேன்று'...

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியம்
என்பதால்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

25 பின்னூட்டங்கள்:

sakthi said...

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியம்
என்பதால்...


தெரிஞ்சா சரி தம்பி

sakthi said...

அருகில் நீ
இல்லாத போதும்
உன்னுடன்
உறவாடி உரையாடி
மகிழ்கிறேனே
இதுதான் காதலா...

ஆஹா ரொம்ப முத்திடுச்சோ

sakthi said...

பிரிவுகள் நேரும்போது
ஏதோ ஓர் உணர்வு - நம்
விழிகளுக்குள் நீர் நிரப்பி
செல்கிறதே
அதுதான் காதலா...

அழகு வரிகள்

லோகு said...

கவிதை நல்லாருக்கு..

ஆனா இது எங்க போயி முடியும்னு தெரியல.. மாப்ள, உனக்கு ரொம்ப சின்ன வயசு.. இந்த வயசுல லவ் லவ்வுன்னு அலஞ்சா, கடைசில லோ லோ ன்னு அலைய வேண்டி வரும்.. ஜாக்கிரதை.. :)

துபாய் ராஜா said...

//என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா...

மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டு கொண்டால் - என்
மனம் வதைபடுகிறதே
அதுதான் காதலா...

அருகில் நீ
இல்லாத போதும்
உன்னுடன்
உறவாடி உரையாடி
மகிழ்கிறேனே
இதுதான் காதலா...

எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாச காற்று உள்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா...

யார் கேட்டும்
இல்லை என்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்க தோன்றுமே
அதுதான் காதலா...

பிரிவுகள் நேரும்போது
ஏதோ ஓர் உணர்வு - நம்
விழிகளுக்குள் நீர் நிரப்பி
செல்கிறதே
அதுதான் காதலா...//

அருமை.அருமை.

அன்பு தம்பியின் குழப்பம் அழகான வரிகளில் தெரிகிறது.


//ஊரே நம் உறவை
காதலென்ற போது
நீ மட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களேன்று'...

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியம்
என்பதால்//

உண்மைதான். நட்பிற்கும் காதலுக்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம்.அந்த நூலிழை அறுபடும்பொழுது நட்பு காதலாகிறது.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ரைட்டு!!!! அப்போ இது தோழியா நீ காதலியா பார்ட் 2 வாப்பா?

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

காதல் எதெனத் தெரியாமல் காதலில் மாட்டிக் கொள்ளாதே ! இவை அனைத்தும் காதல் தான் - ஆயினும் இல்லை - ஆமாம்

இன்னும் நீ அனுபவப்பட வேண்டும் - ஆம்

நல்ல கவிதை - நல்வாழ்த்துகள்

நிஜ வாழ்வினில் எச்சரிக்கை தேவை

*இயற்கை ராஜி* said...

No Comments:-))))))))

ஆ.ஞானசேகரன் said...

//எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியம்
என்பதால்//

என்ன குழப்பம் அன்பு,.. ரெண்டும்தான்
காதலில் கவணம் தேவை,...
நட்புக்கு அது தேவையில்லை
நல்லாயிருக்கு பாராட்டுக்கள்

ஆ.ஞானசேகரன் said...

என்ன அன்பு,.. காதல் பக்கமே இருந்துவிட்டாயா? நம்ம பக்கமே காணாம்

ப்ரியமுடன் வசந்த் said...

//லோகு said...
கவிதை நல்லாருக்கு..

ஆனா இது எங்க போயி முடியும்னு தெரியல.. மாப்ள, உனக்கு ரொம்ப சின்ன வயசு.. இந்த வயசுல லவ் லவ்வுன்னு அலஞ்சா, கடைசில லோ லோ ன்னு அலைய வேண்டி வரும்.. ஜாக்கிரதை.. :)
//

டபுள் ரிப்பீட்டு அன்பு

பீர் | Peer said...

இதனால ஏதும் மோதல் வராம பாத்துக்க ராசா...

பீர் | Peer said...

//லோ லோ ன்னு அலைய வேண்டி வரும்//

லோகு, இதில ஏதும் உள்குத்து இருக்கா?

SUMAZLA/சுமஜ்லா said...

அருமை...அருமை...நட்பில் ஒன்றிரண்டு மட்டும் இருக்கும் ஆனால் காதலில் எல்லாமே சேர்ந்திருக்கும் நண்பரே!

தேவன் மாயம் said...

அழகிய கவிதை அன்பு!!!காதலே ஒரு குழப்பமானதுதான்!!

S.A. நவாஸுதீன் said...

நீங்க இவ்ளோ குழப்பமா இருக்குறதால குழப்பமே இல்லை இது காதல்தான்

நட்புடன் ஜமால் said...

எதை தெரியலைன்னு சொல்றீங்களோ

அது வந்துடிச்சி போல ....

வழிப்போக்கன் said...

இது காதலான்னு தெரியல..
தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க...
:)))

Anonymous said...

காதலின் உணர்வை அப்படியே வடிச்சியிருக்கீங்க..அதன் அத்தனை வடிவங்களும் செதுக்கப்பட்டு இருக்கு வார்த்தைகளாய்..

Radha N said...

காதலே தான்னு சொல்லி உசுப்பேத்த விரும்பலை நான்.
ஆனா
இது காதல் தான் கண்டுபிடிக்க நிறைய உத்தியிருக்கு.
வேலை வெட்டி இல்லைன்னா சொல்லுங்க
சொல்லித்தாரேன்

வால்பையன் said...

யார் வாயெல்லாம் நுரை தப்ப தப்ப கவிதையா சொல்றானோ அவனுக்கு தெரியும் எது காதல்னு!

சிங்கக்குட்டி said...

என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

அத்திரி said...

//நட்புடன் ஜமால் said...
எதை தெரியலைன்னு சொல்றீங்களோ

அது வந்துடிச்சி போல ....//

repeatttteyyyyyyyyyyy

Unknown said...

அடுதவர் கவிதையை உன் கவிதை என சொல்லிக்கொள்ள வெட்கமில்லை. இந்த மானங்கெட்ட பொலப்புக்கு கயித்துல தொங்கலாம்.

Unknown said...

அடுதவர் கவிதையை உன் கவிதை என சொல்லிக்கொள்ள வெட்கமில்லை. இந்த மானங்கெட்ட பொலப்புக்கு கயித்துல தொங்கலாம்.