எனது காதலிக்காக...


உன்னுடன் என்ன
பேச வேண்டும் என
இரவு முழுவதும்
யோசித்து வந்தேன்..

உன்னை கண்ட நொடியில்
அத்தனையும் மறந்து
ஒன்றும் அறியாதவனாய்
நிற்கிறேன்..


****************************

உனக்காக நான்
எழுதும் காதல் கடிதம் கூட
என்னை பார்த்து சிரிக்கிறது..
இதையாவது அவளிடம்
கொடுப்பாயா என்று..

****************************

எனக்கு வரும்
ஒவ்வொரு அழைப்பும்
நீயாக இருக்க கூடாதா என
என்னை விட அதிகமாக
ஏங்குகிறது என் தொலைபேசி..
உன் குரல் அதுக்கும்
பிடித்திருக்கிறதாம்..

****************************

பூமியிலும் தேவதைகள்
இருக்கத்தான் செய்கிறார்கள்..
உன்னை கண்ட பின்தான்
தெரிந்துகொண்டேன்..

****************************

என் இனியவளே..
தொலைபேசியில் நான்
"ஹலோ" என்றதும்
சிறிது நேரம் அமைதி காத்து
பின் பேசுகிறாயே..
அதுக்கு என்ன அர்த்தமடி..
நீயும் காதலிக்க
கற்றுக்கொண்டாயோ..

****************************
தேவதையே...உன்னை காண
பேருந்து நிலையத்தில்
நிற்கும் ஒவ்வொரு நிமிடமும்
எனக்கு சொர்க்கம்தான்..

****************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

23 பின்னூட்டங்கள்:

sakthi said...

உனக்காக நான்
எழுதும் காதல் கடிதம் கூட
என்னை பார்த்து சிரிக்கிறது..
இதையாவது அவளிடம்
கொடுப்பாயா என்று..

குடுத்தாயா இல்லையா

Unknown said...

உனக்காக நான்
எழுதும் காதல் கடிதம் கூட
என்னை பார்த்து சிரிக்கிறது..
இதையாவது அவளிடம்
கொடுப்பாயா என்று..

]]


இது ரொம்ப அருமைப்பா

sakthi said...

பூமியிலும் தேவதைகள்
இருக்கத்தான் செய்கிறார்கள்..
உன்னை கண்ட பின்தான்
தெரிந்துகொண்டேன்..


அப்போ தெரிஞ்சுகிட்டே

வால்பையன் said...

கொஞ்சம் தேறிட்டா மாதிரி தெரியுது!
ரைட்டு கல்யாண சாப்பாடு எப்போது!?

*இயற்கை ராஜி* said...

குழந்தை திருமணம் மாதிரி..குழந்தையின் காதலைத் தடுக்க ஏதும் சட்டம் இல்லியா:-0

sakthi said...

எனக்கு வரும்
ஒவ்வொரு அழைப்பும்
நீயாக இருக்க கூடாதா என
என்னை விட அதிகமாக
ஏங்குகிறது என் தொலைபேசி..
உன் குரல் அதுக்கும்
பிடித்திருக்கிறதாம்..

நல்லாயிருக்குப்பா இந்த வரிகள்

sakthi said...

என் இனியவளே..
தொலைபேசியில் நான்
"ஹலோ" என்றதும்
சிறிது நேரம் அமைதி காத்து
பின் பேசுகிறாயே..
அதுக்கு என்ன அர்த்தமடி..
நீயும் காதலிக்க
கற்றுக்கொண்டாயோ..


முடியலை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தருமி said...

//ஒன்றும் அறியாதவனாய்
நிற்கிறேன்..//

!!!!!!!!!!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

//****************************
தேவதையே...உன்னை காண
பேருந்து நிலையத்தில்
நிற்கும் ஒவ்வொரு நிமிடமும்
எனக்கு சொர்க்கம்தான்..//

பாத்து அன்பு

பஸ் மாதிரியே விட்டுட்டு போயிடப்போறாங்க....

ஜெட்லி... said...

உனக்கு காதல் போதை மச்சி...
ஒன்னும் பண்ண முடியாது!!!

Anonymous said...

இப்படி தனக்குள் பேசி எப்ப கொண்டு போய் கொடுத்து, அன்பு சீகிரம்பா. பஸ் போய்ட போகுது..

அப்துல்மாலிக் said...

ரைட்டூ... காதல் முத்திடுச்சி

இதுக்கு எதிர் போடலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்

யோ வொய்ஸ் (யோகா) said...

நானும் ப்ரபோஸ் பண்ண ஒரு காதல் கடிதம் எழுதலாம்னு இருக்கேன், ஐடியா கேட்க உங்க கிட்ட தான் வருவேன்.

gayathri said...

எனக்கு வரும்
ஒவ்வொரு அழைப்பும்
நீயாக இருக்க கூடாதா என
என்னை விட அதிகமாக
ஏங்குகிறது என் தொலைபேசி..
உன் குரல் அதுக்கும்
பிடித்திருக்கிறதாம்..

ada nejamava

super pa

Raju said...

ரெண்டு வருஷத்துக்கு முன்னால நானும் இப்டிதான் ரொம்பா நாளா ஹெல்த் மினிஸ்டர் ஆகனும் ஆகனும்னூ
சொல்லிட்டே இருப்பேனாம்..!

அப்பறம் ஒரு வழியா இந்த ஸ்டாஜ்ல வந்து உட்டாங்க..!

நீங்களும் டாக்டராகீருவீங்க அன்பு.விடாம் .ட்ரை பண்ணுங்க.

லோகு said...

என்னவோ நடக்குது.. மர்மமா இருக்குது..

(குழ்ந்தை திருமணம் இந்தியாவில் சட்டப்படி குற்றம்.. பார்த்துக்கோ..)

S.A. நவாஸுதீன் said...

உனக்காக நான்
எழுதும் காதல் கடிதம் கூட
என்னை பார்த்து சிரிக்கிறது..
இதையாவது அவளிடம்
கொடுப்பாயா என்று..

சீக்கிரம் கொடுங்க அன்பு. இல்லேன்னா நீங்க மிஸ் பண்ணி அவங்க மிஸ்ஸஸ் ஆயிடப் போறாங்க.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகான எளிமையான வரிகள்.வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

///தேவதையே...உன்னை காண
பேருந்து நிலையத்தில்
நிற்கும் ஒவ்வொரு நிமிடமும்
எனக்கு சொர்க்கம்தான்..///

கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிவிடும் அன்பு

துபாய் ராஜா said...

தம்பி அன்பு,எந்த பஸ்ஸ்டாண்டில் நின்றாலும் உடனே மேடைக்கு வரவும்.

பாராட்டுக்கள் வாங்கத்தான்பா. :))

ஒரு மார்க்கமாத்தான் திரியறீங்க. :))

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said...
என்னவோ நடக்குது.. மர்மமா இருக்குது..(குழ்ந்தை திருமணம் இந்தியாவில் சட்டப்படி குற்றம்.. பார்த்துக்கோ..)//

சொல்லுற ஆளப் பாரு.. பச்சைப் புள்ளைய கெடுத்து குட்டிச் சுவராக்குனதே நீதானப்பா.. இப்ப என்னடான்னா அது பாட்டுக்கு கண்ணத் தொரந்துக்கிட்டே காதல் கனவு கண்டுக்கிட்டு இருக்கு

லோகு said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

சொல்லுற ஆளப் பாரு.. பச்சைப் புள்ளைய கெடுத்து குட்டிச் சுவராக்குனதே நீதானப்பா.. இப்ப என்னடான்னா அது பாட்டுக்கு கண்ணத் தொரந்துக்கிட்டே காதல் கனவு கண்டுக்கிட்டு இருக்கு

//

அண்ணா.. எனக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. அவனேதான் என்னவோ பண்றான்.. ஆனா என்ன பண்றான்னு தெரியல.. நீங்க எல்லாம் தான் பக்கத்துல இருக்கீங்க.. பாத்து கண்டுச்சு வைங்க..

சிங்கக்குட்டி said...

நல்ல கவிதை.