கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சீனா ஐயா அவர்கள் அவர் வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்துக்கொண்டிருந்தார்.. அதற்கு போன ஞாயிற்றுக்கிழமைதான் விடை கிடைத்தது..நானும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளம்பி மதியம் அவரது வீட்டினை அடைந்தேன்..அவர் இருக்கும் அபார்மென்டை பார்க்கும் போதே நானும் அங்கேயே தங்கிவிடலாமோ என நினைப்பு வந்தது (காரணம் கேட்பவர்கள் தனியாக மின்னஞ்சல் பண்ணவும்). வீட்டிற்குள் நுழைந்தவுடன் வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்தவுடன் சீனா ஐயாவின் மனைவி அவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடுத்தார்கள்.மிகவும் அருமையாக இருந்தது..பின் சிறிது நேரம் கதைத்து விட்டு அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்தேன்..மிகவும் அழகாக இருந்தது..பின் மதிய உணவு சாப்பிட்டோம்.. சாதம்,சாம்பார்,கேரட் பொரியல்,என அருமையான விருந்து.இந்த விருந்தை கார்த்தி அண்ணா மிஸ் பண்ணிவிட்டார்..பின் மின்சாரம் தடை செய்யப்படவே இருவரும் பேராண்மை படத்துக்கு கிளம்பினோம்..படமும் அருமை,தியேட்டரும் அருமை.ஏனென்றால் சிவாகாசியில் இருக்கும் தியேட்டரை விட பல மடங்கு நன்றாக இருந்தது..பின் வீட்டிற்கு வந்தவுடன் கார்த்தி அண்ணா வந்தார்..அதன் பின் ஸ்ரீதர் அண்ணா வந்தார்..மொத்தத்தில் ஒரு பதிவர் சந்திப்பினை நடத்திவிட்டு கிளம்பினோம்..பதிவர் சந்திப்பினில் நானும் ஸ்ரீதர் அண்ணனும் ஒரு குறும்படம் எடுப்பது உறுதியானது..எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்..அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...
*************************
அது என்னமோ ஏதோ தெரியவில்லை..எனக்கு எவனோ ஒருவன் அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போய்கிறது..போன முறை சிவகாசி வந்தவுடன் அழைத்தார்கள்..என்னால் செல்ல இயலவில்லை..இதோ இந்த சனிக்கிழமையும் அப்படியே நடந்தது.நான் அழைக்கும் போது அவர் கொஞ்சம் பிஸி.அவர் அழைக்கும் போது நான் கொஞ்சம் பிஸி..நாம் இருவரும் அடுத்த முறையாவது சந்தித்துவிடுவோமா அண்ணா...
*************************
அண்மையில் பார்த்த படங்களில் என்னை வெகுவாக ஈர்த்தது பேராண்மை...படத்தில் பல இடங்களில் பொண்வண்ணன் பேசும் போது கட் செய்யப்படுகின்றன.இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்களையே சென்சார் அனுமதித்து தொலைக்காட்சிகளில் வெளியிடும் போது ஒரு நல்ல படத்தின் வசனத்தை கத்தரிப்பது நன்றாக இல்லை.. மற்றபடி படத்தில் நடித்து உள்ள அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம் போல் இருக்கிறது..
*************************
கவிதை:-
உயிர்
உயிருடன் இருக்கும் பொழுது ,
உணர்ச்சியற்று இருக்கும் நம் மக்கள்,
உயிரில்லாத பொழுது மட்டும் ஏன்,
உணர்ச்சி பொங்க அழுகிறார்கள் ;
உயிரில்லாத உடலை பார்த்து . . .
*************************
தத்துவம்:-
இன்றைய வெற்றி நாளையும் வெற்றி…!!
இன்றைய தோல்வி நாளைய அனுபவம்… !!!!
*************************
டிஸ்கி:-
இந்த பதிவு படித்து முடித்தவுடன் பின்னூட்டமோ வோட்டோ மட்டும் தான் போடணும் என்று அவசியம் இல்லை...எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க..
100 பாலோயர்ஸ் அடையச்செய்த அனவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...